விரல் சூப்புதல்? இதனால் பின்விளைவுகள் உண்டா? இதை எவ்வாறு தடுப்பது?
விரல் சூப்பும் பழக்கம் சிறுவயதிலேயே கட்டுப்படுத்தாவிட்டால் திருமணத்திற்குப் பின்பும் தொடரும் அபாயம் உள்ளது.
பலர் வெளியில் சொல்லாமல் அவதிப்படுகின்றனர். விரல் சூப்புவதற்கான மூலகாரணம் குழந்தைப் பருவத்தில் பால் புகட்டும்போது ஏற்படும் தவறான முறையாகும்.
குழந்தைக்கு உதட்டின் மூலம் இன்ப உணர்வு கிடைப்பதால் ஒரு வித மயக்கநிலை ஏற்படும். அப்போது குழந்தை தூங்கிவிட்டது என நினைத்து மார்பை மூடும் போது, குழந்தை அந்த இன்பம் தொடர தன் கை விரலை சூப்புகிறது.
நாளடைவில் இந்த நிலை தொடர ஆரம்பித்துவிடுகிறது. இந்த நிலையைத் தடுக்க தாய் குழந்தையுடன் அதிக நேரம் விளையாட வேண்டும். மற்றவர்கள் முன்பு விரல் சூப்புவது தவறு என்று அறிவுரைக்க வேண்டும்.
இந்நிலை தொடர்ந்தால் உளவியல் நிபுணரிடம் தனிப்பட்ட முறையில் மனவியல் பயிற்சி எடுப்பது அவசியமாகும்.
நன்றி: தன்னம்பிக்கை