Thursday, 27 February 2014

காலத்தில் அழியாத தமிழர் கலைவண்ணம்.....!

மதுரை மீனாட்சி அம்மன் கோவிலில் ஆயிரம் கால் மாண்டபத்தில் உள்ள தூண் சிற்பம். இந்தப் பெண் சிற்பத்தில் மூன்று குழந்தைகளை தாங்கி கொண்டு நடக்கிறது போல் வடிவமைக்கப்பட்டுள்ளது, சிற்பியின் கற்பனைத் திறமையா? இல்லை தெருகூத்தாடிகளின் வாழ்க்கை முறையா என்பது தெரிவில்லை.

அவள் கையில் ஒரு பனை ஓலையில் செய்யப்பட்ட கூடை போன்று வைத்துள்ளாள் அதில் அந்த கூடையை எங்கள் ஊரில் கடகம் பெட்டி என்று பேச்சு வழக்கில் சொல்லுவார்கள். அதில் பனைஓலையின் வடிவம் செதுக்கப்பட்ட விதம் சிற்பியின் பொறுமையை என்னவென்று பாராட்டுவது வார்த்தைகளே இல்லை, அந்த அளவுக்கு நுணுக்க வேலைப்பாடு நீங்க அதை நேரில் சென்று பார்த்தல் உண்மையானதாகவே தோற்றம் அளிக்கும் அப்படி ஒரு தத்துருவமாக வடித்துள்ளார்.

அவள் மூன்று குழந்தைகளை தாயானவள் போலும், ஒரு குழந்தையை தான் தோள்பட்டையில் சுமந்து கொண்டும் மற்றொரு கைகுழந்தையை நெஞ்சில் தன் துணியால் தொட்டில் போன்று கட்டி பாதுகாப்பாக வைத்துள்ளாள் இந்த வழக்க முறைகளை நான் குறவன் குறத்திகள் வாழ்கை முறையில் பார்த்துள்ளேன், இது செதுக்கப்பட்ட ஆண்டு 17 ஆம் நுற்றாண்டில் . ஆனால் இன்று நகரப்புறங்களில், வெளிநாடுகளில் இதை கொஞ்சம் நவீனபடுதில் பெல்ட் போன்ற அமைப்பில் வடிவமைக்கப்பட்டு குழந்தைகளை கொண்டுசெல்கின்றனர், அந்த குழந்தை அவளின் மார்பில் பால்குடிப்பது போன்று உள்ளது, வெகுதூரம் நடக்கும்போது குழந்தை பசியால் அழாமல் இருக்க இப்படி யுத்தியை வைத்துள்ளாள் போல?


மூன்றாவது குழந்தை இன்னொருகையின் அரவணைப்பில் நடப்பது போன்று உள்ளது.இரண்டு குழந்தைகளுமே எதோ ஒன்றோ கைகளில் வைத்து சாப்பிடுகின்றனர் , மறுபக்கம் பனைஒலைபெட்டி தன முழங்கையால் இருக்கபற்றிகொண்டும், கைவிரலகால் அந்த குழந்தையையும் பாதுகாத்து கூட்டிசெல்கிறாள்.

முன்பெல்லாம் சந்தை போன்ற அமைப்பு உண்டு வாரத்தில் ஒருநாள் அனைத்துவிதமான பொருள்களும் அங்கு விற்பனைக்கு வரும்.கிராமங்களில் மக்கள் எல்லோரும் வீட்டுக்கு தேவையானதை அன்றைக்கு வந்து வாங்கி செல்வர்கள், அப்போது தன் குழந்தைகளை கூட்டிகிட்டு வருவார்கள். குழந்தைக்கு தேவையானதை வாங்கிகொடுத்துவிட்டு அவன் அவன் வெகுதூரம் நடக்கவேண்டு அழாமலும் இருக்கவேணும் என்பதற்காக அவனுக்கு பிடித்தமானதை வாங்கித்தருவார்கள் முட்டாய் அல்லது ரொட்டி எதோ ஒரு தீன் பண்டத்தை கொடுத்து வீடுவரைக்கும் நடந்து வருவார்கள், இதை போன்று கூட அந்த சிற்பம் சித்தரிக்கப்ட்டு வடிவமைக்கப்பட்டு இருக்கலாம். .

அன்பு மிகுந்த தாயின் வெளிபாடு சிற்பியின் உளிபட்டு இப்படி ஒரு உயிர் தோன்றல் இதுவும் ஒரு வகை பிரசவிப்பு தானே. சிற்பியின் மனதுக்குள் இருப்பதை கற்பனை கருவை மனசால் சுமந்து அதை ஒரு பாறையில் இருந்து பிரசவிக்கிறான் அது முழுமையடையும் பொது அதை அவன் பார்த்து எப்படி ஒரு பூரித்து போயிருப்பன். கற்பனை பண்ணிபார்தல் கூட நம் கண்களில் ஆனந்த கண்ணீர் தான் வரும்.

தூண்களை எல்லாம் தூக்கி நிறுத்திய பிறகே இந்த வேலையை தொடங்குவார்கள். சாரம் கட்டி எத்துனை நாள் பசியை மறந்தும் கூட இதை வடித்திருப்பான். நிலைநிறுத்திய பிறகு சிற்பங்கக் செதுக்கும் பொது சேதம் ஆனாலும் தூணை அப்புறபடுத்துவது என்பது இயலாத காரியம்.சிற்பியின் முழு அற்பணிப்பும் இதுலையே அடங்கும் இதை முடித்த பிறகு கூட அவன் பெயரை கூட அதில் பொறிக்கவில்லை அப்படி பட்ட சிற்பிகள் நம் தமிழ் நாட்டில் வாழ்ந்திருகிறார்கள். இந்த சிற்பங்கள், கலைகள் எல்லாம் நம் தலைமுறை வந்திருக்கிறது என்ற நினைக்கும் பெருமையாக இருக்கிறது.

இப்படி பட்ட ஒரு வேலைபாட்டை, நாம் பாதுகாக்கவேண்டும்.நம் முன்னோர்களின் பெருமையை அடுத்த தலைமுறைக்கு கொண்டு செல்லவேண்டும் அதை எடுத்துசொல்ல நாம் என்றும் மறக்ககூடாது. இன்னும் ஆயிரம் தலைமுறைக்கும் நம் மண்ணின் பெருமையும், திறமையும் அற்பனிப்பையும் சொல்லவேண்டும். சிற்பங்களை நாம் பாதுக்கவேண்டும், அதில் வண்ணம் பூசுவது, திருநீர் கொட்டுவது , குங்குமம் கொட்டுவது, பரிட்சை எண்களை எழுதவது காதல் சின்னங்களை பொரிப்பது கூடாது. அப்படி நம் கண்முன்னாடி இது போல நடந்தாலும் அதை உடனே தட்டிகேட்கவேண்டும் அவர்களிடம் நம் பெருமையை எடுத்து சொல்ல வெண்டும் .
நன்றிகள்.

Tuesday, 25 February 2014

ஆசியாவிலேயே மிக பலமான கோட்டை.....!


தமிழ் நாட்டில், தமிழனின் பெருமைக்கு சான்றாக இருக்கும் ஆசியாவிலேயே மிக பலமான கோட்டை என்று புகழப்படும் செஞ்சிக்கோட்டையின் வரலாறு எத்தனை பேருக்கு தெரியும்?

எத்தனையோ நூறு போர்களை சந்தித்து இன்றும் கம்பீரமாக இருக்கும் தமிழ் வீரத்தின் அடையாளம் இது. தமிழக வரலாற்றில் செஞ்சிக்கு ஒரு முக்கியமான இடம் உண்டு, கோட்டைகள் எல்லாம் கட்டுவதற்கு முன்னரே கோட்டையுடன் வலிமையாக திகழ்ந்த ஊர் செஞ்சி. மராட்டிய மன்னரான சிவாசி(ஜி), "இது இந்தியாவிலுள்ள எவரும் உட்புகமுடியாத கோட்டைகளுள் சிறந்தது" எனக் கூறுமளவுக்கு அரண் செய்யப்பட்ட கோட்டையாக இது இருந்தது. 

பிரித்தானியர் இதனைக் "கிழக்கின் ட்ரோய்" என்றனர். முகலாயர்களால் பாதுசா(ஷா)பாத் என்றும் ,சோழர்களால் சிங்கபுர நாடு என்றும் பெயர்வாங்கியது. இயற்கையோடு ஒன்றிய மூன்று பெரிய மலைகள், இரண்டு சிறிய குன்றுகள் 12 கி.மீ., நீளமுள்ள மதில் சுவர்களால் இணைத்தது செஞ்சிக்கோட்டை. பல போர்களை சந்தித்த பிறகும், இன்றும் கம்பீரமாக காட்சி தருகிறது.

சோழர் காலத்தில் செஞ்சிக்கு பெயர் சிங்கபுரி, சிங்கபுரி கோட்டம் என்பார்கள் அதுவே பின்னாளில் செஞ்சி ஆகிவிட்டது. இப்பொழுதும் செஞ்சிக்கு அருகே சிங்கவரம் என்ற ஊர் உள்ளது, அது செஞ்சி அந்த காலத்தில் பெரிய நிலபரப்பு கொண்ட ஊராக இருந்து இருக்கலாம் என்பதற்கு சான்று. செஞ்சிக் கோட்டையை, 13ம் நூற்றாண்டில் கோனார் வம்சத்தினர் கட்ட துவங்கினர். 

அடுத்து வந்த பல மன்னர்கள் செஞ்சிக் கோட்டையை பலம் பொருந்திய கோட்டையாக மாற்றினர். குறிப்பாக, விச(ஜ)யநகர மன்னர்களின் ஆளுகையில் செஞ்சிக்கோட்டை இருந்த போது, 1509ம் ஆண்டு முதல் 1529ம் ஆண்டு வரை, தொடர்ந்து 20 ஆண்டு கோட்டையை விரிவுபடுத்தினர்.

இந்த கோட்டையில் உள்ள கோவில்கள், மண்டபங்கள், குளங்கள், சுனைகள், படைவீரர்கள் தங்கும் பகுதி, நெற் களஞ்சியம், எதிரிகள் கடக்க முடியாத ஆழமான, அகலமான அகழிகள் போன்றவை, தென்னிந்திய மன்னர்களுக்கு கட்டடக் கலையில் இருந்த ஆற்றலை வெளிப்படுத்துகிறது.

செஞ்சிக் கோட்டை அமைப்புசெஞ்சிக் கோட்டை மூன்று குன்றுகளையும் அவற்றை இணைக்கும் சுவர்களையும் உள்ளடக்கியது. இவற்றுள் 7 சதுர கிலோமீட்டர்மீட்டர் (800 அடி) உயரத்தில் அமைக்கப்பட்டிருந்த இக் கோட்டை 24 மீட்டர் (80 அடி) அகலமுள்ள அகழியினால் காப்புச் செய்யப்பட்டிருந்தது. இது எட்டு மாடிகளைக் கொண்ட கல்யாண மகா(ஹா)ல், தானியக் களஞ்சியம், சிறைச் சாலை, படையினர் பயிற்சிக்கூடம், செஞ்சியம்மன் கோயில் என்பவற்றைக் கொண்டிருந்தது.

இந்த அரணுக்குள் ஆனைக்குளம் எனப்படும் புனிதக் குளம் ஒன்றும் இருந்தது. இக் கோட்டைக்கான அரணாக இயற்கையாக அமைந்த கிருசு(ஷ்)ணகிரி, சக்கிலிதுர்க், ராச(ஜ)கிரி ஆகிய குன்றுகள் இருந்தன. இக் கோட்டை இறுதியாகப் பிரித்தானியர் வசம் சென்ற பின்னர் முக்கியமான படை நடவடிக்கைகள் எதுவும் இங்கே நிகழவில்லை. 1921 ஆம் ஆண்டில் இது ஒரு தேசிய நினைவுச் சின்னம் என அறிவிக்கப்பட்டு தொல்லியற் துறையின் கீழ் கொண்டுவரப் பட்டது.

செஞ்சிக்கு புகழ் வரக்காரணமாக இருந்தவர் ராசா(ஜா) தேசிங்கு , இவரைப்பற்றி எண்ணற்ற நாட்டுப்புற பாடல்களும், கதைகளும் உண்டு. மராத்தியர்கள் சிவாசி தலைமையின் கீழ் வீறுக்கொண்டு எழுந்து அவுரங்கசீப்பிற்கு குடைச்சல் கொடுத்து பெறிய சாம்ராச்சியத்தினை நிறுவ முயன்றார்கள் அப்பொழுது மரத்தாவிலிருந்து , கொண்கன் கடற்கரை வழியாக கர்னாடக, தமிழகம் என படை எடுத்து தங்கள் ஆளுகையின் கீழ் கொண்டு வந்தனர்.

மராத்தியர்களை அழிக்க வேண்டும் என்று அவர்கள் செல்லும் இடம் எல்லாம் பின் தொடர்ந்து படைகளை அனுப்பி கொண்டு இருந்தார் அவுரங்கசீப். இதற்கிடையே சிவாசி மறைந்து விட அவரது மகன் ராசா(ஜா)ராம் தொடர்ந்து போரிட்டார் ஆனலும் ஒரு நிலைக்கு மேல் சமாளிக்க இயலாமல் தமிழகத்திற்கு தப்பி வந்து செஞ்சிக் கோட்டையில் பதுங்கினார். 

அவரைப்பிடிக்க பெரும் படையை அவுரங்கசீப் முகமூத்கான் என்பவர் தலைமையில் அனுப்பினார். முகமூத்கானினின் படையில் குதிரைப்படை தலைவராக இருந்தவர் சொரூப்சிங். 11 மாத கால முற்றுகைக்கு பின்னர் கோட்டையை அவுரங்கசீப்பின் படைக் கைப்பற்றியது, போரில் தீரத்துடன் செயல்பட்டதால் சொருப்சிங்கின் வசம் கோட்டையை ஒப்படைத்து, அந்த பகுதியினை நிர்வகித்து வர சொல்லிவிட்டார் அவுரங்கசீப்.

இதற்கிடையே அவுரங்கசீப்பும் மறைய சா(ஷா)ஆலம் என்பவர் தில்லி சுல்தான் ஆனார். சொரூப்சிங் அவரது மனைவி ரமாபாய் அவர்களுக்கு பிறந்த வீரன் தான் தேசிங்கு. சாஆலம் வாங்கிய ஒரு புதிய முரட்டு குதிரையை யாராலும் அடக்க இயலவில்லை எனவே குதிரை ஓட்டுவதில் வல்லவர் ஆன சொரூப்சிங்கை தில்லி வர சொன்னார் சுல்தான், அவருடன் துணையாக 18 வயதே ஆன ராசா(ஜா)தேசிங்கும் சென்றான்.

