Saturday, 18 July 2015

சித்தர்கள் காட்டிய எட்டு வடிவ நடை பயிற்சி !


எளிய முறையில் பிரமிக்கத்தக்க ஆரோக்கியம் பெறும் முறை சித்தர்கள் காட்டிய சிறந்த வழிமுறை ஒருவர் தினமும் 30முதல் 60 நிமிடங்கள் நடைப்பயிற்சி மேற்கொள்வதால் ஆரோக்கியம் மேம்படும், பல்வேறு நோய்களிலிருந்து பாதுகாத்துக் கொள்ளலாம். நடைப்பயிற்சி சாதாரணமாக செய்யாமல் எட்டு வடிவத்தில் நடப்பது மிகமிகச் சிறந்ததாகும்.



பயிற்சியும் செய்முறையும்

மேற்படி படத்தில் இருப்பது போல் 6 அடி அகலம் மற்றும் 8 முதல் 12 அடி நீளம் அளவில் தரையில் எட்டு ஒன்றுவரைந்து கொள்ளவும். அதை வடக்கு தெற்கு முகமாக  வரைந்து கொள்ளவும். படத்தில் உள்ளது போல் அம்பு குறியிட்டு காட்டியது போல் பாதையில் “1″ குறியில் இருந்து ஆரம்பித்து “5″ வரை சென்று மீண்டும் “1″ வர வேண்டும். நடக்கும் பொழுது மிகவும் வேகமாகவோ அல்லது மிகவும் மெதுவாகவோ நடக்கலாகாது. மிகவும் இயல்பாக நடக்க வேண்டும்.

தினமும் காலையும் மாலையும் 15 – 30 நிமிடங்கள் நடப்பது மிகச்சிறப்பு. நடக்கவேண்டிய நேரம் காலை அல்லது மாலை மணி 5 – 6 (am or pm). வெளியே செல்ல முடியாதவர்கள், வீட்டுக்குள் நடக்கலாம். நல்லமுறையில் பயன்பெற, இந்த பயிற்சியை இடைவிடாது குறைந்தது 21 நாட்கள் செய்ய வேண்டும்.

நடைப்பயிற்சி முடியும்வரை மெளனமாக நடக்க வேண்டும்.

இப்பயிற்சியை தெற்கிலிருந்து வடக்கு நோக்கி அல்லது வடக்கிலிருந்து தெற்கு நோக்கி செய்ய வேண்டும். 15 வது நிமிட முடிவில் இருநாசித்துவாரங்களின் மூலம் உள்ளிழுக்கப்பட்ட முழு மூச்சுக்காற்றையும் உணரலாம். பின்னர் நடைப்பயிற்சியானது மேலும் 15 நிமிட நேரம் தொடர 
வேண்டும். இதற்கிடைப்பட்ட நேரத்தில் மார்புச்சளி தானாகவே வெளியே காரி உமிழ்வதாலோ அல்லது கரைந்து இறங்குவதை உணரலாம்.

பலன்கள் இந்த பயிற்சியை காலை மாலை 1 மணிநேரம் செய்து வந்தால் உள்ளங்கை விரல்கள் ரத்த ஓட்டத்தினால் சிவந்திருப்பதை உணரலாம். 70வயது 50 வயதாக குறையும். முதுமை இளமையாகும்..சர்க்கரை வியாதி குறைந்து முற்றிலும் குணமடையும். குளிர்ச்சியினால் ஏற்படும் தலைவலி, மலச்சிக்கல் தீரும். முழுமையாக சுவாசிக்கப்படும் மூச்சுக்காற்றால் 5 கிலோ பிராண வாயு உள்ளே சென்று மார்புச்சளி நீக்கப்படுகிறது. இரண்டு நாசிகளும் முழுமையாக சுவாசிப்பதால் நாசியில் உண்டாகும் சளியிலிருந்து நிவாரணம் கிடைக்கிறது.

கண்பார்வை அதிகரிக்கும், ஆரம்பநிலை கண்ணாடி அணிவது தவிர்க்கப்படுகிறது. மற்றவர்களுக்கு மூக்குக்கண்ணாடியின் புள்ளி(Point) அதிகமாகாமல் பாதுகாக்கப்படுகிறது. செவிகளின் கேட்கும் திறன் அதிகரிக்கிறது. உடலினுள் அதிகப்படியான 5 கிலோ பிராண வாயுவால் உடல் சக்தி பெறுகிறது. காலையிலும் மாலையிலும் 1 மணிநேரம் இந்த பயிற்சியை
செய்து வந்தால் (ஹெர்னியா) குடலிறக்கநோய் குணமாகும். அளவான நடைப்பயிற்சியால் இரத்த அழுத்தம் குறைக்கப்படுகிறது.

இரண்டுவேளை 30 நிமிடம் செய்தால், பாத வெடிப்பு, வலி, மூட்டு வலிகள் மறைந்து விடுகின்றன. முதியோரும், நடக்க இயலாதோறும், பிறர் உதவியுடன் சக்கர வண்டியின் மூலம் செய்து பயன் அடையலாம். தினமும் ‘எட்டு’ நடைப்பயிற்சி செய்வதால் நாம் ஆரோக்கியமாக வாழ முடியும். உடல் பருமன், இரத்த அழுத்தம், இதய நோய், சுவாசகாசம் (Asthma), கண் நோய்கள், மூக்கடைப்பு, தூக்கமின்மை, மூட்டுவலி, முதுகுவலி, மன இறுக்கம், போன்ற
கொடிய நோய்கள்கூட மெல்ல மெல்ல பூரணமாக குணமாகி விடுகின்றன. நல்ல முறையில் பயன்பெற, இந்த பயிற்சியை இடைவிடாது குறைந்தது 21 நாட்கள் செய்ய வேண்டும். வாழ்க வளமுடனும் நலமுடனும்.

                                                                                                                                              நன்றிகள்.

Wednesday, 15 July 2015

கப்பற்படையே வைத்து உலகையே ஆட்டம் காண வைத்த பேரரசு, சோழப்பேரரசு!.

கப்பலோட்டி உலகை வென்ற இராசராச சோழனின் கப்பற்படைப் பற்றிய அரிய தகவல்கள்!


இராசராச சோழன் என்றாலே காலாற்படை முதல் யானை படை வரை நடுநடுங்கிப் போகும். வானுயர் வெற்றிகளை முடிசூடிய மாமன்னன் என்றால் சாதாரணமா என்ன! பண்டையக் காலத்திலேயே கப்பற்படை வைத்து உலகை ஆட்டம் காண வைத்த பேரரசு, சோழப்பேரரசு!

ஆயிரம் வருடம் ஒரு வருடம், இரண்டு வருடம் அல்ல, ஆயிரம் வருடங்களாக கப்பற்படையை வைத்து அரசு நடத்தியப் பெருமை உலகிலேயே சோழ பேரரசிற்கு மட்டும் தான் இருக்கிறது.

"கனம்"

இந்த கப்பற்படையில் நிறைய போர் வீரர்களை கொண்ட குழு ஒன்று பிரிக்கப்பட்டிருக்கும், அவர்களை "கனம்" என்று குறிப்பிட்டிருக்கிறார்கள். அவர்களை தலைமை தாங்கி இருந்தவரை, "கனாதிபதி" என்று அழைக்கப்பட்டிருக்கிறார்.

"கன்னி"

தமிழில் "கன்னி" என்பதற்கு இளம் மங்கை என்று மட்டும் பொருள் அல்ல, "பொறி" என்ற மற்றொரு பொருளும் இருக்கின்றது. எதிரிகளை பொறி வைத்துப் பிடிக்கும் கப்பற்படை வீரர்களை, "கன்னி" என்று அழைத்திருக்கின்றனர். இவர்கள் தான் சிறப்பு பணியில் நியமிக்கப்படுவார்கள் என்பது குறிப்பிடத்தக்கது. இவர்களை நிர்வாகிப்பவர், "கலபதி" என்று அழைக்கப்படுவார்.

"ஜதளம்" அல்லது "தளம்"

கப்பற்படையில் சக்தி வாய்ந்த குழுவாக திகழ்பவர்களை, ஜதளம் என்பார்கள். சுருக்கமாக இவர்களை "தளம் என்றும் குறிப்பிடுகிறார்கள். இவர்களை நிர்வகிப்பவர், "ஜலதலதிபதி" என்னும் நபர் ஆவார்.

"மண்டலம்"

கப்பற்படையின் பாதி நிரந்திர போர் குழுவை, மண்டலம் என்று குறிப்பிடுகிறார்கள். இவர்களை தலைமை வகிக்க மண்டலாதிபதி என்பவர் நியமிக்கப்பட்டிருப்பார். இந்த பிரிவிடம் 40 முதல் 50 கப்பல்கள் வரை இருக்கும். இவர்கள் தனி, தனியாகவும், குழுவாகவும் சென்று போர் புரிவதில் வல்லமைப் பெற்றவர்கள்.

நிரந்திர போர் பிரிவு நாம் முன்பு குறிப்பிட்டிருந்த, "கனம்" பிரிவை சேர்ந்தவர்கள் தான் நிரந்திர போர் பிரிவை சேர்ந்தவர்கள். இவர்களிடம் 100 இருந்து 150 கப்பல்கள் வரை இருக்கும். மூன்று "மண்டலம்" குழுவை உள்ளடக்கி இருக்கும் குழுவானது "கனம்" என்று கூறப்படுகிறது.

"அணி"

பெரிய போர்களில் ஈடுபட மட்டுமே உபயோகப்படுத்தப்படும் குழுவை "அணி" என்று கூறுகின்றனர். ஒரு அணியில் மூன்று "கனம்" குழு உள்ளடங்கி இருக்கும். 300-500 கப்பல்கள் வரை இந்த குழுவில் இருக்கும். மாபெரும் அணியான இதை தலைமை தாங்குபவர், "அணிபதி" என்று அழைக்கப்படுவர்.

"அதிபதி" 

இதெல்லாம் போக இந்த அனைத்து குழுக்களையும் தலைமை தாங்கும் நபர் தான் "அதிபதி". இவரின் கட்டளைகளுக்கு இணங்க அனைத்து குழுக்களும் இயங்கும். இவர் இளவரசருக்கு கீழ் இருப்பவர்.

கைப்பற்றிய பகுதிகள்

இந்த மாபெரும் கப்பற்படையை வைத்து தான், இந்தோனேசியா, யா(ஜா)வா, மாலத்தீவு, சிங்கப்பூர், இலங்கை, ஆங்கோர், கடாரம் போன்ற பல பகுதிகளை வென்றுள்ளது சோழப் பேரரசு.

"நாவாய்" பண்டைய தமிழர்களின் "நாவாய்" என்ற கப்பற்படையின் பெயர் தான் ஆங்கிலத்தில் "நேவி" (Navy) என்று அழைக்கப்படுகிறது.
                                                                                                                                            நன்றிகள்.

Thursday, 28 May 2015

பௌதீகத்திலும் புவியியலிலும் தமிழன் அறிவு மிக்கவனாக.............!.

சங்க இலக்கிய அறிவியலில் சூரியனும் விமானமும் ..! 

சங்க இலக்கியமான புறநானூற்றிலே உறையூர் முதுகண்ணன் என்னும் புலவர் இன்றைய விஞ்ஞான உலகம் ஆச்சரியப்படும் வகையில் ஒரு குறிப்பைச் சொல்கிறார்.

சூரியன் ஒரு பாதையில் நகர்ந்து கொண்டிருக்கின்றது. அது இவ்வளவு கால எல்லையில் இந்தளவு தூரத்தைக் கடக்கும். அதனால் அதன் வேகத்தைக் கணிக்கக் கூடிதாக இருக்கின்றது. அது செல்லும் வான மண்டலத்தில் ஒரு எல்லை வரை காற்றின் திசை இப்படி இருக்கும். ஈர்ப்புச் சக்தியும் அங்கு உண்டு. அதற்கு மேலே காற்றே இல்லாத அண்ட வெளியும் இருக்கின்றது. அதிலே ஈர்ப்பு விசையும் இல்லை. இதையெல்லாம் நேரே போய்ப் பார்த்து ஆராய்ந்து அறிந்து வந்த வானியல் அறிஞர்களும் நம்மிடையே இருக்கிறார்கள்.

செஞ் ஞாயிற்றுச் செலவும்
அஞ் ஞாயிற்றுப் பரிப்பும்
பரிப்புச் சூழ்ந்த மண்டிலமும்
வளி திரிதரு திசையும்
வறிது நிலைஇய காயமும்
என்றிவை
சென்று அளந்து அறிந்தார் போல
என்றும் இனைத்து என்போரும் உளரே

இது உண்மையானால் அந்தத் தமிழர்கள் எதிலே சூரியனை ஆய்வு செய்யப்போனார்கள். நாசா கூட இன்றும் நெருங்க அஞ்சும் சூரியக் கிரகத்தை போய்ப் பார்த்தோம் என்று ஏட்டிலே குறித்து வைத்தால் மட்டும் போதுமா? என்ற கேள்வி எழுகின்றது. அதற்கும் புறநானூறு விடை சொல்கின்றது.

இன்றைய விஞ்ஞானிகள் விண்கலங்களில் தானே விண்வெளியை ஆய்வு செய்கிறார்கள் அந்த விண்கலங்கள் எங்களிடம் அன்றே இருந்தன என்கிறது புறநானூறு. அதிலும் சில விமானிகள் இருந்து செலத்தாமல் தாமே புறக்கட்டளைகளை ஏற்று இயங்கும் தானியங்கி விண்கலங்கள் என்கின்றனர்.

