Monday, 30 July 2012

மூக்கு குத்துவது...............!

மூக்கு குத்துவது, காது குத்துவது துளையிடுவது உடலில் உள்ள வாயுவை (காற்றை) வெளியேற்றுவதற்கு.


கைரேகை, சோதிடம் பார்ப்பவர்கள் ஆண்களுக்கு வலது கையும் பெண்களுக்கு இடதுகையும் பார்த்து பலன் கூறுவது வழக்கம். ஆண்களுக்கு வலப் புறமும் பெண்களுக்கு இடப் புறமும் பலமான, வலுவான பகுதிகளாகும். 

ஞானிகளும் ரிசிகளும் தியானம் செய்துபோது வலது காலை மடக்கி இடது தொடை மீது போட்டு தியானம் செய்வார்கள். இதற்கு காரணம் இடது காலை மடக்கி தியானம் செய்யும் போது வலது பக்கமாக சுவாசம் போகும். வலது என்றால் தமிழில் வெற்றி என்று பொருள். வலது பக்கமாக சுவாசம் செல்லும்போது தியானம்,பிராத்தனை எல்லாம் கண்டிப்பாக பலன் தரும்.

இந்த நாடியை அடக்குவதாக இருந்தால் வலது பக்க சுவாசத்திற்கு மாற்றவேண்டும். அதே மாதிரி ஒரு அமைப்புத்தான் மூக்குத்தி.

நமது மூளைப் பக்கத்தில் ஹிப்போதெலமஸ் (Hippotelamas) என்ற பகுதி இருக்கிறது. நரம்பு மண்டலங்களை கட்டுப்படுத்தக் கூடிய, செயல்படக் கூடிய அளவு சில பகுதிகள் உள்ளன.

அந்தப் பகுதியில் சில உணர்ச்சி பிரவாகங்கள் உள்ளன. இதனைச் செயல்படுத்துவதற்கு அந்தப் பகுதி துணையாக இருக்கிறது. இப்படி இந்தப் பகுதியை அதிகமாக செயல் படுத்துவதற்கும் பெண்ணின் மூக்கில் இடது பக்கத்தில் குத்தக்கூடிய முக்குத்தி வலது பக்க மூளையை நன்றாக செயல் படவைக்கும்.

இடது பக்கத்தில் முளை அடைப்பு என்றால் வலது பக்கத்தில் நன்கு வேலை செய்யும். வலது பக்கம் அடைத்தால் இடது பக்கம் உள்ள மூளை அதிகமாக இயங்கும்.

இன்றைய நம்முடைய மனித வாழ்க்கைக்கு அதிகமாக இந்த இடது பக்க மூளையை அடைத்துவலது பக்கமாக வேலை செய்ய வைக்கிறோம். அதனால் வலது கை, வலது கால் எல்லாமே பலமாக உள்ளது.

பெண்கள் முக்குத்தி அணியும்போது, முன் நெற்றிப் பகுதியில் இருந்து ஆலம் விழுதுகள் போல்சில நரம்புகள் நாசி துவாரத்தில் இறங்கி கீழே வரும். இப்படி விழுதுகள் மூக்குப் பகுதியிலும், சவ்வு போல மெல்லிய துவாரங்களாக இருக்கும்.

ஆலம் விழுதுகள் போல உள்ள மூக்குப் பகுதியில் ஒரு துவாரத்தை ஏற்படுத்தி அந்த துவாரத்தில் தங்க முக்குத்தி அணிந்தால், அந்த தங்கம் உடலில் உள்ள வெட்பத்தை கிரகித்து தன்னுள்ளே ஈர்த்து வைத்துக் கொள்ளும் சக்தியைப் பெறும். அதுமட்டுமல்ல, மூக்கின் மடல் பகுதியில் ஒரு துவாரம் ஏற்பட்டால் அதன் மூலம் நரம்பு மண்டலத்தில் உள்ள கெட்ட வாயு அகலும். 

பருவப் பெண்களுகே முக்குத்தி அணிவிக்கப்ப்டுகிறது. பருவ வயதை அடைந்த பெண்களுக்கு கபாலப் பகுதியில் அதாவது, தலைப்பகுதியில் சிலவிதமான வாயுக்கள் இருக்கும்.இந்த வாயுக்களை வெளிக்கொண்ருவதற்கு ஏற்படுத்தட்டதுதான் இந்த மூக்கு குத்துவது.

மூக்கு குத்துவதால் பெண்களுக்கு ஏற்படக்கூடிய சளி, ஒற்றைத் தலைவலி, மூக்கு சம்பந்தமான தொந்தரவுகள், பார்வைக் கோளாறு சரி செய்யப்படுகின்றன். 

இடப்பக்கம்தான் பெண்கள் மூக்குத்தி அணியவேண்டும். இடது பக்கம் குத்துவதால் சில மாற்றங்கள் ஏற்படும். சிந்தனா சக்தியை ஒரு நிலைப்படுத்துகிறது. மனதை அமைதிப்படுத்துகிறது. தியானம், பிராத்தனையில் ஈடுபட உதவுகிறது.

நன்றிகள்.

Sunday, 29 July 2012

நாக்கில் நாகரீகம்............!

கைப்பைக்கு சிப் வைத்துத் தைப்பார்கள். கால் சட்டையில் சிப் வைத்துத் தைப்பார்கள். பிரயாணப் பகளிற்கு சிப் வைத்துத் தைப்பார்கள். ஆனால் நாக்கை இரண்டாக நறுக்கி அதில் சிப் வைத்துத் தைப்பதை நீங்கள் பார்த்திருக்கின்றீர்களா? மேலே உள்ள படத்தை மீண்டுமொருமுறை நன்றாகப் பார்துக்கொள்ளுங்கள்.


தற்போது நாகரீகம் நாக்குக்கும் தாவியுள்ளது,இறைவன் அழகாகத் தந்துள்ள இந்த நாக்கை இவர்கள் நெடுக்கு முகமாக வெட்டி அதில் சிப்வைத்துத் தைத்துக்கொண்டு பெருமையோடு வீதியெங்கும் உலா வருகின்றனர்.

இப்படி நாக்கை வெட்டி சிப்வைத்துத் தைப்பதற்கென்றே மேலைநாடுகளில் சில மருத்துவமனைகள் இருக்கின்றன.நாக்கை வெட்டிக்கொள்ள வருகின்ற பெண்கள் மிகவும் தைரியசாலிகள்.