தந்தையால் குதிரையை அடக்க இயலவில்லை எனவே தன்க்கு ஒரு வாய்ப்பு அளித்துப்பார்க்க சொல்லி தேசிங்கு சுல்தானிடம் முறை இட்டான், வாய்ப்பளிக்கப்பட்டது அனைவரும் வியக்கும் வண்ணம் அக்குதிரையை அடக்கி சவாரி செய்துக் காட்டினான். அக்குதிரையின் பெயர் பரிகாரி. தேசிங்கின் வீரத்தைப் பாராட்டி அக்குதிரையையே பரிசளித்து விட்டார் சுல்தான். அது மட்டும் அல்ல இன்னொரு ராச(ஜ)புத்திர வம்சத்தை சேர்ந்த தளபதி தனது மகளையும் மணமுடித்து வைத்தார்.

தேசிங்கின் மனைவி பெயர் ராணிபாய் (இவர் பெயரால் உருவான ஊர்தான் ராணிப்பேட்டை). செஞ்சி அருகில் 3 கிலோமீட்டர் தொலைவில் அமைந்துள்ளது சிங்கவரம் கிராமம். சிங்கவரம் அருள்மிகு அரங்கநாதசுவாமி ஆலயம் மிகப்பழமை வாய்ந்தது. அரங்கன் தான் தேசிங்கு ராசாவின் தெய்வம், எந்த வேலைச்செய்தாலும் இந்த அரங்கனிடம் சொல்லிவிட்டு தான் செய்வாராம்.

தேசிங்கு ராசன் தன் செஞ்சிக்கோட்டை அரண்மனையிலிருந்தே அந்தக் கோயிலுக்குச்செல்ல சுரங்கப்பாதை அமைத்தாராம். அவனது ராணியும் மற்றத்தோழிகளும் பாதுக்காப்பாகச் செல்லவும் இந்தச்சுரங்கம் உதவப்பட்டது. எந்தப்போருக்குச்சென்றாலும் தேசிங்கு அரங்கனிடம் உத்தரவு பெற்றபின் தான் செல்வாராம். செஞ்சியை ஆண்ட மாவீரன் தேசிங்கு ராசன், ஆர்க்காடு நவாப்பின் படைகளுடன் போரிட தன் குல தெய்வமான இந்த சிறீஅரங்கநாதரிடம் அனுமதி கேட்டபோது அரங்கன், "இன்று போருக்குச் செல்ல வேண்டாம். நாளை செல்" என்று கூறினாராம்.

தேசிங்கோ, "எதிரியின் படைகள் எல்லையை அடைந்துவிட்டதே... முன் வைத்த காலை பின் வைக்கமாட்டேன். இன்றே செல்லட்டுமா?" என்று கேட்டாராம். இதைக் கேட்ட அரங்கன் தலையைத் திருப்பிக் கொண்டதாகக் கூறுகிறார்கள். இப்போதும் ரங்கநாதர், முகம் திரும்பிய நிலையில் இருப்பதைக் காணலாம்.

போரில் தேசிங்கு, சுபாங்கிதுரை என்பவன் மறைந்திருந்து துப்பாக்கியால் சுட்டதில் வீர மரணம் அடைந்தார். இதனைஅறிந்த அவர் மனைவியும் உயிரை விட்டாள், நீலாம்பூண்டி கிராமத்தில் தேசிங்கு ராசனின் சமாதியும் படைத்தளபதி முகம்மதுகானின் சமாதியும் இருக்கின்றன கூடவே அவனது உயிருக்குக்குயிராய் நேசித்த குதிரை நீலவேணி குதிரையின் சமாதியும் இருக்கிறது. 
நன்றிகள்.

Monday, 24 February 2014

கோபத்தை குறைக்க வழி.....!

கோபம் எதனால் வருகிறது என்று ஒரு ஆராய்ச்சி நடந்தது. அதில் ஒவ்வொருவரும் ஒவ்வொருவிதமாக பதில் தந்திருந்தார்கள். ஒருவர் கூறினார், நான் பணிபுரியும் அலுவலகத்தில் நான் கூறுவதை யாரும் கேட்பதில்லை. நான் ஒன்று சொல்ல, அவர்கள் ஒன்று செய்கிறார்கள்.

இதனால் கோபம் உடனே வந்துவிடுகிறது என்றார். மற்றொருவர், யாராவது என்னை தவறாகச் சொல்லி விட்டார்கள் என்று உடனே கோபம் வந்துவிடும் என்றார். அடுத்தவர், நான் செயாத்தைச் செய்த மாதிரி சொல்லி விட்டார்கள் என்றால் அவ்வளவுதான் அவர்கள் என்கிறார்.

இன்னொருவர், சொன்னதைத் திரும்பத் திரும்பச் சொன்னால், நான் என்ன செய்வேன் என்று எனக்கே தெரியாது என்று சொல்லுகின்றார். வேறோருவரோ, நினைத்தது கிடைக்கவில்லை என்றால் சும்மா விடமாட்டேன் என்றார்.

இப்படி ஒவ்வொருவரும் தங்களுக்கு எதனால் கோபம் வருகிறது என்று கருத்து தெரிவித்தனர். இப்படி அடுத்தவர்கள் எதாவது செய்தால் இவர்களுக்குக் கோபம் ஏற்படுமாம். அது சரி நீங்களே எதாவாது தவறு செய்தால் உங்கள் மீது கொபப்படுவீர்களா? என்பதற்கு, அது எப்படி நீங்கள் எங்கள் மேலேயே நாங்கள் கோபப்படுவோமா என்றனர். 

கோபம் என்றால் என்ன? கோபம் என்பது அடுத்தவர்கள் செய்யும் சிறு சிறு தவறுகளுக்கு நமக்கு நாமே கொடுத்துக் கொள்ளும் தண்டனைக்குப் பெயர்தான் கோபம். அதுமட்டுமல்லாமல் நாம் நம் கோபத்தை குறைக்க அடுத்தவர்களிடம் இதே கோபத்துடன் செயற்பட்டால் நட்பு நசுங்கி விடும். உறவு அறுந்து போகும். உரிமை ஊஞ்சலாடும்.

நமக்கு நாமே கொடுத்துக் கொள்ளும் தண்டனை என்ன? சவுக்கு எடுத்து சுளீர் சுளீர் என்று எங்களையே அடித்துக் கொண்டால் மட்டும் அதற்குப் பெயர் தண்டனை இல்லை. கோபம் ஏற்படுவதால் பதட்டம் உண்டாகின்றது. இதனால் எங்கள் உடல், மனம் இரண்டும் பாதிக்கப்படுகின்றது.

இந்தப்பாதிப்பால் நரம்புத்தளர்ச்சி, இரத்த அழுத்தம், மன உளைச்சல், நடுக்கம் போன்ற உபாதைகள் உண்டாகின்றது. இதைத் தடுக்க வைத்தியரிடம் சென்று மாத்திரை மருந்து சாப்ப்பிடுவோம். இதே நிலை நீடித்தால் ஒரு மன நோயாளி போல் ஆகி விடுவோம்.

இது பொய்யல்ல சத்தியமான உண்மை இது. இதெல்லாம் நீங்க சொன்னீர்கள் உண்மை மாதிரி தான் தெரிகிறது என்று நீங்கள் சொல்வதும். அப்படியே கோபத்தை குறைக்கிறதுக்கும் வழி சொல்வீர்கள் என்றால் நன்றாக இருக்கும் என்று புலம்புறதும் புரிகிறது.

அப்படி வாங்க வழிக்கு. அன்பின் வேறொரு விதமான வெளிப்பாடுதான் கோபம். முதலில் அடுத்தவர்களிற்குக் கோபம் வருகின்ற மாதிரி நீங்கள் நடக்காதீர்கள். அடுத்தவர்களை குறை சொல்லாதீர்கள். எதையும் அடுத்தவர்களிடம் எதிர்பார்க்காதீங்கள்.

அவர்கள் உங்கள் மேல் கோபப்பட்டால் முதலில் மன்னிப்புக் கேளுங்கள். ஈகோ பார்க்காதீர்கள். நீங்கள் கோபப் படுகின்ற மாதிரி அடுத்தவர்கள் நடந்து கொள்கின்றார்கள் என்று வைத்துக் கொள்வோம். முதலில் மன்னிப்புக் கேட்டு என்னைக் கொஞ்சம் யோசிக்க விடுங்கள் அமைதியாகி விடுங்கள். எவர்மேல் தவறு என்று சிந்தியுங்கள்.

கொஞ்ச நேரத்தில் எல்லாம் சரியாகி விடும். அப்படி இல்லை என்றால் அந்த இடத்தை விட்டு நகர்ந்து செல்லுங்கள். தனிமையாக உட்கார்ந்து யோசியுங்கள். அடிக்கடி யாரிடம் கொபப்படுகிறீர்களோ அவர்களிடம் மனம் விட்டு இன்பமாக சிரித்து பேசுங்கள். அடுத்தவர்களே தவறு    செய்திருந்தால் கூட நீங்க நல்லது பண்ணுங்க.

அடுத்தவங்க என்ன செய்து விட்டார்கள் என்று கோபப்படுகிறோம். என்ன நடந்துவிட்டது பெரிதாக. என்னத்தை இழந்துட்டோம். மரணம் ஒன்று தான் மாபெரும் இழப்பு. அதை தவிர வேறொன்றுமே இழப்பு கிடையாது. எல்லாத்தையும் சமாளித்து விடலாம் என்னும் முடிவுக்கு வாங்கள்.

வீட்டு பெரியவர்கள்  திட்டும் போது கவனித்திருப்பீர்கள் என்னத்த பெரிதாகச் சாதித்து விட்டீர்கள் என்று. நாட்காட்டியில் உள்ள தேதி பேப்பரை கிழித்தால் மட்டும் போதாது. ஒவ்வொரு நாளும் தூங்க செல்லும் முன் இன்றைக்கு என்ன சாதித்தோம் என்று யோசித்து விட்டு தூங்குங்க.

அடுத்தவர்களுக்கு நல்லது செய்யாவிடினும் கோபம் என்கிற கொடிய நோயை பரப்பாமல் இருந்தாலே நீங்க அவங்களுக்கு நல்லது செய்த மாதரி தான். தூக்கு மாட்டி தற்கொலை செய்து கொள்பவன் கூட. ஒரு வினாடி யோசித்தானால் தனது முடிவை மாற்றிக்கொள்வான்.

நமக்கோ ஆறு அறிவை ஆண்டவன் கொடுத்துள்ளான். இதில் ஆறாவது அறிவை அப்பப்ப யோசிப்பதற்கு உபயோகம்  பண்ணுவீர்கலானால்... கோபம் வரவே வராது. நாமெல்லாம் சாதிக்கப்பிறந்தவர்கள்.

கோபப்படாமல் இருப்பதே ஒரு மாபெரும் சாதனை தான். வாழ்வது இந்த பூமியில் ஒரு முறை தான். அதை கோபப்படாமல் சிறந்த முறையில் வாழ்ந்து சாதிப்போம்.
நன்றிகள்.

Saturday, 22 February 2014

தமிழர் கட்டிடக்கலை என்பது.....!.

தமிழர் கட்டிடக்கலை என்பது பண்டைக்காலத் தமிழர்களின் கட்டிடங்கள் வடிவமைப்புச் செய்வதற்கான கலையும் அறிவியலும் ஆகும்.

தமிழர்கள் மிக நீண்ட காலமாகவே ஒரு குறிப்பிட்ட நிலப்பகுதியில் நிலையாக வாழ்ந்துவருபவர்கள். தனித்துவம் வாய்ந்த ஒரு பண்பாட்டைக் கொண்டிருப்பவர்கள். மொழி, இலக்கியம், கலை போன்ற துறைகளில் கிறிசுத்(ஸ்)துவுக்கு முந்திய நூற்றாண்டுகளிலேயே உயர்நிலை எட்டியிருந்தவர்கள்.

இத்தகைய பின்னணியிலே, மக்கள் வாழ்வதற்கான இல்லங்களும், அரசர்களுக்கான மாளிகைகளும், வணக்கத்தலங்களும், பொதுக் கட்டிடங்கள் பலவும் உருவாக்கப் பட்டிருக்கும் என்பதில் ஐயமில்லை. இவையெல்லாம் அழிந்துபோகக்கூடிய பொருட்களால் கட்டப்பட்டதால் எதுவும் எஞ்சவில்லை.


ஆறாம் நூற்றாண்டுக்குப் பின்னரே தமிழ் நாட்டில் கற்களால் கட்டிடங்கள் கட்டப்பட்டன. இக் கட்டிடங்களில் மிகப் பெரும்பாலானவை கோயில்களே. இவை கட்டிடக்கலையின்உயர் மரபைச் சாந்தவை. ஆனாலும் இவற்றோடு இணையாகச் சாதாரண மக்களுக்கான வீடுகளையும் கட்டிடங்களையும் உள்ளடக்கிய இன்னொரு கட்டிடக்கலை மரபும் இருந்தது.

ஆறாம் நூற்றாண்டளவில் தொடங்கிய கற்கட்டிட மரபு நாயக்கர் காலம் வரை வளர்ந்து வந்தது. இதுவே திராவிடக் கட்டிடக்கலை எனப்படுகின்ற கட்டிடக்கலை மரபாகும். இதன் பின்னரும் தற்காலம் வரையில் ஆங்காங்கே தனித்துவமான வகைகளைச் சேர்ந்த கட்டிடங்கள் இருக்கத்தான் செய்கின்றன.
இத்தகைய எல்லாவகைக் கட்டிடக்கலைகளினதும் கூட்டுமொத்தம் தமிழர் கட்டிடக்கலை எனப்படலாம்.

தமிழர் கட்டிடக்கலையில்பொதுவாக மூன்று உறுப்புகள் காணப்படுகின்றன . அவை தாங்குதளம் , சுவர் மற்றும் விமானம் (அல்லது கோபுரம்)ஆகும். 
நன்றிகள்.

Thursday, 20 February 2014

துளிர்ந்த , பட்டுப்போன பெண்களும் உள்ளனர்.....!