புலவர் பாடும் புகழுடையோர் விசும்பில்
வலவன் ஏவா வான ஊர்தி எய்துப

இதன் பொருளைப் பாருங்கள்! விசும்பு என்றால் ஆகாயம்; வலவன் என்றால் சாரதி; ஏவாத என்றால் இயக்காத; வானவூர்தி என்றால் விமானம். விண்ணிலே விமானி இருந்து இயக்காத விமானம் என்பது தானே கருத்து. இப்படி ஒரு விமானம் இருந்ததா இல்லையா என்பது வேறு விடயம். இப்படி ஒரு சிந்தனை விமானப் பறப்புக்கு அடித்தளம் இட்ட ரைட் சகோதராகள் பிறப்பதற்கு முன்பே புறநானூற்றில் இடம்பெற்று விட்டது என்பது தான் நாம் எண்ணிப்பார்க்க வேண்டியதொன்றாகும். விமானி இல்லாத விமானங்கள் என்று பிரித்துக் காட்டியதால் அதற்கு முதலே விமானிகள் செலுத்தும் விமானங்கள் இருந்திருக்க வேண்டும். 


"எதிரிகளால் நாடு சூழப்பட்ட போது அன்னப் பறவை போன்ற விமானத்தில் ஏறிப் பலகனியில் இருந்து தப்ப வைக்கப்பட்ட கர்ப்பிணியான அரசி விமானம் விபத்துக்கு உள்ளாகிக் காட்டிலே விழுந்த போது தான் சீவக வழுதியைப் பெற்றெடுத்தாள்" என்று திருத்தக்க தேவரின் "சீவக சிந்தாமணி" சொல்கிறது. பலகணியில் இருந்து புறப்பட்டதால் உலங்குவானூர்தியாக (Heli) இருக்குமா என்ற கேள்விக்கும் இடம் இருக்கிறது.

கம்பராமாயணத்திலே ஒரு செய்தியைப் பாருங்கள். இராவணன் விமானத்திலே சீதையைக் கவர்ந்து போய்விட்டான். இது புளித்துப் போன செய்தி! இராமரும் தம்பியும் தேடிப் போகிறார்கள். இராவணனின் விமானச் சக்கரங்கள் மண்ணிலே உருண்டு சென்ற அடையாளங்கள் தெளிவாகத் தெரிகிறது. அதைப் பின்பற்றிச் செல்கிறார்கள். ஆனால் போகப் போக தெளிவாகத் தெரிந்த சக்கரச் சுவடுகள் தெளிவில்லாமல் ஆகி விடுகின்றன. மண்ணிலே பட்டும் படாமலும் தெரிகின்றன. ஒருகட்டத்துக்கு மேல் விமானத்தின் சுவடுகளே இல்லை. ஆம்! விமானம் ஓடுபாதையில் ஓடி வானத்தில் எழுந்து போய்விட்டது.

மண்ணின் மேல்அவன் தேர்சென்ற சுவடு எல்லாம் ஆய்ந்து
விண்ணில் ஓங்கிய ஒருநிலை மெய்யுற வெந்த
புண்ணில் ஊடுஒரு வெல்என மனம்மிகப் புழுங்கி
எண்ணி நாம்இனிச் செய்வது என்ன இளவலே என்றான்.

விமானங்கள் ஓடுபாதையில் ஓடி வேகம் எடுத்து புவியீற்பை முறித்த பின்தான் மேலே எழ முடியும் என்ற விஞ்ஞான விளக்கம் சோழர் காலத்துக் கவிஞனான கம்பனுக்கு எப்படித் தெரிந்து இருந்தது. விமானப் பறப்பை நேரில் கண்டானா? இல்லை அது தொடர்பான ஏடுகள் அந்த அறிவை வழங்கினவா? தாடியும் சடாமுடியும் கொண்டதாகச் சித்தரிக்கப்படும் சங்கப் புலவர் கூட்டத்தில் விமானங்களை வடிவமைக்கும் திறன் தெரிந்த பொறியியலாளரும் இருந்தார்களா என்பதெல்லாம் ஆய்வுக்கு உரிய விடயங்கள்.

இப்படியான வானியல் அறிவுக்கு கணக்கிலும் பௌதீகத்திலும் புவியியலிலும் தமிழன் அறிவு மிக்கவனாக இருந்திருக்க வேண்டும் என்பது உண்மைதான்!

நன்றிகள்.

Saturday, 23 May 2015

விவசாயிகள் அதிகமாக பயன்படுத்திய சேமிப்புக் கலன்கள்தான்...........!

குதிர்', 'தொம்பை', 'பத்தாயம்', 'குலுமை'...

இதெல்லாம் என்னவென்று யோசிக்கிறீர்களா? ஒரு காலத்தில் நம் விவசாயிகள் அதிகமாக பயன்படுத்திய சேமிப்புக் கலன்கள்தான்! தந்திரக்கார வியாபார உலகம், நம்மிடம் இருந்து பறித்தெடுத்த எத்தனையோ நல்ல விசயங்களில் இவையும் அடக்கம்! நம்முடைய பணத்துக்கு மட்டுமல்ல... சூழலுக்கும் வேட்டு வைக்காத இதுபோன்ற பொருட்களெல்லாம் நம்மைவிட்டு அகன்றதோடு, அவற்றின் பெயர்கள்கூட புழக்கத்தில் இருந்து மறைந்து கொண்டிருக்கின்றன!

இந்தச் சூழலில்... பாரம்பர்யத்தை மறக்காமல், இப்படிப்பட்ட சேமிப்புக் கலன்களை ஆங்காங்கே ஓரிருவர் பராமரித்துப் பயன்படுத்திக் கொண்டும் இருப்பது ஆறுதலான விசயம். அவர்களில் ஒருவர்... தஞ்சாவூர் மாவட்டம், நாஞ்சிக்கோட்டையைச் சேர்ந்த நீலாவதி.

''ஒரு காலத்துல வீட்டுக்கு வீடு குதிர், அடுக்குப் பானையெல்லாம் கட்டாயம் இருக்கும். அடுக்குப் பானையிலதான், உப்பு, புளி, மிளகாய் போட்டு வெச்சுருப்போம். அது விதைகளைக்கூட சேமிச்சு வைக்கலாம். உப்பைப் போட்டு முட்டைகளை வெச்சா... கெட்டுப் போகாது. அப்படியே குளுகுளுனு இருக்கும். இப்பவெல்லாம் துருப்பிடிக்காத எஃகு பொருட்கள் வந்த பின்னாடி, அடுக்குப் பானையெல்லாம் போயே போச்சு.



அறுவடை பண்ணிட்டு வரும் நெல், தானியங்களைக் கொட்டி வைக்கிறதுக்கு குதிர் இருக்கும். ஒவ்வொண்ணும் பத்து, பன்ணெண்டு அடி உயரம் வரைகூட இருக்கும். வரகு வைக்கோல்ல களிமண்ணைச் சேர்த்து, ஊறவெச்சு குதிர் செய்வாங்க. அதுமேல சாணிப்பால் போட்டு மெழுகிடுவாங்க. அதுக்குள்ள தானியங்களைக் கொட்டி வெச்சா... வருசக் கணக்கா கிடக்கும். கூடவே வேப்பிலை, நொச்சியிலை இதையெயெல்லாம் போட்டு வெச்சுட்டோம்னா... பூச்சி, பொட்டு அண்டாது. அப்படித்தான் இந்த குதிர பராமரிச்சு பயன்படுத்திக்கிட்டிருக்கேன் பல வருசமா!

வீட்டுத் தேவைக்குதான் குதிர். பெரிய அளவுல அம்பது, அறுபது மூட்டைனு சேமிக்கணும்னா... பத்தாயம் கட்டி வெச்சுருப்பாங்க. மாம்பலகை மாதிரியான பலகைங்கள வெச்சு தயார் பண்ணியிருப்பாங்க. ஒவ்வொரு விவசாயி வீட்டுலயும் ஒண்ணு, ரெண்டு பத்தாயம் கண்டிப்பா இருக்கும். அறுவடை முடிஞ்சதும் அதுல நெல்லைக் கொட்டி வெப்பாங்க. வருசக் கணக்குல கிடக்கும். தேவைப்பட்டப்ப எடுத்துப் பயன்படுத்துவாங்க. இப்ப இதெல்லாம் கண்ணுல சிக்குறதேயில்லை'' என்று ஆதங்கப்பட்டார். 

திருவாரூர் மாவட்டம், கட்டிமேடு சே(ஜெ)யராமன், இப்போதும்கூட பாரம்பர்ய முறைப்படி விதைகளைச் சேமித்து வருபவர்களில் ஒருவர்.


''அறுவடை செய்யுறப்பவே விதைக்காகனு கொஞ்சம் கதிரை முத்த விடுவோம். அதை அறுத்து வெயில்ல காயவெச்சு, வைக்கோலுக்குள்ள சுத்தி, அதுக்குமேல சாணியைப் போட்டு மெழுகி பத்திரப்படுத்தி வெப்போம். இதுக்கு பேரு கோட்டை. அமாவாசை, இல்லனா... சிவராத்திரி அன்னிக்கு விதைநெல்லைக் காய வெச்சு, மறுநாள்தான் இப்படி கோட்டை கட்டுறது பழக்கம். இப்படிச் செய்யுறதால நெல்லோட முளைப்புத் திறன் அதிகமாகும். ஒரு வருசம் வரைக்கும் விதைநெல்லுக்கு வீரியம் குறையாது. இதுவே... 

பெரிய அளவுல விதைநெல் சேமிக்கணும்னா... அதுக்கு சேர் கட்டி வைக்கிறதுனு இன்னொரு முறையும் இருந்துச்சு. வீரிய விதை, அது, இதுனு வந்த பிறகு, காசு கொடுத்து சிறுகட்டு சிறுகட்டாக (packet) வாங்க ஆரம்பிச்சாங்க. கோட்டையைக் கோட்டை விட்டுட்டாங்க'' என்று உதட்டைப் பிதுக்கினார்.

பாரம்பர்ய வேளாண்மை முறைகள், சேமிப்பு முறைகள் பற்றி ஆய்வு செய்து வருகிறார் திண்டுக்கல் அருகேயுள்ள காந்திகிராம் பல்கலைக்கழக வேளாண்மைப் புல இணைப் பேராசிரியர் சுந்தரமாரி. அவரிடம் பழங்கால சேமிப்பு முறைகள் பற்றிக் கேட்டபோது, ரொம்பவே சுவாரசியமாகிவிட்டார்.

''விதைக்காக சேமிக்கற தானியங்கள மணல் இல்லனா... சாம்பல் கலந்து வெக்கலாம். துவரையை செம்மண்ணோடு கலந்து வைப்பாங்க. பெரும்பாலும் அடுக்குப் பானையை அடுப்புக்கு மேலதான் தொங்க விட்டிருப்பாங்க. அடுப்புல வர்ற புகையே, பூச்சிவிரட்டியா பயன்படும். தரையில வட்டமாவோ, சதுரமாவோ குழியெடுத்து அதுல தானியங்களைக் கொட்டி, சாக்கு போட்டு, கல்லால் மூடி வெச்சு சேமிக்கிற பழக்கமும் இருந்திருக்கு.

இப்படி ஒண்ணொண்ணுக்கும், ஓரோரு யுக்தியைக் கண்டுபிடிச்சு பயன்படுத்தியிருக்காங்க நம்ம முன்னோருங்க. ஒவ்வொரு பகுதியிலயும் ஒவ்வொரு மாதிரியான சேமிப்புக் கலன்களையும் பயன்படுத்தியிருக்காங்க. ஆனா, அதுமாதிரியான சேமிப்புக் கலன்களையெல்லாம் வடிவமைக்கிறதுக்கு கூட இன்னிக்கு ஆளேயில்ல.

பெரும்பாலான விசயங்கள் கையை விட்டுப் போயிடுச்சு. மிச்ச சொச்சமிருக்கற விசயங்களும் போயிக்கிட்டே இருக்கு. இப்ப ஓரளவு விழிப்பு உணர்வு ஏற்பட்டிருக்கறதால... பழைய முறைகளையெல்லாம் கடைபிடிங்கனு விவசாயிகளுக்கு எடுத்துச் சொல்லிக்கிட்டிருக்கோம்'' என்றவர்,

''பார்ப்போம்... காலம்தானே எல்லாத்தையும் தீர்மானிக்கணும்!'' என்று எதிர்பார்ப்போடு முடித்தார்.
நன்றிகள்.

Monday, 11 May 2015

இரு குச்சிகளைக் கொண்டு அடித்து எழுப்பபடும் ஓசைக்கு.......!.

துக்க வீடுகளில் ஏன் பறை அடிக்கப்படுகிறது?
துக்க வீடுகளில் பறை அடிப்பதன் அவசியம் என்ன?


சுமார் பலநூறு ஆண்டுகளுக்கு முன்பு, நம் நாட்டில் (பொதுவாக உலகில்) மருத்துவர்களும், மருத்துவ வசதிகளும் மிகக் குறைவு தான். பேச்சு மூச்சில்லாமல் ஒருவர் சும்மா கிடந்தால் அவர் இறந்து விட்டார் என்ற முடிவுக்கு வருவது மிகவும் சிரமமான காரியமாய் இருந்தது. இப்பிரச்சனையை போக்க சிலர் கண்டுபிடித்தது தான் பறை.

