Thursday, 9 February 2012

குழந்தையென மாறு.........!

அன்பே குழந்தையின் இயல்பு. இதுவே யதார்த்தம். குழந்தையின் அன்பு தூய்மையான அன்பு.ஆனால், குழந்தை வளர வளர, உலகியலின் பாதிப்பினால், அதன் அன்பு மாறுபடுகிறது.

வேறுபடுகிறது. திரிபு அடைகிறது. இருப்பினும், வளர்ந்த மனிதனிடத்தே குழந்தை அன்பு உள்ளுர இருக்கத்தான் செய்கிறது. அது அழிவற்றது. மாயைத் திரை விலக, மனிதனிடத்தே உள்ளுரப் புதைந்து கிடக்கும் குழந்தை அன்பு மீண்டும் மலரும்.

எனவே தான் மனிதா நீ மீண்டும் குழந்தையென மாறு.மனிதன் குழந்தையென மாறித் தனது அன்பை இறைவனிடத்து செலுத்த வேண்டும். இறைவனைப் பால் நினைந்தூட்டும் தாயெனத் துதித்து அன்பு செய்ய வேண்டும்.

அப்பொழுது அவன் பெருமகிழச்சியில், பேரானந்தத்தில் திளைப்பான்.எனவே தான் மனிதா நீ மீண்டும் குழந்தையென மாறு.ஒத்த பொருள்கள் தான் இரண்டறக் கலக்க முடியும்.

நெருப்பு நெருப்புடன்தான் இணையும். இரண்டறக் கலக்கும். நெருப்பு சமுத்திரத்தில் இணையாது. அதே போல், இறைவன் அன்பு வடிவானவன் என்பதை உணர்ந்து, நாம் இறைவனே என்று உணர்ந்து, நாம் அன்பின் வடிவங்கள் என்று தெளிவு பெற்று, அந்த குழந்தையின் தூய அன்பில் நாம் அமிழ்ந்து போகலாம்.

பேரன்பு வடிவினனான இறைவனோடு நாம் இரண்டறக் கலக்கலாம்.எனவே தான் மனிதா நீ குழந்தையென மாறு.மனிதனின் இயல்பு அன்பே. வெறுப்பு செயற்கையானது. மனிதன் தன் இயல்பான அன்பில் வாழ்தல் வேண்டும். 


அன்பே இறைவனை அடைவதற்குரிய நெடுஞ்சாலையாகும். இறைவனே அன்பு. அன்பே இறைவன். தன்னை அறியும் போது, தான் அன்பின் வடிவம் என்று உணரும் போது, அந்தத் தூய அன்பில் மனிதன் இறைவனோடு இரண்டறக் கலக்கலாம்.

எனவெ தான் மனிதா நீ மீண்டும் குழந்தையென மாறு.இறைவன் பால் மனிதன் தனது தூய அன்பை முழுமையாகச் செலுத்த வேண்டுமென்பது குடும்பத்தின் பால் அவன் காட்டும் அன்பு மறுக்கப்படுகிறது என்பதல்ல. பெற்றோர், மனைவி, குழந்தைகள், உறவினர்கள், ஆகியோரிடத்து அவன் காட்டும் அன்பு அற்றுப் போகும் என்பதல்ல. மாறாக, மனிதன் இறைவன்பால் தனது அன்பைச் சொரியச் சொரிய, அவன் தன் உற்றார் உறவினர் இடத்துக் காட்டும் அன்பு மேலும் இறுக்கம் அடைகிறது.

இதற்கு ஒரு உதாரணத்தைப் பார்ப்போம். வாடிய மரம் ஒன்றை எடுத்துக் கொள்ளுங்கள். அம்மரத்தின் கிளைக்கு நாம் தண்ணீர் ஊற்றினால், அது தழைக்காது. மாறாக, ஒரு தோட்டக்காரன் தண்ணீரை அம்மரத்தின் அடியில் அதன் வேருக்குப் பாய்ச்சப் பாய்ச்ச, அந்நீரை அம்மரம் கடத்திக் கிளைகளை ஓச்சும். இலைகள் துளிர்க்கும். அம்மரம் பூக்கும். காய்க்கும். கனிகளை நல்கும்.


அதே போன்று மனிதன் இறைவனிடத்து அன்பைச் சொரியச் சொரிய, பெற்றோர், சகோதரர்கள், மனைவி, குழந்தைகள், உறவினர்கள் ஆகியோரிடத்து மட்டுமன்றி அனைத்து உயிர்களிடத்தும் அவ்வன்பு விரிந்து செல்லும; இந்தத் தூய அன்பு குழந்தையின் அன்புக்கு நிகரானது.