இவர்களிற்கு மருத்துவர்கள் மயக்க ஊசி போடுவதுமில்லை. இரண்டுபேர் இருபுறமிருந்து பிடித்துக்கொள்வர்.மருத்துவர் நாக்கைப் பிடித்து வெளியே இழுத்தேடுப்பார்.பின்பு ஒரு கூர்மையான கத்தியால் நாக்கின் நடுப்பகுதியை கரகரவென்று அறுத்துவிட இரத்தம் பொங்கி வழியும்.

ஆனாலும் அப்பெண்கள் வலியைத் தாங்கிக்கொண்டு தைரியமாக அசையாமல் நிற்பார்.பிறகு வெட்டிப் பிரிக்க்கப்பட்ட நாக்கில் சிப் வைத்துத் தைத்துவிடுவார் மருத்துவர்.சில நாட்களுக்குப் பின்னர் நாக்கில் ஏற்பட்ட காயம் ஆறிவிடும்.சிப்பும்பிரச்சனையின்றி நாக்கோடு ஒத்துப்போகும். 

அப்பெண்ணும் பெருமையோடு நாயைப் போன்று நாக்கைத் தொங்கப்போட்டபடி வளைய வருவார். இதுதான் இவர்களுடைய அசிங்கமான நாகரிகமாகும்.நாக்கு நமது உடலின் உள்ள எலும்பு இல்லாத உறுப்பாகும்.நாக்கு நன்றாக இருந்தால்தான் அழகாகவும், மென்மையாகவும் பேசமுடியும்.

நாம் உண்ணும உணவை மென்று அரைப்பதற்கும் நாக்கு மிகவும் உதவியாக இருக்கிறது.சுவை நரம்புகளும் நாக்கில்தான் இருக்கின்றன.நாக்கு இல்லையென்றாலோ அல்லது இதுபோன்று நாக்கைச் செதப்படுத்திக் கொண்டாலோ இனிப்போ, கசப்போ ஒன்றும் விளங்காது.

இப்படிப் பலவகையிலும் பயனளிக்கும் நாவை மனிதன் இவ்வாறெல்லாம் நாசம் செய்துகொள்வது எவ்வளவு பெரிய முட்டாள்தனம்.இதற்கு நாகரீகம் என்றும் பெயராம்.

நாக்கில் சிப் வைத்துத் தைப்பதற்குப் பதிலாக இரண்டு உதடுகளிற்கும் சிப் வைத்துத் தைத்தாலாவது ஓயாமல் பேசி உயிரை வாங்குபவர்களிடமிருந்து தப்பிக்கொள்ளலாம்.

நன்றிகள்.

Saturday, 28 July 2012

எண்ணல் அளவை.....................!

ஒன்றிலிருந்து கோடி வரை அனைவரும் அறிந்தவையே....கோடிக்கு பிறகான எண்களின் பெயர்களை தெரிந்து கொள்ளுங்கள்.

10 கோடி - 1 அற்புதம்

10 அற்புதம் - 1 நிகற்புதம்

10 நிகற்புதம் - 1 கும்பம்

10 கும்பம் - 1 கணம்

10 கணம் - 1 கற்பம்

10 கற்பம் - 1 நிகற்பம்

10 நிகற்பம் - 1 பதுமம்

10 பதுமம் - 1 சங்கம்

10 சங்கம் - 1 சமுத்திரம்

10 சமுத்திரம் - 1 ஆம்பல்

10 ஆம்பல் - 1 மத்தியம்

10 மத்தியம் - 1 பரார்த்தம்

10 பரார்த்தம் - 1 பூரியம்

நன்றிகள்.

Thursday, 26 July 2012

கைவிளக்கு ஏந்திய காரிகை.................!



















செவிலியர்கள் என அழைக்கப்படும் தாதியர்கள் சமூகத்திற்கு ஆற்றும் பங்களிப்பை சிறப்பாக நினைவுகூரும் வகையில் உலக செவிலியர் தினம் வருடாந்தம் மே மாதம் 12ஆம் தேதி கடைப்பிடிக்கப்பட்டு வருகின்றது.

உலக செவிலியர் தினம் (International Nurses Day)தோன்றிய வரலாறு.

உலக செவிலியர் அமைப்பு ஒவ்வொரு ஆண்டும் மே 12ஆம் தேதி இந்த நாளை 1965ஆம் ஆண்டிலிருந்து நினைவுகூருவது வழக்கம்.

1953ஆம் ஆண்டு, ஐக்கிய அமெரிக்காவின் அரச சுகாதாரத் துறையைச் சேர்ந்த அதிகாரியான டொரத்தி சதர்லாண்ட் என்பவர் இந்த நாளை செவிலியர் நாளாகப் பிரகடனப்படுத்தும்படி வேண்டுகோள் விடுத்தார். எனினும் அவரது வேண்டுகோள் அன்று நிராகரிக்கப்பட்டது.

1974 ஆம் ஆண்டு ய(ஜ)னவரி மாதம் நவீன தாதியியல் முறையை உருவாக்கிய இங்கிலாந்தைச் சேர்ந்த புளோரன்சு(ஸ்) நைட்டிங்கேள் பிறந்த நாளான மே 12 ஆம் நாளை சிறப்பாக நினைவுகூர முடிவு செய்யப்பட்டது. அன்றைய நாளை உலக செவிலியர் தினமாக கடைப்பிடிப்பதற்கு முடிவு செய்யப்பட்டது. அதன்படியே வருடாந்தம், மே மாதம் 12ஆம் திகதி உலக செவிலியர் தினம் கடைப்பிடிக்கப்பட்டு வருகின்றது.

இன்றைய நர்சிங் முறை 19ம் நூற்றாண்டில் தான் துவங்கியது என்றாலும் ரோமானியர்கள் காலத்தில் காயங்களுக்கு கட்டுப் போடும் வேலையில் பெண்கள் அமர்த்தப்பட்டதாக வரலாறு கூறுகிறது. "நர்சிங்'("Nursing") என்ற வார்த்தை "நியுடிரிசியா' ("Niyutiriciya") என்ற லத்தீன் சொல்லில் இருந்து தான் வந்தது.