அப்படினா அதுக்கு மருத்துவ குணங்கள் இருக்கானெல்லாம் நீங்க கேட்கக் கூடாது.

பறையோசை என சொல்லப்படும், பறையிலிருந்து வரும் ஓசைக்கு அசைவு கொடுக்காத மனிதர்களே கிடையாதாம். அதிலிருந்து வரும் சத்தத்தைக் கேட்டவுடன் நாடி, நரம்புகள் அனைத்தும் துள்ளி குதித்துக் கொண்டு ஒரு வித அதிர்வினைக் கொடுக்குமாம்.


யார் ஒருவர் பறை சத்தத்திற்க்கும் ஆடாமல் அசையாமல் பிணம் போல் இருக்கிறாரோ, அவர் உயிர் இறந்து விட்டார் என்ற முடிவிற்கு வந்தார்களாம் நம் முன்னோர்கள். இரு குச்சிகளைக் கொண்டு அடித்து எழுப்பபடும் ஓசைக்கு அப்பேர்பட்ட சக்தி இருக்கிறதாம்.
நன்றிகள்.

Wednesday, 29 April 2015

பதினாறும் பெற்று வாழ்ந்தாலே பெருவாழ்வு வாழ முடியும் என..........!.

பதினாறும் பெற்று பெருவாழ்வு வாழ்க என்று பெரியோர் வாழ்த்துகின்றனரே. அந்தப் பதினாறு எவை எவை என்று தெரிந்து கொண்டால் நலமாயிருக்கும் அல்லவா?


அதன் விளக்கம் பின்வருமாறு:-

1.கலையாத கல்வி (வெற்றிக்கு வழிகாட்டக் கூடிய கல்வி)
2.குறையாத வயது (நீண்ட ஆயுள்)
3.கபடு வராத நட்பு (நம்பிக்கையான நல்ல நண்பர்கள்)
4.குன்றாத வளமை (வளமான வாழ்க்கைக்குத் தேவையான பொருள்)
5.குன்றாத இளமை (உழைப்புக்குத் தளராத உடல் வலிமை)
6.கழுபிணி இல்லா உடல் (நோயற்ற வாழ்க்கை)
7.சலியாத மனம் (கலங்காத மனத்திண்மை)
8.அன்பகலாத மனைவி (மாறாத அன்பைச் செலுத்தும் மனைவி)
9.தவறாத சந்தானம் (அறிவு, ஆற்றல், ஒழுக்கம், ஆயுள் இவற்றில் தவறி விடாத குழந்தைகள்)
10.தாழாத கீர்த்தி (மென்மேலும் வளரக்கூடிய பொருளும் புகழும்)
11.மாறாத வார்த்தை (வாய்மை)
12.தடைகள் வராத கொடை (இல்லையென்று சொல்லாத உதவி)
13.தொலையாத நிதியம் (சிக்கனம், சேமிப்பு பழக்கம்)
14.கோணாத கோல் (நேர்மையும் திறமையும் கொண்ட குடும்ப நிர்வாகம்)
15.உதவி பெரிய தொண்டரோடு கூட்டு (பெருமக்கள் தொடர்பு)
16.துய்ய நின்பாதத்தில் அன்பு (இறை நம்பிக்கை)

இந்த பதினாறும் பெற்று வாழ்ந்தாலே பெருவாழ்வு வாழ முடியும் என்று நம் முன்னோர்கள் கூறினர்.
நன்றிகள்.

Saturday, 25 April 2015

தமிழன் கண்டுபிடிப்பான திருகை...........

நம்ம தலைமுறை தொலைத்த தமிழன் கண்டுபிடிப்பான திருகையின் அனுபவம் உண்டா உங்களுக்கு.!

திருகை என்பது பயறு, உழுந்து போன்ற தானியங்களை உடைத்துப் பருப்பு ஆக்குவதற்காக உள்ள சாதனமாகும். இது பொதுவாகக் கருங்கல்லினால் செய்யப்படுகின்றது. திருகையில் இரண்டு பகுதிகள் உண்டு.

ஒன்று நிலையாக இருக்கும் கீழ்ப்பகுதி. இது கிடைத் தளத்தில் வட்ட வடிவம் கொண்டது. திருகையின் அளவுக்குத் தக்கபடி உயரம் உள்ளதாயிருக்கும். ஒரு குட்டையான உருளை வடிவம் எனலாம்.

கிராமபுறங்களில் பல பேர் வீட்டில் மதிய நிசப்தத்தை கெடுக்கும் இந்த அரைவைக்கல்லில் நடுவில், வெயிலில் காய வைத்த அரிசியை போட்டு சுத்தினால் கர கர கர சத்தத்தை ஏற்ப்படுத்தி மாவை கொடுக்கும்.

சமாச்சாரம் இது...இதை அரைக்கின்றார்கள் என்றால் வீட்டுக்கு வெளியே கூட இதன் சத்தம் கேட்கும்... இந்த சத்தம் கேட்டு வெகுநாள் ஆகி விட்டது...

இதன் மேற்பகுதியின் மையத்தில் நிலைக்குத்தாகப் பொருத்தப்பட்ட ஒரு தண்டு காணப்படும். இத்தண்டு பெரும்பாலும் இரும்பினால் செய்யப் பட்டிருக்கும்.


மற்றப் பகுதியான மேற்பகுதியும் வட்டவடிவமாகக் கீழ்ப்பகுதி போலவே இருந்தாலும், இதன் நடுப்பகுதியில் ஒரு துளை அமைந்திருக்கும் இது துளையின் அளவு, திருகையின் கீழ்ப் பாகத்தில் பொருத்திய தண்டின் விட்டத்திலும் சற்றுப் பெரிதாக இருக்கும்.

இத் துளையினூடாகக் கீழ்ப் பாகத்தின் தண்டைச் செலுத்தி இரண்டு பாகங்களையும் ஒன்றன்மீது ஒன்று வைக்கக்கூடியதாக இருக்கும். கீழ்ப் பகுதியின் தண்டைச் சுழலிடமாகக் கொண்டு மேற்பகுதியைச் சுற்றுவதற்கு வசதியாக மேற்பாகத்தின் விளிம்புக்கு அருகில் இன்னொரு தண்டு பொருத்தப்பட்டிருக்கும்.

சுற்றுவதற்கான கைபிடியாக இது பயன்படும். திருகையின் மேற்பாகத்தில் அமைந்த முன் குறிப்பிட்ட துளை மேல் அகன்றும் கீழே ஒடுங்கியும் புனல் வடிவில் அமைந்திருக்கும். திருகையின் கீழ்ப்பகுதியும் மேற்பகுதியும் ஒன்றன் மீது ஒன்று அடுக்கிய நிலையில், மேற்பகுதியின் துளைக்குள் உடைக்க வேண்டிய தானியத்தைப் போட்டுக் கைப்பிடியினால் மேற்பகுதியைச் சுழற்றுவார்கள்.

தானியம் சிறிது சிறிதாக இரண்டு கற்களுக்கும் இடையே சென்று உடைக்கப்பட்டு வெளி விளிம்பினூடாக வெளியேறும். இவ்வாறு வெளியேறும் உடைந்த தானியம் (பருப்பு) சேகரிக்கப்படும்.
நன்றிகள்.

Friday, 24 April 2015

பெண் என்றும் அடிமையில்லை. அவளை யாரும் அடக்கவுமில்லை..........!.

இறைவன், உலகின் மதிப்பு மிக்க, கிடைக்கப் பெறாத மற்றும் 
அபூர்வப் பொருள்கள் எல்லாவற்றையும் மறைத்தே வைத்து உள்ளான். அவைகள் கடினமானவைகள். மிகுந்த சிரமத்திற்கு பிறகே அவைகள் கிடைக்கப் பெறும்.


1. "வைரம்" ஆழமான நிலத்தின் கீழே மூடப்பட்டு, பாதுகாக்கப் படுவதால் அதன் மதிப்பு அதிகம்.

2. "தங்கம்" பாறை அடுக்குகளால் மூடப்பட்ட நிலையில் உள்ளது. தங்கத்தினை பெற கடினமாக உழைக்க வேண்டும்.

3. "முத்து" ஆழ்கடலில் மறைக்கப்பட்டு, அழகான சிப்பிக்குள் பாதுகாக்கப்படுவதால் அதன் மதிப்பும் உயர்வாகின்றது.

அது போலத் தான் !!!! பெண்களும்.....!!!!

இயற்கை அமைப்பிலே பெண்கள் மிக மென்மையானவர்கள். தோற்றத்தின் மென்மையைப் போலவே, உள்ளமும் மென்மை வய்ந்தது. அவர்கள் இதயம் மலரினும் மென்மை உடையது. அன்பு, ஆதரிப்பு, பராமரிப்பு இவையே பெண்ணுக்குரிய வேலைகளாக உள்ளன. இவற்றில் அவள் பெற்ற திறமையை வாழ்க்கையின் ஒவ்வொரு அம்சத்திலும் காணலாம். பெண்ணின் மனமும் செயலும், மலரும் மணமும் போலப் பிரிக்க முடியாதபடி ஒன்றாகிவிட்டன.

பெண்களிடம் தாய்மை உணர்ச்சி உண்டு. அந்தச் செயலால் ஆண்கள் வளர்கிறார்கள். அடுத்தாற் போல் இங்கிதம். இங்கிதம் என்பது பெண்களுடன் கூடப்பிறந்த பொக்கிசமாகும். அவர்களின் உள்ளத்திலே இங்கிதம், பேச்சிலே இனிமை, நடையிலே நளினம், தோற்றத்திலே அழகு - இவை அத்தனையும் பெண்களிடம் உள்ள கலைச் செல்வங்கள்.

இப்படியொரு அற்புதமான படைப்பை ஆணுக்குத் துணையாகப் படைத்தானே அந்த ஏக இறைவனுக்கு வாழ்நாள் முழுக்க ஆண்வர்க்கம் நன்றி சொன்னாலும் போதாது. பெண் என்றும் அடிமையில்லை. அவளை யாரும் அடக்கவுமில்லை. அவளே அடங்கி வாழ்ந்தாள்.

''மானிட வரலாற்றின் பின்னால் ஒரு பெண் இருப்பது உண்மை… அது அம்மாவாக, மனைவியாக, சகோதரியாக ....இன்னும் இன்னும் நீளும் பட்டியல்கள்...
நன்றிகள்.

Wednesday, 22 April 2015

பொட்டு வைக்கும் பெண்களை அவ்வளவு சீக்கிரம்..........!.

பெண்கள் அணியும் ஆபரணங்களின் பயன்கள்..!
பொட்டு வைக்கும் பெண்களை அவ்வளவு சீக்கிரம் வசியம் செய்ய முடியாது....
மூளையின் செயல் திறன்அதிகரிக்கும்.கண்பார்வை திறன் கூடும் .
நெற்றிச்சுட்டி அணியும் போது தலைவலி ,மூக்கடைப்பு (Sinus) பிரச்சனை சரி செய்கிறது.

பாலுறுப்புகளை தூண்டும் புள்ளிகள் மோதிர விரலில் உள்ளது.. ப்ரேசிலட், கைக்கடிகாரம், காப்பு அணிவதும் பாலுறுப்பின் புள்ளிகளை தூண்டும்.

கழுத்து சங்கிலி , கழுத்தணி (Necklace) : கழுத்தில் செயின் அணியும் போது உடலுக்கும் தலைக்கும் இடையே உள்ள சக்தி ஓட்டம் சீராகும்.


கையின் பூஜை பகுதியில் இறுக்கமான அணிகலன்கள் அல்லது கயிறுகள் அணியும் பொது உடலில் ரத்த ஓட்டம் சீராகி பதற்றம்படபடப்பு ,பயம் குறைகிறது .மார்பக புற்று நோய் வருவது தவிர்க்க படுவதாக ஆய்விலே உருதிபடுதப்படிருக்கிறது.

பெண்களுக்கு மார்பக புற்று நோய் வருவது இல்லை.கரணம் மணிக்கட்டில் இருந்து முழங்கைக்கு மேல்வரை நெருக்கமாக வளையல்களை அணிவதால் மார்பு பகுதியின் ரத்த ஓடம் சீராக வைத்திருக்க உதவுகிறது.

வளையல்கள் அந்த பகுதியின் புள்ளிகளை அழுத்துவதன் மூலம் வெள்ளையணு உற்பத்தி உடலில் அதிகரிக்கிறது.முக்கியமான ஊக்கிகள் (Hormones) சுரப்பும் ஒழுங்குமுறை செய்யபடுகிறது. இதன் மூலம் தாய்க்கும் சேய்க்கும் நோய் எதிர்ப்பாற்றல் கூடும்.

ஒட்டியாணம் அணியும் போது இடுப்பு பகுதியின் சக்தி ஓட்டம் நன்றாக தூண்டப்பட்டு ஆரோக்கியம் கூடும்.வயிற்று பகுதிகள் வலுவடையும்.