எனவே தான் மனிதா நீ குழந்தையென மாறு.மனிதன் ஒரு குழந்தை போன்று தனது அன்பைக் கருணாசாகரனான இறைவனிடத்துப் பொழிந்து, தாயாக வழிபட, அவன் பேரின்பத்தைத் துய்க்கலாம். எனவே, மனிதா நீ மீண்டும் குழந்தையென மாறு. 

நன்றிகள் ஆன்மீகம்.

Wednesday, 8 February 2012

மூக்குப்பேணி......!



தமிழர்களின் தனித்துவமான அடையாளங்களில் மூக்குப்பேணியும் ஒன்றாகும். வாய்ச்சுகாதாரத்தை பேணுதல் தேவையான அளவுக்கு நீராகாரங்களை பருகுதல் போன்றவற்றிற்கு ஏற்ப அமைக்கப்பட்டுள்ளது. அழகியல் தன்மையான வடிவமைப்பு. 

1970ஆண்டின் கடைசிப்பகுதி வரையும் எம்மவர் வீடுகளில் எல்லாம் ஆட்சிபுரிந்த இவ்வகைப் பாத்திரங்கள்.எனினும் சில்வர் பொருட்களின் வருகையுடன் இவை அரும் பொருட்களாக மாறியுள்ளன.

நன்றிகள்.

Tuesday, 7 February 2012

நேசம்..........!


















நேசம் மரணத்தை போல் வலியது
அதின் தழல் அக்கினி தழலும் அதின்
சுவாலை கடும்சுவாலையுமாயிருக்கின்றது.
திரளான தண்ணீர்கள் நேசத்தை அவிக்கமாட்டாது,






















வெள்ளங்களும் அதைத் தணிக்கமாட்டாது
ஒருவன் தன் வீட்டிலுள்ள உடைமகளையெல்லாம்
நேசத்திற்க்காகக் கொடுத்தாலும் அது
அசட்டை பண்ணப்படும்.



















 (நன்றிகள் மனஓசை )

Monday, 6 February 2012

அன்பு என்பது என்ன........... ?



அன்புதான் இந்த உலகத்தை செலுத்தும் சக்தி. பலவிதமான மனித உறவுகளிடமும் நாம் எதிர்பார்ப்பதும், பெற விரும்புவதும் அன்புதான். துன்பமும் பயமும் நிறைந்ததாக நாம் எண்ணுகின்ற வாழ்வில் அன்புதான் ஒரே ஆறுதல்.

சிலரிடம் பிரச்சனைகளை பகிர்ந்து கொண்டால் மனம் பாதுகாப்பாக உணர்வதற்கு காரணம் இதுதான். அன்பாக இருப்பதிலும் அன்பு செலுத்துவதிலும் ஈடுபாடு காட்டுவதன் மூலம் எப்போதும் சந்தோச உணர்வு ஏற்படுகிறது.

அன்பு என்பது என்ன ? பல அர்த்தங்கள் பொதிந்த வார்த்தை இது. இதுதான் அன்பு என அவ்வளவு எளிதில் வரையறுத்துச் சொல்ல முடியாது. மேலும், எந்த அளவிற்கு ‘அன்பு‘ ஆழமான வார்த்தையோ அதே அளவிற்கு மலினப்படுத்தப்பட்டும் உபயோகத்தில் இருக்கிறது.

அன்பைப் பற்றி பேசாதவர்களே இல்லை. அன்பு, காதல், பாசம் என்று பல்வேறு பெயர்களில் நாம் அழைத்தாலும் எல்லாமே அன்பு என்பதைத்தான் மையப்படுத்துகிறது.

சரி, அன்பு என்பது ஒரு கருத்தா ?
அல்லது தத்துவம் என்று சொல்லலாமா ?
நான் சந்தோசத்தை விரும்புகிறேன்.
கடவுள் அன்பாக இருக்கிறார்.
நான் உன்னை காதலிக்கிறேன்.
என்னுடைய தாயை நேசிக்கிறேன்.இவையெல்லாம் என்ன...?அன்பை வெளிப்படுத்துகிற பல்வேறு வார்த்தைகள்.

