Friday, 8 June 2012

"அதுவே வெற்றிக்கான வழியாகும்"..................!

"விமர்சனங்களைக் கண்டு துவண்டு விட வேண்டாம்"


நீ வெற்றியாளனாக வேண்டுமானால், அடுத்தவர்கள் உன்னை நோக்கி எறியும் கற்களைக் கொண்டு வாழ்க்கையில் வலுவான அடித்தளம் கட்டிக்கொள்ளத் தெரிந்திருக்க வேண்டும்.

மண்வெட்டி பிடிக்கிற உழைப்பாளியோட கை ஆரம்பத்தில் சிவந்து, அப்புறம் கிழிஞ்சு கடைசில பாறை மாதிரி உரமாகிடும். அதே போல அவமானங்களைச் சந்திக்கும் மனசும் உடைந்து விடாமல் அவமானங்களைத் திறமையாகச் சமாளித்தால் வலிமையாகி விடும். அப்படி ஒரு மனசு அமைந்து விட்டால் வாழ்க்கையின் எந்தச் சிகரத்திலும் கூடு கட்டிக் குடியிருக்கலாம்.

அடுத்தவர்கள் என்ன நினைக்கிறார்கள் என்பதன் வடிவமல்ல நாம். நாம் எப்படி என்பது நமக்கு மட்டுமே முழுமையாகத் தெரியும். மற்றவர்களுக்குத் தெரிந்தது நம்மில் ஒரு சிறு பகுதி மட்டுமே.

விமர்சனங்கள், அவமானங்களெல்லாம் எழாமல் இருக்காது. ஆனால், அதைத் தூரத்தில் நின்று பார்த்து விடும் ஒரு பயணியைப் போல நாம் கடந்து சென்று விட வேண்டும்.

நன்றிகள்.