Wednesday, 25 December 2013

ஆழிப்பேரலையின் அழியாத ஒன்பதாவது ஆண்டு நினைவுகளுடன்.....!




அலைகடலே
உன் கரையில் விளையாடியது குற்றமென
பிஞ்சுகளின்
உயிரோடு விளையாடிவிட்டாய்.

உன் மடியில்
வலை வீசியது குற்றமென
மீனவர்களின்
உயிரை விலை பேசிவிட்டாய் .

குழந்தைகளை பிரித்து
பெற்றோர்களை அனாதயாக்கினாய்
பெற்றோரை பிரித்து
குழந்தைகளை அனாதயாக்கினாய்.

இன்னும்
யாரை பிரிக்க
அலை அலையாய்
அலைந்துகொண்டு இருக்கிறாய்?

இங்கு இறப்பதற்கு
இன்னும் தான் மிச்சம்மிருக்கிறோம்இறந்த பின் சிந்துவதற்கு

அலையே நீ...
எத்தனை மௌனமாய் இருந்தாய்!
எம்...
மண் மீது நீ கொண்ட காதலால்
எத்தனை முறை இம்மண்ணை
அன்பாய்
தொட்டு தொட்டு சென்றாய்
 பின்
உனக்கென்ன உயிர்களிடையே
அத்தனை கோபம்?

உன் கோரத் தாண்டவத்தால்
கொலைகள் பல செய்து
சாதனையே புரிந்து விட்டாயே!

எம்
மண் இப்போது
பிணங்களின் மயாணமாகி கிடக்கின்றதே!
அதை நீ அறிந்து
மகிழ்கின்றாயா?
சுனாமியே!

உன்னால் விளைந்த மரணத்தால்
உயிரினங்களுக்கு
மரணத்தின் மேலுள்ள
பயமும்...
மரியாதையும் போய் விட்டதே!
நன்றிகள்.