எல்லா பெற்றோருக்கும் தங்கள் பெண்ணை ஒரு நல்ல இடத்தில் கட்டி கொடுக்க வேண்டும் என்ற கனவு நியாயமான ஒன்று தான். அவள் பெற்றோரும் அப்படித் தான்.

மாப்பிள்ளைப் பார்க்க தொடங்கினர், படித்த மாப்பிளை, நல்ல வேலையில் கை நிறைய சம்பாதிக்கும் ஒருவன், நல்ல குடும்பம், இருவருக்கும் இருவரையும் பிடித்தும் போனது, உடனே நிச்சயம் செய்துவிட்டனர்.

தினமும் அழை பேசியில் இருவரும் தங்களைப் பற்றி பேச தொடங்கினர், இருவருக்கும் ஏற தாழ ஒரே மனப்பான்மை தான், இருவருக்கும் பொருந்தி போனது, திருமண நாள் நெருங்க நெருங்க வீட்டில் ஒரே பதட்டம், வேலைகள் தலைக்கு மேல் கிடந்தது, இருவர் வீட்டிலும் வேலைகள் துரிதமாக நடந்தேறியது.

நாளை திருமணம், அவள் லேசாக அவள் வீட்டை சுற்றிப் பார்த்தாள், தினமும் அவருடன் பேசியதில் தான் இந்த வீட்டை விட்டு செல்ல போகிறோம் என்று தெரியவில்லை, ஆனால் அன்று ஏதோ ஒன்றை இழக்க போகிறோம் என்று அவள் மனம் பரிதவித்தது.

தாயையும், தந்தையையும் பார்த்தாள் எல்லோரும் வேலையில் இருந்தனர், அவள் வீட்டை ஒரு முறை சுற்றி வந்தாள், விரித்த கண்களோடு வீட்டை பார்த்தாள், கண்கள் சுருங்கிய பின்னர் ஓரத்தில் நீர் துளி சொட்டியது.

தங்கையின் புது துணி பரவசத்தில் அக்கா என்று ஓடி வந்தாள். அவளை பார்த்ததும் என்ன ஆச்சு அக்கா என்றாள், பூ வாங்கினால் கூட சமமாய் வெட்ட சொல்லி சண்டை போடும் அக்கா , இனி நான் யாருடன் சண்டை போடுவேன், இந்த சின்ன சின்ன மகிழ்ச்சிகளை விட்டுக் கொடுத்து விட்டு நான் செல்ல போகிறேனே என்று எண்ணினாள்.


அடுப்படியில் பால் கொதித்து கொண்டிருந்தது, ஓடி சென்று அடுப்பை அனைத்து அம்மா பால் வெச்சிட்டு எங்க போனே என்று திட்டினால், அவளை பெற்றவள், அவளை வளர்த்தவள் என்றாலும், அம்மா வை அடிக்கடி திட்டி விடுவதும், பின் கட்டி அணைப்பதும் இனி கிடைக்குமா?

அப்பா யாருடனோ தொலைபேசியில் பேசிக் கொண்டிருந்தார், அவர் பக்கத்தில் சென்று அமர்ந்தாள், பேசிக் கொண்டே அப்பா இவளைப் பார்த்தார், அம்மா வை கொஞ்சம் கூப்பிடுமா என்று சொல்லி விட்டு மறுபடியும் பேச தொடங்கினர், இவள் எச்சிலையும் சோகத்தையும் தொண்டையில் விழுங்கி விட்டு எழுந்து அம்மா வை அழைத்து விட்டு, வீட்டின் வெளியில் உள்ள மாடிப்படியில் உட்கார்ந்தாள்.

எங்கிருந்தோ, அடியே உள்ள போ, கருத்துர போற நாளைக்கு கல்யாணத்த வெச்சிக்கிட்டு இங்க வந்து உட்காரா பாரு என்று எப்பொழுதும் எதையாவது சொல்லி கொண்டிருக்கும் பாட்டி, எரிச்சலுடன் பாட்டியிடம் எப்பொழுதும் பேசும் அவள் அன்று பாட்டி சொன்னதை கேட்காமல் பாட்டியை முறைத்துப் பார்த்தாள், முகம் அப்படியே அழுவது போல மாறியது, பாட்டி உடனே என்னடி என்ன ஆச்சு என்று பதட்டத்துடன் கேட்டாள், அழுகை அருவிப் போல் பொங்கியது உள்ளே ஓடி சென்று விரக்தியுடன் அம்மா அப்பா என்று கத்தினால் எல்லோரும் ஏதோ என்று பயந்துக்கொண்டு ஓடி வந்தனர்.

உடனே, அம்மா நான் போகமாட்டேன், இங்கேயே இருந்துடுறேன், உங்களை விட்டு நான் எப்படி செல்வேன், அங்க எப்டி இருக்குமோ, எனக்கு பயமா இருக்கு, நான் போகலை என்று மெல்லிதாய் அழுதாள், உடனே அப்பாவின் மனம் அழுதது, அம்மா சமாதனம் சொன்னாள், அப்பாவுடன் அவ்வளவு நெருக்கம் இல்லாமல் இருந்தாலும் அப்பாவிற்கும் பெண்ணிற்கும் உள்ள அந்த பாசம் வார்த்தையில் வருணிக்க முடியாதது, தங்கை குலுங்கி குலுங்கி அழுதாள், அக்கா அழாதே மாமா உன்ன நல்லா பார்த்துபாறு என்று வெகுளி பேச்சில் சமாதானம் செய்தாள்.

அன்றிரவு அவளுக்கு பிடித்த அத்தனையும் சமைத்தாள் அம்மா, ஆனால் அவள் புண்பட்டு போயிருந்தாள். நாளை திருமணம். போகும் இடம் சொர்கமோ, இல்லையோ என்றெல்லாம் தெரியாது.

ஆனால் அவள் வாழ்ந்த ஒரு சொர்கத்தை விட்டு மட்டும் அவள் செல்ல போகிறாள்... திருமணம் என்பது ஆண்களின் வாழ்வில் ஒரு நிகழ்வு, ஆனால் ஒவ்வொரு பெண்ணின் வாழ்விலும் அது மாற்றம்.

அவள் வாழ்ந்த வீட்டிலிருந்து அவளை வேரோடு பிடிங்கு எடுத்து மற்றொரு இடத்தில் நட்டு வைக்கும் விழா தான் திருமணம், துளிர்ந்த பெண்களும் உள்ளனர், பட்டுப்போன பெண்களும் உள்ளனர். 
நன்றிகள்.

Monday, 17 February 2014

உலக அதிசயப்படியலில் இடம்பெறாத தமிழர்களின் கட்டிடக்கலை மற்றும் 
பொறியியல் அதிசயமான இசைத்தூண்கள் ..!.

இந்த இசைத்தூண்களானது ஒரு நீளமான பாறையை வெட்டி எடுத்து, அதிலிருந்து ஏழு தனித்தனி சிறிய தூண்களாக வடித்துள்ளனர், இந்த ஒவ்வொரு சிறிய தூண்களை தட்டினால் சப்தசு(ஸ்)வரங்கலான " ச,ரி,க,ம,ப,த,நி " என்ற தனித்தனி ராகங்களை அது இசைக்கின்றது. சில பெரிய தூண்களை சுற்றி இடம் பெற்றுள்ள சிறிய தூண்களில் ஐம்பத்தி மூன்று தனித்தனி ராகங்களை இசைக்கின்றது.

இதில் பெரிய தூணில் கர்நாட சங்கீதமும், அதைச் சுற்றியுள்ள சிறிய தூண்களில் மிருதங்கம், கடம், சலங்கை, வீணை, மணி போன்ற இசைக்கருவிகளின், இசையை தருகின்றது.


ஒவ்வொரு கல்லையும் ஒவ்வொரு பதத்திற்கு இழைத்திருந்தால் தான் இப்படி இது வேறு வேறு ஒலிகளில் இசைக்கும். இதைத் தட்டுவதால் நம் விரல்களுக்கு எந்த வலியும் ஏற்படுவதில்லை. உண்மையான இசை ஞானம் உள்ளவர்கள் இதைத் தட்டினால் இசைக்கருவியில் இருந்து வரும் இசையை விட மிக துல்லியமாக இது இசைக்கின்றது.

படத்தில் உள்ளது நெல்லையப்பர் கோவிலின் இசைத்தூண். ஆனால், இதைப் போன்ற இசைத்தூண்கள் மதுரை மீனாட்சி அம்மன் கோவில், ஆழ்வார் திருநகரி பெருமாள் கோவில், சுசீந்திரம் கோவில் போன்ற பல தமிழக மற்றும் தென் இந்திய கோவில்களில் காணலாம்.

இசைத்தூண்கள் உள்ள கோவில்கள்:

அழகர் கோவில்
ஆழ்வார் திருநகர்
களக்காடு
குற்றாலம்
சுசீந்திரம்
செண்பக நல்லூர் (துளை இசை)
தட்புத்திரி
தாடிக் கொம்பு (வேத ஒளி) சுந்தரராஜப் பெருமாள் கோவில்
கருவரைக்கு செல்லும் வழியில் உள்ள
மண்டபம்

திருப்பதி
திருவனந்தபுரம்
திருநெல்வேலி
தென்காசி
பெங்களூர் ராமராசன் பேட்டை
மதுரை
வெப்பாச்சி
க(ஹ)ம்பி (இசைத்தூண்கள்-துளை இசைத் தூண்கள்)
நன்றிகள். 

Sunday, 16 February 2014

தமிழர் இசையே உலகத்திலேயே மிகவும் பழமை.....!.

குமரிக்கண்டத்து இசை!

உலகத்திலேயே மிகவும் பழமையுடைய இசைத் தமிழர் இசையே. உலகில் சிறந்த இசை இந்திய இசையே. அதிற்சிறந்தது தமிழிசையே. தமிழிசையே இன்று உழையிசையடிப்படையில் தாய்பண்களையும், கிளைப்பண்களையும் வகுத்தும், பழந்தமிழ் குறியீடுகளையும் பண் பெயர்களை வடச்சொல்லாக மாற்றியும் ”கருநாடக சங்கீதம்” எனப் பெயரிட்டு வழங்கி வருகின்றனர். கேள்வியைச் சுருதி என்றும், நிலையை ஸ்தாய் என்றும் மொழி பெயர்க்கப்பட்டுப் பயன்படுத்தப் படுகிறது.


குமரிக்கண்டத்துத் தமிழர் நுண்மாண் நுழை புலத்தராயும் , தலைசிறந்த நாகரிகமுடையராயும், எஃகுச் செவியராயும் இருந்தமையால், ஏழு பேரிசையும், ஐந்து சிற்றிசையும் ஆகிய பன்னீரிசையை (சுரத்தை) யும் கண்டு ஆயப்பாலை என்னும் முறையில் எழு பாலைப்பண்களைத் திரிந்ததும் அன்றி, அப்பன்னீரிசையும் வட்டப்பாலை என்னும் முறையில் 24 ஆகவும், திரிகோணப்பாலை என்னும் முறையில் 48 ஆகவும், சதுரப்பாலை என்னும் முறையில் 96 ஆகவும் நுட்பமாகப் பகுத்து எல்லையற்ற இசைப் பேரின்பத்தை நுகர்ந்திருந்தனர் என்று ஆராய்ச்சி அறிஞர்கள் கண்டுணர்த்துயுள்ளனர்.

பேரிசை ஏழு (ஸ்வரங்கள் 7): குரல் (ஸட்ஜம்; ஸ), துத்தம் (ரிஷபம்; ரி), கைக்கிள்ளை (காந்தாரம்; க), உழை (மத்தியமம்; ம) இளி (பஞ்சமம்; ப), விளரி (தைவதம்; த), தாரம் (நிஷாதம்; நி) என்பவையாகும். சிற்றிசையை (ரி,க,ம,த,நி) ஆகணம் என்று, குரலும் (ஸ) இளியும் (ப) அல்லாத பேரிசையை அந்தரம் என்றும் வழங்கினர். 
நன்றிகள்.

Friday, 14 February 2014

திருமாங்கல்யம் கட்டும் வேளையில்.....!

தாலி கட்டும்போது உபயோகிக்கும் மந்திரத்தின் அர்த்தத்தைத் தெரிந்து கொள்ளுங்கள்.

திருமணத்தில் பெண்ணின் கழுத்தில் திருமாங்கல்யம் கட்டும் வேளையில் உபயோகிக்கும் சமசுக்கிரத மந்திரம் சொல்கின்றார்களே.


அதனுடைய அர்த்தம் 

"மங்கலமான பெண்ணே!, உன்னோடு இன்று நான் தொடங்கும் இல்லறவாழ்வு நல்லமுறையில் இருக்க வேண்டும் என்று உறுதியளித்து, இந்தத் திருமாங்கல்யத்தை உன் கழுத்தில் அணிவிகின்றேன்.

என் இல்லத் துணைவியாக, என் சுகதுக்கங்களில் பங்கேற்று, நிறைந்த யோகத்துடன் நீ நூறாண்டு காலம் வாழ்வாயாக". 
நன்றிகள்.   

இளைஞர்கள் என்பவர்கள் ஒவ்வோரு ஊரின்.....!.

"மாறி வரும் நாகரிகத்தால் மறைந்து வரும் பாரம்பரியம்"

மாறி வரும் நாகரிகத்தால் நாம் வளர்ந்து வருகிறோம் என்பதில் துளியும் சந்தேகமில்லை. ஆனால் நாம் நமது பாரம்பரியங்களை மறந்து வருகின்றோம். முன்பெல்லாம் நாம் அனைவரும் ஒற்றுமையுடன் காணப்பட்டோம் ஆனால் தற்பொழுது நம்மில் ஒற்றுமை குறைந்து கொண்டே வருகின்றது. பக்கத்து வீட்டில் எத்தனை பேர் இருக்கின்றார்கள் என்பது கூட தெரியாமல் இருக்கும் நிலைக்கு தள்ளப்பட்டுள்ளோம்.

இதனால் நமது துன்பங்களை மற்றவர்களுடன் பகிர்ந்து கொள்ள தயங்குகின்றோம் . மற்றவர்களுடன் நமது துன்பங்களை பகிர்ந்து கொள்ளாத காரணத்தினால் நாம் மேலும் சிரமத்திற்கு உள்ளகின்றோம். ஆகவே நாம் அனைவரும் நமது பக்கதிலுள்ளவர்களுடன் நாம் ஒற்றுமையுடன் இருக்க வேண்டும்.


