" முதுமக்கள் தாழி தான் பண்டைய தமிழரின் கல்லறையா ? "
அகழ்வாராய்ச்சியில் எடுக்கப் படுகின்ற முதுமக்கள் தாழி தான் கல்லறை என சில ஆய்வாளர்கள் தவறான முடிவிற்கு வருகின்றனர் . ஆனால் இவை இறந்த உடல்களை அடக்கம் செய்ய மட்டும் பயன்படுத்தப்படவில்லை .
சிலநேரங்களில் அந்த தாழியில் தங்கம் வெண்கலம் இரும்பு போன்ற பொருள்களும் கண்டு பிடிக்கப் பட்டு இருக்கின்றது ஆக வேறு பொருள்களை வைக்கவும் அதை பயன்படுத்தி இருக்கின்றனர் .
பண்டைய காலத்தில் மிகவும் முதிர்ந்த மக்கள் படுத்த படுக்கையாக செயலற்று ஆனால் உயிருடன் அப்படியே நீண்டநாள் கிடப்பர் . இவர்களை வீட்டில் வைத்துக் கொண்டிருப்பதைவிட தாழியில் வைத்து புதைப்பதை சிறப்பென கருதி உயிருடன் அடக்கம் செய்தனர் . அவ்வாறு உயிருடன் முதுமக்கள் ( வயதானவர் ) வைக்கப் பட்டமையால் அது முதுமக்கள் தாழி என சொல் வழக்கில் வந்தது .
உயிருடன் அடக்கம் செய்ததால் அவர்களுக்கு வேண்டிய உணவு மற்றும் இதர பொருள்களை பாத்திரங்களில் வைத்து அவர்களுடனே அடக்கம் செய்தனர். அவையே அகழ்வாராய்ச்சியின் போது கிடைப்பவை .
இறந்தவர்கள் ஆவியாக வந்து இவற்றை பயன்படுத்த இந்த பொருள்களை எல்லாம் அவர்கள் வைக்க வில்லை உயிருடன் அடக்கம் செய்ததாலே தேவையானவற்றை வைத்தனர். இறந்தவர்கள் தங்களோடு வாழ்கிறார்கள் என்ற நம்பிக்கை பண்டைய தமிழரிடம் இல்லை அது பின் நாளைய வளர்ச்சி .
எனவே தாழி என்பது உடல்களை அடக்கம் செய்ய மட்டும் பயன்படுத்தப் படவில்லை. அதற்க்கும் பயன்பட்டிருக்கிறது அவ்வளவுதான். அந்த பானை போன்ற பொருள் வேறு சில பொருள்களை வைத்து பாதுகாக்கவும் உபயோகப் படுத்தப் பட்டிருக்கிறது .
நன்றிகள்.