அன்புதான் இவ்வார்த்தைகளின் மையம். அன்பு எங்கே கிடைக்கும்... எங்கு வாங்கலாம்... அன்பை செலுத்த முடியுமா...?அன்பைப் பற்றிய கேள்விகள் நிறையவே உண்டு.

அன்பு என்ற உணர்வு உள்மனதிலிருந்து எழ வேண்டியது. சந்தோசத்தை விரும்புவதும், கடவுள் அன்பாக இருப்பதும், காதலிப்பதும், தாயை நேசிப்பதும் உணர்வுபூர்வமாக செயல்படுத்தப்பட வேண்டும்.

கடவுள் அன்பாக இருக்கிறார் என்பதற்கு என்ன அர்த்தம் ? கடவுள் எந்த துன்பத்தையுமே நமக்கு தரமாட்டார். நாம் மட்டும்தான் கடவுளின் அன்பிற்கு பாத்திரமானவர் என்றில்லை.கடவுள் நம் மீது அன்பாக இருக்கிறார் என்று நாம் நம்புவதன் மூலம் எல்லா செயல்களிலும் பய உணர்வு நீங்கி செயல்பட உத்வேகம் பிறக்கிறது.

‘உயிர்களிடத்தில் அன்பு செய்‘ என்று சொல்லியிருக்கிறார்கள். கடவுளிடம் மட்டும்தான் என்றில்லை. எல்லோரும் நம் மீது அன்பாக இருக்கிறார்கள் என்ற நல்ல மனநிலையைக் கொண்டால் வாழ்க்கை இனிதாக அமையும்.


நான் கடவுள் மீது அன்பாக (பக்தியாக) இருக்கிறேன் என்று சிலர் கூறுவார்கள். இதைவிட போலியான விடயம் வேறு என்ன இருக்க முடியும் ?

எப்போது நாம் கடவுளை வழிபடத் தொடங்குகிறோமோ, அதாவது, அன்பு செலுத்தத் தொடங்குகிறோமோ அப்போதே நாம் நம்மையே நாம் வழிபடத் தொடங்கி விட்டோம் என்றுதானே அர்த்தம் ?

நம் மீது நாமே அன்பு செலுத்திக் கொள்வதுதான் வழிபாடு. அதற்கு புனையப்பட்ட நம்பிக்கை வேண்டியிருக்கிறது.எனவே, அதை நாம் கடவுளின் மீது செலுத்தும் அன்பு என்று கூற முடியாது.

கடவுள் என்பது உணர்வு பூர்வமான ஒரு நம்பிக்கை. எந்த விசயத்தின் மீதும் கவனத்தைக் குவித்து வழிபடுவதன் மூலம் இது சாத்தியம்தான்.தன்னம்பிக்கை என்பதுதான் கடவுள் என்பதை உணர்ந்தவர்களுக்கு இது புரியும்.

சுவாமி விவேகானந்தர் மிக எளிமையாக இதுபற்றிக் கூறுகிறார் “தன்னம்பிக்கை இல்லாதவன் எவனோ அவனே நாத்திகன்“ என்று. நம்பிக்கைதான் கடவுள் என்பதை உணராதவர்கள் மட்டுமே ‘நான் கடவுள் மீது அன்பாக இருக்கிறேன்‘ என்றெல்லாம் கூறுகின்றனர்.

நாம் எல்லோருமே தினசரி பிரச்சனைகளிலிருந்து தப்பிப்பதையே வாழ்க்கையாக கொண்டிருக்கிறோம். அதற்கென பல நாம் பல வழிகளையும் கண்டுபிடித்து வைத்திருக்கிறோம்.

பிரச்சனைகளிலிருந்து தற்காலிகமாக தப்பித்துக் கொள்ள உதவும் உத்திகள்தான் தொலைக்காட்சி, கடவுள் வழிபாடு, திரைப்படம், எழுதுதல் இவையெல்லாம். இரண்டரை மணி நேரம் இருட்டில், யாரோ சிலரின் வாழ்வின் சந்தோசங்களைப் பார்த்து சந்தோசப்படவும், சோகங்களில் சோகமாகவும் நம் மனது இயல்பாக பழகிவிடுகிறது.


அதேபோல்தான் கோயில்களிலும், “எல்லாவற்றையும் கடவுள் பார்த்துக் கொள்வார்“ என்று வழிபாட்டின் போது வேண்டிக் கொள்வதன் மூலம் நம்முடைய பிரச்சனை நம்மிடமிருந்து இறக்கிவிடுகிறோம். 