நாம் சிறு வயதாகயிருக்கும் போது பல வீடுகளுக்கு சென்று விளையாடி இருக்கின்றோம். ஆனால் நமது குழந்தைகள் பக்கத்துக்கு வீட்டிற்கு சென்று விளையாட நாம் அனுமதிப்பதில்லை. இதனால் நமது குழந்தைகள் மற்ற குழந்தைகளுடன் பழகுவதில்லை. இதனால் குழந்தைகள் சமுதாயத்துடன் இணையாமல் காணப்படுவார்கள். ஆகவே குழந்தைகளை மற்ற குழந்தைகளுடன் விளையாட அனுமதித்து அவர்களுக்கு ஓரளவிற்கு வெளி உலகம் தெரியுமாறு பார்த்து கொள்ளவேண்டும்.

நாம் சிறு வயதாகயிருக்கும் போது நமது ஊரில் எந்த ஒரு விசேச நிகழ்ச்சி நடைபெற்றாலும் ஊரிலுள்ள அனைவரும் கலந்து கொண்டு சிறப்பிப்பார்கள். ஆனால் தற்பொழுது நமது ஊரில் எந்த ஒரு விசேச நிகழ்ச்சி நடைபெற்றாலும் நாம் அதனை கண்டுகொள்ளது தொலைகாட்சியில் நிகழ்சிகளை கண்டுகளித்து கொண்டிருக்கிறோம். இது நமது ஊரின் மீது நாம் கொண்டுள்ள மதிப்பு குறைந்துள்ளது என்பதனை குறிகின்றது. ஆதலால் நமது ஊரில் எந்த நிகழ்ச்சி நடைபெற்றாலும் அது நம்ம வீட்டு நிகழ்ச்சி என்பது போல உரிமையுடன் பங்கெடுக்க வேண்டும்.

முன்பெல்லாம் நமது ஊரில் திருமணங்கள் இரண்டு நாட்கள் நடைபெறும். ஆனால் தற்பொழுது ஒரு நாட்கள் கூட நடைபெறுவதில்லை அரை நாட்கள் மட்டுமே நடைபெறுகின்றது. அந்த அளவிற்கு நமக்கு நேரம் இருப்பதில்லை நாம் இயந்திரமாக மாறிவருகின்றோம். அதே போன்று நமது ஊரில் திருமண நிகழ்ச்சியில் முன்பெல்லாம் சாப்பாடு வழங்குவார்கள் ஆனால் தற்பொழுது மாறி வரும் நாகரிகத்தால் பிரியாணி வழங்குகின்றோம்.

திருமண நிகழ்ச்சியில் சாப்பாடு தயார் பண்ணும் பொழுது காய் கறி வெட்டுதல் என்பதை நாம் பாரம்பரியமாக கடை பிடித்து வந்தோம். ஆனால் தற்பொழுது பிரியாணி வைப்பதனால் காய் கறி வெட்டுதல் என்னும் பாரம்பரியம் நமது ஊரில் மறைந்து வருகின்றது. இந்த காய் கறி வெட்டுதல் நிகழ்ச்சியில் நமது குடும்பத்தினர் அனைவரும் கலந்து கொண்டு தங்கள் வீட்டு நிகழ்ச்சியை போல சிறப்பிப்பார்கள்.

மேலும் உணவு பரிமாறும் போது நமது உறவினர்கள் பரிமாறுவார்கள். நமது உறவினர்கள் இந்த நிகழ்ச்சியில் பேசி,பழகி சந்தோசமாக காணப்படுவார்கள். இதனால் நமது உறவுகள் மேலும் மேலும் மேம்படுகின்றது.ஆனால் பிரியாணி தயார் பண்ணும் பொழுது நமது உறவினர்களுக்கு பங்களிப்பிருப்பதில்லை. இதனால் நமது உறவுகள் மேலும் மேலும் குறைகின்றது. இன்னும் எவரேனும் இதே மாதிரி நிகழ்ச்சிகள் நடத்தினால் கூட பக்கத்திலுள்ளவர்கள் பங்களிக்காத நிலையும் காணப்படுகின்றது.

இது அவர்களுடன் தொடர்பில்லாத நிலையை குறிகின்றது. இதனால் நிகழ்ச்சியை நடத்துபவர்களுக்கு பக்கத்திலுள்ளவர்கள் தங்கள் வீட்டு நிகழ்ச்சியில் கலந்து கொள்வார்களோ மாட்டார்களோ என்னும் அச்சம் ஏற்படுகின்றது. ஆகவே நமது பக்கத்திலுள்ளவர்களின் விசேச நிகழ்ச்சியில் கலந்து கொண்டு நிகழ்ச்சிகளை சிறப்பிக்குமாறு கேட்டு கொள்ளப்படுகிறார்கள்.

நமது ஊரின் இளைஞர்கள் முற்றிலும் மாறி கொண்டிருக்கிறார்கள். முன்பெல்லாம் நமது ஊரில் எந்த நிகழ்ச்சி நடத்தினாலும் இளைஞர்களின் பங்களிப்பு முழுவதுமாக இருக்கும். ஆனால் தற்பொழுது அவர்கள் ஊரில் எந்த நிகழ்ச்சிகள் இருந்தாலும் பங்களிப்பதில்லை. ஏதோ ஒரு ஊரில் நிகழ்சிகள் நடப்பது போன்று பங்களிக்கிறார்கள். இளைஞர்கள் என்பவர்கள் ஒவ்வோரு ஊரின் தூண்கள் அவர்களால் மட்டுமே ஒவ்வோரு ஊரை முன்னேற்றத்திற்கு கொண்டு செல்ல இயலும் என்பதை உணர்ந்து நாம் அனைவரும் இணைந்து செயல்படுவோம்.
நன்றிகள்.

Wednesday, 12 February 2014

உணவு செரியா நிலை.....!

உணவு செரியா நிலை ஏன் உண்டாகிறது?

முப்பது முதல் 32 அடி நீளமுள்ள தொடர்ந்து குழாயாய் அமைந்துள்ள செரிமானப்பாதை (alimentary canal) என அழைக்கப் படும், அற்புதமான திகைக்கச் செய்யும் பொறிவல்லாளராகச் செயலாற்றி வரும் ஒழுங்கில், குறுக்கீடு செய்வது உணவு செரியா நிலையைக் கொண்டு வருகிறது.

இந்த முறை ஒழுங்கில், உணவு சிதைக்கப்பட்டு, கடையப்பட்டு, குழம்பாக்கப்பட்டு, கரைந்து, வேதியியல் செயலால் எளிய கலவையாகப் பிரிக்கப்பட்டு, குருதியில் ஏற்றுக்கொள்ளும் நிலைபெற்ற பின் குருதி உறிஞ்சிக் கொள்கிறது.

செரிமானப்பாதை மெல்லிய படலத்தால் (membrance) ஆனது. எலும்பு, குருத்தெலும்பு, விலங்கு, காய்கறிப் பொருள்கள், ஆகியவை இந்த மெல்லிய படலத்தைவிட வலுவாயுள்ளவை கரடுமுரடானவை. ஆனால் இவற்றைக் கரைக்கும் வேதியியற் பொருளைத் தடுத்து நிறுத்தும் தன்மையை இம்மெல்லிய படலம் கொண்டிருக்கிறது.

உணவுச் செரித்தலைச் செய்யும் தலையாய பொருள்களுள் ஒன்றான இரைப்பை நீர் (gastric juice) செறிவான நீரகமும் பாசிகமும் உள்ளடங்கிய (hydrochloric) அமிலத்தை (concentrated hydrochloric acid) உடையது. இது சில நிமிடங்களில் வேகவைத்த முட்டையைக் கரைத்து ஈர்த்துக் கொள்ள வல்லது.


இது ஏன் இரைப்பையைக் கரைப்பதில்லை? இரைப்பை அமிலத்தை மட்டும் கசியச் செய்யாமல் கடினத்தன்மையை எதிர்த்து நின்று சமப்படுத்தும் காரப் பொருளான (alkali) அமோனியா (ammonia)வையும் தரும்போது, சரிக்கட்டு இயக்கியாக (neutrazling agent) அமைவதால், அந்த அமிலம் இரைப்பையைக் கரைப்பதில்லை.

இந்தச் சக்தி வாய்ந்த இரைப்பை நீர் தடங்கல் செய்யப்படுவதற்குப் பல காரணங்கள் உண்டு. அவ்வாறு முட்டுக்கட்டையிடப்படும்போது இரைப்பையில் வலி விளைகிறது. இதனையே உணவு செரியா நிலை என அறிகிறோம்.

உணவூட்டக் கால்வாய்க் குழாய் உணவு பெறுவதற்காக தயாரிப்பை உணவுக்கு முன்பே முன்னேற்பாடு செய்து வைத்துக் கொள்கிறது. உணவுப் பொருளின் தோற்றம், மணம், உணவைப் பற்றிய எண்ணம் ஆகியவை வாயூறலையும், இரைப்பை நீர் சுரப்புத் தூண்டலையும் செய்யத் தொடங்கி விடுகின்றன.

அதே சமயத்தில் உணவை நோக்கி இரைப்பை, சுரப்பிகளை (glands)த் தொழில் செய்வதற்கேற்ப நுண்புழை நாளங்களை (capillaries) அகலப்படுத்தி உணவு செரிப்பதற்கான செய்கைகளைச் செய்வதற்குத் தேவையான அதிகக் குருதியைக் கொண்டு வருவதற்கு வழி வகுக்கிறது.

ஆனால் பசியில்லாமல் உண்ணல், ஏற்றுக்கொள்ள இயலாத கூட்டு, கவலை, கோபம், பயம், நமைச்சலூட்டல் போன்ற உணர்ச்சிகள் இரைப்பையில் தயாரிப்பை நிறுத்தக்கூடும். இவை இரைப்பையை வெளிறச் செய்ய (pale)வும் கூடும். அதன் விளைவு உணவு செரியாமல் போகும்.

மிக விரைவாக உணவை வாயிலிட்டு அரைக்காமல் உண்பதும் செரிமானமாவதற்குத் துன்பமாக அதிக உணவை உண்பதும் பெருஞ்சுமையாகவும் ஒழுங்கைக் கெடுக்கும் தன்மையுடையதாகவும் செய்து நமக்கு உணவு செரியாத் தன்மையைக் கொடுக்கும்.
நன்றிகள்.

Monday, 10 February 2014

உணவே மருந்து....!

அறுசுவையில் ஆரோக்கியம் - உணவே மருந்து!!

நமது உடலில் ஏதாவது ஒரு உறுப்போ, சுரப்பியோ சரியாக வேலை செய்யவில்லை என்றால் அதனை உடல் ஒரு நோயாக வெளிப்படுத்தும்.....இது தான் உடலின் சங்கேத பாசை. ருசிக்கு மட்டும் உண்ணாமல், பசிக்கு தேவையான சுவைகளுடன் உணவு உண்டாலே வியாதிகள் வருவதற்கான வாய்ப்புகளே இல்லை எனலாம். 

ஒரு மனிதனின் ஆரோக்கியமே அவனுடைய செயல்பாட்டை நிர்ணயம் செய்யும். ஆரோக்கியமற்ற ஒருவனால் தெளிவான வாழ்க்கையே வாழ முடியாது. மற்றவரையும் வாழ்விக்க முடியாது என்பது தான் உண்மையும் கூட..

ஒருவரின் வாழ்வு சிறக்க உடலை நல்ல முறையில் வைத்துக் கொள்ள வேண்டும். நம் உடலுக்கு தேவையான சத்துப்பொருட்களும், உணவுப் பொருட்களும் எந்த அளவிற்கு தேவை, அறுசுவையில் எந்த சுவை குறைவாக இருக்கிறது என்ற விழிப்புணர்வே இல்லாமல் வாழ்ந்துக் கொண்டு இருக்கிறோம். 

துவர்ப்பு, உப்பு, இனிப்பு, புளிப்பு, கசப்பு, காரம் என அறுசுவையுடன் கூடிய உணவு மட்டுமே நம்மை நோயில்லாமல் வாழ வைக்கும் என்பதை எப்போது புரிந்து கொள்கிறோமோ அப்போது தான் நாம் நோயிலிருந்து விடுபட முடியும். ஒவ்வொரு உணவுப் பண்டங்களும் நம் உடலுக்கு தேவையான அத்தியாவசிய சத்துக்களையும் சுவைகளையும் கொண்டுள்ளது... 

நமது ஆரோக்கியத்திற்கு, இந்த அறுசுவைகளை சரியான விகிதத்தில் உணவில் சேர்த்துக் கொண்டாலே , அத்தியாவசிய சத்துக்கள் அனைத்தும் கிடைக்கும் என்பதை நம் முன்னோர்கள் எந்த வித ஆய்வு கூடமும் இல்லாமல் , நவீன உபகரணங்களும் இல்லாமல் கண்டறிந்திருக்கிறார்கள் . சுவைகளை வைத்தே அதில் இருக்கும் சத்துக்களையும், அவற்றின் விகிதாச்சாரத்தையும் கண்டறிந்ததே ஒரு மாபெரும் நுண்ணறிவுதான் .


இன்றைய மருத்துவ முறையில் எத்தனை நவீன உபகரணிகள் கொண்டும் அறிய முடியாத சில நோய்களை அவர்கள் வாதம், பித்தம், கபம் எனப் பிரித்து எந்த நாடி மிகுந்தோ/குறைந்தோ உள்ளது என்று கைகளில் உள்ள நாடியைத் தொட்டே கண்டறிந்தார்கள். அதற்கு உணவுமுறை மாற்றம், மூலிகைகள் என தகுந்த தீர்வையும் இயற்கையான முறையில் நமக்கு அளித்து விட்டு தான் சென்றார்கள். 

நவீன மருத்துவம் தான் இன்று நம்மில் பல பேர் கொண்டாடும் வைத்திய முறை. ஆனால்....நவீன வைத்தியம் என்ன என்பதை சற்றும் அறியாத நம் முன்னோர்கள் நூறு வருடங்களைக் கடந்தும் வாழ்ந்து வந்தார்கள். வெளிநாடுகளில் படித்து தேர்ந்த மருத்துவர்கள், ஊசி, மருந்து, மாத்திரைகள், உடலுக்கு உள்ளேயும் வெளியேயும் இருப்பவற்றை காட்டும் நவீன கருவிகள், எல்லாம் இருந்தும் நவீன மருத்துவம் சாதித்தது என்ன?