இதற்கு "உணவு மற்றும் மருந்து வகைகளை அன்புடன் நமக்கு ஊட்டி ஊக்கப்படுத்துபவர்!' என்று பொருள். உலகில், நர்சுகளுக்காக முதன் முதலில் ஒரு பயிற்சி பள்ளியைத் துவங்கியவர் இத்தாலியை சேர்ந்த பிளாரன்ஸ் நைட்டிங்கேல்.

தன் 17வது வயதில் கல்லூரி படிப்பை முடித்தார் நைட்டிங்கேல். அவருக்கு ஊர் சுற்றுவதில் அலாதி பிரியம் இருந்தது. அதேசமயம் அரசியல் மற்றும் சமூக சேவையிலும் நாட்டம் இருந்தது. ஆனால், அவருடைய பெற்றோர் அவரை மருத்துவ துறையில் ஈடுபடுத்தவே விரும்பினர்.

1847ல் சுகாதார சீர்திருத்தங்கள் பற்றிய படிப்பை படித்தார் நைட்டிங்கேல். அதில் மேலும் பயிற்சி பெற, பெர்லின் மருத்துவமனைகளுக்கு சென்று பார்வையிட்டார். யெர்மனியில் உள்ள கெய்சர்வெர்த் மருத்துவமனையில் 1850ல் இருவாரங்கள் தங்கி பயிற்சியில் நைட்டிங்கேல் ஈடுபட்ட போது தான் அவருக்கு செவிலியர் தொழில் மீது ஆர்வம் வந்தது.

அதன்பின் செவிலியர் பயிற்சி தான் தன் லட்சியம் என உறுதி கொண்டு, பெற்றோர் சம்மதத்துடன் 1852ல் பாரீசி(ஸி)ல் உள்ள "அற சகோதரி" ("Sister of charity')யில் தாதிப்(Nursing) பயிற்சி பெற்றார்.

இங்கிலாந்தும், பிரான்சும் சேர்ந்து ரசியாவிற்கு எதிராக 1854ல் நடத்திய கிரீமியன் போரில் அடிபட்ட ராணுவ வீரர்களுக்கு சிகிச்சை அளிப்பதில் ஈடுபட்டிருந்த கிங்காலேஜ் மருத்துவமனையின் தலைமை பொறுப்பில், காயம்பட்ட வீரர்களுக்கு நேரம், காலம் பார்க்காமல் முழு ஈடுபாட்டுடன் செய்தார் நைட்டிங்கேல்.

இதனால், அவர் பெயர் உலகெங்கும் பரவியது. பின்னர், இங்கிலாந்து திரும்பிய நைட்டிங்கேலை இங்கிலாந்து மக்கள் கவுரவபடுத்த விரும்பினர். அதனால், ஏகப்பட்ட பரிசுகளை பொன்னும், பொருளாக வழங்கினர். தனக்கு கிடைத்த பணத்தின் மூலம் ஒரு தாதிப்பள்ளி துவங்க நைட்டிங்கேல் விரும்பினார். 

இதற்கிடையில் இங்கிலாந்திலுள்ள அனைத்து மருத்துவமனைகளுக்கு தாதிப் பிரிவின் ஆலோசகராக நியமிக்கப்பட்டார் நைட்டிங்கேல். 1858ல் நைட்டிங்கேல் "தாதிகளின்' (Nursing) விதிமுறைகளையும், பாட திட்டங்களையும் பற்றிய இரு நூல்களை எழுதினார்.

அதுவே, பின் உலகெங்கும் தாதிகள் பற்றிய படிப்பிற்கு மூல நூலாக இன்று வரை இருந்து வருகிறது. நைட்டிங்கேலின் லட்சிய கனவான உலகின் முதல் தாதிகளின் பள்ளி 1860ல் யூன் மாதம் லண்டனில் தேம்சு(ஸ்) நதிக்கரையில் 15 பயிற்சியாளர்களுடன் துவங்கப்பட்டது.

இரண்டு வருட தாதிப் பயிற்சியில் மருத்துவ அறிவு, சேவை மனப்பான்மை முதலியவை சொல்லி கொடுக்கப்பட்டது. அதன்பின் அம்முறை உலகெங்கும் 1860 முதல் 1893 வரை பரவி உலகெங்கும் தாதிப் பள்ளிகள் துவங்கின. 

இந்தியாவில் முதன், முதலாக தாதிகளின் கல்லூரி சென்னை பொது மருத்துவமனையில் 1871ல் துவங்கப்பட்டது. இங்கிலாந்திலிருந்து தாதிப் பயிற்சி தர தாதிகள் வரவழைக்கப்பட்டனர். அவர்கள் ஆறு பேருக்கு இந்தியாவில் தாதிப் பயிற்சி அளித்து சான்றிதழ்கள் வழங்கினர்.

கஸ்தூரிபாய் கணபத் எனும் பெண்மணி, இந்தியாவில் முதன் முதலாக தாதிப்பயிற்சியை 1891ல் அளித்தார். இவர் தான் முதன் முதல் இந்திய தாதிப் பயிற்சியாளர். மும்பையில் 1909ல் முதன் முதலாக தாதிப் பயிற்சி சங்கம் (Association) துவங்கப்பட்டது.

பிளாரன்சு நைட்டிங்கேலின் செவிலியர் சேவையைப் பாராட்டி இங்கிலாந்து அரசு அந்நாட்டின் உயரிய விருதான ஆர்டர் ஆப் மெரிட்டை (Oder of Merit) 1907ல் எட்வர்ட் மன்னர் மூலம் அவருக்கு வழங்கியது. இங்கிலாந்தில் இவ்விருதை பெற்ற முதல் பெண்மணி நைட்டிங்கேல் தான்.

இவருக்கு "கைவிளக்கு ஏந்திய காரிகை' என்ற சிறப்பு பட்டத்தை வழங்கியவர் ஒரு நோயாளி என்பது குறிப்பிடத்தக்கது. பிளாரன்சு நைட்டிங்கேல் லண்டனின் ஆபே எனுமிடத்தில் ஆக., 13, 1910ல் காலமானார்.

டாக்டர் பட்டம் பெறுபவர்கள் மருத்துவ துறையின் தந்தை ஹிப்போகிரேட்ஸ் பெயரில் சத்திய பிரமாணம் எடுத்து கொள்வர். நர்சிங் தொழில் செய்பவர்கள் பிளாரன்சு நைட்டிங்கேலின் பெயரில் சத்திய பிரமாணம் எடுத்து கொள்வர்.