மூக்கில் இருக்கும் சில புள்ளிகளுக்கும் பெருங்குடல் மற்றும் சிறுகுடலுக்கும் நெருக்கமான தொடர்னு உண்டு.அந்த புள்ளிகள் தூண்டப்படும் பொது அது சமந்தமான நோய்கள் குணமாகும் .மூக்குத்தி அணியும் பெண்கள் சில நாட்களில் விட்டு சிக்கல் சரியாகி வருவதை உணரலாம் .

கல்லீரல், மண்ணீரல், பித்தப்பை, சிறுநீரகம், சிறுநீர்ப்பை, வயிறு போன்ற மிக முக்கிய உறுப்புகளின் செயல் திறனை தூண்டிவிடும் அற்புதமான அணிகலன் கொலுசு. கர்பப்பை இறக்க பிரச்சனையை தடிமனான கொலுசு அணிவதன் மூலம்தீர்க்கலாம் .

மெட்டி அணிவது கர்ப்பப்பையை பலப்படுத்தும். பாலியல்  ஊக்கிகளைத் தூண்டும். பில்லாலி என்பது குழந்தை பிறந்தவுடன் 3வது விரலில் அணியும்போது சில புள்ளிகள் தூண்டப்பட்டு பால் சுரப்பை அதிகப்படுத்தும்.
நன்றிகள்.

Monday, 20 April 2015

கணவன் உண்ட அதே இலையில் மனைவி உண்டால் ஆணாதிக்கமா............?

கணவன் உண்ட அதே இலையிலோ அல்லது தட்டிலோ மனைவி உண்ண காரணம்!!

கணவனுக்கு பரிமாறப்பட்ட உணவை கணவன் உண்ணும்போது எல்லாவற்றையும் உண்ண மாட்டான், அவனுக்கு சில உணவுகள் பிடிக்கும் சில உணவுகள் பிடிக்காமல் இருக்கும் அப்படி பிடிக்காமல் இருக்கும் உணவை அவன் அப்படியே மிச்சம் வைத்து விடுவான்,


அவனுக்கு பின் அதே இலையில் அல்லது தட்டில் உணவு உண்ணும் மனைவி மார்கள் கணவன் மிச்சம் வைத்த அவனுக்கு பிடிக்காத உணவு வகைகளை எளிதாக அடையாளம் கண்டு மறுமுறை சமைக்கும் பொழுது அந்தந்த உணவுகளை சமைக்காமல் தவிர்த்து விடலாம்,பிடித்ததை அடுத்த முறை நிறைய பரிமாறலாம், அதற்காக ஏற்படுத்தப் பட்டதே இந்த பழக்கம் ஆகும்.

கணவனில் எச்சிலில் இருக்கும் புதிய மரபணுக்கள் சாப்பாட்டின் மூலம் மனைவியின் உடலில் கலந்து அது அவள் பாலூட்டும் குழந்தைக்கு கிடைக்கவே (ஜீன் அப்டேசன்) இந்த ஏற்பாடு.

என்ன தான் கணவனின் மரபணு குழந்தைக்குள் இருந்தாலும் அது சமீபத்திய மேம்படுத்தவே இந்த ஏற்பாடு. மேலும் இது வயிற்றிற்குள் இருக்கும் குழந்தையின் முதல் ஆறு மாதத்திற்குள் உண்டாகும் வளர்சிதை மாற்றங்களுக்கும், பிறந்தபின் முதல் ஆறு மாதங்களுக்கு ஏற்படும் வளர்ச்சிக்கும் மிக மிக அத்தியாவசமாகிறது என்று மேல்நாட்டு அறிவியல் வல்லுனர்கள் கண்டறிந்து ஆச்சரியப்படுகின்றனர்... 

இபொழுது சொல்லுங்கள் கணவன் உண்ட அதே இலையில் மனைவி உண்டால் ஆணாதிக்கமா?
நன்றிகள்.

உலக எடைக்கோலுக்கு வித்திட்ட தமிழர் அறிவியல்..............!

படத்துல பாக்குறது ஒத்த தட்டு தராசு. நம்ம ஊர்களுல காலங்காலமா பண்டங்கள் நிறுக்க நம்ம மக்களால பயன்படுத்தப்பட்டு வர்ர ஒண்ணு. இத நம்ம ஊர்ல 'வெள்ளிகாவரை' ன்னு சொல்லுவாங்க. சில இடங்களில தூக்கு, தூக்குகோல்ன்னும் சொல்லுவாங்க. 'வெள்ளைக்கோல்வரை' என்கின்ற
சுத்தமான, அழகான தமிழ் சொல்தான் நம்ம வாய்களுக்குள்ள நுழஞ்சி சிதஞ்சி வெள்ளிகாவரன்னு ஆகி போச்சு. 

அந்த கோலுல வெள்ள நிறத்துல சில கோடுங்க வரஞ்சிருப்பாங்க. அதனாலதான் இந்த பேரு. அந்த கோடுங்கதான் எடைகளுக்கான குறியீடுங்க. பொதுவா தாரசுன்ன இரண்டு தட்டு இருக்குறது வழக்கம். ஒண்ணு எடைக்கல் வைக்கறதுக்கு. இன்னொன்னு எடை போட வேண்டியத வைக்க. ஆனா இந்த வெள்ளிக்காவரைங்குற தூக்குகோலுல ஒரு தட்டுதான் உண்டு. அந்த கோலுல வரஞ்சிருக்குற கோடுங்க தான் எடை அளவு. ஒவ்வொரு கோடும் ஒரு எடை அளவுக்கானது. 



அங்க இங்க நகர்த்துற மாதரி அந்த கோலுல ஒரு சின்ன நூல் கயிறு கட்டியிருப்பங்க. தேவையான எடைக்குண்டான கோட்டுக்கு கயித்த நகர்த்தி பிறகு அந்த.கோட்டுலயே கயித்த இருக்கி எடை போட வேண்டிய பொருள தராசுதட்டுல வச்சு கோல தூக்கி எடை போடவேண்டியது தான். கோல் படுக்கவசத்துல சமமா இருந்தா சரியான எடை காட்டுதுன்னு அர்த்தம். மேல பாக்க தூக்குனா நிறுக்குற பொருள் நிறுக்க வேண்டிய அளவுக்கு அதிகமா தட்டுல இருக்குன்னு அர்த்தம். 

கோல் கீழபாக்க தாந்தா குறைவா இருக்குன்னு அர்த்தம். இப்ப புழக்கத்துல இருக்குற ரெட்டத்தட்டு தராச விட இந்த ஒத்தத்தட்டு தராசுக்கு சில விஷேச தன்மைங்க உண்டு. இதுல பண்டங்கள நிறுக்க தனியா எடைக்கல்லுன்னு ஒண்ணு தேவையில்ல. இரட்டத்தட்டுத் தராசுல ஒரு கிலோ எடைக்கு ஒரு பொருள நிறுக்கணுமுண்ண எடைக்கல் ஒரு கிலோ எடை போட வேண்டிய பொருள் ஒரு கிலோன்னு ரெண்டு கிலோ எடைய தூக்குறதுக்கான சக்திய நம்ம உடம்பு செலவழிக்கணும். 

ஆன ஒத்தத்தட்டு தராசுல இந்த பிரச்சனை இல்ல. இன்னக்கு ரயில்வே ஸ்டேசன், லாரி ஆபீஸ் மாதரி இடங்களில பண்டங்கள நிறுக்க பயன்படுத்தப்படுகிற 'மேடை சமநிலை' (Platform Balance) ங்களுக்கு மூலம் நம்ம தாத்தாங்க கண்டுபிடிச்ச ஒத்தத்தட்டு தராசு தான். நாம அபிவிருத்தி பண்ணியிருக்க வேண்டிய நம்ம தாத்தாக்களோட தொழில் நுட்பங்களை எல்லாம் வெளிநாட்டுக்காரன் மேம்படுத்திகிட்டு இருக்கான். நாம வேடிக்க பாத்துகிட்டு இருக்கோம். என்ன கொடுமை சார் இது?........

திருவள்ளுவர் சொன்ன "சமன் செய்து சீர்தூக்கும் கோல்" இது தான். இந்த சமன் செய்து சீர்தூக்கும் கோல்ங்கிறது வேற ஒண்ண ஞாபாகப்படுத்துது. தமிழ் மாதம் ஐப்பசிக்கு துலாம் மாசம்ன்னு ஒரு பேரு இருக்கு. இந்த பேரு எத்துக்குன்ன சூரியன் துலாரசில சஞ்சரிக்குற மாதம் இது. சூரியன் துலா ராசில நுழையுற நாள் அன்னக்கி பூமில பகலும் ராத்திரியும் சம நீளத்துல இருக்கும். 

அதாவது பகல் 12 மணி நேரம் ராத்திரி 12 மணி நேரம். மத்த நாளையில எல்லாம் பகலுக்கும் ராத்திரிக்கும் நீளத்துல கொஞ்சம் கூடுதல் குறைவு வித்தியாசம் இருக்கும். என்வே சமமான நீளம் கொண்ட பகலிரவை கொண்ட நாள் இருக்கிற மாதத்திற்கும் ராசிக்கும் துலாம்ன்னு பேர் வச்சிருக்கிறாங்க நம்ம தாத்தாங்க. 

இன்னும் ஒரு கூடுதல் வானத்தில் துலாராசி நம்ம ஒத்ததட்டு தராசு அதாவது துலாக்கோல் வடிவத்தில் தான் இருக்கு. இப்படி வானியல், கணக்கு, கணக்கீடு, சமானம்ன்னு நம்ம தாத்தாங்களோட பன்முக அறிவு செழிப்பை நினச்சி பார்க்கையில நம்மால் ஆ....ன்னு வாய பிளக்கதான் முடியுது. நம்ம தாத்தாங்களோட அறிவு தொடர்ச்சி கண்ணி நம்ம விட்டு எப்ப, எங்க அறுந்து போச்சுங்கிற கேள்விதான் பதில் இல்லாம நம்ம முன்னால நின்னுக்கிட்டு இருக்கு.......
நன்றிகள்.

Wednesday, 1 April 2015

நிலத்தடி நீரைக் காப்பாற்ற பனைமரங்களை வெட்டுவதை தவிர்க்கவும்...........!.

பனையை வெட்டினால்.... நதிகள் வறண்டு போகும்...!

ஆயிரம் ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பே நீர் மேலாண்மையில் நம் முன்னோர்கள் சிறந்து விளங்கினர். அவர்கள் அவர்களுடைய தேவைக்கு மட்டும் எந்த காரியத்தையும் செய்யவில்லை, அவர்களுடைய சந்ததிகள் இந்த பூவுலகில் வாழும் வரை பயன்பெற எண்ணியே அனைத்து காரியங்களையும் செய்தனர்.


அவர்கள் பல குளங்களை வெட்டினார்கள் என்று நம் அனைவருக்கும் தெரியும், ஆனால் குளங்கள் வெட்டப்படுவதால் மட்டும் நிலத்தடி நீர் மட்டம் உயர்ந்து விடாது. இதனை உன்னிப்பாக கவனித்த அவர்கள் குளத்தை சுற்றியும் பல ஆயிரம் பனைமரங்களை நட்டு வளர்த்தனர். இதன் காரணம் என்னவென்றால் பனைமரத்தை தவிர அனைத்து மரங்களின் வேர்களும் பக்கவாட்டில் மட்டுமே பரவும் ஆனால் பனைமரம் மட்டும் செங்குத்தாக நிலத்தடி நீர் வழிப்பாதையை தேடிச்செல்லும்.

அதுமட்டுமில்லாமல் தனது வேரை குழாய் போன்று மாற்றி தரைப்பகுதியில் உள்ள நீரை நிலத்தடி நீர்ப்பாதைக்கு கொண்டு செல்லும். இதனால் அனைத்து நிலத்தடி நீர் வழிப்பாதையிலும் நீர் நிரப்பி அது உற்றாக அருகில் உள்ள ஆறுகளில் மட்டுமில்லாமல் பல் நூறு மைல்கள் அப்பால் உள்ள ஆறுகளிலும் பெறுக்கெடுத்து வற்றாத ஜிவ நதியாக ஓட வழிவகை செய்யும்...

இந்த பனைமரங்களை வெட்ட வெட்ட ஒவ்வொரு நதியாக வறண்டு கொண்டேவரும் என்பது மட்டும் உண்மை... நதிகளை காப்பாற்ற பனைமரங்களை வெட்டுவதை தவிர்க்கவும்.
நன்றிகள்.

Saturday, 7 March 2015

மகளிர்தின வாழ்த்துக்கள்!


நன்றிகள்!.

ஒதுக்கப்படும் பாரம்பரிய உணவுகள் ...!

நோய் என்று மருத்துவரிடம் சென்றால் முதலில் சொல்வது அரிசி சோறு சாப்பிடாதீர்கள் என்பதுதான். ...!!! 

அரிசி சாதம் உடல் நலத்திற்கு கேடா?

ஒதுக்கப்படும் பாரம்பரிய உணவுகள் ...!!!

நிலத்திலே மனிதர்களால் விளைவிக்கின்ற நன்செய், புன்செய் பயிர்களின் நன்மைகளை எளிதில் சொல்லிவிட முடியாது. இதில் அரிசியானது சுவையும் பல்வேறு மருத்துவ குணங்களை கொண்டதாகவும் விளங்கி வருகிறது. இதில் பச்சரிசி, புழுங்கல் அரிசி இரண்டு வகையும் மக்கள் பயன்படுத்தி வருகின்றனர். இந்தியா, பர்மா, சீனா, யப்பான் உட்பட பல்வேறு நாடுகளில் விளைவிக்கப்படும் அரிசி உலகில் மூன்றில் இரண்டு பங்கு மக்கள் உண்ணும் உணவாகவும் விளங்கிவருகிறது. ஆனால் இன்று நோய் என்று மருத்துவரிடம் சென்றால் முதலில் சொல்வது அரிசி சோறு சாப்பிடாதீர்கள் என்பதுதான். 