பிரச்சனைகளைப் பேசிப் பகிர்ந்து, பிறரிடம் அன்பாக இருப்பவர்களுக்கு இந்த தப்பித்தல் சாதனங்களின் தேவையிருக்காது. நம் தேவைகளைக் கூறவும் பிரச்சனைகளை பேசவும் கிடைத்த , அதிலும் பதில் எதுவும் பேசி விடாத ,ஒரே சாதனம் கடவுள் என்பதால்தான் கோயில்களில் கூட்டம் அலை மோதுகிறது. 

மனிதனின் எல்லா பிரச்சனைகளுக்கும் தீர்வை அளிக்கக்கூடியது அன்பு மட்டும்தான்.

இதில் என்ன பிரச்சனையென்றால் அன்பாக இருப்பது எப்படி என்பதை நாம் உணராமலிருப்பதுதான்.அன்பை நாம் எப்படி உணரப்போகிறோம் ? அன்பாக இருப்பதுதான் அன்பு என்பதை நாம் உணர வேண்டும்.

பலரிடமும் நாம் அன்பாக இருப்பதாக சொல்கிறோம், பேசுகிறோம். ஆனால் உண்மை என்ன ?மனம் நிறைந்த அன்பு மட்டுமே பலனைத் தரும். உள்ளன்போடு செய்யும் எந்தச் செயலும் மன மகிழ்வைத் தரும். 

காலையிலிருந்து மாலை வரை நாம் பல மனிதர்களைச் சந்திக்கிறோம், சிரிக்கிறோம், பேசுகிறோம். இவர்களில் எத்தனை பேரிடம் உண்மையான அன்போடு சிரித்துப் பேசி இருப்போம் ?


உதடுகள் சிரிப்பதை விடுங்கள். பொய்யாக சிரித்து போலியாக புகழ வேண்டிய கட்டாயம் பலருக்கும் வாழ்வின் பல நிலைகளிலும் ஏற்பட்டிருக்கலாம். 
நம்மில் எத்தனை பேர் சந்திக்கின்ற அனைவரிடமும் அன்பாக இருந்திருப்போம்.

அன்பு பற்றி புத்தர் ஒரு கதை சொல்லியிருக்கிறார்வயல் வரப்பு வழியாக ஒருவன் நடநது கொண்டிருக்கும்போது புலியைப் பார்த்து விட்டான். அவன் ஓட புலி துரத்தியது. சிறிய குன்றின் உச்சிக்கு வந்து விளிம்பில் இருந்த காட்டு மரத்தின் வேர்களைப் பிடித்துக் கொண்டு தொங்கினான்.

புலி அவனை முகர்ந்து பார்த்துக் கொண்டிருந்தது. நடுங்கிக் கொண்டே கீழே பார்த்தான். இன்னொரு புலி பார்த்துக் கொண்டிருந்தது. மரத்தின் வேர்களில் அவன் உயிர் ஊசலாடிக் கொண்டிருந்தது. இரண்டு எலிகள் வேர்களைக் கடிக்க ஆரம்பித்தன. அவனுக்கு கைக்கெட்டும் தூரத்தில் காட்டுச் செடியின் பழம் இருந்தது.

ஒரு கையால் வேரைப் பிடித்துக் கொண்டு இன்னொரு கையால் பழத்தைப் பறித்து தின்றான். அப்போது அவன் மனதில் “பழம் எவ்வளவு சுவையாக இருக்கிறது“ என்று தோன்றியது.
இக்கதையில் வருகிற ‘கனியைச் சுவைக்கும் மனிதனின்‘ மனநிலைதான் அன்பின் மூலம் நாம் அடைவது.எவ்வளவு துன்பங்கள், பிரச்சனைகள் இருப்பினும் அனைத்தையும் மறந்து மகிழ்ந்திருக்கச் செய்கிற சக்தி அன்பிற்கு மட்டும்தான் உண்டு.







அன்பிற்கு மட்டுமே வாழ்வை இனிமையாக நகர்த்திச் செல்கின்ற சக்தி உண்டு.

நன்றிகள்.

Sunday, 5 February 2012

33 கடைப்பிடிக்கப்பட வேண்டியவை .........!


1. பேசும்முன் கேளுங்கள், எழுதும்முன் யோசியுங்கள், செலவழிக்கும் முன் சம்பாதி யுங்கள்.