நன்றிகள்.

Wednesday, 25 July 2012

கறிவேப்பிலைக்கு புற்றுநோயை.......!

















கறிவேப்பிலை சாப்பிட்டால் புற்றுநோய் வராதாம்! பொதுவாக கறிவேப்பிலை உணவில் வாசனையை தர பயன்படுகிறது என்று தான் அனைவருக்கும் தெரியும்.

அதனால் தான் என்னவோ சாப்பிடும்போது உணவில் கிடக்கும் கறிவேப்பிலையை எடுத்து கீழே போட்டுவிடுகிறோம். இனிமேல் அப்படி செய்ய வேண்டாம். ஏனென்றால் கறிவேப்பிலை சாப்பிட்டால் புற்றுநோய் வராது என்று சமீபத்திய ஆய்வில் தெரிய வந்துள்ளது.

கறிவேப்பிலையில் கோயினிஜாக், குளுகோசைட், ஒலியோரெசின், ஆஸ்பர்ஜான் சொரின், அஸ்பார்டிக் அமிலம், அயாமைன், புரோலைன் போன்ற அமினோ அமிலங்கள் மற்றும் வைட்டமின் ஏ, பி, சி, கால்சியம் போன்றவைகளும் உள்ளன.

இதனால் இதில் பல்வேறு மருத்துவ குணங்கள் இருப்பதோடு, நல்ல மணத்தையும் தருகிறது.

இத்தகைய குணங்கள் நிறைந்த கறிவேப்பிலை குறித்து ஆஸ்திரேலிய உணவியல் அறிஞர்கள் ஆய்வு செய்தனர். இதில் கறிவேப்பிலைக்கு புற்றுநோயை ஆரம்பித்திலேயே கொல்லும் ஆற்றல் உள்ளது என்று கண்டறிந்துள்ளனர்.

மேலும் இது ஒரு சிறந்த ஆன்டிஆக்ஸிடென்டாக இயங்குகிறது என்றும் கூறுகின்றனர். கருவேப்பிலை சாப்பிடுவதால் இதய நோய் வராது, மேலும் ஞாபக சக்தியும் அதிகரிக்கும் என்று கூறப்படுகிறது.

மேலும் கறிவேப்பிலையையும், கடுகையும் தாளிக்க பயன்படுத்தினால் நன்மை உண்டா?

என்று திருவனந்தபுரத்திலுள்ள கேரளா பல்கலைக்கழகத்தில் மருத்துவ குழுவினர் ஆராய்ந்தனர். அதில் கறிவேப்பிலையும், கடுகும் நமது திசுக்களை அழிவிலிருந்து பாதுகாக்கிறது என்றும், பிரிரேடிக்கல்ஸ் உருவாவதை தடுக்கிறது என்றும் கண்டுபிடித்துள்ளனர்.

மேலும் பிரிரேடிக்கல்ஸ் உருவாவதால் தான் டி.என்.ஏ. பாதித்து செல்களிலுள்ள புரோட்டின் அழிந்து, அதன் விளைவாக புற்றுநோய், வாதநோய்கள் வருகின்றன என்றும் கண்டறிந்துள்ளனர்.

இது தவிர நீரிழிவு நோயாளிகள் தினமும் கறிவேப்பிலை இலையை மென்று சாற்றை விழுங்கி வந்தால் மாத்திரை சாப்பிடும் அளவு பாதியாக குறையும் என்றும் மருத்துவர்கள் கூறுகிறார்கள்.

நன்றிகள்.

Monday, 23 July 2012

கோவைக்காயின் பயன்கள்.....................!

நீரிழிவு நோய் இருக்கா? கோவைக்காய் சாப்பிடுங்க...



இன்றைய தலைமுறையினர் நீரிழிவு நோயால் அதிகம் பாதிக்கப்பட்டிருக்கிறார்கள். அவர்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகமாகிக் கொண்டே வருகிறது. இதற்கு நாம் நமது உணவு பழக்கவழக்கத்தில் சிறிது கவனம் செலுத்தினால் போதும்.

இந்த நோயிலிருந்து இலகுவாகத் தப்பிக்க கோவைக்காய் சாப்பிட்டா போதும். கோவைக்காயை நிறைய பேர் பாகற்காயை ஒதுக்குவது போல உணவில் சேர்த்துக் கொள்ளாமல் ஒதுக்கி விடுகிறார்கள்.

அவர்கள் நாக்கு சுவையை மட்டுமே கருதாமல் உடல் நலத்தையும் கருத்தில் கொண்டால் எல்லா உணவுகளும் விருப்பமுடையதாகத் தான் ஆகும்.

கோவைக்காய் கொஞ்சம் துவர்ப்பு சுவையுடையது. இதை பொறியல், கூட்டு, சாம்பார் என்றெல்லாம் பலவிதமாக செய்து சாப்பிடுவார்கள்.

ஆனால் இதில் கோவைக்காய் பச்சடி தான் சிறந்த மருத்துவ குணமுள்ள உணவு. இது நீரிழிவு நோயாளிகளின் ரத்தத்தில் சேரும் சர்ககரை அளவைக் கட்டுப்படுத்தும்.

பரம்பரையாக நீரிழிவு நோய் இருப்பவர்கள் உணவில் கோவைக்காயை 35 வயது முதலே சேர்த்துக் கொண்டால் நீரிழிவு நோய் வராமல் தடுக்கலாம்.

பச்சையாகவே கோவைக்காயை மென்று துப்பி விட்டாலே வாய்ப்புண் ஆறிடும். வாரம் 2 நாள் கோவைக்காயை சேர்த்துக் கொண்டால் வயிற்றுப் புண் சரியாகும்.

கோவைக்காயை பீன்ஸ் போல பொறியல் செய்து சாப்பிட்டாலும் சுவையாக இருக்கும்.

மோருடன் ஒரே ஒரு கோவைக்காயை எடுத்து சேர்த்து அரைத்து குடித்தாலும் மேற்சொன்ன எல்லாப் பலன்களையும் பெறலாம்.

ஆகவே கோவைக்காய் சாப்பிடுங்க!!! நீரிழிவு நோயை தடுங்க!!!

நன்றிகள்.

Sunday, 22 July 2012

பெண்கள் அணியும் தாலியின் மகிமை.......!