பிறந்தது முதல் அரிசி உணவு சாப்பிட்டு பழகியவர்கள் இதைக்கேட்டதும் வாடி வதங்கி, தங்களுக்கு பெரும் நோய் ஏற்பட்டுவிட்டது என்பதுபோல் முடங்கி விடுகிறார்கள். உண்மையில் மற்ற தானியங்களைப்போலவே அரிசியும் பல்வேறு நன்மைகளை தந்து நம்மை காத்து வருகிறது. உண்மையில் அரிசியை பட்டை தீட்டியும், குக்கரில் வைத்து சாப்பிடுவதால்தான் நமக்கு நோய் உண்டாகிறது என்பது பலருக்கு தெரிவதில்லை. உடலை வளர்த்தால்தான் உயிரை வளர்க்கமுடியும் என்பதில் தெளிவாக இருந்தார்கள் நமது முன்னோர்கள். எனவே உடலுக்கு எது தேவையோ அதை மட்டுமே உண்டு நலமாக வாழ்ந்தார்கள். இதில் தமிழர்களின் முக்கிய உணவான சோறு சமைப்பது என்பதே தனிக்கலையாக விளங்கியது எனலாம். இதில் தமிழர்கள் தனித்தன்மை பெற்று விளங்கினார்கள்.


சோறு வடிப்பது என்பது பழைய அரிசியைத் தவிடு, நொய் நீக்கி நன்றாக தீட்டி, முழு அரிசியாய் ஆய்ந்து எடுத்து இளவெந்நீரால் கழுவி சற்று ஆற விட்டுவைத்து கொள்ள வேண்டும். அரிசிக்கு மூன்றுபங்கு நீர்விட்டு அடுப்பிலேற்றி அது நுரைவிட்டு கொதிக்கும் பொழுது அரிசியை அதில் போட்டு முக்காற்பங்கு வெந்தவுடன், கரண்டியால் துழாவி வடித்து கொள்ள வேண்டும். கஞ்சி வடிந்தவுடன், அந்த அடுப்பு தணலில் சோற்று பானையை வைத்து விட வேண்டும். அதன் பிறகு நீர் முற்றிலும் வற்றி பக்குவமாய் இருக்கும் சமயத்தில் எடுத்து கொள்வதே சோறு. இந்த சோறே உணவுக்கு ஏற்றது. வாதம் பித்தம் கபம் ஆகிய முக்குற்றங்களால் பாதிக்கப்பட்டவர்கள் அனைவருக்கும் ஏற்றது. பத்தியத்திற்கும் உகந்தது. ஒவ்வொரு அரிசிக்கும் ஒவ்வொரு பண்பு உள்ளது என்பதையும் சொல்லிவைத்தார்கள்.

முழு அரிசிசோற்றை மிதமான சூட்டுடன் சாப்பிட்டால் முப்பிணிகளையும் நீக்கி உடலுக்கு வன்மை தந்து நலத்துடன் வாழவைக்கும். நன்றாக சமையாத சோற்றை உண்பதால் மலம் கட்டும். மறுநாளும் செரிக்காமல் இருக்கும். இதனால் உடலில் இதன் சத்துக்கள் ஊறாது. குழைந்த சோற்றை உண்டால் இருமல், மந்தம், பீளை, மேகம் உட்பட பல்வேறு நோய்கள் ஏற்படும். மிகுந்த சூட்டுடன் உள்ள சாப்பாட்டை சாப்பிட்டால் ரத்தம் சூடாகும், நீர்வேட்கை அதிகரிக்கும், பெருத்த வயிறு ஏற்படும். எனவே முழு அரிசிசோற்றை மிதசூட்டில் சாப்பிடுவதே நன்மை தரும்.

இதில் கார் அரிசியை கொண்டு வடிக்கப்படும் சோறு உடலில் உள்ள சிறு நஞ்சுகளை நீக்கி புண்களை ஆற்றும். ஈர்க்கச்சம்பா அரிசிசோறு கடவுளுக்கு படைக்கும் உணவிற்கு பயன்படுத்தப்படும் அரிசியாகும். இது பார்த்தவுடன் விருப்பத்தையும் நாவிற்கு சுவையை தரும். புழுகுசம்பா அரிசி சற்று அளவில் நீண்டு இருந்தாலும் இந்த அரிசியை சமைத்து உண்பதால் உடலில் வனப்பு ஏற்படும். நல்ல பசி எடுக்கும். தீராத தாகம் நீங்கும். 

கோரைச்சம்பா அரிசியை உண்பதால் வெப்பத்தால் ஏற்படும் வெறி, பெண்களுக்கான வெள்ளைபடுதல், உடலில் உண்டாகும் நமைச்சல் நீங்கி, உடல் குளிர்ச்சி உண்டாகும். குறுஞ்சம்பா அரிசிசோறு ஆண்மையை பெருக்கி உடலில் குத்துகின்ற வலியை போக்கும். ஆனால் உடல் சூட்டை உண்டாக்கும். மிளகுசம்பா அரிசிசோறு பல நன்மைகளை வாரி வழங்கக் கூடியது. பசியை உண்டாக்கும். பெருவளி என்கின்ற கடுமையான வாத நோய்களை நீக்கும்.சீரகச்சம்பா அரிசி சோற்றை மன்னர்களும், செல்வந்தர்களும் மட்டுமே உண்ணும் பழக்கம் நமது நாட்டில் இருந்து வந்தது.

இனிப்பு சுவையுள்ள இதை உண்பதால் உடலில் ஏற்படும் அனைத்து வளி நோய்களையும் நீக்கும். சாப்பிட்டு முடிப்பதற்குள்ளாக செரித்து மீண்டும் பசியை ஏற்படுத்தும் அளவிற்கு எளிமையானது. கல்லுடைச்சம்பா என்ற அரிசி சோறு அதிகமான ஆற்றலை தரக்கூடியது. மிகுந்த பலசாலியை கூட எதிர்க்கும் உடல் திறனையும் மனத்தெம்பும் ஏற்படுத்தும். நல்லசுவை கொண்ட இதை உண்டுவந்தால் பேசும் திறன் அதிகரிக்கும். குன்றிமணிச்சம்பா சோறு உண்டுவந்தால் உடல் வலித்து ஆண்மை உண்டாகும். வளி நோய்கள் அனைத்தும் போகும்.

அழகும் சுவையும் நிரம்பிய அன்னமழகி என்ற அரிசியை சமைத்து உண்பதால் உடல் வெப்பமாறுபாட்டால் ஏற்படும் சுரங்களை நீக்கி உடலுக்கு நன்மை தரும். மோர்ச்சோறு உண்டால் சிறுநீர் கழிப்பதால் ஏற்படும் எரிச்சல், தண்ணீர் தாகம், வயிற்றுப்போக்கு இவைகளை போக்கும். இரவில் நீரூற்றிய சோற்றை பழையது என்பார்கள். விடியற்காலையில் சோற்றில் உள்ள நீரோடு பழையதை சாப்பிட்டால் ஆண்மை அதிகரிக்கும். உடலில் ஒளி உண்டாகும். வெறிநோய் முற்றிலும் நீங்கும். நன்றாக பசியெடுக்கும்.

பழைய சோற்றில் மோர் கலந்து சாப்பிட்டால் உடல் எரிச்சல், பித்தம், மனப்பிரமை முதலியவை நீங்கும். இரவில் நன்றாக தூக்கம் வரும். மிகுதியாக உண்டுவிட்டால், அப்பொழுதே உறக்கம் கண்களை தழுவும். பொதுவாக எந்த உணவாக இருந்தாலும் அளவாக தேவைக்கு ஏற்ப சாப்பிடுவதால் கெடுதல் என்பதே உண்டாகாது. அதுவும் உணவே மருந்து. மருந்தே உணவு என்று வாழ்க்கை முறையை வகுத்து கொண்டு வாழும் தமிழர்களின் உணவே, இன்று உலகம் முழுவதும் உள்ள மக்களால், பெரிதும் விரும்பும் உணவாகவும் மாறி வருகிறது. எனவே அரிசிசோறு உண்டு நலமுடன் வாழ்வோம்.

பித்தத்தை போக்கும் கஞ்சி

சோறு கொதிக்கும் போது இருக்கும் நீரை கொதிநீர் என்பார்கள். வீட்டில் சமையல் செய்யும் பெண்கள், பசியுடன் இருக்கும் சிறுவர்களுக்கு இதை குடிக்க கொடுப்பார்கள். தாங்களும் குடிப்பார்கள். இதுவும் மருத்துவ குணம் கொண்டதுதான். கொதிநீரை குடிப்பதால் நீர்சுருக்கு என்னும் சிறுநீர்நோய் போகும். சோறு வடித்தவுடன் கிடைக்கும் கஞ்சியை சூட்டுடன் தண்ணீர் கலந்து உப்பிட்டு குடிப்பதால் உடல் பருக்கும். உடலில் ஒளி உண்டாகும். உடலில் உண்டாகும் பித்தம், வெப்பம் நீங்கும். சோறு வடித்த கஞ்சியை எந்த வகையில் குடித்தாலும் சிறு மந்தத்தை உண்டாக்கும் என்றாலும், விழிகளுக்கு குளிர்ச்சியும் கொடுக்கும். உடல் சூட்டால் தோன்றிய பல்வேறு நோய்களை குணமாக்கும்.

நன்றிகள்.

Wednesday, 4 March 2015

தமிழை எளிமையாக கற்க............!.

தமிழை எளிமையாக கற்க 'ஐ' தமிழ்: மதன் கார்க்கியின் புது கருத்துப்படிவம்! (concept)!

இப்பொழுது நாம் எழுதி படித்துக் கொண்டிருக்கும் தமிழ் வடிவ மானது பண்டைய காலங்களிலிருந்து பல்வேறு மாற்றங்களுக்கு உட்பட்டு வந்தது. மொழியின் ஒலி மாறுவதில்லை. ஆனால் காலத்திற்கேற்ப எழுத்தின் வடிவம் மாறி வந்துகொண்டிருக்கிறது. கல்வெட்டில் இருந்த தமிழும், ஓலைச் சுவடிகளில் இருந்த தமிழும், அச்சகங்கள் வந்தபோது அதற்காக மாறிய தமிழ் எழுத்துக்களையும் நாம் அறிவோம். 

கடைசியாக எழுத்துக்களை சீரமைத்து கொடுத்தவர் பெரியார். சில காலமாகவே வா. செ. குழந்தைசாமி போன்ற அறிஞர்கள் எழுத்துச் சீரமைப்பை பற்றி பேசி வந்திருக்கிறார்கள். இப்போது இருக்கும் தமிழ் எழுத்து வடிவங்களை மேலும் எளிமையாக்க 'கார்க்கி ஆராய்ச்சி மையம்' மேற்கொண்டுள்ள முயற்சிதான் 'ஐ-தமிழ்’ கருத்துப்படிவம்.  இந்த மையத்தின் நிறுவனர்  மதன் கார்க்கியை சந்தித்தோம்.

ஐ'னா அழகுன்னு அர்த்தம். உங்களோட இந்த கருத்துப்படிவம் தமிழுக்கு எந்த விதத்தில் அழகு சேர்ப்பதாக இருக்கும்?" ......

முதல் கேள்வியையே உற்சாகத்துடன் எதிர்கொண்டு பேச ஆரம்பித்தார் கணினிக் கவிஞர் கார்க்கி. 

சில ஆண்டுகளாவே நான் யோசிச்சுகிட்டு இருந்த ஒரு விசயம்தான் இது. 247 எழுத்துக்கள் கத்துகிட்டா தான் தமிழ் கத்துக்க முடியும்னு குழந்தைகள பயமுறுத்துறோம். போன தலைமுறைக்கு இருந்த பொறுமையில் பாதி கூட இந்த தலைமுறை குழந்தைகளுக்கோ, பெற்றோர்களுக்கோ, ஆசிரியர்களுக்கோ இல்லை. குழந்தைகளோட கவனத்த ஈர்க்க நூற்றுக் கணக்குல தொலைக்காட்சி அலைவரிசைகள், ஐஃபோன், ஐபேட், ப்ளே ஸ்டேஷன்னு எத்தனையோ விசயங்கள் இருக்கு. இதுக்கு நடுவி்ல் நாம் மொழியைக் கற்பிக்க வேண்டுமாயின் அந்த மொழி எளிமையாக மாறியமைக்க  வேண்டிய கட்டாயம் இருக்கு. 