இந்த உறுப்பில் இந்த நோய் வந்திருக்கிறது என்று எல்லாவற்றையும் தனித்தனியாய்ப் பிரித்து கண்டுபிடித்த நவீன மருத்துவமுறை பல லட்சங்களை விழுங்கிவிட்டு நம்மில் பலரை நம்மிடம் இருந்து பிரித்து விட்டது.. அல்லது.... லகரங்களில் கடன் வாங்கி உயிர்பிழைக்க வைத்து அவர்களை கடன்காரர்களாக்கி நிம்மதி இல்லாமல் சாகடித்திருக்கிறது.... 


நம் ஆரோக்கியத்திற்கு மிக முக்கியமானது இரும்பு,சுண்ணாம்புச்சத்து,பல உயிர்ச்சத்து கலந்த பலவிருத்தியோ அல்லது மருந்து-மாத்திரைகளோ இல்லை. உதாரணமாக உப்பில் சோடியம் குளோரைடு அடங்கி உள்ளது.. இது நமது உடலுக்கு அத்தியாவசிய தேவையானது..

ஆனால் இது அதிக அளவில் தேவை இல்லாதது. மிளகில் (100Gms ) 240% வைட்டமின் "c ", 39 % உயிர்ச்சத்து B -6 , 13 % இரும்பு சத்து, 14 % தாமிர சத்து, 7% பொட்டாசியம் அடங்கி இருப்பதை நவீன ஆய்வுகள் கண்டறிந்துள்ளன... இந்த கனிம சத்துக்கள், செரிமான சக்திக்கும், உடலில் தேவை இல்லாமல் சேரும் கொழுப்பை கரைக்கவும் , தொற்றுக்களை தடுக்கவும் பயன்படும்.....

அதனால் தான் நம் முன்னோர்கள் பத்து மிளகோடு பகையாளி வீட்டில் கூட உணவு உண்ணலாம் (மிளகு விசத்தன்மையை முறிக்கும் ஆற்றல் வாய்ந்தது) என்று இந்த மிளகின் சிறப்பைப் பற்றி அன்றே தெளிவாக உரைத்திருக்கிறார்கள். 

ஆண்களை விட பெண்களுக்குத்தான் வியாதிகள் வரும் வாய்ப்புகள் அதிகம்.. இதற்கான காரணம் என்னவென்று யோசித்தால்...உணவு ஒரு முக்கிய காரணமாக இருக்கும்.

தேவையறிந்து சமைக்காமல் தேவைக்கு அதிகமாக சமைத்து, பின் அது வீணாகி விடக் கூடாதென்பதற்காக பசி இல்லாமல் சாப்பிட்டோ, அல்லது அதனை அடுத்தவேளைக்கு சாப்பிட்டோ வியாதிகளுக்கு சொந்தக்காரர்கள் ஆகி விடுகிறார்கள்... .

நம் உடம்புக்கான மருந்து வேறெங்குமில்லை, நம் உடம்புக்குள்ளேயே உண்டு.
நன்றிகள்.

Wednesday, 5 February 2014

சம்மணமிட்டு அமர்ந்து.....!

சம்மணமிட்டு அமர்ந்து சாப்பிடுவது ஏன்.?? 

முன்பெல்லாம் வாழை இலையில் தரையில் பரிமாறுவதுதான் கெளரவம்..ஆனால் இப்போது உணவு உண்ணும் மேசை (dining table)....இது சரியா தவறா ?!! முதலில் முன்னோர்கள் இப்படி சம்மணமிட்டு சாப்பிட்டதின் நோக்கமென்ன? 


சாப்பிடும் பொழுதாவது நாம் காலை மடக்கி அமர்ந்து தான் சாப்பிட வேண்டும். சாப்பிடும் பொழுது காலைத்தொங்க வைத்து அமர்வதனால் ரத்த ஓட்டம் வயிற்றுப் பகுதிக்குச் செல்லாமல் காலுக்கே அதிகமாகச் செல்கிறது.

எனவே செரிமானம் தாமதமாகிறது. காலை மடக்கி சுக ஆசனத்தில் அமர்ந்து சாப்பிட்டால் சாப்பிட, சாப்பிட, சாப்பாடு செரிமானமாகிவிடும்.

ஏனென்றால் கீழே ரத்த ஓட்டம் செல்லாமல் முழு சக்தியும் வயிற்றுப் பகுதிக்குச் செல்லும் பொழுது நமக்கு செரிமானம் நன்றாக நடைபெறுகிறது.

எனவே தான் சம்மணமிட்டு அமர்ந்து சாப்பிடும் படி வலியுறுத்த பட்டது.

நன்றிகள்.

Tuesday, 4 February 2014

எண்களின் தமிழ் வடிவ ஓலிகளை.....!

எண்களின் தமிழ் வடிவ ஓலிகளை எளிமையாக நினைவில் வைத்துக்கொள்ள 


பூச்சியத்தை கண்டுபிடித்த‍தோடு அல்லாமல் அதை உலக நாடுகளும் பயன்படுத்திக்கொள்ள அனுமதி அளித்த‍து எந்த நாடு தெரியுமா? நமது இந்தியாதான்.

சரி, நமது தாய்மொழியான தமிழில் எண்களின் ஒளி வடிவம் என்ன வென்று உங்களுக்குத் தெரியு மா? 

1 – க
2 – உ 
3 – ங 
4 – ச 
5 – ரு
6 – சா
7 – எ
8 – அ
9 – கூ
0 – 0

அப்பப்பா இதை எப்ப‍டியப்பா நினைவில் வைத்துக்கொள்வது என்றுதானே அச்ச‍ம் கொள்கிறீர்கள்.

அச்ச‍ம் எதற்கு?, 

கடுகு, உளுந்து, ஙனைத்து, சமைச்சு, ருசிச்சு, சாப்பிட்டேன், என, அவன், கூறினான், ஓ, என்ற இந்த வாக்கியத்தை நீங்கள் எளிதாக நினைவில் வைத்துக் கொ ள்ள‍ முடியும் அல்ல‍வா?

என்ன‍ இது அதெப்படி இதில் தமிழ் எண்கள் ஒலி வடிவம் வருகிற து என்று நீங்கள் ஐயப்படுவது எனக் குத் தெரிகிறது. மேற்கூறி ய அதே வரியை கீழேயும் குறிப்பிட்டுள்ளேன்.

அதை நீங்கள் படியுங்கள் ஆனால் ஒரே ஒரு நிபந்தனை கீழே உள்ள‍ வரியில் வரும் அத்த‍னை வார்த் தைகளின் முதல் எழுத்துக்களை மட்டுமே படித்துப்பாருங்க ள். எண்களில் தமிழ் மொழி வடிவம் வருகிறது அல்ல‍வா?

“க“டுகு, “உ“ளுந்து, “ங“னைத்து, “ச“மைச்சு, “ரு“சிச்சு, “சா“ப்பிட்டேன். “எ“ன, “அ“வன், “கூ” றினான், “ஓ“

என்ன‍ இப்ப உங்களுக்கு எளிமையாக இருக்குமே!
நன்றிகள்.

Thursday, 30 January 2014

நினைவாற்றலை மேம்படுத்தி.....!

நினைவாற்றலை மேம்படுத்தி நினைத்ததைச் சாதிக்க . . .

பொதுவாக நினைவாற்றல் என்பது அனைவருக்கும் மாபெரும் தேவை. நினைவாற்றல் சுமாராக இருப்பவர்கள் கூட நினைவாற்றலை வளர்த்துக் கொள்ள மூன்று முக்கியமான வழிமுறைகளை கடைப்பிடிக்க வேண்டும்.

1. கவனமான பார்வை
2. ஆர்வம், அக்கறை
3. புதிதாகச் சிந்தித்தல்

இந்த மூன்றிற்குமே சிறப்பான பயிற்சி தேவை. அந்தப் பயிற் சிக்காக எந்தப் பயிற்சிக் கூடத்திற்கும் செல்ல வேண்டியதில்லை.

 நமக்கு நாமே பயிற்சி அளித்துக் கொள்ளலாம். அதற்கா ன சில பயிற்சி முறைகளைப் பார்ப்போம். முதலாவதாக 

ஒரு பயிற்சி.

ஒன்றிலிருந்து நூறு வரை எண்ணுங்கள். பிறகு 2,4,6 என்று இரண்டு இரண்டாக எண்ணுங்கள். பிறகு 100 லிருந்து தலை கீழாக, 100, 98 96, என்று இரண்டு இரண்டாகக்குறைத்து எண்ணுங்கள். பிறகு நான்கு நான்காகக் குறையுங்கள். இப்படியே 5,6,7 வரை தாவி த்தாவி குறைத்து எண்ணுங்கள். இப்படி ஏழு ஏழாக குறைத்து எண்ணக் கற்றுக் கொண்டீர்கள் என்றால், உங்களுடைய நினைவுத்திறன் நல்ல அளவில் வளர்ந்திருக்கிறது என்று அர்த்தம்.

இப்போது ஓர் ஆங்கிலப் பத்தரிகையை எடுத்துக் கொள்ளுங்கள். அதில் ஒரு பத்தியில் எஸ். (S)எழுத்தையெல்லாம் எண்ணிக் குறித்துக் கொள்ளுங்கள். அடு த்து இரண்டு மூன்று பத்திகளில் உள்ள ஏ (A) எழுத்தையெல்லாம் எண்ணிக் குறித்துக் கொள்ளுங்கள். இப்போது மீண்டும் ஒருமுறை திருப்பிப்பார்த்தீர்கள் என்றால், எத்தனை எஸ் அல்லது ஏவை எண்ணாமல் விட்டிருப்பீர்கள் என்று தெரியவரும். அதை வைத்து உங்கள் நினைவுத் திறனின் அளவை நீங்கள் தெரிந்துகொள்ளலாம்.

புதிய சிந்தனை மூலமும் நினைவுத் திறனை வெகுவாக வளர்த்துக் கொள்ளலாம். தொலைக் காட்சியில் வரும் விளம்பரங்களைப் பாருங்கள். அந்த விளம்பரம் பற்றி கொஞ்சம் ஆராய்ச்சி பண்ணுங்கள். வேறு எந்த மாதிரி இந்த விளம்பரம் இருந் திருந்தால், இதைவிட நன்றாக இருந்திருக்கும் என்று சிந்தித்துப் பாருங்கள். சிந்திக்க சிந்திக்க மூளையின் சிந்திக்கும் ஆற்றல் வளர்வதோடு நினைவாற்றலும் பெருகும். முயன்று பாருங்கள்.

இதே போன்று இன்னொரு பயிற்சி.

உங்கள் நெற்றியை கற்பனையாக நீங்களே 6 அறைகளாகப் பிரித்துக்கொள்ளுங்கள். ஒரு அறையை இழுங்கள். அதில் மறுநாள் 9 மணி செயல்முறைத் திட்டம் (programme) என்று எழுதிப் போடுங்கள்.

(உதாரணமாக 9 மணிக்க ராம்கோபாலை சந்திக்க வேண்டும் என்று கற்பனையாக எழுதிப் போடுங்கள்). பிறகு அந்த அறையை இழுத்து மூடுங்கள். இதே போன்று இரண்டாவது அறையைத் திறந்து இன்னொரு செயல்முறைத் திட்டம் எழுதிப் போடுங்கள். அதே போன்று அடுத்தடுத்த நான்கு அறைகளும், இப்படிச் செய்து விட்டால் இரவு படுக்கையில் படுத்ததும் உங்களுக்கே ஆச்சரியமாக இருக்கும். இந்த 6 செயல்முறைத் திட்டங்களும் அடுத்தடுத்து உங்களை அறியாமலே உங்கள் மனதில் தோன்றும். இன்னும் இதே போன்று நீங்கள் கூட புதிய புதிய முறைகளைக் கையாண்டு உங்கள் நினைவாற்றலை வளர்த்துக் கொள்ளலாம்.

புத்தகங்களைப் படிப்பது, காலையில் ஐந்து மணிக்கெல்லாம் எழுந்திருந்து அன்றைய நிகழ்ச்சிகளைத் திட்டமிடுவது, அபிப்யாசங்கள் செய்வது இதனா
லெல்லாம் கூட உங்கள் சிந்திக்கும் திறனையும், நினைவுத்திறனையும் வளர்த்துக் கொண்டே போகலாம். உடலின் ஒவ்வொரு உறுப்பும் ஓர் இயந்திரம். அதிலும் இதயமும், மூளையும், ஓய்வில்லாத இயந்திரங்கள். இதயம் ஓய்வு எடுத்துக் கொண்டால் வாழ்க்கை நின்று விடும். மூளைக்கு ஓய்வு கொடுத்தால் அது துருப்பிடித்துப் போய் ஒன்றுக்கும் பயனற்று வாழ்க்கை முன்னேற்றம் நின்று போய் விடும். ஆகையால் எந்த நேரமும் மூளைக்கு ஏதேனும் வேலை கொடுத்துக்கொண்டே இருங்கள். நினைவாற்றலை மேம்படுத்துங்கள். நினைத்ததைச்சாதியுங்க ள் .
நன்றிகள்.

Wednesday, 29 January 2014

கோபப்படும் குழந்தைகளை கையாள்வது எப்படி....?

அதிகமாக கோபப்படும் குழந்தைகளை கையாள்வது எப்படி?

எதற்கெடுத்தாலும் கோபம் கொள்ளும் குழந்தையை கையாள்வது ஒன்னும் இலகுவான காரியம் அல்ல. அவர்களை மாற்றுவதற்கு நீண்ட காலம் எடுக்கும். அதற்கு முக்கியமாக தேவைப்படுவது பொறுமையும் நீடித்து நிலைக்கும் திறனும். அதிகமாக கோபப்படும் குழந்தையை கையாள வேண்டும் என்றால், அவ்வகையான சூழ்நிலைகளில் அவர்கள் எப்படி நடந்து கொள்வார்கள் என்பதை முதலில் தெரிந்து கொள்வது அவசியம்.

அமைதியாக அழுதல் அல்லது மூர்க்கத்தனமாக நடந்து கொள்ளுதல் என எப்படி வேண்டுமானாலும் அவர்கள் அவர்களின் கோபத்தை வெளிக்காட்டுவார்கள். இது போக உங்களை அடிக்கலாம், கூச்சலிடலாம், அழலாம் அல்லது கடிக்க கூட செய்யலாம். இவைகளில் எதையாவது அவர்கள் அடிக்கடி தொடர்ச்சியாக செய்தால், அதிக கோபம் கொள்ளும் உங்கள் குழந்தையை கையாள நேரம் வந்து விட்டது என்பதை புரிந்துக் கொள்ளுங்கள்.

