அப்படிப்பட்ட தொன்மை பொருந்திய தமிழின் பெருமையை கூறுவதை இட்டு நான் பெரு மகிழ்ச்சி கொள்கிறேன். மற்றும் எங்களின் தமிழ் மொழிகளுக்கு வரி வடிவமும் ஒலி வடிவமும் இருப்பது அனைவரும் அறிந்த ஒன்றே.தமிழை நாங்கள் முத்ததமிழ், அமுதம், சங்கத்தமிழ், செந்தமிழ், கன்னித்தமிழ் என்று எல்லாம் பலவாறு அழைக்கலாம்.
"தமிழுக்கு அமுது என்று பெயர் அந்த தமிழ் எங்கள் உயிருக்கு நேர்" என்று கவிஞர் பாரதிதாசன் பாடியுள்ளார். அமுதம் என்றாலே அது ஒரு கிடைக்காத ஒன்று .அந்த அமுதத்தை எடுக்க தான் அசுரர்களும் தேவர்களும் பாற்கடலை கடைந்த ஒரு கதை இருக்கின்றதுறார் என்றால் தமிழின் பெருமையை உணர்ந்து கொள்ளுங்கள்.
மற்றும் அவர் அந்த தமிழை அப்படியே மட்டும் குறிப்பிடவில்லை அதை எங்களுடைய உயிருக்கு சமன் என்றும் குறிப்பிடுகிறார். அதாவது உடம்பு அழியுமே ஒழிய என்றைக்குமே உயிருக்கு அழிவில்லை என்று அந்த புலவன் அன்றைக்கு சொன்னது இன்றைக்கு உயிரைக் கொடுத்து காப்பாற்ற வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது அந்த தமிழுக்கு.
" நான் அறிந்த மொழிகளிலே தமிழ் மொழி போல் இனிதாவது எங்கும் காணோம் " என்று பாரதியார் குறிப்பிடுகின்றார். அதாவது பாரதியார் எட்டு திக்கும் சென்றவர். அவர் பல மொழிகளை கற்று அதிலும் தேர்ச்சி பெற்ற ஒருவர்.
அப்படி எல்லா மொழிகளும் கற்று உணர்ந்து பாரதியார் கூட கூறுகின்றார் இனிமையான பொழி தமிழ் மொழி போல ஒரு மொழியும் இல்லை என்று, என்ன என்றால் எளிமையான மொழி தமிழ் மொழி. அப்படி பட்ட தமிழ் மொழி இன்று கவலைப்படும் அளவுக்கு மாறி வருகின்றதுதான் சோகம்.
அப்படி பட்ட தமிழ் மொழியை ஒவ்வொரு தமிழனும் கற்க வேண்டியதன் அவசியம் தான் என்ன ??????,,,
எண் சாண் உடம்புக்கு தலையே பிரதானம் என்கிற மாதிரித்தான் ஒவ்வொரு தமிழனுக்கும் தமிழ் பிரதானமாக இருக்கின்றது. பண்டைய காலத்தை எடுத்து நோக்கினால் ஒவ்வொரு தமிழ் மன்னனும் தம்மோடு போர் தொடுத்து வந்த எதிரிகளை புறமுதுகிட்டு ஓட செய்த பெருமை அவர்களையே சாரும். அப்படிப்பட்ட தமிழை தான் நாங்கள் வீரத்தமிழ் அச்சமில்லாத்தமிழ் என்று எல்லாம் கூறுகின்றோம்.
அடுத்து தமிழரின் பண்புகள் தமிழர்களுக்கு என்று ஒரு தனித்துவமான நல்ல பண்புகள் காணப்படுகின்றன. சங்ககாலத்தை எடுத்து நோக்குவோமேயானால் அக்காலத்தில் எழுந்த இலக்கியங்களை கொண்டு அக்காலத்து கலை கலாச்சாரங்களை நாங்கள் அறியலாம்.
அக்காலத்தில் அகத்தினை இலக்கியங்கள், புறத்திணை இலக்கியங்கள் என்று பதினெட்டு இலக்கியங்கள் தோன்றியதாக நம்பப்படுகின்றது. அகத்தினை இலக்கியங்கள் என்றால் காதலை கூறும் இலக்கியங்களாகும். புறத்திணை இலக்கியங்கள் என்றால் விரத்தை பற்றி கூறும் இலக்கியங்களாகும்.
அக்காலத்தில் எழுந்த காதலானது தெய்விகக்காதல் போன்றது. அவனுடைய காதல்களில் குற்றம் குறை காணப்பட வில்லை. என்றைக்குமே அவனுடைய காதல் தோற்று போனதும் இல்லை. அக்காலத்தில் எழுந்த நுல்களில் ஒன்று கூட தோற்றுப்போனதாக காணப்படவில்லை.மற்றும் உண்மையான அன்பை வெளிக்காட்டுவனவாக தான் இருக்கின்றது.