இப்போ இருக்கின்ற தமிழைக்  கற்பிக்க 107 குறியீடுகள் கற்றுக் கொள்ள வேண்டும். உயிர் எழுத்து, மெய் எழுத்து, உயிர்மெய்க் குறிகள், புள்ளி, அப்புறம் கு, கூ, மு, தீ கி போன்ற உகர, ஊகார, இகர, ஈகார எழுத்துக்கள். குழந்தைகளுக்கு தமிழ் மொழிய சொல்லிக் கொடுக்கும்போது தான் இதனுடைய சிரமம் புரியும். கால் எழுத்த மெய்யெழுத்துக்கு பின்னாடி போடணும், கொம்ப முன்னாடி போடணும், புள்ளிய மேல போடணும்ன்னு குழப்பங்களும் இதுல அடங்கும். பிரெஞ்சு, ஆங்கிலமா தமிழா எது படிக்க விருப்பம்ன்னு கேட்டா குழந்தைகள் எளிமையா இருக்குற ஆங்கிலத்தையோ அது போன்ற மொழியையோதான் தேர்வு செய்வாங்க.


தமிழ்ல படிச்சாதான் உனக்கு வேலை கிடைக்கும்னோ, தமிழ்ல படித்தால்தான் தனிச் சலுகைனோ அச்சுறுத்தியோ, லஞ்சம் கொடுத்தோ மொழிய படிக்க வைப்பது நல்ல முறை இல்லை. தமிழ் மொழிய நம்ம தமிழக் குழந்தைகள் இல்லை, உலகக் குழந்தைகள் எல்லாரும் படிக்க ஆர்வம் தூண்டும்படி அதை எளிமையாக மாற்றியமைத்துக் கொடுப்பதுதான் ஐ-தமிழ் திட்டத்தோட முதல் நோக்கம். ஐ-தமிழ்ல 43 குறியீடுகள் கத்துகிட்டா தமிழ் எழுத படிக்க கத்துக்கலாம். ஐ-தமிழ், உயிர்மெய் எழுத்து எழுதும் முறையில் மட்டும் மாற்றம் கொண்டு வரணும்னு கோரிக்கை வைக்குது. 

இப்பொழுதுள்ள எழுத்துவடிவத்தில் 'க்' என்ற மெய்யெழுத்துடன் உயிரெழுத்து 'ஊ'  புணரும்பொழுது வரும் உயிர்மெய் க்+ஊ-'கூ'(சுழியிட்டு வருகிறது).ஆனால் அதே போன்ற மெய்யெழுத்தான 'த்' உடன் 'ஊ' என்ற உயிரெழுத்து  புணரும்பொழுது த்+ஊ-தூ என்று (துணைக்கால் சேர்த்து)குறியீடு வேறாக இருக்கிறது. இரண்டுமே மெய்யெழுத்தாக இருந்தாலும் அதனுடன் புணர்வது ஒரே உயிரெழுத்தாகத்தான் இருந்தாலும் புணர்வின் முடிவில் அதன் வடிவங்கள் வேறுபடுகின்றன. (ஒன்றுக்கு சுழித்தல், மற்றொன்றிற்கு துணைக் கால்). இதைப் புரிந்துகொள்வதும், மனப்பாடம் செய்வதும், எந்த இடத்தில் எப்படி சுழியிட வேண்டும், துணைக் கால் போட வேண்டும் என்பதே தமிழைப் புதிதாகக் கற்றுக்கொள்பவர்கள் மேற்கொள்ளும் சிரமம். 


இதனாலேயே தமிழ் எழுதக் கற்றுக்கொள்வதற்கு கடினமான மொழியாக உள்ளது. தமிழில் மாணவர்கள் தடுமாறுவதற்கும் இதுவே முக்கியக் காரணம்.'க' என்ற ஓர் உயிர்மெய் எழுத்தை அடிப்படையாக வைத்து அதற்கு முன்னும்(கே) பின்னும்(கா) அதன் மீதும்(கூ) எந்தக் குறியீடும் உபயோகிக்காமல் அந்த எழுத்தின் மேலேயே அதனுடன் புணரும் உயிரெழுத்துக்களின் ஓசைக்கு ஓர் குறியீடு கொடுத்து எழுத்து வடிவம் தருவதே 'ஐ-தமிழ்’ நோக்கம். அதாவது, உயிர்மெய் எழுத்தை மெய்ப் பகுதி, உயிர்ப் பகுதின்னு ரெண்டா பிரிச்சு, மெய்யெழுத்துக்கு மேல உயிர் குறியீட போடும் முறைதான் ஐ-தமிழ்.  ( www.karky.in/labs) 


ஐ-தமிழின் பயன்கள் என்னென்ன? இதை எளிதில் கற்றுக்கொள்ளலாமா?

பல நன்மைகள் ஐ-தமிழ்ல இருக்கு. ஏற்கனவே தமிழ் எழுத படிக்க தெரிந்தவர்கள், 15 முதல் 20 நிமிடத்தில் ஐ-தமிழ் எழுத்தை எழுத பழகலாம். புதுசா தமிழ் எழுத கத்துக்குறவங்க இரண்டு இல்ல மூணு மாசத்துல தமிழ் எழுத்துக்கள கத்துக்கலாம். நாளைய தலைமுறை புது உயிர் எழுத்துக்களையோ, மெய் எழுத்துக்க ளையோ தமிழ்ல சேர்க்க விரும்பினா, ஐ-தமிழ் அந்த மீமேலாக்கத்தகவுக்கும் உகந்ததா இருக்கும். கணிப் பொறித் திரைகளோட அளவு சுருங்கிகிட்டே வருது. தொலைக்காட்சி பெட்டி மாதிரி இருந்த கணிப்பொறி இன்னிக்கு கைக்கடிகாரமா சுருங்கிடுச்சு. 

இத்தனை சிறிய திரையில் தமிழ் சொற்களை போடும்போது நான்கு அல்லது ஐந்து எழுத்து சொற்களுக்கே திரை நிரம்பிவிடும். ஐ-தமிழ், இடத்தை சேமிப்பதன் மூலமா எளிதாக கூகுள் கண்ணாடி, ஆப்பிள் வாட்ச் மற்றும் இன்னும் வரப்போகும் தொலைதொடர்புக் கருவிகளுக்கு உகந்ததா இருக்கும். 

OCR எனப்படும் தொழில்நுட்பத்தின்படி சுவர் விளம்பரங்களையோ, கையெழுத்தையோ, நாளிதழில் அச்சடித்த எழுத்துக்களையோ, கணிப்பொறி படித்து எழுத்துக்களை உணரும் அந்த செயலிகளை துல்லியத்தோடு வடிவமைக்க ஐ-தமிழ் சரியான மாற்றமாக இருக்கும். புத்தகங்களில் அச்சாகும் சொற்களில் ஐ-தமிழ் 25-59 சதவிகிதம் வரை சேமிக்கிறது. இது மூலமா ஒரு ஆண்டுக்கு அச்சாகும் நூல்கள்ல ஐ-தமிழ் சேமிக்கும் இடம் மூலமா காகிதத்துக்காக வெட்டப்படும் முப்பதாயிரம் மரங்களை நாம காப்பாத்தலாம். 

இதற்கு பல்வேறு தரப்பினரிடமிருந்து என்னவிதமான எதிர்வினை (Reaction)  இருந்தது? 

ஐ-தமிழ் திட்டத்திற்கு  (Project) பலரிடமிருந்து எதிர்ப்புகள் இருக் கத்தான் செய்கின்றன. 'தாய்மொழி தாய் மாதிரி... அதில் குறை சொல்லக் கூடாது!' ன்னு சொல்றாங்க. நம் பாரம்பரியத்தை மாற்றக் கூடாது என்பதுதான் அவர்கள் கூறுவது. ஆனால் இத்தனை வருடம் தமிழ் மாறிக்கொண்டேதானே வந்திருக்கிறது. எப்படியானாலும் மாற்றங்களைத் தடுக்க முடியாது. அவர்களிடம் நான் முன் வைக்கும் கேள்வி, பாரம்பரியமாக நாம் பழகி வரும் இம்மொழியை பாதுகாத்து வைத்தல் முக்கியமா இல்லை, இன்னும் அதிகமாக  மொழி பரவி பல நூற்றாண்டுகள் வாழவேண்டுமென்பது முக்கியமா? எங்களோட ஆராய்ச்சியில் அரசியல் இல்லை, வணிக நோக்கம் இல்லை, நடைமுறையையும் மொழி மேல் இருக்கின்ற காதல்லையும்தான் ஐ-தமிழ் திட்டத்தை நாங்க முன் வைக்குறோம்.

ஐ-தமிழ் பற்றி உங்க தந்தையிடம் சொன்னீர்களா? அவரிடமிருந்து வந்த விமர்சனம் என்ன?

அப்பா ரொம்பவே சந்தோசப்பட்டாங்க. "தமிழுக்கு இது நல்லதொரு மாற்றம். இது மாதிரியான விசயங்கள் தான் உன்னிடமிருந்து நான் எதிர்பார்த்தேன். ரொம்ப நல்லா பண்ணியிருக்க. இதை நடைமுறைப்படுத்த வாய்ப்புக்கள் நிறையவே இருக்கிறது. இது வரைக்கும் நீ தமிழ் சம்பந்தமாக எத்தனையோ ஆராய்ச்சிகள்  பண்ணியிருக்க. ஆனால் அதை எல்லாம் விட என்னை ரொம்ப சந்தோசப்படுத்தியது இதுதான். நம் மொழிக்காக நீ செய்திருக்க இந்த நல்ல விசயத்தை ரொம்பப் பொறுமையா எடுத்துகிட்டு போ" ன்னு அறிவுரை கூறினார்.

உங்கள் குழு பற்றி...?

முனைவர் சுதர்சனன் நேசமணி, எஸ்.ஆர்.எம் கல்லூரியில்  துணைப்பேராசிரியரா பணியாற்றும் தமிழ்ச் செல்வி. நாங்க மூணு பேரும் இது தொடர்பான ஆராய்ச்சிக் கட்டுரைகள எழுதிகிட்டு இருக்கோம். கார்க்கி ஆராய்ச்சி நிறுவனத்துல என்னோட சேர்ந்து  இளஞ்செழியன், ராஜபாண்டியன், தென்றல், ஆல்வின் வர்கீஸ், ஆர்த்தி, அனிதா ஆகிய ஆறு பேரும் முழு நேரமாக இந்தப் பணியிலும் மற்ற தமிழ் ஆராய்ச்சிகளிலும் ஈடுபட்டுள்ளனர். 


இது தவிர்த்து சூர்யா, தமிழ்ச்செல்வி பகுதி நேரமாக இந்த பணியில் ஈடுபட்டுள்ளனர். அனைவரின் பங்க ளிப்புடன்தான் இதை எழுதி தயாரித்துள்ளோம். நடக்கவிருக்கும் ஒரு தமிழ் மாநாட்டில் 'ஐ-தமிழ்' கட்டுரையை சமர்ப்பிக்க உள்ளோம்.

இதற்கு அரசாங்கத்தின் பங்களிப்பு எந்த அளவில் வேண்டும் ? 

இப்பொழுது திரைத்துறையிலிருந்து வரும் என் வருவாயின் ஒரு பகுதி மூலமே என் ஆராய்ச்சிகளுக்கான செலவை கவனித்துக்கொள்கிறேன். நண்பர்கள் ஒரு சிலரும் அவ்வப்போது நன்கொடை வழங்கி வருகிறார் கள். எதிலும் இலாப நோக்கம் இல்லாமல் செய்து வருகிறோம். மொழிக்கு தேவையான மென்பொருட்கள் உருவாக்குவது, மொழியை கற்க தேவையான கருவிகளைச் செய்வது, மொழியறிவை மென்பொருள் மூல மாக மக்களுக்குக் கொண்டு சேர்ப்பது, இதுவே எங்கள் முயற்சியும் நோக்கமும். 

இந்த இரண்டு ஆண்டுகளில் பத்து மென்பொருட்களை உருவாக்கி இலவசமாக இணையத்தில் எல்லோரும் பயன்பெறும்படி தந்திருக்கிறோம். இன்னும் பத்து ஆண்டுகளுக்கான திட்டப்பணியை தயார் செய்து வைத் திருக்கிறோம். மத்திய மாநில அரசுகளின் நிதியுதவி, கார்ப்பரேட் நிறுவனங்களும், பொது மக்களும் தமிழுக் காக நிதி கொடுக்க முன்வந்தால் நாங்கள் திட்டமிட்டு வைத்திருக்கும் அடுத்த பத்து வருடங்களுக்கான ஆராய்ச்சியை நிச்சயமாக நேர்த்தியான முறையில் தமிழுக்காக நடைமுறை படுத்த முடியும். 

ஐ-தமிழைத் தொடர்ந்து அதிகம் உச்சரிக்கப்படும் வார்த்தை 'அகராதி', அதைப் பற்றி கூறுங்களேன்?

அண்ணா பல்கலைக்கழகத்தில் பணியாற்றியபோது நான், டாக்டர்.டி.வி.கீதா, டாக்டர் ரஞ்சனி ஆகிய மூவரும் சேர்ந்து தொடங்கியதுதான் அகராதி ப்ராஜெக்ட். 25000 சொற்களை வைத்து நாங்கள் தொடங்கிய 'அகராதி'யை அந்த பணியிலிருந்து நான் வெளிவந்த பின்னர் தொடர முடியவில்லை.  'கார்க்கி ஆராய்ச்சி நிறுவனம்' தொடங்கியபின் அகராதியை எங்கள் நிறுவனத்தின் மூலம் எடுத்துக்கொண்டு தொடர ஆரம்பித் தோம். இப்பொழுது அகராதியில் 2,60,000 சொற்கள் உள்ளன. ஆன்லைன் அகராதியிலேயே அதிகம் தமிழ்ச் சொற்கள் கொண்ட

‘அகராதி' தான்.