2. சில சமயங்களில் இழப்புதான் பெரிய ஆதாயமாக இருக்கும்

3. யாரிடம் கற்கிறோமோ அவரே ஆசிரியர். கற்றுக் கொடுப் பவரெல்லாம் ஆசிரியர் அல்லர்.

4. நான் மாறும்போது தானும் மாறியும், நான் தலையசைக்கும் போது தானும் தலையசைக்கும் நண்பன் எனக்குத் தேவையில்லை. அதற்கு என் நிழலே போதும்!

5. நோயை விட அச்சமே அதிகம் கொல்லும்!

6. நான் குறித்த நேரத்திற்குக் கால்மணி நேரம் முன்பே சென்று விடுவது வழக்கம். அதுதான் என்னை மனிதனாக்கியது.

7. நம்மிடம் பெரிய தவறுகள் இல்லை எனக் குறிப்பிடுவதற்கே, சிறிய தவறுகளை ஒப்புக் கொள்கிறோம்!




8. வாழ்க்கை என்பது குறைவான தகவல்களை வைத்துக்கொண்டு சரியான முடிவு க்கு வரும் ஒரு கலை.

9. சமையல் சரியாக அமையாவிடில் ஒருநாள் இழப்பு. அறுவடை சிறக்காவிடில் ஒரு ஆண்டு இழப்பு. திருமணம் பொருந்தாவிடில் வாழ்நாளே இழப்பு.

10. முழுமையான மனிதர்கள் இருவர். ஒருவர் இன்னும் பிறக்க வில்லை. மற்றவர் இறந்துவிட்டார்.

11. ஓடுவதில் பயனில்லை. நேரத்தில் புறப்படுங்கள்.

12. எல்லோரையும் நேசிப்பது சிரமம். ஆனால் பழகிக்கொள்ளுங்கள்.

13.நல்லவர்களோடு நட்பாயிரு. நீயும் நல்லவனாவாய்.

14. காரணமே இல்லாமல் கோபம் தோன்றுவதில்லை. ஆனால் காரணம் நல்லதாய் இருப்பதில்லை



15. இவர்கள் ஏன் இப்படி? என்பதை விட, இவர்கள் இப்படி த்தான் என எண்ணிக்கொள்.

16. யார் சொல்வது சரி என்பதல், எது சரி என்பதே முக்கியம்.

17. ஆயிரம் முறை சிந்தியுங்கள். ஒரு முறை முடிவெடுங்கள்.

18. பயம்தான் நம்மைப் பயமுறுத்துகிறது. பயத்தை உதற் எறி வோம்.

19. நியாயத்தின் பொருட்டு வெளிப்படையாக ஒருவருடன் விவாதிப்பது சிறப்பாகும்.

20. உண்மை புறப்பட ஆரம்பிக்கும் முன் பொய் பாதி உலகத்தை வலம் வந்துவிடும்.

21. உண்மை தனியாகச் செல்லும். பொய்க்குத்தான் துணை வேண் டும்.

22. வாழ்வதும் வாழ்விடுவதும் நமது வாழ்க்கைத் தத்துவங்களாக ஆக்கிக் கொள்வோம்.


23. தன்னை ஒருவராலும் ஏமாற்ற முடியாது எனச் செருக்கோடு இருப்பவனே கண்டிப்பாக ஏமாந்து போகிறான்.

24. உலகம் ஒரு நாடக மேடை ஒவ்வொருவரும் தம்பங்கை நடிக்கிறார்கள்.

25. செய்வதற்கு எப்போதும் வேலை இருக்கவேண்டும் . அப்போது தான் முன்னேற முடியும்.

26. அன்பையும் ஆற்றலையும் இடைவிடாது வெளிப்படுத்துகிறவர் ஆர்வத்துடன் பணிபுரிவர்.

27. வெற்றி பெற்றபின் தன்னை அடக்கி வைத்துக்கொள்பவன், இரண்டாம் முறையும் வென்ற மனிதனாவான்.

28. தோல்வி ஏற்படுவது அடுத்த செயலைக் கவனமாகச் செய் என்பதற்கான எச்சரிக்கை.


29. பிறர் நம்மைச் சமாதானப் படுத்த வேண்டும் என்று எதிர் பார்க்காமல், நாம் பிறரைச் சமாதானப் படுத்த முயற்சிக்க வேண்டும்.

30. கடினமான செயலின் சரியான பெயர்தான் சாதனை. சாதனையின் தவறான விளக்கம் தான் கடினம்.

31. ஒன்றைப்பற்றி நிச்சயமாக நம்ப வேண்டுமென்றால் எதையும் சந் தேகத்துடனே துவக்க வேண்டும்.

