பால் என்பது ஒரு தாயின் மடியில் தனது குழந்தைக்காக மட்டும் சுரக்கும் ஒப்பற்ற உயிருணவாகும்.
உலகில் வேறொரு உயிரினத்தின் பாலை பலவந்தமாகக் கரந்து உண்டு வாழும் ஒரே உயிரினம் மனிதன் மட்டுமே!
அதனால் தனது தாய்ப்பாலை அருந்த வாய்ப்பில்லாத எண்ணற்ற கன்றுகள் அனுதினமும் பாலுக்கு ஏங்கிச் செத்து மடிந்துகொண்டுள்ளன. ஆனாலும் அந்தச் செயலைப் புனிதமாகவும் அந்தப் பாலைப் புனிதமானதாகவும் மங்கலப் பொருளாகவும் பாவிக்கிறோம்.
உண்மையில் பாவம் புண்ணியம் என்று ஒன்று உலகில் இருக்குமானால் அது மாமிசம் உண்பதைக்காட்டிலும் அதிகமாகப் பாலை பலவந்தமாகக் கறந்து உண்பதில் இருக்கும் என்று சொல்லலாம்.
எக்காலத்திலும் இறைவன் சொல்ல வில்லை தனக்கு பாலால் அபிசேகம் செய்யவும் என்று. மூன்றாவது மண்டல நாடுகளில் இறைவனின் பெயரால் குடங்குடமாக பாலை வீணடிக்கிறாகள்.
அதேநேரம் அந்த இடங்களைச் சூழவுள்ள இடங்களில் எத்தனையோ ஏழைக் குழந்தைகள்குடிப்பதற்கு தூய பாலிற்கும் ,உணவிற்கும் அவதியுறுகின்றனர். அங்குதான் பகுத்தறிவு, சிந்தனை என்பன வளர்ச்சியடைய இல்லையென்றால்.
வளர்ந்த நாடுகளிலும் அதே மூடனம்பிக்கையுடன் அதேபிழைகளைத் தொடர்ந்து செய்து கொண்டே இருக்கிறார்கள். பசுவிலிருந்து பாலைத்திருடி இறைவனுக்கே இலஞ்சமா?
நன்றிகள்.