Wednesday, 30 November 2011

சமாதானம்


சமாதானம் சமாதானம் என்பது இப்போது உதட்டளவில் பேசப்படும் ஒரு விடயமாகியுள்ளதால் உலகெங்கும் வாழும் மக்களிடையே பெரும் ஏமாற்றத்தையே ஏற்படுத்தியுள்ளது.

சமாதானத்திற்காக உழைப்பவர்களும்,சமாதானத்திற்காக உழைக்கும் நாடுகளும் தங்கள், தங்கள் புவிசார், நலன்சார் , பொருளாதார நலன்கள் சார்பாகவே உழைக்கிறார்கள். இப்படி இவர்கள் உழைபதனால் உண்மையான சமாதானத்தை ஏற்படுத்திவிட முடியுமா? இதற்காக எதனை அமைப்புக்களை ஏற்படுத்தினாலும்,எவ்வளவு காலத்தையும்,எவ்வளவு பொருள் விரயத்தை மேற்கொண்டாலும் அதற்கான எந்தப்பயனையும் எட்டமுடியாத ஒன்றாகவே இருக்கும்.



ஆதலால், `வாழு வாழ விடு' கோட்பாட்டை பின்பற்றினால் மாத்திரமே உலகில் சமாதானம் நிலவும்.

இந்த கோட்பாட்டின் அடிப்படையில் உலக மக்கள் யாவரும் அடுத்தவர் நிம்மதியைக் குலைக்காமல் நாம் வாழ வேண்டும். தாம் என்ன உரிமைகளுடன் வாழ வேண்டும் என்று எதிர்பார்க்கின்றனரோ அதே உரிமையுடன் மற்றவர்களும் வாழ உரிமையுண்டு என்பதை மனப்பூர்வமாக உணர்ந்து அங்கீகரிக்க வேண்டும்.


 யதார்த்தமாக உலகை நோக்கும்போது எங்கே சமாதானம், எங்கே சமாதானம் என்று தேடுவது மட்டுமல்ல எது சமாதானம் என்று அறிந்து கொள்ளும் ஆர்வமும் கூட வருகின்றது. உலக சமாதானத்தைப் பிரகடனப்படுத்தியுள்ள ஐக்கிய நாடுகள் சபை சமாதானம் என்றால், என்ன என்று ஒரு வரையறை செய்துள்ளதா என்றால் அதுவும் இல்லை. உலகிற்கு சமாதானம் மிகவும் முக்கியமானது.

 சமாதானம் எவ்வாறு ஏற்படும் என்பதை வரையறை செய்வது அவசியமாகும். நாடுகளுக்கிடையே யுத்தங்கள் நிகழாதிருப்பது மட்டும்தான் நிலையான சமாதானமா? அல்லது நாடுகளெல்லாம் ஓரிடத்தில் கூடிப் பேசுவது மட்டும் தான் சமாதானமா?


இல்வேயில்லை சமாதானம் எனக்குரல் கொடுப்பவர்களும்,சமாதானத்திற்காக உழைப்பவர்களும் தங்களுடைய நாடுகளில் தயாரிக்கும் மனிதகுலத்திற்கு பேரழிவினை ஏற்படுத்தும் ஆயுதங்களின் விற்பனை,உற்பத்திகளை முற்றாகக் கட்டுப்படுத்துவதோடு, அவற்றின் தொழிநுட்ப அறிவினை ஏனைய நாடுகளிற்கோ,ஆயுத உற்பதியாளர்களிற்கு விற்பனை செய்வதை சட்டப்படி முடுக்கவேண்டும்.

எங்கெங்கு தனிமனிதசுதந்திரமோ,இன, மத, குழுக்களிற்கான .சுதந்திரமோ பறிக்கப்பட்டால் அவ்விடங்களில் உண்மை,நேர்மை,நடுநிலைமை பேணப்பட்டால்.அதுதான் சமாதானம்.