மருத்துவம், சட்டம், விலங்கியல், தாவரவியல், பொறியியல், கணிப்பொறி போன்று 33 பிரிவுகளிலுள்ள சொற்களை ஒருங்கிணைத்து அடக்கியுள்ளதுதான் இந்த 'அகராதி'. இதுவரை இணையதளமாக இயங்கிக் கொண்டிருந்த அகராதிக்கு இப்பொழுது தான் குறுஞ்செயலி 'ஆப்' வடிவம் கொடுத்திருக்கிறோம். கடந்த வாரம் வெளியீடு செய்யப்பட்ட அகராதி ஆப், 'ஆப்பிள்'  தொலைபேசிகளில் இயங்கும். அடுத்த மாதத்திலிருந்து ஆண்டிராய்டு அலைபேசிகளுக்கும் வருகிறது. 

நன்றிகள்.

Monday, 2 February 2015

குமிழித்தூம்பு தமிழரின் 2000..........!.

தமிழரின் 2000-ஆண்டுகள் பழமையான குமிழித்தூம்பு என்ற மதகு ! 

தானாகவே குளத்தின் அடியில் உள்ள சேற்றை வெளியேற்றும் சேறோடி துளை அமைப்பு இதன் சிறப்பு..!!கிட்டத்தட்ட Venturi-போன்று இது செயல்படுகிறது. 

மதகை அடைத்துள்ள மூடுகல்லை பினைத்துள்ள இரும்பு கம்பியை அது பொருத்தப்பட்டுள்ள கல் தூண் மீதிருந்து தூக்கும் போது நீர் வேகமாக கீழே உள்ள கல் தொட்டிக்கு பாய்ந்து நீர் செல்லும் பாதை வழியாக வெளியேறும்.கல்தொட்டி நீர் உள்ளே வரும் பாதையைவிட பெரிதாக உள்ளதாலும் நீர் சுழல் ஏற்படுவதாலும் அந்த இடத்தில் குறைந்த அழுத்தம் ஏற்படும்.அதே நேரம் குளத்தின் அடிப்பகுதியில் அழுத்தம் அதிகமாக இருப்பதால் அடியில் தங்கியுள்ள சேறு அழுத்தப்பட்டு குறைந்த அழுத்தம் உள்ள கல் தொட்டிக்கு வந்து தண்ணீருடன் கலந்து பாசனத்திற்கு சத்துள்ள நீராக சென்றுவிடும்.தூர்வாரும் வேலை குறைந்துவிடும்..சத்தான மண் பயிருக்கு உரமாகிவிடும். 



நம் முன்னோர் பொறியியல் அறிவை பார்க்கும் போது வியப்பு ஏற்படுகிறதல்லவா.?ஆங்கிலேயர் ஆட்சிக்காலத்தில் இந்த மதகுகள் கைவிடப்பட்டு பலகை வடிவ மதகுகள் அமைக்கப்பட்டது குளத்தில் மண் தங்கிவிட காரணமானது. 

வான்பொழியும் நீரே உயிர்ப்பு என்பதற்கு அடிப்படையாய் அமைகிறது (குறள் - 16) என்கிறார் வள்ளுவர். 

அத்தகைய நீராதாரத்தை தமிழ் மக்கள் தொன்றுதொட்டு உயிரினும் மேலானதாகப் போற்றியுள்ளனர். 

மழைநீரைச் சேமித்து, சேமித்த நீரை திறம்படப் பயன்படுத்துவதன் மூலமே தமிழகத்தின் வேளாண்மை பெரிதும் நடைபெற்றது. 

இந்த மழை நீரை ஏரிகள், குளங்களில் சேமித்து வைப்பது பற்றி இளங்கோவடிகள் மிக அழகாகக் குறிப்பிட்டுள்ளார். 

"இடியுடைப் பெருமழை எய்தா ஏகப் 
பிழையாவிளையுள் பெருவளம் சுரப்ப 
மழைபிணித்(து) ஆண்ட மன்னவன்''. 
(வரி.26 - 28) 

இப்பாடலடியில், "மழை பிணித்து ஆண்ட மன்னவன்" என்பதன் பொருள், முறையாகப் பெய்யும் மழை நீரை ஏரி, குளங்களில் சேமித்து அவற்றைத் தக்க முறையில் பயன்படுத்தி, நாட்டை வளம்பெறச் செய்யும் மன்னன் இவன் என்பதாகும். 

இதே போல மழை நீரைச் சேமித்து வைப்பதற்கு ஏற்ற நீர் நிலைகளை அமைப்பது ஒரு மன்னனின் தலையாய கடமை என்பதைப் புறநானூற்றுப் பாடலில், 

"நிலன் நெளிமருங்கின் நீர்நிலை பெருகத் 
தட்டோரம்ம இவன் தட்டோரே 
தள்ளாதோர் இவண் தள்ளாதோரே''. 
(புறம் - 18,28 - 30) 

என்று புலவர் புலவியனார், பாண்டியன் நெடுஞ்செழியனைப் பார்த்துப் பாடியுள்ளார். 

இதன் பொருள், நிலம் எங்கெங்கு பள்ளமாக இருக்கிறதோ அங்கெல்லாம் நீர் நிலைகள் அமையும்படி கரை அமைத்த மன்னர்களே இவ்வுலகில் என்றென்றும் அழியாப் புகழ்பெற்று விளங்குவர் என்பதாகும். 

"அறையும் பொறையும் மணந்த தலைய 
எண்நாள் திங்கள் அணைய கொடுங்கரைத் 
தெண்ணீர்ச் சிறுகுளம் கீள்வது மாதோ''. 
(புறம்.118) 

எனக் குறிப்பிடுவதன் மூலம் ஏரி எந்த வடிவில் இருக்க வேண்டும் என்பதைப் புறநானூறு வழி அறிய முடிகிறது. 

ஏரிக்கரை நீளம் குறைவாகவும் ஆனால், அதிகநீர் கொள்ளளவு கொண்டதுமான அமைப்பு எட்டாம் பிறை வடிவில் ஏரி இருக்கும்போது ஏற்படும். 

இது ஏரி வடிவமைப்பில் மிகவும் சிக்கனமான வடிவமைப்பாகும். 

சிறுபஞ்ச மூலத்தில் குளம் அமைக்கும் முறை பற்றி காரியாசான் கூறியுள்ளார். அதில், பொதுக்கிணறு அமைத்தல், வரத்துக்கால், மதகுகள், மிகைநீர் வெளியேறும் கலிங்கு, தூம்பு போன்றவைகளை அமைப்பவர் சொர்க்கத்துக்குப் போவார் என்று குறிப்பிடப்பட்டுள்ளது. 

பதினெண் கீழ்க்கணக்கு நூல்களுள் ஒன்றான திரிகடுகத்தில், நீர் வரும் வரத்துக்கால் நன்கு அமையாத குளம் இருப்பின் அதனால் பயன் குறையும் என்ற செய்தியை, 

"வாய்நன் கமையாக் குளனும் வயிறாரத் 
தாய்முலை யுண்ணாக் குழவியும் சேய்மரபில் 
கல்விமாண் பில்லாத மாந்தரும் இம்மூவர் 
நல்குரவு சேரப்பட்டார்''. 
(83) 

என்று, தாய்ப்பால் அருந்தாத குழந்தையும், கல்வி அற்ற நிலையில் உள்ளவர்களும் எப்படி சிறக்க முடியாதோ, அதுபோல் வாய் நன்கு அமையாத குளமும் இருக்கும் என்று குறிப்பிட்டுள்ளார். 

மிகுதியாக வரும் ஆற்று வெள்ளநீரை தம்முள் அடக்கிக் கொள்ளக்கூடிய பெரும் ஏரிகள் இருப்பது ஒரு நாட்டுக்குச் சிறப்புத் தரும் என்பதை, 

"யாறுள் அடங்குங் குளமுள வீறுசால்" 

என்று நான்மணிக்கடிகை குறிப்பிடுகிறது. 

இப்பாடலில் குறிப்பிடப்படும் ஆறு உள் அடங்கும் குளம் என்ற சொற்றொடர், நீர் மேலாண்மைத் திறத்தின் ஒரு முக்கிய வெளிப்பாடாகும். 

பெருவெள்ளம் ஏற்படும் காலங்களில் அந்நீரை உரிய முறையில் சேமித்து, நீர் இல்லாத காலங்களில் பயன்படுத்தக்கூடிய நிகழ்வை இச்சொற்றொடர் எடுத்துக்காட்டுகிறது. 

கண்மாய்களையும், குளங்களையும் காத்து நின்ற அதாவது, முறையாகப் பராமரித்த செய்தியை அகநானூற்றுப் பாடல், 
"
பெருங்குளக் காவலன் போல 
அருங்கடி அன்னையும் துயில் மறந்தனளே''. 
(25) 

என்கிறது. அதாவது, பனியிலும், மழையிலும், அடர்ந்த இருள் சூழ்ந்த நள்ளிரவிலும் ஏரியைக் காக்கும் காவலன்போல, குழந்தையைப் பாதுகாக்க அன்னை தன் தூக்கத்தை மறந்தாள் என்பது இப்பாடலின் பொருள். 

சிறு குழந்தையைத் தாயானவள் கண்ணை இமை காப்பதுபோல் காத்த செயலும், நீர் நிலைகளைக் காக்கும் செயலும் ஒன்றாகவே எண்ணப்பட்டு வந்துள்ளது. 

பழந்தமிழ் நூல்களில் இத்தகு நீர்நிலைகளிலிருந்து மிகு நீரை வெளியேற்ற "கலிங்கு" என்ற அமைப்பை ஏற்படுத்தியிருந்தனர். இக்கலிங்கு குறித்த தகவல்கள் மிகுதியாக இலக்கியங்களில் சுட்டிக்காட்டப்படுகின்றன. இத்தகு தொழில் நுட்பம் நம் தமிழகத்தில் பல நூற்றாண்டுகளுக்கு முன்பிருந்தே பயன்பாட்டில் இருந்து வந்துள்ளது. 

மணிமேகலையின் பன்னிரண்டாம் காதையான "அறவணர் தொழுத காதை" என்னும் பகுதியில், புத்ததேவன் தோற்றம் பற்றிக் கூறவரும் கூலவாணிகன் சாத்தனார், 

"பெருங்குள மருங்கில் சுருங்கைச் சிறுவழி 
இரும்பெரு நீத்தம் புகுவது போல 
அளவாச் சிறுசெவி அளப்பரு நல்லறம் 
உளமலி உவகையொடு உயிர்கொளப் புகும்''. 
(1384 - 87) 

என்கிறார். "சுருங்கை" என்பது பூமிக்கடியில் செல்லும் சிறிய குழாய். அதாவது, பெருங்குளங்களாகிய பேரேரிகளின் ஒருபுறம் உள்ள சிறிய சுருங்கை வழியாக அங்கு தேக்கப்பட்ட நீர் வெளியேறி மக்களுக்கு அளவிட இயலாத வகையில் பயன்தரும். 

அதுபோல, செவித்துளை வழியே நல்ல அறக்கருத்துகள் உள்ளத்தைச் சென்றடையும் என்பதே இதன் பொருள். 

1,600 ஆண்டுகளுக்கு முன் தமிழகத்தின் ஏரிகளிலும், குளங்களிலும் இருந்து நீர் வெளியேற்றும் மதகு அமைப்பு சுருங்கைகளாக இருந்தன. இந்த மதகு அமைப்பே "குமிழித்தூம்பு" என்பதாகும். 

பழந்தமிழர்களின் நீர் மேலாண்மைச் செயல்பாட்டில் இந்தக் "குமிழித்தூம்பு" அறிவியல் சார்ந்த மிக நுட்பமான, நேர்த்தியான பயன்பாடுடைய படைப்பாகும். 

இதேபோல் பெருக்கெடுத்து மிகுவேகத்தில் ஓடிவரும் நீரை குறுக்கே தடுப்பணை அமைத்துத் தடுப்பதற்கு மிகுந்த தொழில்நுட்ப அறிவு தேவைப்படும். வருகிற நீரைக் கற்கள் கொண்டு தடுப்பதால், இத்தகு தடுப்பணை "கற்சிறை" எனும் அழகுத் தமிழ்ச் சொல்லால் வழங்கப்பட்டுள்ளது. 

தொல்காப்பியம் பொருளதிகாரத்தில், "பெருகிவரும் படையை ஒரு வீரன் தடுத்து நிறுத்திப் போராடுவதுபோல் ஆற்று வெள்ளத்தைக் கற்சிறை தடுத்து நிறுத்துகிறது" (வரி:725 - 726) என்று கூறியுள்ளார் தொல்காப்பியர். 

தமிழ் இலக்கியங்கள் சுட்டும் நீர் மேலாண்மைச் செய்திகள் ஏதோ கற்பனையான ஒன்று என்று யாரும் எண்ணிவிட முடியாது. அதில் கூறப்படும் செய்திகள், அறிவியல் சார்ந்தவையாக இருப்பதை கல்வெட்டுச் சான்றுகள் கொண்டு உறுதி செய்ய முடிகிறது. பழைய தொழில்நுட்பங்களுடன் புதியவைகளையும் இணைத்து நீரைச் சேமித்தால் எதிர்காலத்தில் கவலைப்படும் அவசியம் இருக்காது.
நன்றிகள்.

