Sunday, 14 April 2013

தமிழ் புத்தாண்டாய் கொண்டாடி.............!

அனைவருக்கும் இனிய தமிழ் புத்தாண்டு வாழ்த்துக்கள் ...


ஏன் சித்திரை ஒன்றை தமிழ் புத்தாண்டாய் கொண்டாடி வருகிறோம் ?..

கடந்த சில வருடங்களாக இதற்கு சர்ச்சைகளையும் கிழப்பி வருகிறோம் . இருக்கிறது இதற்கு சரியான விளக்கம் ...

நாம் வாழும் பூமி , பால்வெளி திரளில் சூரிய குடும்பத்தில் ஒரு கோள் அவ்வளவுதான் .. இந்த சூரிய குடும்பத்தை ஆட்சி செய்பவன் சூரிய பகவான். நம் முன்னோர்க்கு முன்னோர்கூட இயற்க்கை வழிபாட்டைத்தான் மேற்கொண்டு இருந்தார்கள்.

அதிலும் சூரிய வழிபாடு மிகவும் முக்கியத்துவம் வாய்ந்தது . இது இந்துக்கள் மட்டுமல்ல , இசுலாம் மதத்துக்காரர்கள் பிறை நிலவை வழிபட்டனர், கிரிசுத்துவர்கள் நச்சத்திரத்தை வழிபட்டனர்.

இப்படி எல்லோருக்கு மாதங்கள் வெவ்வேறாக இருந்தாலும் வழிபாடு இயற்கையை நோக்கியதாக தான் இருந்தது. இப்படிப்பட்ட நிலையில் இந்த உலகையே ஒளியுட்டி கொண்டு இருக்கும் சூரிய பகவான்.

இந்த சித்திரை மாதத்தில்தான் மிகவும் பலம் வாய்ந்தவராக வலம் வருகிறார். அதனால்தால் வெயில் சுட்டெரிக்கிறது. இந்த சூரிய பகவன் பலம் வாய்ந்த மாதமான சித்திரை மாதத்தில் இருந்தே நம் மாதம் கணக்கிடப்படுகிறது.

ஏன் இந்த சித்திரை மதத்திற்கு சித்திரை என்று பெயர் வந்தது தெரியுமா ? .. 

இந்த சித்திரை மாதம் சூரியன் உச்சத்தில் மாதம், இந்த மாதத்தில் சந்திரனும் பலம் பெரும் நாள் பௌர்ணமி . இந்த பௌர்ணமி துலாம் ராசி கட்டத்தில் உள்ள சித்திரை நட்சத்திரத்தில் சந்திர பகவான் வரும்போது நிகழ்வதால் இம்மாதத்திற்கு இப்பெயர் வந்தது.

இந்த நாளில் சூரியனும் சந்திரனும் உச்ச பலத்தை எட்டுவதால், இந்த சித்திரை நட்ச்சதிரத்தை கொண்டே இந்த சித்திரை மாதத்தை முதல் மாதமாக கொண்டாடி வருகிறோம்.
நன்றி.