அதிகமாக கோபப்படும் குழந்தைகளை கையாள்வது எப்படி?


குழந்தைகள் அடம் பிடித்து சண்டித்தனம் செய்யும் போது பெற்றோர்களுக்கு மன அழுத்தமும் எரிச்சலும் ஏற்படும். இதனை நடத்தை பிரச்சனையின் ஒரு பகுதியாக எடுத்துக் கொள்ளலாம். நிலையான அக்கறையும் மன ஒருமித்தலும் இருந்தால் போதும், உங்கள் குழந்தையின் இந்த குணத்தை மாற்றிவிடலாம். அவர்கள் தங்களின் கோபத்தை வெளிப்படுத்தி அமைதியான பிறகு அவர்களுடன் பேசுங்கள். இது ஒரு தீய பழக்கம் என்று புரிய வையுங்கள்.

இவ்வகை சூழ்நிலைகளை சமாளிக்க சில தகவல்களை நீங்கள் அறிந்திருந்தால் இந்த வேலையை சுலபமாக செய்து முடிக்கலாம். அதிகமாக கோபம் கொள்ளும் குழந்தையை கையாள, இதோ உங்களுக்காக சில தகவல்கள்.

காரணத்தை கண்டுபிடியுங்கள்

உங்கள் குழந்தைக்கு கோபம் வருவதற்கான காரணத்தை முதலில் கண்டறிய முற்படுங்கள். சில நேரம் உங்கள் கவனத்தை ஈர்க்க அவர்கள் தங்களின் கோபத்தை வெளிக்காட்டலாம். அல்லது அவர்கள் தேவைகள் நிராகரிக்கப்படும் போதும் அவர்கள் தங்களின் கோபத்தை வெளிக்காட்டலாம். உங்கள் குழந்தைக்கு கோபத்தை உண்டாக்கும் சூழ்நிலைகள் திரும்ப ஏற்படாமல் பார்த்துக் கொள்ளுங்கள்.

சில விதிமுறைகளை போடுங்கள் 

செயல்பாட்டில் இறங்குவதற்கு முன்பு சரியாக திட்டமிடுவது மிகவும் முக்கியம். அதனால் களத்தில் இறங்கும் முன் முதலில் சில விதிமுறைகளை போடுங்கள். குழந்தையின் சில தேவையை நீங்கள் நிராகரிப்பதற்கான சரியான காரணத்தை அவர்களுக்கு புரிய வையுங்கள். அதே நேரம் அவர்களின் அனைத்து தேவைகளையும் நீங்கள் நிராகரிக்காதபடி பார்த்துக் கொள்ளுங்கள்.

சீக்கிரமாக செயல்படுங்கள்


உங்கள் குழந்தைக்கு அதிக அளவில் கோபம் வருவதை நீங்கள் கண்டறிந்தால், அதற்குரிய நடவடிக்கைகளில் உடனே இறங்குங்கள். இதனால் அதிக கோபம் கொள்ளும் உங்கள் குழந்தையை சுலபமாகவும் வேகமாகவும் சரி செய்து விடலாம்.

அவர்களுக்கு வழிகாட்டுங்கள் 

ஓய்வில்லாத (busy) இருக்கும் பெற்றோர்கள் தங்கள் குழந்தையின் குணத்தை மேம்படுத்த போதிய நேரம் ஒதுக்குவதில்லை. குழந்தைகள் எதற்கெடுத்தாலும் கோபப்படுவதற்கு இதுவும் கூட ஒரு முக்கிய காரணமாக விளங்குகிறது. அதனால் உங்கள் குழந்தைகளுடன் போதிய நேரம் செலவழித்து எது சரி எது தப்பு என்பதை அவர்களுக்கு புரிய வையுங்கள்.


புறக்கணித்தல் 

சில நேரங்களில் உங்கள் குழந்தையின் முன் கோபத்தை கையாள அவர்களின் கோபத்தை புறக்கணிப்பதே சிறந்த வழியாக விளங்கும். அவர்களின் தேவை எல்லாம் அவர்களின் பிடிவாதத்தால் நிறைவேறும் என்று அவர்கள் தெரிந்து கொண்டால், தொடர்ந்து பிடிவாதம் பிடித்துக் கொண்டே தான் இருப்பார்கள்.

பொறுமையாக இருங்கள் 

நீங்கள் எடுக்கும் நடவடிக்கைகளால் உடனடி பலன் கிடைக்கும் என்று எதிர்பார்க்காதீர்கள். அதற்கு சிறிது காலம் எடுக்கும். நீங்கள் எடுக்கும் நடவடிக்கைகளில் தொடர்ச்சியான பொறுமையை நீங்கள் கண்டிப்பாக கடைப்பிடிக்க வேண்டும். உங்கள் குழந்தையின் முன் கோபத்தை கையாள இதுவும் உங்களுக்கு உதவி புரியும்.

தொழில் ரீதியான உதவியை நாடுங்கள் 

குழந்தையின் முன் கோபத்தை கட்டுப்படுத்த இதுவும் ஒரு சிறந்த வழியாகும். குழந்தைகளின் பிடிவாதங்கள் மற்றும் கோபங்களை கையாள பல தனித்தன்மையான பிணி நீக்குபவர்கள் (therapy) உள்ளது. தொழில் ரீதியான ஆலோசனை மூலம் இவ்வகை சூழ்நிலைகளை சிறப்பாக கையாளலாம்.

அவர்களை பார்த்து கத்தாதீர்கள், அடிக்காதீர்கள் 

உங்கள் குழந்தை கோபத்தை எப்படி வெளிப்படுத்தினாலும் சரி, அவர்களை பார்த்து கத்தாதீர்கள். உங்களின் கவனத்தை ஈர்க்கவே அவர்கள் இப்படி நடந்து கொள்ளும் போது, நீங்கள் அவர்களை பார்த்து கத்துவது அவர்களுக்கு கூடுதல் சுவாரசியத்தை உண்டாக்கிவிடும். அவர்களை அடிக்கும் பொழுது அதுவே அவர்களுக்கு பழகிவிடும். பயம் என்பதே இல்லாமல் போய்விடும்.
நன்றிகள்.

Friday, 24 January 2014

தொப்பை குறைய எளிய உடற்பயிற்சி.....!

தொப்பை குறைய பல பயிற்சிகள் இருந்தாலும் இந்த பயிற்சி செய்வது மிகவும் எளிமையானது. மேலும் விரைவில் நல்ல பலனைத்தரக்கூடியது. இந்த பயிற்சி செய்ய முதலில் விரிப்பில் உள்ள  தரையில் படுத்துக்குங்க. மெதுவா உங்கள் காலை மேல தூக்குங்க. 

முதுகு தரையில் இருக்க வேண்டும். காலை மடக்க கூடாது. கால் நேராக தான் இருக்க வேண்டும். ஆரம்பத்தில் இவ்வாறு செய்ய முடியவில்லை என்றால் கீழே உள்ளபடி படிப்படியாக செய்ய ஆரம்பிக்க வேண்டும். இரண்டு காலையும் மடக்கி தரையில் படுங்க. பின் வலது காலை மட்டும் நேராக நீட்டவும். 10 வினாடிகள் இந்த நிலையில் இருக்கவும். 


பின் வலது காலை பழைய நிலைக்கு கொண்டுவரவும். பின் இடது காலை நேராக நீட்டவும் 10 வினாடி இருக்கவும். பின் இடது காலை பழைய நிலைக்கு கொண்டுவரவும். இவ்வாறு 10 முறை இவ்வாறு செய்யவும். பின்னர் இரண்டு காலையும் தரையில் இருந்து முட்டி மடங்காம நேரா தூக்குங்க. 

எவ்வளவு உயரத்துக்கு தூக்க முடியுமோ அவ்வளவு தூரம் தூக்கலாம். 30 வினாடி அந்த நிலையிலேயே இருக்க வேண்டும்.  நேரம் ஆக ஆக வயிறு இறுகும். உங்களால் காலை தூக்கியதுபோல் வைச்சிருக்க முடியாது. 10, 15, ...., 60 வினாடின்னு வரை நேரத்தை அதிகரிச்சுக்கலாம். நேரத்தை அதிகரிக்க முயற்சி செய்யுங்கள். 10 முறை இப்படி செய்யுங்கள்.
நன்றிகள்.

Wednesday, 22 January 2014

விக்கல் பிரச்சனைக்கான தீர்வுகள்......!


சீ(ஜீ)ரண மண்டலத்தில் பிரச்னை உருவாகியுள்ளது என்பதன் அறிகுறிதான் அடிக்கடி வந்து போகும் விக்கல். விக்கலை சமாளிக்க ஆலோசனை சொல்கின்றனர் மருத்துவர்கள். தற்போது இருக்கும் வாழ்க்கை முறை உடலில் பல நோய்களுக்கான அடித்தளத்தை ஏற்படுத்தி விடுகிறது.

உணவுகளில் பயன்படுத்தப்படும் அதிக எண்ணெய், சுவை கூட்டும் பொருட்கள் மற்றும் செயற்கை வண்ணம் ஆகியவற்றால் குடல் மற்றும் வயிற்றில் நாளடைவில் பல பிரச்னைகள் உண்டாகும் வாய்ப்பு உள்ளது.

சின்னப் பிரச்னை ஏற்பட்டாலும் உடனே மருத்துவரை அணுகி சிகிச்சை பெற வேண்டியது அவசியம். விக்கலும் அது போன்றதுதான். விக்கல் எப்படி வருகிறது?

வயிற்றுக்கும், மார்புப் பகுதிக்கும் இடையில் உதரவிதானம் உள்ளது. நாம் மூச்சை இழுக்கும் போது நுரையீரலுக்கு பிராணவாயு செல்வதற்கு வசதியாக, இந்த உதரவிதானம் மேலும் கீழும் இயங்குகிறது. இதனால் நுரையீரலுக்குள் பிராணவாயு எளிதில் நுழைகிறது.

இது நம் உடலில் இயல்பாக நடக்கும் ஒரு செயல்பாடு. மூச்சு விடும் போது உதரவிதானம் தானாகத் துடிக்கும் சமயத்தில் நம் குரல் வளை மூடியிருந்தால் விக்கல் ஏற்படுகிறது. விக்கல் ஏற்பட சில காரணங்கள் உள்ளன. காரம் அதிகம் உள்ள உணவு சாப்பிடும்போது வருகிறது.

வயிறு முட்ட சாப்பிடும்போது மற்றும் வயிறு நிறைய தண்ணீர் குடிக்கும்போதும் விக்கல் ஏற்படுகிறது. அதிகமாக சிரிப்பவர்களுக்கும் விக்கல் வரலாம். விக்கல் வந்து சில நிமிடங்களில் நின்று விட்டால் பிரச்னை இல்லை.

விக்கல் தொடர்ந்து இரண்டு மூன்று நாட்கள் நீடிக்கும் பட்சத்தில் பிரச்னை உள்ளது என்பதை புரிந்து கொள்ள வேண்டும். உடலில் அபாயமான நோயின் அறிகுறியாகவும் இந்தத் தொடர் விக்கல் இருக்கலாம்.

காசநோய், புற்றுநோய் ஆகியவற்றால் நுரையீரலின் வேர்ப்பகுதியில் நெறிகட்டியோ, நோய்த்தொற்று ஏற்பட்டிருந்தாலோ, மார்பு வழியாக உதரவிதானம் செல்லும் பெரினிக் நரம்பு பாதிக்கப்பட்டிருந்தாலோ விக்கல் வர வாய்ப்புள்ளது.

மனரீதியான பிரச்னை அல்லது உணர்வுகள் காரணமாக தொடர்ந்து விக்கல் ஏற்படலாம். இந்த வகை விக்கல் விழித்திருக்கும்போது மட்டும் வரும். சிறுநீரகம் பழுதடைந்த காரணத்தால் ரத்தத்தில் யூரியா அதிகம் சேரும்போது விக்கல் வரும்.

இத்துடன் கல்லீரல், இரைப்பை பகுதியில் புற்றுநோய், உதரவிதானத்தில் ஓட்டை போன்ற அபாயகரமான காரணங்களாலும் விக்கல் ஏற்பட வாய்ப்புள்ளது. விக்கல் வந்த உடன் தண்ணீர் குடித்தால் நின்று விடும் என்பதும் தவறான கருத்தே.

தண்ணீர் நிறைய குடித்தால் பிரச்னை மேலும் பெரிதாக வாய்ப்புள்ளது. இதனால் விக்கல் வராமல் காத்துக் கொள்வது அவசியம். பாதுகாப்பு முறை விக்கல் வராமல் தடுக்க தண்ணீரை ஒரே சமயத்தில் நிறைய குடிப்பதற்கு பதிலாக கொஞ்சம் கொஞ்சமாக குடிக்கலாம்.

வயிறு முட்ட சாப்பிடும் பழக்கத்தைத் தவிர்க்கலாம். இதே போல் மது, புகை பிடித்தல் மற்றும் புகையிலை போன்ற பழக்கங்களை கைவிடுவதும் நல்லது. அதிக காரம் மற்றும் மசாலா சேர்ப்பதையும் தவிர்க்கலாம்.
நன்றிகள்.

Monday, 20 January 2014

ஆண்களுக்கு எப்போதுமே முத்தம் பிடிக்கிறது.....!

ஆண்களுக்கு எப்போதுமே பெண்களின் உதடுகளில் ஈர முத்தம் பிடிக்கிறது என்று கூறுகிறது ஆய்வு.

ஆண்களுக்கு எப்போதுமே உதடுகளை குளிப்பாட்டி எடுக்கும் அளவுக்கு முத்தமிடுவதான் பிடிக்கிறது. இதற்கு ஒரு காரணம் இருக்கிறது என்பதை சிபிஐ வைக்காமலேயே ஆராய்ந்து கண்டுபிடித்திருக்கிறார்கள்.


பெண்களின் உதடுகளில் தங்களது உதடுகளால் அபிசேகம் செய்யும்போது, பெண்களிடம் உள்ள அன்பின் அளவை அறியும் முயற்சியாகவே ஆண்களுக்கு ஈர முத்தம் பிடிக்கிறது என்று கூறுகிறது அந்த ஆய்வு.