அக்காலத்து காதல் புறத்திணை இலக்கியங்களை எடுத்து நோக்கினால் அக்காலத்தில் பெரும் பாலும் ஆண்கள் தான் போருக்கு செல்வார்கள். அவர்களுடைய தாய் போருக்கு செல்லும் மகனை அழைத்து வீரத்திலகம் இட்டு போருக்கு அனுப்பி வைப்பாள். வெல் அல்லது செத்துமடி , என்று கூறித்தான் அவனை போருக்கு அனுப்பி வைப்பாள்.
அவ்வாறு போர் செய்த போது அவனுடைய மகன் இறந்திருந்தால் போர் முடிந்ததும் அவள் தனது மகனை பார்க்கும் பொது எவ்வாறு இறந்தான் என்று தான் பார்ப்பாள். நெஞ்சிலே வேல் குத்தி இருக்கிறதா அல்லது முதுகிலே வேல் குத்தி இருக்கின்றதா என்றுதான் பார்ப்பார்கள். நெஞ்சிலே குத்தி இருந்தால் நேருக்கு நேர் போர் செய்து இறந்தான் என்று பெருமை படுவார்கள்.
முதுகிலே வேல் குத்தி இருந்தால் அவன் புறமுதுகிட்டு ஓடி வரும் போது வேல் பாய்ந்திருக்கு என்று நினைத்து அதே இடத்தில் அந்த பிணத்தை போட்டு விட்டு இவன் எனக்கு மகனுமில்லை நான் அவனுக்கு தாயும் இல்லை என்று திரும்பி வருவார்கள் அப்படி பட்ட வீரத்தமிழ் தாயின் குழந்தைகள் தான் நாங்கள்.
மற்றும் அவனுடைய கலை கலாச்சாரங்களும் கூட தனித்துவமான சில பண்புகளை தன்னகத்தே கொண்டிருக்கின்றது. இப்படிப்பட்ட எங்கள் தமிழின் இன்றைய நிலைமை மிகமிக போசமானதாக போய் கொண்டு செல்லுகின்றது. அதாவது தமிழன் தனது தாய் மொழியை பேசுவதற்கு தயன்குகின்றான்.
அவன் அந்நிய மொழியையே பேசுவதில் அக்கறை கொள்கிறான். ஏன் என்றால் தமிழ் மொழியை அவன் வியாபார மொழியாகவும் அந்நிய மொழியை அவன் நாகரீக மொழியாகவும் கொள்கிறான்.
இன்று புலம் பெயர்ந்த நாடுகளை பார்ப்போமேயாயின் அங்குள்ள தமிழர்கள் தமிழர்களோட கதைக்கிறத்துக்கும் கூட தமிழ் மொழியை பயன்படுத்தாதது தான் கொடுமை. ஏன் என்றால், அவர்களுக்கு தமிழ் மொழி தெரியாது, காரணம் தமிழ் மொழி தேவையில்லாத ஒரு மொழியாகவும், அதை படித்தால் தங்களுக்கு என்ன இலாபம் என்றும் கேக்கும் சூழ்நிலை இன்று புலம்பெயந்த நாடுகளில் தலை விரித்து ஆடுகின்றன.
அப்படி தமிழ் மொழி வியாபார மொழியாக போய் விட்டது தான் கரணம் .
மற்றும் இப்படிப்பட்ட தமிழ் மக்கள் உருவாவதற்கு அவர்களுடைய பெற்றோரும் காரணமாகின்றார்கள்.அதாவது தமது வீட்டிலையும் சரி தமது நண்பர்களோடும் சரி கதைக்கும் போது அவர்கள் அந்நிய பாசையிலேயே கதைக்கிறார்கள்.
தமது பிள்ளைகள் தமக்குள்ள அந்நிய மொழி பேசும் போதும் கூட அவர்கள் அதை பார்த்து ரசிக்கிறார்கள் என்றால் என்னவென்று சொல்ல?
இப்படி பட்ட தமிழ் குடும்பங்களை எடுத்து நோக்கினால் அது பெரும்பாலும் படித்த குடும்பமாகத்தான் இருப்பது வெக்கப்பட வைக்கின்றது. இவர்கள் வேறு யாராவது தமிழில் கதைத்தல் அதை கிழ்த்தரமாக எண்ணுகிறார்கள். இதனால் தமிழ் தெரிந்தவர்கள் கூட தமிழில் கதைப்பதற்கு பின்னுக்கு நிப்பது தான் என்னும் கேவலமாக உள்ளது.
மற்றும் தமிழ் மொழியுடன் பல்வேறுபட்ட நாட்டு மொழிகளும் சேர்ந்து தமிழ் மொழியை அழிக்கின்றது. அதாவது ஆங்கிலம் ,,சமசுக்(ஸ்)கிரதம் ,,போர்த்துக்கல் ,ஒல்லாந்து மொழி ,மற்றும் வடமொழி ஏன்று எல்லா மொழிகளும் சேர்ந்து தமிழ் மொழியை மழுங்கடிக்கின்றது.
இந்நிலை மாறவேண்டும்.
"தமிழன் என்று சொல்லடா தலை நிமிந்து நில்லடா"
நன்றிகள்.