32. சரியானது எது என்று தெரிந்த பிறகும் அதைச் செய்யாமல் இருப்பதற்குப் பெயர்தான் கோழைத்தனம்.


33. ஒரு துளி பேனாமை பத்து இலட்சம் பேரைச் சிந்திக்க வைக்கிறது.

நன்றிகள்.

Saturday, 4 February 2012

ஆண்களின் சாமுத்ரிகா லட்சண...........!



1. தலை – ஆண்களின் தலையானது உயர்ந்தோ, பருத்தோ இருந்தால் செல்வம் உண்டு. பின்பகுதி புடைத்திருப்பின் அறிவு உண்டு. தலையின் நரம்புகள்
 புடைத்து இருப்பின் தரித்திரம்.






 2. நெற்றி – அகலமான, எடுப்பான, உயர்ந்த நெற் றி அமைந்திருப்பின் ஞானமும் செல்வமும் உ ண்டு. மிகச் சிறுத்திருப்பின் மூட னாவான். நெற்றியில் பல ரேகைகள் இருப்பின் யோகம் உண்டாகும். நெற்றியில் ரேகை இல்லா திருப்பின் ஆயுள் குறையும். நெற்றியில் வியர்வை வருமாயின் யோகமாம்.



 3. கண் – ஆண்களின் கண்கள் சிவந்து, விசாலமாக யானைக்கண் போல் இருந்தால் உலகை ஆள்வான். கோழி முட்டைக் கண்ணும், மிகச்சிறிய கண்ணும் இருப் பின் அறிவு, ஆற்றல் குறைவாக இருக் கும்.



 4. மூக்கு-உயரமாய், நீண்டு, கூரிய முனையோடு சிறிய நாசித் துவாரங்கள் கொண்ட மூக்கு உடையவர்கள் பணம், பதவி, புகழ் உடையவர்களாக இருப்பர். நுனிப் பகுதி தடித்தோ, நடுப்பகுதி உயர் ந்தோ, பெரிய அளவில் மூக்கு அமைந்திருப்பின் தரித்திரமாம்.



 5. வாய் – அழகான,சிறிய வாய் உடைய வர்கள் புத்தி, சக்தி, கருணை உடையவர்களாக, அறிஞர்களாக, பெரும்பதவியில் இருப்ப வர்களாக இருப்பர். அகன்றும், வெளியே பிதுங்கியும் உள்ள வாய் அதிகமாகப் பேசும். பிறர் செயலில் குற்றம் காணும்..





 6. உதடு – உதடு சிவந்திருப்பின் கௌரவம், அதிகாரம் யோகம் நிலைத்திருக்கும். கருத்து, உலர்ந்து, தடித்து இருப்பின் கபடம் நிறை ந்திருக்கும்.



 7. கழுத்து – ஆண்களின் கழுத்து பருத்தும், மத்திம உயரம் உடையதாகவும் இருப்பின் அதிர்ஷடமாம். மிக உயரமாகவோ, மிகக் குட்டையாகவோ, நரம்புகள் தெரியும்படியோ இருந்தால் வறுமையாம்.






 8. தோள் – தோள்கள் இரண்டும் உயர்ந்திருப்பின் செல்வம் உண்டு. தாழ் ந்திருந்தால் நீண்ட ஆயுள் உண்டு. சமமாக இருப்பின் அறிவு உண் டு. தோள்கள் இரண்டிலும் மயிர் அதிகம் இருந்தால் நினைத்த கா ரியம் முடியாது.




 9. நாக்கு – நீளமான நாக்கு இருப்பின் சிறந்த பேச்சாளர்களாக இருப்பர். நா க்கு நுனியில் அழியாத கருப்புப் புள்ளி கள் இருப்பின் சொன் ன சொல் பலி க்கும். நாக்கு சிவந்திருப்பின் அதிர்ஷ டமாம். கருத்தும், வெளுத்தும், உலர்ந் தும் இருப்பின் தரித்திரமாம். 




10. பல் – மெல்லிய ஒடுக்கமான பற்களை உடையவர்கள் கல்விமான் ஆவர். கூரிய பற்கள் இருப்பின் கோபம் அதிகம் வரும். வரிசை தவறி, ஒன்றுக்கு மேல் ஒன்று இருப்பின் தரித்திரமாம்.