பெண்கள் அணியும் தாலியின் மகிமை – ஒன்பது இழைத் தத்துவம்!! 


இந்துக்களுக்கு மஞ்சள் நிறம் புனிதமான நிறம் என்பதால் அந்தத் திருமணப் பரிசும் மஞ்சள் நிறத்தில் தரப்பட்டது என்று விளக்குகிறார்கள், தமிழர் திருமணங்களில் ஆரம்பத்தில் தாலி இருந்ததாக, இலக்கியங்களில் குறிப்பிடப்படவில்லை.

சங்க காலத்தின்போது நடந்த திருமணங்களில் புதுமணல் பரப்பி, விளக்கு ஏற்றி, வயதில் மூத்தபெண்கள், மணப்பெண்ணை நீராட்டி வாழ்த்தி அவள் விரும்பியவனுடன் அவளை ஒப்படைத்தனர். நாளடைவில் “”தாலம்” என்ற பெயர்தான் தாலியாகமாறியிருக்கிறது.

பதினோராம்நூற்றாண்டில்தான் திருமணச் சின்னம்என்ற ரீதியில் தாலி என்ற பெயர் உபயோகப்படுத்தப் பட்டது என்கிறது உலகத் தமிழ் ஆராய்ச்சி நிறுவனம்வெளியிட்டிருக்கும் “”தமிழர் திருமணம்” என்கிற புத்தகம்.மாங்கல்யச் சரடானது ஒன்பது இழைகளைக் கொண்டது.ஒவ்வொரு இழைகளும் ஒவ்வொரு நற்குணங்களைக் குறிக்கிறது.

1.தெய்வீகக் குணம்
2.தூய்மைக் குணம்
3.மேன்மை,தொண்டு
4.தன்னடக்கம்
5.ஆற்றல்
6.விவேகம்
7.உண்மை
8.உள்ளதை உள்ளபடி புரிந்து கொள்ளுதல்
9.மேன்மை

இத்தனைக் குணங்களும் ஒரு பெண்ணிடம் இருக்க வேண்டும் என்பதற்காகத்தான் ஒன்பது இழைகள் கொண்ட திருமாங்கல்யச்சரடு அணியப்படுகிறது.

திருமணம் என்பது ஓர் உன்னதமான நாள் ஆகும். இல்வாழ்வில் இணையும் மணமக்களை ஆல் போல் தழைத்து! அருகு போல் வேரூன்றி! மூங்கில் போல் சுற்றம் சூழ வாழ்வீர்கள் என பெரியோர்கள் வாழ்த்த நடைபெறும் திருமணத்தை ஒரு பொன் நாள் ஆக அமைத்து கொள்வது ஒவ்வொருவரின் கடமை ஆகும்.

நன்றிகள்.

Saturday, 21 July 2012

உணவு செரியா நிலை.....................!

உணவு செரியா நிலை ஏன் உண்டாகிறது?

முப்பது முதல் 32 அடி நீளமுள்ள தொடர்ந்து குழாயாய் அமைந்துள்ள செரிமானப்பாதை (alimentary canal) என அழைக்கப் படும், அற்புதமான திகைக்கச் செய்யும் பொறிவல்லாளராகச் செயலாற்றி வரும் ஒழுங்கில், குறுக்கீடு செய்வது உணவு செரியா நிலையைக் கொண்டு வருகிறது.

இந்த முறை ஒழுங்கில், உணவு சிதைக்கப்பட்டு, கடையப்பட்டு, குழம்பாக்கப்பட்டு, கரைந்து, வேதியியல் செயலால் எளிய கலவையாகப் பிரிக்கப்பட்டு, குருதியில் ஏற்றுக்கொள்ளும் நிலைபெற்ற பின் குருதி உறிஞ்சிக் கொள்கிறது.

செரிமானப்பாதை மெல்லிய படலத்தால் (membrance) ஆனது. எலும்பு, குருத்தெலும்பு, விலங்கு, காய்கறிப் பொருள்கள், ஆகியவை இந்த மெல்லிய படலத்தைவிட வலுவாயுள்ளவை கரடுமுரடானவை.

ஆனால் இவற்றைக் கரைக்கும் வேதியியற் பொருளைத் தடுத்து நிறுத்தும் தன்மையை இம்மெல்லிய படலம் கொண்டிருக்கிறது. உணவுச் செரித்தலைச் செய்யும் தலையாய பொருள்களுள் ஒன்றான இரைப்பை நீர் (gastric juice) செறிவான ஹைட்ரோ குளோரிக் அமிலத்தை (concentrated hydrochloric acid) உடையது.

இது சில நிமிடங்களில் வேகவைத்த முட்டையைக் கரைத்து ஈர்த்துக் கொள்ள வல்லது.

இது ஏன் இரைப்பையைக் கரைப்பதில்லை? இரைப்பை அமிலத்தை மட்டும் கசியச் செய்யாமல் கடினத்தன்மையை எதிர்த்து நின்று சமப்படுத்தும் காரப் பொருளான (alkali) அமோனியா (ammonia)வையும் தரும்போது, சரிக்கட்டு இயக்கியாக (neutrazling agent) அமைவதால், அந்த அமிலம் இரைப்பையைக் கரைப்பதில்லை.

இந்தச் சக்தி வாய்ந்த இரைப்பை நீர் தடங்கல் செய்யப்படுவதற்குப் பல காரணங்கள் உண்டு. அவ்வாறு முட்டுக்கட்டையிடப்படும்போது இரைப்பையில் வலி விளைகிறது. இதனையே உணவு செரியா நிலை என அறிகிறோம்.

உணவூட்டக் கால்வாய்க் குழாய் உணவு பெறுவதற்காக தயாரிப்பை உணவுக்கு முன்பே முன்னேற்பாடு செய்து வைத்துக் கொள்கிறது. உணவுப் பொருளின் தோற்றம், மணம், உணவைப் பற்றிய எண்ணம் ஆகியவை வாயூறலையும், இரைப்பை நீர் சுரப்புத் தூண்டலையும் செய்யத் தொடங்கி விடுகின்றன.

அதே சமயத்தில் உணவை நோக்கி இரைப்பை, சுரப்பிகளை (glands)த் தொழில் செய்வதற்கேற்ப நுண்புழை நாளங்களை (capillaries) அகலப்படுத்தி உணவு செரிப்பதற்கான செய்கைகளைச் செய்வதற்குத் தேவையான அதிகக் குருதியைக் கொண்டு வருவதற்கு வழி வகுக்கிறது.

