பயிற்சியின் போதும் பயிற்சிக்கு பின்னும் பல விளைவுகளை உருவாக்க கூடிய கிரேக்கர்கள் உருவாக்கிய உடற்பயிற்சி அல்லது மல்யுத்தம் (Gymnastics) பார்த்து வியக்கும் நாம் அதைவிட உடலுக்கும் மனதிற்கும் மிக வலிமை சேர்க்கின்ற மல்லர் கம்பம் என்ற தமிழர் பாரம்பரிய விளையாட்டை மறந்து போனது மிக துயரமான விசயம் தான்.
சிலம்பம், களரி , மல்யுத்தம், பிடிவரிசை , வர்மக்கலை போன்ற தற்காப்புக் கலை போல் மனிதன் உடலையும் மனதையும் கட்டுபடுத்தி வைக்க உதவும் யோகாசனம் தியானம் போல் மல்லர் கம்பமும் மிக சிறந்த விளையாட்டாகும். இது நம் முன்னோர்களால் போற்றி வளர்க்க பட்டது.
தமிழகத்தின் பாரம்பரியமான விளையாட்டு மல்லர் கம்பம் ஆகும். தரையில் ஊன்றிய கம்பத்தின் மீதும், கயிற்றில் தொங்கும் கம்பத்தின் மீதும், அந்தரத்தில் தொங்கும் கயிற்றின் மீதும் தாவி ஏறி ஆசனங்கள் செய்யும் மல்லர் கம்பம் வித்தையும் மிக அருகி வரும் கலைகளில் ஒன்றாகும்.
வீரம் செறிந்த விளையாட்டான மல்யுத்தம், சிலம்பம், களாரி, போன்று மல்லர் விளையாட்டிலும் நம் முன்னோர்கள் சிறப்பு பெற்ற கலைகள் ஆங்கிலேயர்களாலும் அன்னிய ஊடுருவலாலும் அழிக்கபட்டது போல் மல்லர் கம்பம் விளையாட்டும் நம்மில் இருந்து அழிக்கபட்டது.
மல்லர் கம்பம் யோகாசனம், தியானம் போன்று மனதையும் உடலையும் கட்டுபடுத்தி செய்யும் உடல் பயிற்சி ஆகும்.
சிலம்பத்துக்கும் மல்லர் விளையாட்டுக்கும் ஒரு ஒற்றுமை உண்டு. சிலம்பத்தில் வீரன் நிலையாக நின்றிருப்பான் கம்புதான் சுற்று சுழலும். ஆனால் மல்லர் விளையாட்டில் கம்பம் நிலையாக இருக்க வீரன் அதன் மேல் சுற்றி சாகசம் புரிவான்.
மகாராசி(ஷ்)டிரா, உத்திரபிரதேசம், குச(ஜ)ராத் போன்ற வட மாநிலங்களில் இந்த மல்லர் விளையாட்டு இன்றளவும் பிரபலமாக உள்ளது.
பத்துக்கும் மேற்பட்ட மாநில அரசுகள் இந்த மல்லர் விளையாட்டை அரசு விளையாட்டாக அங்கீகரித்துள்ளன. மகாராசிடிராவில் எந்த விழா தொடங்கப்பட்டாலும் இறைவணக்கத்துக்குப் பிறகு 5 நிமிடங்கள் மல்லர் பயிற்சி நடைபெறும்.
இதுபோல் பிரேசில், யேர்மனி, யப்பான், அமெரிக்கா ஆகிய நாடுகளில் மல்லர் விளையாட்டு பிரபலமடைய தொடங்கியுள்ளன.
திராவிட, பார்பண ஆட்சிகளில் தமிழர் கலைகளும் தமிழர்களும் மதிக்கபடுவதில்லை . மனிதர்களுக்குப் பயன்படும் தமிழர் சொல்லிய நல்ல விசயங்களுக்கு எப்பொழுதும் அங்கீகாரம் கொடுப்பதும் இல்லை. இன்றும் இவ் அங்கிகாரம் நிலுவையில் இருக்கின்றது.
ஆங்கிலய ஆட்சியில் தமிழர்கள் தற்காப்புக் கலைகள் அழிக்கபட்டன. தற்காப்புக் கலை பயின்ற தமிழர்கள் சிந்தனைவாதிகளாகவும் அடிமைப்பட விரும்பாமல் இருந்ததே இதற்குக் காரணம்.
பிற்காலத்தில் திராவிட பார்பண ஆட்சியிலும் தமிழர் கலைகள் தமிழர் வரலாறு, தமிழர் வரலாற்று சின்னங்கள் என்பன அழிக்க பட்டன. இதற்கு இந்து எதிர்ப்பு என்று காரணம் சொல்ல பட்டது.
தமிழ் சித்தர்கள் சொல்லிகொடுத்த யோகாசனம், தியானம் என்ற மக்களுக்கு பயன் படக்கூடிய உன்னத கலைகள் கூட இந்துமத முத்திரை குத்தி ஒதிக்கிவைக்க பட்டன திராவிட ஆட்சியில். , பார்ப்பண ஆட்சியில் தமிழர் அங்கிகாரங்கள் இழந்தனர்.
இப்படியான கலைகள் அழியாது இருக்க வேண்டுமானால் தமிழர்களின் கைகளிலேயே தங்கியுள்ளது!.
நன்றிகள்.