11. காது – காது மேல் செவி அகலமானால் முன் கோபம் இருக்கும். காது குறுகியிருப்பின் அதிர்ஷடமாம். மேல் செவி உள்ளே மடங்கியிருப்பின் கபட தாரி. 





12. கைகள் – நீளமான, சீரான பருமன் உடைய கைளை உடையவர்கள் சிறப்பாக வாழ்வர். முழங்கால் வரை கை நீண்டிருப்பின் அரசன் ஆவான். தடித்த, குட் டையான கைகளை உடையவர் களை நம்புதல் கூடாது. கைப் பிணைப்புகளில் மூட்டுகளில் ஓசை எழுப்பினால் தரித்திரமாம். கைகள் ஒன்றுக் கொன்று வித்தி யாசமாக இருப்பின் பாவிகளா க இருப்பர். கைகளில் நீண்ட ரோமங்கள் இருப் பின் செல்வந்தன் ஆவான். 


13.மணிக்கட்டு – மணிக்கட்டில் சதையிலிருந்து கெட்டியாக இருப் பின் அரசு பதவி கிட்டும். மணிக்கட்டு உயரமாக இருப்பின் நீண்ட ஆயுள் உண்டு. மணிக்கட்டுகள் உறிதியின்றி இருந்தாலும், மடக்கும்போது சப்தம் வந்தாலும் தரித்திரமாம்.


 14. விரல்கள் – கைவிரல்கள் நீளமாக இருந்தால் கலை ஆர்வம் அதிகம் இருக்கும். காம இச்சை அதிகம் உண்டு. விரல்களுக்கு மத்தியில் இடைவெளி இருந்தால் தரித்திரமாம். உள்ளங்கை அதிகப் பள்ளமாக இருந்தால் அற்ப ஆயுளாம். உள்ளங்கை சிவந்திருந்தால் தனவான் ஆவான். உள்ளங்கையின் நான்கு மூலைகளும் சமமான உயரத்தோடு தட்டையாக இருப்பின் அரசனா வான்.


 15. மார்பு – ஆணின் மார்பு விசாலமாகவும், சதைப் பிடிப்போடும் இருப்பின் அவன் புகழ் பெற்று விளங்குவான். கோணலாகவும், ஒன்றோடொன்று நெருங்கியும் இ ருப்பின் அற்பாயுளாம். ஆணின் மார்பகங் களில் உரோமம் இல்லாதிருப்பது ஆகாது. அதிகமான ரோமம் இருப்பின் இச்சை அதி கம் இருக்கும்.


 16. வயிறு – பானை போன்ற உருண்டையா ன வயிறு இருப்பின் செல்வம் இருக்கும். வயிறு தொங்கினால் மந்த நிலை உண் டாகும். ஒட்டிய வயிற்றைப் பெற்றவர்கள் குபேரனாய் இருப்பர். வயிற் றில் மடிப்புகள் இல்லாதிருப்பதே உத்தமம். 





17.முதுகு – சமமான முதுகைப் பெற்றவர் கள் எதிலும் வெற்றி பெறு வர். முதுகில் எலும்புகள் காணப்பட்டால் தரித்திரமா கும். 




18. கால்கள் – கால்கள் நீளமாக இருந்தால் அரசாங்க விருதுகள் பெறுவான். கால்கள் குட்டையாக இருப்பின் தரித்திரமாம். முழங்காலுக்கு மேலே உயரமாகவும், முழங்காலுக்குக் கீழே குட்டையாகவும் இருந்தால் நன்மைகள் பெருகும். 



19. கால்பாதம் – கால் விரல்கள் ஒன்றோ டொன்று நெருங்கி இருப்பின் புகழ் பெறு வான். பாதங்கள் சனதப் பிடிப்பின்றி அழகாக, அளவாக இருக்க வேண்டும். பாதங்களில் மேடு பள்ளம் இருந்தாலும், நகங்கள் கோணல்மாணலாக இருந்தாலும், விரல்கள் தனித் தனியே விலகியிருந்தாலும் வறுமை வாட்டும்.. 

நன்றிகள்.

Friday, 3 February 2012

பூப்போல் பெண்ணா? பெண்போல் பூவா?



மேலுள்ள‍ படத்தில் இருப்ப‍து ஒரு பெண் அந்தரத்தில் மிதப்பது போல உங்களுக்கு தெரிகிறதா? சொல்ல‍ப்போனால் இது பெண்ண‍ல்ல‍, பெண்ணுருவில் இருக்கும் ஒரு மலர்தான். 