ஆனால் பசியில்லாமல் உண்ணல், ஏற்றுக்கொள்ள இயலாத கூட்டு, கவலை, கோபம், பயம், நமைச்சலூட்டல் போன்ற உணர்ச்சிகள் இரைப்பையில் தயாரிப்பை நிறுத்தக்கூடும். இவை இரைப்பையை வெளிறச் செய்ய (pale)வும் கூடும். அதன் விளைவு உணவு செரியாமல் போகும்.

மிக விரைவாக உணவை வாயிலிட்டு அரைக்காமல் உண்பதும் செரிமானமாவதற்குத் துன்பமாக அதிக உணவை உண்பதும் பெருஞ்சுமையாகவும் ஒழுங்கைக் கெடுக்கும் தன்மையுடையதாகவும் செய்து நமக்கு உணவு செரியாத் தன்மையைக் கொடுக்கும்.

நன்றிகள்.

Friday, 20 July 2012

விசேட படம்................!.

Free Image Hosting


 பட்டதும்சுட்டதும் வாசகர்கள் அனைவரிற்குமான விசேட படம்.

Thursday, 19 July 2012

வானம் நீல நிறத்தில் ..................!


குறைந்த அதிசிறந்த இக்கேள்விக்கு விடை தேடுவதற்கு முன்பாக ஒன்றை நினைவில் வைத்துக்கொள்ளுங்கள். ஒரு வெள்ளை நிறக் கதிரானது ஊதா, கருநீலம், நீலம், பச்சை, மஞ்சள், செம்மஞ்சள், சிவப்பு என ஏழு வகையான கதிர்களை உள்ளடக்கியதாகும்.

ஒவ்வொரு கதிருக்கும் வெவ்வேறு அலைநீளமும், அதிர்வெண்ணும் உண்டு. (இதெல்லாம் நீங்கள் சின்ன வயதில் படித்தது தான்!). சூரியக்கதிர்கள் அண்டத்தில் நேர்க் கோட்டில் பயணிக்கும். அப்படிப் பயணிக்கும் போது ஒரு மூலக்கூற்றையோ, தூசியையோ எதிர்கொள்ளும் வாய்ப்புகள் உண்டு அல்லவா? அத்தூசியின் தன்மையைப் பொறுத்து கதிர்களின் செயல்பாடு மாறுபடுகிறது.

சூரியக்கதிர்கள் நம் காற்று மண்டிலத்தின் தூசித்துகள்கள் மீது மோதும் பொழுது அவை பெரும்பாலும் அப்படியே எதிரொளிக்கப்படுகின்றன. எதிரொளிக்கப்பட்ட கதிர்கள் வெள்ளை நிறத்திலேயே தோற்றமளிக்கும்.

இதற்குக் காரணம் தூசித் துகள்கள் கதிர்களை உட்கொள்ளாமல் அப்படியே விட்டுவிடுகின்றன. எனவே கதிர்கள் அப்படியே எதிரொளிக்கப்படுகின்றன. ஆனால் காற்று மூலக்கூறுகள் மீது மோதும் பொழுது, இதற்கு நேர்மாறாகக் காற்று மூலக்கூறுகள் அதில் பெரும்பான்மையான கதிர்களை உட்கொள்கின்றன.

இதில் அதிக அலைநீளம் கொண்ட கதிர்கள் (சிவப்பு) தப்பிப் போய் விடுகின்றன. ஆனால் குறைவான அலைநீளம் கொண்ட கதிர்களை (நீலம்) காற்று மூலக்கூறுகள் விடாமல் உட்கொள்கின்றன.

இவ்வாறு உட்கொள்ளப்பட்ட நீல நிறம் கதிர் வீச்சடைந்து பல திசைகளில் சிதறடிக்கப்படுகிறது. இதனால் தான் நமக்கு வானம் நீல நிறத்தில் தோற்றமளிக்கின்றது.

நன்றிகள்.

Wednesday, 18 July 2012

இன்பத் தமிழ் ...........!

இன்பத் தமிழ் !


தமிழுக்கு அமுதென்று பேர் ! - அந்தத்
தமிழ் இன்பத் தமிழ்எங்கள் உயிருக்கு நெர் !
தமிழுக்கு நிலவென்றுபேர் ! - இன்பத் 
தமிழ் எங்கள் சமூகத்தின் விளைவுக்கு நீர் !
தமிழுக்கு மணமென்று பேர் ! - இன்பத்
தமிழ் எங்கள் வாழ்வுக்கு நிருமித்த ஊர்!
தமிழுக்கு மதுவென்று பேர் ! - இன்பத் 
தமிழ் எங்கள் உரிமைச்செம் பயிருக்கு வேர்!

தமிழ் எங்கள் இளமைக்குப் பால் ! - இன்பத் 
தமிழ் நல்ல புகழ்மிக்க புலவர்க்கு வேல் !
தமிழ் எங்கள் உயர்வுக்கு வான்  - இன்பத்
தமிழ் எங்கள் அசதிக்குச் சுடர்தந்த தேன் !
தமிழ் எங்கள் அறிவுக்குத் தோள் ! - இன்பத் 
தமிழ் எங்கள் கவிதைக்கு வயிரத்தின் வாள் !
தமிழ் எங்கள் பிறவிக்குத் தாய் ! - இன்பத் 
தமிழ் எங்கள் வளமிக்க உளமுற்ற நீ !

 நன்றிகள் பாரதிதாசன் கவிதைகளிலிருந்து.

கொய்யாப்பழத்தின் பயன்கள் ...................!

கொய்யாப்பழம் எதற்கு எல்லாம் பயன் படுகிறது . 


பழங்களிலேயே விலைகுறைவானதும் அனைவராலும் எளிதில் வாங்கி உண்ணக்கூடியதுமானகொய்யாப்பழத்தின். முக்கிய உயிர்சத்துக்களும், தாது உப்புக்களும் அடங்கியுள்ளன.

கொய்யாமரத்தில் இருந்து கிடைக்கக்கூடிய கனிமட்டுமல்லாது இலை, பட்டயை என அனைத்துமே மருத்துவ குணம்கொண்டுள்ளது. 

வைட்டமின் பி மற்றும் வைட்டமின் சி ஆகிய உயிர்ச்சத்துக்கள கொய்யாப்பழத்தில் அடங்கியுள்ளன.