Thursday, 1 January 2015

மெதுவாக உண்ணுங்கள் மெல்லியராக மாறுங்கள்............

“இவள் சரியான வேலைக் கள்ளி. கோப்பைகள் கழுவுகிற வேலை தன்ரை தலையிலை விழுந்துவிடும் என்று மெல்ல மெல்லச் சாப்பிட்டு கடைசி ஆளாத்தான் எழும்புவாள்” என அம்மா மகளைப் பற்றிப் புறுபுறுத்தாள்.

“இவவோடை இரவு சாப்பாடு சாப்பிடப் போனால் கடைக்காரன் பூட்டப் போறன் என்று அவசரப்படுத்தி எழுப்பினால்தான் எழும்புவாள்” என்று நக்கல் அடித்தவர் “வாய் நோகாமல் சாப்பிட்டு பாணி (Styl) காட்டுவா” என நீட்டி முடித்தார்.
மற்றவர்கள் தவறெனக் காரணம் காட்டிப் பேசினாலும் நக்கல் அடித்தாலும் சிலரால் தமது பழக்கத்தை மாற்ற முடியாது. இருந்தபோதும், சில பழக்கங்கள் நன்மையும் தரலாம். மெதுவாக உண்பவர்களில் பலர் மெல்லிய உடல் வாகினராக இருக்கிறார்கள்.
மாறாக இன்றைய உலகமானது அவசரமும் நேரநெருக்கடி மிக்கதாகவும் மாறிவிட்டது. பல்வேறு பாராக்குகளுக்கு குறிப்பிட்ட குறுகிய நேரத்திற்குள் கவனம் செலுத்த வேண்டியுள்ளது. அதுவும் அமெரிக்கா போன்ற மேலைநாடுகளில் இதன் தாக்கம் மிக அதிகம். உணவின் சுவையை இரசிப்பதற்கோ, நன்கு மென்று தின்பதற்கோ நேரமின்றி வாயில் போடுவதும் விழுங்குவதுமாக அடித்துப் பிடித்து ஓடுகிறார்கள். இதனால்தானோ என்னவோ அவர்கள் பெரும்பாலும் குண்டுப் பீப்பாக்கள் போலத் தோற்றமளிக்கிறார்கள்.
மெதுவாக உண்ணல் ஆய்வுகள்
அண்மையில் செய்யப்பட்ட ஒரு ஆய்வானது, ஆறுதலாகச் சாப்பிடுவதானது உடல் நலத்திற்கு நன்மை பயக்கும் எனச் சொல்கிறது. 35 அதிக எடையுள்ளவர்களையும் 35 சாதாரண எடை உள்ளவர்களையும் கொண்டு 2 நாட்களுக்கு மட்டும் செய்யப்பட்ட ஆய்வு பற்றிய தகவல் Journal of the Academy of Nutrition and Dietetics  சஞ்சிகையின் ஜனவரி 2ம் திகதி இதழில் வெளியாகியுள்ளது.
அதன் பிரகாரம் சாதாரண எடை உள்ளவர்கள் ஆறுதலாகச் சாப்பிடும்போது வழமையை விட 88 கலோரிகள் குறைவாகவே உள்ளெடுத்திருந்தனர். ஆனால் அதிக எடையுள்ளவர்கள் 58 கலோரிகள் குறைவாக உள்ளெடுத்திருந்தனர். வேறுபாடுகள் இருந்தபோதும் உட்கொண்ட கலோரி வலுவில் குறைவு ஏற்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது. உணவின் அளவு கட்டுப்படுத்தப்படவில்லை. தங்கள் தேவைக்கு ஏற்ப உண்ட போதும் இது நடந்தது.
ஆறுதலாக சாப்பிடுவது என்பது சுமார் 22 நிமிடங்களை எடுத்தது. விரைவாகச் சாப்பிடுவது சுமார் 8 நிமிடங்களை எடுத்தது.
ஆறுதலாகச் சாப்பிடும்போது அதீத எடையுள்ளவர்கள் வழமையை விட 33 சதவிகிதம் அதிகமாக நீர் அருந்தினார்களாம் எனவும் அந்த ஆய்வு கூறியது. அதே வேளை சாதாரண எடையுள்ளவர்களும் சற்றுக் குறைவாக அதாவது 27 சதவிகிதம் அதிகமாக நீர் இருந்தினார்களாம்.
சாப்பிட்டுக் கொண்டிருக்கும் போது இடையில் நீர் அருந்தக் கூடாது என்ற நம்பிக்கை எங்களில் பலரிடையே இருக்கிறது. உணவு சமிபாட்டு நொதியங்களை (enzymes நீர்த்துப் போகச் செய்து சமிபாடடைவதைப் பாதிக்கும் என்பது தவறான கருத்தாகும். மாறாக உதவக் கூடும். உணவுத் துகள்களை சிறியதாக்கி கரையச் செய்வதால் சமிபாடு துரிதமாக்கி விரைவில் உறிஞ்சச் செய்யும் என்பதே உண்மையாகும்.
இந்த இடத்தில் மற்றொரு விடயத்தையும் ஞாபகப்படுத்தலாம். ஒருவர் உணவு உட்கொள்கையில் வயிறு நிறைந்த உணர்வை அவர் பெறுவதற்கு உட்கொள்ள ஆரம்பித்த நேரத்திலிருந்து சுமார் இருபது நிமிடங்கள் மூளைக்குத் தேவைப்படுகிறது என்பதாகும்.
இதைத் தவிர ஜப்பானில் 1700 இளம் பெண்களிடையே செய்யப்பட்ட மற்றொரு ஆய்வும் ஆறுதலாகச் சாப்பிடுவதால் விரைவிலேயே வயிறு நிறைந்த உணவு ஏற்படுகிறது என்றும் அதனால் அவர்கள் உள்ளெடுக்கும் உணவின் கலோரி வலு குறைவாகவே இருக்கிறது எனவும் கூறியது.
University of Rhode Island செய்யப்பட்ட மற்றொரு ஆய்வானது ஆறுதலாக உண்பவர்கள் நிமிடத்திற்கு 28.4 கிராமை உட்கொள்வதாகவும், இடைநடுவான வேகத்தில் உண்பவர்கள் நிமிடத்திற்கு 56.7 கிராமை உட்கொள்வதாகவும், வேகமாக உண்பவர்கள் நிமிடத்திற்கு 88 கிராமை உட்கொள்வதாகவும் கண்டறிந்தது.
நன்மைகள்
இவற்றை அடிப்படையாகக் கொண்டு ஆறுதலாக உண்பதின் நன்மைகளை நாம் சுலபமாக ஊகித்து அறியலாம். ஆறுதலாகச் சாப்பிடும்போது குறைந்த அளவு கலோரிகளே உள்ளெடுக்கப்படுகிறது. இது ஏன்?
விரைவாகச் சாப்பிடும்போது வயிறு நிறைந்த உணர்வு ஏற்படாது. எனவே அதீதமாக உணவை உட்கொண்டுவிடுவார்கள். மாறாக ஆறுதலாகச் சாப்பிடும்போது கொஞ்சம் கொஞ்சமாகவே உணவு உட்கொள்ளப்படுவதால் ஓரளவு உண்ணும்போதே 20 நிமிடங்கள் கடந்துவிடும். அப்பொழுது வயிறு முட்டிப்போச்சு என்பது தெரியவரும். மேலதிகமாக உட்கொள்ள நேராது.
ஆறுதலாகச் சாப்பிடும்போது நீர் அருந்துவதற்கான வாய்ப்பு அதிகம் கிடைப்பதால் உணவின் இடையே அருந்துவார்கள். இதுவும் வயிறு நிறைந்த உணர்வை கொடுத்து உணவின் அளவைக் குறைக்கச் செய்யும்.
நிதானமாகச் சாப்படும்போது நன்கு மென்று உண்ணக் கூடியதாக இருக்கும். மென்று உண்ணுவதால் உணவு சற்று அதிக நேரம் வாயிற்குள் இருக்கும். உணவுச் செரிமானம் எச்சிலில் ஆரம்பித்துவிடுகிறது. எனவே ஆறுதலாகச் சாப்படும்போது உணவு நன்கு சீராணமாகும்.
உணவை ஆறுதலாகச் சாப்பிடும்போது நாம் உண்ணும் அளவு குறையும். அதனால் எடை அதிகரிப்பு தடுக்கப்படும் என்பது உண்மையே.
ஆறுதலாக உண்ணும்போது சுவைகளை சப்புக்கொட்டி ரசிக்க முடிகிறது.
வாசனையை நன்கு நுகர முடிகிறது. உணவு தயாரிக்கப்பட்ட விதத்தையும் அதன் பதத்தையும் உணர்ந்து கொள்ள முடிகிறது. அதனால் மனத் திருப்தி ஏற்படுகிறது.  இதனால் உணவு உண்ணும் செயற்பாடானது மகிழ்ச்சிக்குரியதாக இருக்கும்.
உணவு வேளையை மேலும் மகிழ்ச்சியாக்க நாம் செய்ய வேண்டியது என்ன?
இரசனையோடு உண்ணுங்கள்
மென்மையான இசையை பின்னணியில் இசைக்க வையுங்கள். பளீரெனத் தெறிக்கும் ஒளிகளை அணைத்து மெல்லிய இதமான ஒளியை வையுங்கள். மெழுகு திரி ஒளியில் இரவு உணவு உண்பது அற்புதமான அனுபவமாக இருக்கும். வேறு கவர்ச்சிகரமான விடயங்களில் மனத்தைச் செலுத்தாதீர்கள். தொலைக்காட்சி பார்ப்பது, விவாதங்களில் ஈடுபடுவது போன்றவற்றைத் தவிருங்கள்.
உணவில் மட்டுமே மனத்தைச் செலுத்துங்கள். நாக்கும் மூக்கும் உங்கள் சுiயுணர்வை மிகைப்படுத்தி அரிய அனுபவத்தைக் கொடுக்கும். உணவின் சுவையும் பதமும் உள்ளத்தில் கிளர்ச்சியை ஏற்படுத்தும். திருப்தி கிட்டும்.
மற்றவர்களுடன் சேர்ந்து உண்ணும்போது, இடையில் ஒரு சில நிமிடங்களுக்கு உண்பதைத் நிறுத்தி அவர்களுடன் சில வார்த்தைகள் பேசுங்கள். நேரம் கழியும். விரைவில் வயிறு நிறைந்த உணவு கிட்டிவிடும். ஆயினும் கவர்ச்சிகரமான விடயங்களை ஆரம்பித்து அதில் மூழ்கி உண்ணும் அளவை மீறிவிடாதீர்கள்.
நன்கு சாப்பிட்டு வயிறு நிறைந்திருக்கும் தருணத்தில்தானே பொதுவாக ஈற்றுணவு (னநளளநசவ) வருகிறது. இருந்தபோதும் ஈற்றுணவின் இனிப்பும் நறுமணமும் நிறைந்த வயிறு நிறைந்ததை மறக்க வைக்கும். மீண்டும் அவற்றைச் சாப்பிடத் தூண்டும். எனவே உணவு முறையில் ஒரு தலைகீழான மாற்றத்தை ஏற்படுத்துங்கள்.
முதலில் ஈற்றுணவை சுவையுங்கள். கேக் அல்லது புடிங் போன்ற எது கிடைத்தாலும் சிறுகக் கடியுங்கள. அதன் சுவையில் நனைந்த பின்னர் முக்கிய உணவிற்கு செல்லுங்கள். தேவையற்ற கலோரிகளை உள்ளெடுப்பதை இதனால் தடுக்க முடியும்.
பழங்களும் காய்கறிகளும் நிறைந்த உணவுகளைத் தேர்ந்தெடுங்கள். இவற்றைச் சப்பிச் சாப்பிட கூடிய நேரம் தேவைப்படுவதால் நீங்கள் ஆறுதலாகவே சாப்பிட முடியும். அது முற்கூறிய நன்மைகளைத் தரும்.
உணவு உட்கொள்ளும் பாத்திரத்தை சிறிதாகத் தேர்ந்தெடுங்கள். இதனால் நீங்கள் உங்கள் கோப்பையில் பகிரும் உணவு மட்டுப்பட்டிருக்கும். அதனால் உண்ணும் அளவு குறையும்.
மெதுவாகச் சாப்பிடுங்கள் என்பது சொல்வதற்கு சுலபம் ஆனால் மும்மரமான வேலையில் இருக்கும் போது ஆற அமர இருந்து சாப்படுவது கடினம்தான். ஆனால் உணவு நேரங்களை ஒழுங்குமுறையில் கடைப்பிடித்து நேரம் தவறாது உண்ணுங்கள். ஒழுங்கு முறையைக் கடைப்பித்தால் நேரம் ஒதுக்குவதில் சிரமமிருக்காது. ஒவ்வொரு உணவு வேளைக்கும் குறைந்தது 20 நிமிடங்கள் முதல் 30 நிமிடங்கள் வரை ஒதுக்குங்கள்.
அத்துடன் ஒரு நேர உணவிற்கும் அடுத்த உணவிற்கும் இடையே நீண்ட இடைவெளி இருக்காமல் பார்த்துக் கொள்ள வேண்டியது அவசியமாகும்.
மெதுவாகச் சாப்பிடுங்கள். நலம் மிக்க மெல்லிய உடலினராய் மாறி மகிழுங்கள்.

நன்றிகள்.