ஆம். இமயமலை அடிவாரத்தில் காணப்படுகிறது. மேலே மரத்தில் தொங்கிக்கொண்டிருககும் இந்த அதிசய மலரை மக்கள் அதிசயமாக பார்த்து செல்கின்றனர்.



நீங்களும் இங்கு உள்ள‍ படத்தை பார்த்து அந்த பெண்ணுருவில் இருக்கும் மலரைப் பாருங்கள்.




நன்றிகள்.

Thursday, 2 February 2012

பால்.......!



பால் என்பது ஒரு தாயின் மடியில் தனது குழந்தைக்காக மட்டும் சுரக்கும் ஒப்பற்ற உயிருணவாகும். உலகில் வேறொரு உயிரினத்தின் பாலை பலவந்தமாகக் கரந்து உண்டு வாழும் ஒரே உயிரினம் மனிதன் மட்டுமே!




அதனால் தனது தாய்ப்பாலை அருந்த வாய்ப்பில்லாத எண்ணற்ற கன்றுகள் அனுதினமும் பாலுக்கு ஏங்கிச் செத்து மடிந்துகொண்டுள்ளன. ஆனாலும் அந்தச் செயலைப் புனிதமாகவும் அந்தப் பாலைப் புனிதமானதாகவும் மங்கலப் பொருளாகவும் பாவிக்கிறோம்.




உண்மையில் பாவம் புண்ணியம் என்று ஒன்று உலகில் இருக்குமானால் அது மாமிசம் உண்பதைக்காட்டிலும் அதிகமாகப் பாலை பலவந்தமாகக் கறந்து உண்பதில் இருக்கும் என்று சொல்லலாம்.




எக்காலத்திலும் இறைவன் சொல்ல வில்லை தனக்கு பாலால் அபிசேகம் செய்யவும் என்று. மூன்றாவது மண்டல நாடுகளில் இறைவனின் பெயரால் குடங்குடமாக பாலை வீணடிக்கிறாகள்.



அதேநேரம் அந்த இடங்களைச் சூழவுள்ள இடங்களில் எத்தனையோ ஏழைக் குழந்தைகள்குடிப்பதற்கு தூய பாலிற்கும் ,உணவிற்கும் அவதியுறுகின்றனர். அங்குதான் பகுத்தறிவு, சிந்தனை என்பன வளர்ச்சியடைய இல்லையென்றால்.




வளர்ந்த நாடுகளிலும் அதே மூடனம்பிக்கையுடன் அதேபிழைகளைத் தொடர்ந்து செய்து கொண்டே இருக்கிறார்கள். பசுவிலிருந்து பாலைத்திருடி இறைவனுக்கே இலஞ்சமா? 





நன்றிகள்.

Wednesday, 1 February 2012

விரல் சூப்புதல்,பின்விளைவுகள், தடுப்பது




விரல் சூப்புதல்? இதனால் பின்விளைவுகள் உண்டா? இதை எவ்வாறு தடுப்பது? விரல் சூப்பும் பழக்கம் சிறுவயதிலேயே கட்டுப்படுத்தாவிட்டால் திருமணத்திற்குப் பின்பும் தொடரும் அபாயம் உள்ளது.

பலர் வெளியில் சொல்லாமல் அவதிப்படுகின்றனர். விரல் சூப்புவதற்கான மூலகாரணம் குழந்தைப் பருவத்தில் பால் புகட்டும்போது ஏற்படும் தவறான முறையாகும்.

குழந்தைக்கு உதட்டின் மூலம் இன்ப உணர்வு கிடைப்பதால் ஒரு வித மயக்கநிலை ஏற்படும். அப்போது குழந்தை தூங்கிவிட்டது என நினைத்து மார்பை மூடும் போது, குழந்தை அந்த இன்பம் தொடர தன் கை விரலை சூப்புகிறது.

நாளடைவில் இந்த நிலை தொடர ஆரம்பித்துவிடுகிறது. இந்த நிலையைத் தடுக்க தாய் குழந்தையுடன் அதிக நேரம் விளையாட வேண்டும். மற்றவர்கள் முன்பு விரல் சூப்புவது தவறு என்று அறிவுரைக்க வேண்டும்.

இந்நிலை தொடர்ந்தால் உளவியல் நிபுணரிடம் தனிப்பட்ட முறையில் மனவியல் பயிற்சி எடுப்பது அவசியமாகும்.

நன்றி: தன்னம்பிக்கை