கால்சியம் பாஸ்பரஸ் . இரும்பு போன்ற தாதுஉப்புக்களும் இதில் காணப்படுகின்றன.நம் உடலுக்கு வேண்டிய நல்ல சத்துக்கள் தரும் பழங்களில் கொய்யாப்பழம் முக்கியமானகொய்யா பச்சை நிறத்திலும் ஒரு சில வகைகள் மஞ்சள் நிறத்திலும் நல்ல நறுமணத்துடன் கிடைக்கும்.

கொய்யா மரங்கள் சுமார் 33 அடி உயரம் வரை வளரும். கொய்யாவின் பச்சைப் பசேலென்ற இலைகள் நறுமணத்துடன் காணப்படும். விதையில்லாத கொய்யாப் பழங்களும் உள்ளன.

உஷ்ணப் பிரதேசங்களில் அதிகமாக விளையும் கொய்யாப்பழங்கள் நல்ல நறுமணம் மற்றும் இனிப்புச் சுவையுடன் சாப்பிடுவதற்கு மிகவும் உகந்தது.

மருத்துவ குணங்கள்.

கொய்யா மரத்தின் வேர், இலைகள், பட்டை மற்றும் செங்காய் இவைகளில் மருத்துவ குணங்கள் அடங்கியுள்ளன.

குடல், வயிறு, பேதி போன்ற உபாதைகளுக்கு இவை பெரிதும் குணமளிக்கின்றன.

கொய்யா மரத்தின் இலைகளை அரைத்து காயம் புண் இவற்றின் மேல் தடவினால் அவை விரைவில் ஆறிவிடும் கொய்யா இலைகள் அல்சர் மற்றும் பல் வலி நீங்கவும் உதவுகின்றன.

கொய்யாவுக்கு சர்க்கரையைக் குறைக்கும் தன்மையுண்டு கொய்யாக் காய்களை தொடர்ந்து சாப்பிட்டு வந்தால் இரத்தத்திலுள்ள சர்க்கரையின் அளவு பெருமளவு குறைய வாய்ப்புகள் இருப்பதாக கண்டறியப்பட்டுள்ளது. 

கொய்யா இலைகள் மூலம் தயாரிக்கப்படும் கஷாயம் இருமல் தொண்டை மற்றும் இருதய சம்பந்தமான நோய்களுக்கு தீர்வு தருகின்றன. கொய்யா மரத்தின் இளம் புதுக்கிளைகளின் மூலம் தயாரிக்கப்படும் கஷாயம் காய்ச்சலைக் கட்டுப்படுத்தும்.

வேறு எந்தப் பழத்திலும் இல்லாத வைட்டமின் சி என்ற உயிர்ச்சத்துஇப்பழத்தில்அதிக அளவில் காணப்படுகிறது.

அதனால் வளரும் குழந்தைகளுக்குகொய்யாப்பழம் ஒரு வரப்பிரசாதமாகும்.உடல் நன்கு வளரவும்,எலும்புகள் பலம்பெறவும் கொய்யாப்பழம் உதவும்.

நன்றிகள்.

மாரடைப்பின்போது முதலுதவி.................!

* உங்கள் மார்பு அல்லது இடப்புறத்தோள்பட்டை மிக அதிகமாக வலிப்பது, மூச்சிறைப்பு ஆகியவை மாரடைப்பின் அறிகுறிகளாக இருக்கலாம். உடனடியாக ஒரு ஆஸ்பிரின் மாத்திரையை விழுங்குங்கள்.

* இது இரத்த ஓட்டத்தைச் சீர்படுத்த வல்லது. மேலும், உடனடியாகப் படுத்துக்கொள்வது நல்லது. வலுக்கட்டாயமாக இருமுங்கள்.


* இது மருத்துவர்கள் மார்பில் குத்தி பிசைந்து இதயத்தை மீண்டும் துடிக்க வைக்க முயலும் அதே அளவு தாக்கத்தைக் கொடுத்து உங்கள் இதயத்தை சாதாரண நிலைக்குக்கொண்டு வரக்கூடும்.

* பிறருக்கு இந்த அறிகுறிகள் தோன்றுமாயின் மருத்துவ உதவி வரும் வரையில் மார்பில் குத்திக்கொண்டிருங்கள். ஆஸ்பிரின் மாத்திரையை எப்பொழுதும் உடனடியாக எடுக்கக்கூடிய இடத்தில் வைத்திருப்பது அவசியம்.

* நெருக்கடி நிலையில் விரைந்து எடுக்கும் முதலுதவி நடவடிக்கைகள் விலை மதிப்பில்லாத உயிர்களைக் காக்க வல்லது.

வேகம் விவேகம் இரண்டையும் கடைப்பிடித்தால் எந்த விதமான சிரமத்தையும் எளிதில் சமாளிக்க முடியும் என்பதில் சந்தேகமே இல்லை.

நன்றிகள்.

Tuesday, 17 July 2012

ஆடிப் பிறப்பும் ஆடி..........!

ஆடிமாதம் பிறக்கின்றது. ஆடிப்பிறப்பு என்பது தமிழ் இந்துக்கள் வாழ்க்கையில் இன்றியமையாத ஒரு தினமாகும். ஆடிப்பிறப்பு என்றவுடன் ஞாபகத்திற்க்கு வருவது ஆடிக்கூழும், நவாலியூர் சோமசுந்தரப்புலவரின்

"ஆடிப்பிறப்பிற்க்கு நாளை விடுதலை
ஆனந்தம் ஆனந்தம் தோழர்களே
கூடிப் பனங்கட்டிக் கூழுங் குடிக்கலாம்
கொழுக்கட்டை தின்னலாம் தோழர்களே!"

என்ற பாடலும் தான்.


ஆடிப்பிறப்பிற்க்கு வீடுகளில்  பதநீரிலிருந்து ஆடிக்கூழ் காய்ச்சுவார்கள். கொழுக்கட்டை அவிப்பார்கள். ஆடிகூழும், ஆடிக்கொழுக்கட்டையும் அவ்வளவு பிரசித்தி பெற்றது. தை மாதம் பிறப்பை தைப்பொங்கலாக கொண்டாடுகின்றோம், சித்திரை மாதப் பிறப்பை சித்திரைப் புத்தாண்டாக கொண்டாடுகின்றோம்.