ஆண்களின் இந்த முத்தத்தில் காதல் மட்டுமல்ல, கொஞ்சம் ஆராய்ச்சியும் இருக்கிறது என்கிறார்கள் ஆய்வாளர்கள். நம்ம ஆளு வளமையானவளா, செழிப்பானவளவா என்பதை அறியும் ஆராய்ச்சிதானாம் இது.

இதுகுறித்து ரட்கர்சு(ஸ்) பல்கலைக்கழகத்தின் ஆய்வாளரான கெ(ஹெ)லன் பிசர் கூறுகையில், வெறும் முத்தத்தோடு நிற்காமல் உதடுகளால் துளாவுவதைத்தான் ஆண்கள் அதிகம் விரும்புகிறார்கள். அந்த முத்தம் எவ்வளவுக்கு ஆழமாக, இருக்கிறதோ அந்த அளவுக்கு ஆண்கள் மகிழ்ச்சி அடைகிறார்கள்.

இன்னும் ஒரு காரணமும் அதில் இருக்கிறது. அது, பெண்ணின் உணர்ச்சிகளைத் தூண்டுவிக்கும், டெஸ்டோஸ்டிரானை தங்களது முத்தத்தின் மூலம் கூட்டாளருடன் (With partner) அனுப்பி விடும் உத்திதான் அது.

முத்தத்தின் மூலம் தனது காதலி அல்லது மனைவியை வசியப்படுத்தி விட வேண்டும், மற்றவை அப்போதுதான் எளிதாக இருக்கும் என்ற எண்ணமும் கூட ஆண்களின் இந்த ஈர முத்தத்திற்கு ஒரு காரணம் என்கிறார் கெலன்.

அமெரிக்காவின் பென்சில்வேனியாவின் ஈஸ்டன் நகரில் உள்ள லபாயெட் கல்லூரியின் ஆய்வாளரான வென்டி கில் என்பவர் கூறுகையில், ஆணுக்கும் சரி, பெண்ணுக்கும் சரி முத்தம்தான் எல்லாவற்றுக்கும் ஆரம்பம். அதை நம்பிக்கையின் வெளிப்பாடாகவும் கருதுகிறார்கள்.

எந்த அளவுக்கு முத்தம் ஆழமாகவும், தீவிரமாகவும் இருக்கிறதோ அதை வைத்து தங்களது கூட்டாளருடன் நம்பகத்தன்மையை அறிந்து கொள்ள முடியும் என்பது ஆண் மற்றும் பெண்களின் நம்பிக்கை.

ஒரு உறவு சிறப்பாக அமையும் போது அது அருமையான பழக்கமாக மாறுகிறது. ஆனால் உறவில் லேசான விரிசல் வந்தாலும் கூட அதை ஒட்ட முடியாத கண்ணாடிச் சிதறல்களுடன் ஒப்பிடலாம் என்கிறார் பிசர்.
நன்றிகள்.

Thursday, 16 January 2014

தமிழர்களின் திருமண சடங்குகளில் செய்யப்படும்.....!

தமிழர்களின் திருமண சடங்குகளில் செய்யப்படும் ஒவ்வொரு காரியங்களுக்கும் வலுவான காரணங்கள் உண்டு உதாரணமாக அம்மி மித்திப்பது நான் கற்பு தன்மையில் அம்மியை போல் அதாவது கல்லை போல் உறுதியாக இருப்பேன் என்றும் அருந்ததி பார்ப்பதுபகலில் நட்சத்திரத்தை பார்ப்பதற்கு எவ்வளவு விழிப்புணர்வு வேண்டுமோ அதே போன்று விழிப்புணர்வோடு என் குடும்ப கெளரவத்தை காப்பாற்றவும் இருப்பேன் என்றும் பொருளாகும்

திருமண சடங்கில் அக்னி வளர்ப்பது திருமணம் முடித்து கொள்ளும் நாம் இருவரும் ஒருவர்க்கொருவர் விசுவாசமாகவும் அன்யோன்யமாகவும் இருப்போம் உன்னை அறியாமல் நானும் என்னை அறியாமல் நீயும் தவறுகள் செய்தால் இந்த நெருப்பு நம் இருவரையும் சுடட்டும் இருவரின் மனசாட்சியையும் சுட்டு பொசுக்கட்டும் என்பதாகும்


அதே போன்ற அர்த்தம் தான் கல்யாண வீட்டில் வாழை மரம் கட்டுவதில் இருக்கிறது வாழை மரம் வளர்ந்து குலைதள்ளி தனது ஆயுளை முடித்து கொள்ளவேண்டிய நிலைக்கு வந்தாலும் கூட அடுத்ததாக பலன் தருவதற்கு தனது வாரிசை விட்டு செல்லுமே அல்லாது தன்னோடு பலனை முடித்து கொள்ளாது எனவே திருமண தம்பதியரான நீங்கள் இருவரும் இந்த சமூதாயம் வளர வாழையடி வாழையாக வாரிசுகளை தந்து உதவ வேண்டும் என்பதே வாழைமரம் கட்டுவதின் ரகசியமாகும்.

உலக முழுவதும் உள்ள திருமண சடங்கு முறையில் திருமணம் ஆனதற்கான அடையாள சின்னங்களை அணிந்து கொள்வது முறையாகவே இருந்து வருகிறது அதாவது மனித திருமணங்கள் அனைத்துமே எதோ ஒருவகையில் நான் குடும்பத்(ஸ்)தன் என்பதை காட்ட தனிமுத்திரை இடப்படுவதாகவே இருக்கிறது. அப்படி உலகம் தழுவிய வழக்கங்களில் ஒன்று தான் தாலிகட்டும் பழக்கமாகும் சங்ககாலத்தில் தாலி என்ற வார்த்தை இலக்கியங்களில் அதிகமாக பயன்பாட்டில் இல்லை என்பதற்காக பழங்கால தமிழன் தாலி கட்டாமல் வாழ்ந்தான் என்று சொல்வதற்கு இல்லை

தாலி என்ற வார்த்தை தான் இல்லையே தவிர இதே பொருளை கொண்ட மங்கலநாண் என்ற வார்த்தை இலக்கியங்கள் பலவற்றில் காணப்படுகிறது. ஒரு காலத்தில் அரசியல் கூட்டங்களில் சிலப்பதிகாரத்தில் கோவலன் கண்ணகி திருமண சடங்கில் இளங்கோவடிகள் தாலிகட்டுவதை பற்றி பேசவே இல்லை அதனால் தமிழர் திருமணங்களில் தாலியே இல்லை என்று முழங்கி கொண்டு அலைந்தனர். ஆனால் அவர்களே மங்கள் வாழ்த்து படலத்தில் மங்கல அணி என்ற வார்த்தைக்கு என்ன பொருள் என்றே அறியாமல் போய்விட்டனர்

“முரசியம்பின, முருடதிர்ந்தன, முறையெழுந்தன பணிலம்,வெண்குடை
அரசெழுந்ததோர் படியெழுந்தன, அகலுள்மங்கல அணியெழுந்தது”'''

என்று இளங்கோ அடிகள் மிக அழகாக சொல்கிறார். அதாவது திருமண நேரத்தில் முரசுகள் ஒலிக்கின்றன வெண்குடை உயர்கிறது வாழ்த்துக்கள் முழங்குகின்றன மங்கல அணி எழுத்து போல் பதிகிறது என்பது இதன் பொருளாகும்

ஆண் பெண்ணை அடிமையாக்குவதோ பெண் ஆணை அடிமையாக்குவதோ சமூதாய பிரச்சனையே தவிர அது சடங்கு பிரச்சனை அல்ல தமிழர் சடங்கில் எந்த இடத்திலாவது நீ தாலி அணிந்திருக்கிறாய் அதனால் எனக்கு நீ அடிமை என்ற வாசகம் கிடையவே கிடையாது.

உணமையாக தாலி அணிவதன் பொருள் ஆண்மகனான நான் உன் கழுத்தில் திருமாங்கல்யத்தை அணிவிக்கும் இந்த நேரம் முதல் உன்னை பாதுகாக்கும் காவலனாக இருப்பேன் இந்த மாங்கல்யத்தில் நான் போடும் முதல் முடிச்சி நீ தெய்வத்திற்கும் மனசாட்சிக்கும் கட்டுப்பட்டவள் என்பதை காட்டட்டும் இரண்டாவது முடிச்சி குலபெருமையை நீ பாதுகாப்பாய் என்பதை காட்டட்டும் மூன்றாவது முடிச்சி குலவாரிசுகளை முன்னின்று காப்பவள் நீயென்று காட்டட்டும் என்பதாகும்.

தமிழர்களின் திருமண சடங்குகள் அனைத்துமே ஆணையும் பெண்ணையும் சமமாக பாவித்தே இருக்கிறதே தவிர ஏற்ற தாழ்வு கற்பிக்கும் படி எதுவும் கிடையாது. உண்மைகளை கண்டறிய வேண்டியது தான் உயர்ந்த மனிதர்களின் உன்னத நோக்கமாகும்.
நன்றிகள்.

Tuesday, 14 January 2014

விழாதிருக்க உங்கள் சமநிலையை.....!

விழாதிருக்க உங்கள் சமநிலையைப் பேணுங்கள் - முதுமை விழுகைகளைத் தவிர்ப்பது எவருக்கும் முக்கியமானது. ஆனால் சுலபமாக எலும்புகள் உடைந்துவிடக் கூடிய முது வயதில் மிக மிக முக்கியமானதாகும்.

விழுகைகளைத் தடுக்க வேண்டுமெனில் முக்கியாக உங்கள் சமநிலை தழும்பாது பாதுகாத்துக் கொள்வது அவசியம்.

எங்கு எப்பொழுது நடமாடினாலும் ஒரு கையிலாவது பொருட்கள் எதையும் பற்றியிராது வெற்றாக வைத்திருங்கள். தற்செயலாக நிலை தழும்பினால், விழாமல் இருப்பதற்காக எதையாவது பற்றிப் பிடிக்க வசதியாக இருக்கும்.

நடக்கும்போது வேறு எதிலும் கவனத்தைச் செலுத்;தாதீர்கள். பத்திரிகை படிப்பது, மற்றவர்களுடன் பேசி கொண்டு நடப்பது, கடைத்தெருவைப் பிராக்குப் பார்த்து நடப்பது போன்றவற்றால் சமநிலை தவறி விழுந்துவிடக் கூடும்.


நடக்கும்போது கைகளை முன் பின்னாக வீசி நடப்பதன் மூலம் உடலின் சமநிலையைப் பேண முடியும்.

தரையில் காலை இழுத்து இழுத்து நடக்காதீர்கள். பாதங்களை தரையியிருந்து தூக்கி திடமாக வைத்து நடவுங்கள்

போகும் பாதையில் ஒரிடத்தில் திரும்பி நடக்க வேண்டுமாயின் சடீரெனத் திரும்பாதீர்கள். வட்டமடிப்பது போல வளைந்து சென்று திரும்புங்கள்.

படுக்கையிலிருந்து அல்லது இருக்கையிருந்து எழுந்து நடக்க வேண்டுமாயின் அவசரப்பட்டு எழுந்து உடனடியாக நடக்காதீர்கள்.

படுக்கையிலிருந்து எழுந்து, உட்கார்ந்து, சற்று நின்று பார்த்து நிலை தழும்பவில்லை எனில் பின்பு நிதானமாக நடவுங்கள்.

ஓரிடத்தில் சற்று நேரம் நிற்க வேண்டிய தேவை ஏற்பட்டால் பாதங்களை நெருக்கி வைக்காதீர்கள். உங்கள் தோள் பட்டையின் அகலத்திற்கு பாதங்களைப் பரப்பி வைத்தால் சமநிலை தழும்பாது.

பாதணிகள் தேய்ந்திருந்தாலும் வழுக்கக் கூடும். 
நன்றிகள்.

Monday, 13 January 2014

இனிய தைத்திருநாள் வாழ்த்துக்கள்.............!.

பட்டதும் சுட்டதும் வாசகர்களுக்கு இனிய தைத்திருநாள் வாழ்த்துக்கள்!.


நன்றிகள்.

எடை குறைய நின்றால் போதும்.....!

எடை குறைய நடக்கவும் வேண்டாம் ஓடவும் வேண்டாம், நின்றால் போதும்


பிரித்தானிய Loughborough பல்கலைக்கழகத்தில் உடல் நடவடிக்கைகளுக்கும் ஆரோக்கியத்திற்குமான (Physical Activity & Health) பேராசிரியர் கலாநிதி Stuart Biddle எடை குறைவதற்குச் செய்ய வேண்டியவை தொடர்பாக செய்த ஆய்வில் ஒரு புதிய கண்டு பிடிப்பைச் செய்துள்ளார்.

கலாநிதி Stuart Biddleஇன் புதிய சுலோகம் "அசைவதை அதிகரிக்கவும், உட்காருவதைக் குறைக்கவும்" ("move more and sit less") என்பதாகும். நின்று கொண்டு சமையல் பாத்திரங்களை கழுவுதல், நின்று கொண்டு வீட்டுத் தோட்டத்தில் நீர் ஊற்றுதல் போன்ற சிறு வேலைகள் உடலுக்கு அதிக பயனளிக்கும் என்கிறார் அவர்.


நாளொன்றிற்கு அரை மணித்தியாலத்திற்கு ஒரு தடவை ஐந்து நிமிடங்கள் நிற்பதும் சிறிது நடப்பதும் நல்ல தேகப் பயிற்ச்சி என்கிறார் கலாநிதி Stuart Biddle. இப்படிப்பட்ட நிற்பதும் நடப்பதும் நடவடிக்கைகள் மூலம் மாதம் ஒன்றிற்கு 2500 கலோரிகளை எரிக்க முடியும் என்கிறார் கலாநிதி Stuart Biddle.

நல்ல உணவுப் பழக்கமும் அதிகரித்த தேகப்பயிற்சியும் மேலதிக பயன் தரும் என்பதை மறுப்பதற்கில்லை என்றாலும் அடிக்கடி நின்று கொண்டு சிறு வேலைகள் செய்வது நல்ல பயன் தரும்.


நாளொன்றிற்கு மூன்று மணி நேரம் இருக்கும் பெண்களிலும் பார்க்க நாளொன்றிற்கு ஆறு மணி நேரம் இருக்கும் பெண்கள் மாரடைப்பால் இறப்பதற்கான சாத்தியங்கள் 40% அதிகம் என்கிறார் கலாநிதி Stuart Biddle.

நன்றிகள்.

Thursday, 9 January 2014

எண்ணெய்யில் காணாமல் போகும் நோய்கள்....!