உலக சமாதானத்தைப் பிரகடனப்படுத்தியுள்ள ஐக்கிய நாடுகள் சபை சமாதானம் என்றால், என்ன என்று ஒரு வரையறை செய்துள்ளதா என்றால் அதுவும் இல்லை. உலகிற்கு சமாதானம் மிகவும் முக்கியமானது. சமாதானம் எவ்வாறு ஏற்படும் என்பதை வரையறை செய்வது அவசியமாகும்.

சமாதானம், அமைதிக்குப் பதிலாக தினந்தோறும் இனங்களுக்கிடையேயும் மதங்களுக்கிடையேயும் பகைமை, வெறுப்பு, அச்சம் ஆகிய கொடிய சிந்தனைகள் விதைக்கப்பட்டு அவை கருகிவிடாமலிருக்க உரமூட்டி வளர்க்கப்படுகின்றன.


நாளும், பொழுதும் இதே சிந்தனை மேலோங்கி செயற்படுத்தப்படுகிறது. இப்படியான நடவடிக்கைகளை மேற்கொள்பவர்கள் ஆயுதவிற்பனை மூலம் பெரும் பணம் ஈட்டுபவர்களளும்,இடைத்தர்களுமேயாகும்.

மனிதகுலத்திற்கு பேரழிவினை ஏற்படுத்தும் ஆயுதங்களை உற்பத்தி செய்யும் நாடுகள் உலகில் சமாதானத்திற்காக உழைப்பதை போன்று வேசமிடுகின்றனவேயனறி அதற்காக உழைக்கவில்லை என்பதே உண்மையாகும்.


முன்கதவினூடாக சமாதானத்திற்கும்,பின்கதவிநூடாக ஆயுதவிற்பனையே மேற்கொள்ளுவதாலேயே இப்பூமிப்பந்தில்    சமாதானம் எட்டாப்போருளாகிவிட்டது.

இதனாலோ ,எனவோ சமாதானம் என்றால் கிலோ என்ன விலை எனக் கேட்கும் அளவிற்குப்போய்விட்டது என எண்ணத்தோன்றுகிறது.


Saturday, 26 November 2011

உண்டா




பகுதி அ 

மனிதம் உண்டா
மனித நேயம் உண்டா 
மனித சுதந்திரம் உண்டா 


கொள்கை உண்டா 
பற்று உண்டா
உறுதி உண்டா 


ஒழுக்கம் உண்டா 
கடமை உண்டா 
கட்டுப்பாடு உண்டா 


ஒற்றுமை உண்டா 
மதிப்பு உண்டா 
இரக்கம் உண்டா


போட்டி உண்டா 
பொறாமை உண்டா 
தன் மானம் உண்டா

இரண்டகம் உண்டா
வஞ்சனை உண்டா 
வசைபாடல் உண்டா 


காட்டிக்கொடுப்பு உண்டா
அடிவயிற்றில் அடிப்பது உண்டா 
அடுத்தவரின் காலைவாரல் உண்டா  

பகுதி ஆ 

வாழ்வு உண்டா 
சிந்தனை உண்டா 
அறிவு உண்டா 

மீட்சி உண்டா 
அழுத்தம் உண்டா 
பாதுகாப்பு உண்டா


சக்தி உண்டா
ஞானம் உண்டா 
தெய்வம் உண்டா 

உயிர் உண்டா 
பிறப்பு உண்டா 
இறப்பு உண்டா 

தகுதி உண்டா 
நாகரீகம் உண்டா 
அனுபவம் உண்டா


தண்டனை உண்டா 
நம்பிக்கை உண்டா 
எதிர் காலம் உண்டா 

உரிமை உண்டா 
அரசியல் உண்டா 
எதிலும் உண்மை உண்டா 
அனைத்திலும் மேலான விழிப்புணர்வு உண்டா 

பகுதி இ


சடங்குகள் உண்டா 
பழக்கங்கள் உண்டா 
கலாச்சாரம் உண்டா 

காலம் உண்டா 
முயற்சி உண்டா 
ஏமாற்றம் உண்டா 

வீரம் உண்டா 
வெற்றி உண்டா 
தோல்வி உண்டா 

இவை அனைத்திலும் மேலான நம்பிக்கை உண்டா