10 மில்லி எண்ணெய்யில் காணாமல் போகும் நோய்கள்..!

எண்ணெய் கொப்பளிப்பு (Oil Pulling) எனப்படும் எண்ணெய் மருத்துவம் இப்பொழுது அநேக இடங்களில் பிரபலமடைந்து வருகிறது. எண்ணெயை வாயில் விட்டு சாதாரணமாக கொப்பளிப்பதுதானே என்று அலட்சியமாக இல்லாமல் தொடர்ந்து எண்ணெய் கொப்பளிப்பு எடுத்துக்கொள்பவர்களுக்கு அனைத்து நோய்களும் தீரும் என்பது நிரூபிக்கப்பட்டுள்ளது


இன்றைக்கு பிரபலமாகிக் கொண்டு வரும் எண்ணெய் கொப்பளிப்பு நூற்றாண்டுகளுக்கு முன்பே நம் முன்னோர்கள் கண்டுபிடித்து பின்பற்றியுள்ளனர். இது அனைத்து நோய்களுக்கும் பாதுகாப்பான எளிய மருத்துவ முறையாக இருந்துள்ளது.

பல்வகையான நுண்ணுயிரிகளுக்கும், கிருமிகளுக்கும் நமது வாய்தான் நாற்றங்காலாகி நமக்கு தீமை செய்கிறது. இந்த எண்ணெய் கொப்பளிப்பு, அத்தகைய தீய, கொடிய கிருமிகளையும் நுண்ணுயிரிகளையும் அழித்து அதன் மூலமாக உடலில் நஞ்சு கலந்த வேதியியல் பொருட்களை வெளியேற்றுகிறது. இதனால் நமது உடலில் உள்ள ஒவ்வொரு அணுக்களும் புத்துணர்வு பெறுகிறது.

எண்ணெய் கொப்பளிப்பு எடுத்துக்கொள்வது பற்றி தெலுங்கு நாளிதழான ஆந்திர சோ(ஜோ)தியில் ஒவ்வொரு வாரமும் ஞாயிற்றுக்கிழமை ஆய்வு நடத்தப்பட்டது. மூன்று வருடங்களாக 1041 நபர்களிடம் நடத்தப்பட்ட ஆய்வில் 927 நபர்களுக்கு நோய் குணமானது தெரியவந்தது. 758 நபர்களுக்கு கழுத்து மற்றும் உடல்வலி குணமாகியது. ஒவ்வாமை (Allergy) மற்றும் சுவாசகாசம் (asthma) நோய்கள் 191 பேருக்கு சரியானது.

தோல்நோய், அரிப்பு,கரும்படை, உள்ளிட்ட நோய்கள் குணமடைந்ததாக தெரிவித்திருந்தனர். மேலும், இதயநோய், சர்க்கரை நோய், ரத்த அழுத்தம்,நரம்பு தொடர்பான நோய்கள் குணமடைந்ததாக கணக்கெடுப்பில் (Survey) தெரிவித்திருந்தனர்.
நன்றிகள்.

Wednesday, 8 January 2014

நெஞ்சு எரிச்சலால் ஏற்படும் பாதிப்புகள்.....?

நாம் உண்ணும் உணவு செரிமானம் ஆகவில்லை என்றால் நெஞ்சு எரிச்சல் ஏற்படும். தற்சமயம் நிறைய பேர் நெஞ்சு எரிச்சல் (நெஞ்சு கரிப்பு) காரணமாக மாத்திரை தொடந்து சாப்பிட்டு வருகிறார்கள். ஆனால் இது அவர்களுக்கு நிரந்தர தீர்வை தருவதில்லை. தற்காலிக நிவாரணம் (Temprorary Relief) மட்டுமே.


நாம் உண்ணும் உணவு செரிமானம் ஆவதற்கு எது தேவைப்படுகிறது. இரைப்பையில் உட்சுவரின் குழிகளில் சுரக்கும் இரைப்பை நீர் (Gastric Juice) உணவோடு சேர்ந்து செரிமானத்திற்கு உதவுகிறது.

ஒரு நாளைக்கு இரைப்பை நீர் சுரப்பி 1.5 லிட்டரிலிருந்து 2 லிட்டர் வரை நீர் சுரக்க வேண்டும். அப்படி குறையும் போது வயிறு செரிமானம் ஆவதில்லை. வயிறு செரிமானம் ஆகவில்லை என்றால் என்ன நடக்கும் தெரியுமா?.

நம் உடலுக்கு தேவையான சத்துக்கள் எப்படி கிடைக்கும். இரத்தம் உற்பத்தி எப்படி ஏற்படும்?.

இரத்தம் இல்லை என்றால் உடல் சோர்வு, பசியின்மை, வாயு சிக்கல் (Gas Trouble) என்று பல விதமான சிக்கல்களை ஏற்படுத்தும். அதனால் நாம் எப்பொழுதும் சுறுசுறுப்பாக இயங்க முடியாது.

அது மட்டும் அல்லாமல் பசிக்காமல் சாப்பிடுவோம். அதுவும் பல சிக்கல்களை ஏற்படுத்தும். எனவே நெஞ்சு எரிச்சல் தானே என்று சாதாரணமாக விட்டுவிடாதீர்கள். சிறியது தான் பெரியதாக மாறும்.

எனவே இரைப்பைச்சாறு (Gastric Juice) சுரப்பி ஏற்பட என்ன சாப்பிடலாம் என்றால் நார்சத்து உள்ள காய்கறிகள், கொய்யாப்பழம் மற்றும் (திராட்சை Juice) தினமும் ஒரு குவளை குடித்து வந்தால் மாற்றம் ஏற்படும்.

நன்றாக பசி எடுக்க ஆரம்பிக்கும். உடம்புக்கு தேவையான பல சத்துகள் கிடைக்க ஆரம்பித்து விடும். இதனோடு துளையீட்டு மருத்துவமுறை ஊசி (acupuncture Needle) போட்டால் விரைவாக சரி செய்யலாம்.
நன்றிகள்.

Saturday, 4 January 2014

ஆயிரம் ஆண்டுகள் பழைமை வாய்ந்த.....!

ஆயிரம் ஆண்டுகள் பழைமை வாய்ந்த இரவுக் கிளிகள் கண்டுபிடிப்பு.

100 ஆண்டுகளுக்கு முன் வாழ்ந்த அரிய வகை பறவை இனமான இரவுக் கிளிகள் அவுஸ்திரேலிய காடுகளில் உயிர் வாழ்வது கண்டுபிடிக்கப் பட்டுள்ளது. பெருகி வரும் சுற்றுச்சூழல் சீர்கேட்டால் உலகின் பல வகை உயிரினங்களும் அழிந்து வருகின்றன.

அவ்வகையில் 100 ஆண்டுகளுக்கு முன் காணப்பட்ட அரிய வகை பறவை இனமான இரவுக் கிளிகள் அழிந்து விட்டதாகவே கூறப்பட்டது.

இந்நிலையில், அவுஸ்திரேலிய காடுகளில் வன விலங்குகள் மற்றும் பறவை பற்றிய ஆராய்ச்சியில் ஈடுபட்டுள்ள ஜோன் யங், இந்த கிளிகள் உயிருடன் இருப்பதற்கான ஆதாரங்களை வெளியிட்டுள்ளார்.... 


அவுசுத்திரேலியாவின் அடர்ந்த காட்டுப் பகுதிகளில் ஆராய்ச்சியில் ஈடுபட்டுள்ள யங், 15 ஆண்டுகளாக இரவுக் கிளிகள் பற்றிய தேடலில் ஈடுபட்டுள்ளார்.

இதன் ஒரு பகுதியாக 2007ஆம் ஆண்டு இரவுக் கிளிகளின் குரல்கள் காடுகளில் வைக்கப்பட்டிருந்த ஒலிப்பதிவு கருவிகளில் பதிவாகியிருந்தன.

இதையடுத்து, புதிய நம்பிக்கையுடன் கிளிகளைப் படம் பிடிக்கும் முயற்சியில் யங் ஈடுபட்டார். அவரின் அயராத உழைப்பின் பயனாக, அவுசுத்திரேலியாவின் அடர்ந்த காட்டுப் பகுதியில் வைக்கப்பட்டிருந்த ஒளிப்பதிவு கருவிகளில் அரிய வகை கிளிகளின் படங்கள் பதிவு செய்யப்பட்டுள்ளன என குறிப்பிட்டுள்ளார்.
நன்றிகள்.

பிரமிட்டில் உள்ள மர்மங்கள்.....!

உலகின் தொன்மையான ஏழு அதிசயங்களில் ஒன்று பிரமிடு. சீனப் பெருஞ்சுவரைப் போலவே நிலவிலிருந்து பார்த்தால் தெரியக் கூடியது. கிட்டத்தட்ட 5000 ஆண்டுகளுக்கும் மேலாக பல்வேறு இயற்கைச் சீற்றங்களை எதிர்கொண்டும், அதனால் எந்தவித பாதிப்புகளும் அடையாமல், தொன்மை உலகின் மர்மமான ஒரு சரித்திரத்தின் அடையாளமாக இன்றளவும் நிமிர்ந்து நிற்கிறது பிரமிடு.

இந்தப் பிரமிடுகளை உருவாக்கியது யார், என்ன காரணத்திற்காக இவற்றை உருவாக்கினார்கள், இந்தப் புதிரான கட்டிட அமைப்பில் ஒளிந்திருக்கும் ரகசியம் என்ன என்பது பற்றி விஞ்ஞானிகளிடையே பல்வேறு கருத்து வேறுபாடுகள் இருக்கின்றன.

வரலாற்று ஆய்வாளர்கள் ஒன்றைக் கூற, விஞ்ஞானிகள் அதற்கு எதிராக ஒன்றைக் கூற என்று காலம் காலமாகத் தொடர்ந்து கொண்டிருக்கிறது.


’பிரமிடு’ என்றால் பலரும் சொல்வது, ”அது எகிப்தில் இருக்கும் ஒரு கட்டிடம். அதில் அக்காலத்தில் இறந்த மன்னர் போன்றவவர்களின் சடலத்தைப் பாதுகாப்பாக வைத்திருக்கிறார்கள். ‘மம்மி’ என்றழைக்கப்படும் அவற்றின் உடல்கள் இன்னமும் கெடாமல் இருக்கின்றன. அது தவிர பல்வேறு புதையல்களும் அங்கே இருக்கக்கூடும்” என்பதுதான்.

ஆனால் இவை மட்டும் தான் பிரமிடா? வெறும் உடலைப் பாதுகாக்கும் சமாதியாகத் தானா அவ்வளவு பெரிய கட்டிடங்களைக் கட்டியிருப்பார்கள்? – என்ற கேள்விகள் சிந்தனைக்குரியன.


இதில் முக்கியமான விசயம் என்னவென்றால் இந்தப் பிரமிடுகளைச் சுற்றி எந்தவிதமான மலைகளோ, பாறைகளோ, கற்குன்றுகளோ கிடையாது.

நகரத்தின் அருகில் மட்டுமல்ல, தொலைவிலும் கூட இல்லை. ஒரு புறம் பாலைவனமும், மறுபுறம் கடலும் தான் இந்நகரைச் சுற்றி உள்ளது.

அப்படியானால் இந்தப் பிரமிடை எப்படி உருவாக்கியிருப்பார்கள், இத்தனை லட்சம் கற்களை எங்கிருந்து கொண்டு வந்திருப்பார்கள், இவ்வளவு பெரிய உயரத்திற்கு அவற்றை எப்படி எழுப்பியிருப்பார்கள் என்றுதான் வரலாற்று ஆய்வாளர்களும், விஞ்ஞானிகளும் ஆராய்ந்து கொண்டு இருக்கின்றனர்.

மேலும் இந்த அளவுக்கு அருகில் பூமியில் எங்காவது கற்களைத் தோண்டி எடுத்து இவற்றைக் கட்டியிருப்பார்கள் என்று வைத்துக் கொண்டால் கூட, அவ்வாறு தோண்டி எடுத்த இடங்களில் மிகப் பெரிய பள்ளங்கள் ஏற்பட்டிருக்க வேண்டும்.

ஆனால் பலமைல் சுற்றளவிற்கு அப்படி எந்த ஒரு பெரிய பள்ளமும் இல்லை. ஆகவே எப்படி இவற்றை உருவாக்கியிருப்பார்கள் என்று இன்னமும் விஞ்ஞானிகள் மண்டையை உடைத்துக் கொண்டுதான் உள்ளனர்.

பிரான்சு(ஸ்) நாட்டின் மாவீரராக இருந்த நெப்போலியன் இந்தப் பிரமிடுகளில் என்னதான் இருக்கிறது என்று பார்க்க ஆர்வம் கொண்டார். தனி ஆளாக ஓரிரவு முழுக்க இந்தப் பிரமிடில் தங்கினார்.

மறுநாள் காலை வெளிவந்த அவர், பிரமிப்பின் உச்சியில் இருந்தார். பிரமிடின் பல்வேறு ரகசியங்களைத் தெரிந்து கொண்டிருந்த அவர், அவற்றை முழுமையாக வெளியிடவில்லை. ”நான் சொல்வதை யாரும் நம்ப மாட்டார்கள்” என்ற கருத்தை மட்டும் தெரிவித்தார்.

ஒரு சிலர் இந்தவகைப் பிரமிடுகள் மனிதர்களால் கட்டப்படவில்லை; மனிதர்களை விடப் பல்வேறு அதிசய ஆற்றல்கள் கைவரப் பெற்ற வேற்றுக் கிரக மனிதர்களால் கட்டப்பட்டவை என்றும் கூறுகின்றனர்.

இந்தக் கூற்றில் உண்மை இருக்கலாம் என்று கூறும் ரசி(ஷ்)ய விஞ்ஞானிகள், ஸ்பிங்க்ஸ் பிரமிடைப் போன்ற ஓர் பிரமிடு உருவச்சிலை செவ்வாய்க் கிரக பிரமிடுகளுக்கு அருகே காணப்படுவதாகக் கூறியிருக்கின்றனர்.

அவர்கள், செவ்வாய்க் கிரகத்தில் சைடோனிக் எனக் குறிக்கப்படும் ஒரு பகுதியில் காணப்படும் பிரமிடு போன்ற அமைப்புகளுக்கும், எகிப்தின் பிரமிடுகளுக்கும் நெருங்கிய தொடர்பு இருக்கக் கூடும் என்றும் கருதுகின்றனர்.