ஆனால் ஆடிப்பிறப்பை ஏன் கொண்டாடுகின்றோம் என்ற கதை ஆடியிலே கூடினால் சித்திரையில் குழந்தை பிறக்கும் சித்திரைபுத்திரன் தகப்பனுடன் ஒத்துப்போகமாட்டான்.ஆடிக்கூழ் காமத்தை குறைக்கும் என்பார்கள்.


ஏனெனில் இந்துக்களைப் பொறுத்தவரை ஆடிமாதத்தில் எந்த நல்லகாரியத்தையும் தொடங்கமாட்டார்கள்.

திருமணம் போன்ற சுபகாரியங்கள் செய்யமாட்டார்கள். ஆடிப்பட்டம் தேடி விதை என்ற பழமொழியும் புழக்கத்தில் இருக்கு. இதன் அர்த்தம் ஆடியிலை விதை விதைத்தால் விளைச்சல் அதிகம் என்பதாகும்.

இப்படி ஆடி என்ற சொல் எம்மக்கள் வாழ்க்கையில் பின்னிப்பிணைந்திருகிறது.

ஆடி அமாவாசை

ஒவ்வொருமாதமும் அமாவாசை வந்தாலும் ஆடிமாதத்தில் வருகின்ற அமாவாசைக்கு தனிச் சிறப்பு. பெரும்பாலான இந்துக்கள் தங்கள் முன்னோருக்கு பிதிர்க்கடன் செய்யும் நாள் ஆடி அமாவாசையாகும்.

எங்கள் முன்னோர்களான பிதிர்களை வழிபட்டால் தோசங்கள் நீங்கி நல் வாழ்வு பெறலாம் என்பது இந்துக்களின் நம்பிக்கை. பல புண்ணிய தீர்த்தங்களில் தீர்த்தமாடி மக்கள் தங்கள் பிதிர்களுக்கு நன்றி செலுத்துவதுடன் பாவவிமோசனமும் அடைகின்றார்கள் என்பது ஐதீகம்.

நன்றிகள்.

உதடுகள் அழகாக சிவப்பாக...................!

உதடுகள் அழகாக சிவப்பாக இருக்கத்தான் அனைவரும் விரும்புவார்கள். அழகாக இருக்க விருப்பம். ஆனா அவைகளை பராமரிப்பதில்லை.

உதடுகளின் வெடிப்புகளுக்குத் தகுந்த சிகிச்சையை செய்ய பலரும் முயல்வதில்லை. வெறும் உதட்டு சாயம் உதடுகளை அழகாக காட்டாது. முறையான எளிய வைத்தியத்தை மேற்கொண்டாலே போதும்...... 

அருமருந்தான அருகம் புல்....

இந்த அருகம்புல்லில் அதிக விட்டமின், தாதுப்பொருள் இருப்பதை அறிந்து ஜெர்மனியர் சப்பாத்திமாவுடன் சேர்த்து ரொட்டி செய்து சாப்பிடுகின்றனர். இந்தப்புல்லை நன்கு சுத்தம்செய்து கழுவி சாறு எடுத்து ஐந்துபங்கு சுத்த நீருடன் கலந்து சாப்பிட்டுவந்தால் நரம்புத்தளர்ச்சி, மலச்சிக்கல், இரத்தஅழுத்தம், அதிகமான எடை ஆகியவை குணமாகும்.

பல் ஈறு நோய்களுக்கு.....

எலுமிச்சம் பழச்சாறு அரை பாகம், தக்காளிப் பழச்சாறு ஒரு பாகம். சுத்தமான தேன் கால் பாகம் கலந்து காலை மாலை உண்டு வந்தால் கல்லீரல் பாதுகாக்கப்பட்டு, ரத்த ஓட்டம் சீராகவும், பலம் பெறவும் உதவும்.

நல்ல கோபிப்பொடியில் ( coffee powder ) தயாரிக்கப்பட்ட கோப்பியில் குடிக்கும் பதத்தில் ஒரு எலுமிச்சம் பழச்சாற்றை விட்டு உடனே சாப்பிட்டு விடவேண்டும். இவ்வாறு மூன்று தினங்கள் செய்தால் தீராத தலை வலி நீங்கும்.

பல் ஈறுகளில் ஏற்படும் பல் வலிக்கும் ஈறுகளில் ஏற்படும் வலிகளுக்கும், பயோரியாவுக்கும் எலுமிச்சம் பழச்சாற்றை உள்ளுக்கு சாப்பிட்டும், பல், ஈறுகளில் படும்படி தேய்த்தும் வந்தால் மேற்கண்ட நோய்கள் தீரும்.

எலுமிச்சம் பழச்சாற்றில் சீனி கலந்து தினம் சாப்பிட்டால் வாந்தி நிற்கும். வயிற்றுக்கடுப்பு உள்ளவர்கள் சுத்தமான தண்ணீ­ர் சமஅளவு கலந்து 60 மில்லியளவில் நான்கு மணிக்கு ஒரு முறை சாப்பிட்டால் வயிற்றுக் கடுப்பு உடனே நீங்கும்.

எலுமிச்சம்பழச் சாறு 1 லிட்டருக்கு 1.5 கிலோ சீனி சேர்த்து சர்பத் தயாரித்து தினமும் 15 மில்லிக்குக் குறையாமல் சாப்பிட்டால் உடல் களைப்பு நீங்கும், உடல் சுறுசுறுப்பாக இருக்கும்.

எலுமிச்சை சாறு மற்றும் கிளிசரின் கலந்து கரும்புள்ளிகள் மீது தடவிவர, அவை நாளடைவில் மறைந்து விடும். நகச்சுற்று ஏற்பட்டவுடன் எலுமிச்சைப் பழத்தில் துளையிட்டு, விரலை அதனுள் சொருகி வைக்க வலி குறையும். 

கருத்தரிக்க உதவும்...

அதிமதுரம், திராட்சை இவை இரண்டையும் சமமாகப் பொடி செய்து 50லிருந்து 100 கிராம் வரை எடுத்து தண்ணீ­ரில் அரைத்து பாலில் கலக்கி பெண்களின் மாதவிடாய் தொடங்கிய நாள் முதல் ஐந்து தினங்கள் சாப்பிட்டு வந்தால், ஆரோக்கியமான பெண்களுக்குக் கருத்தரிக்கும். கருத்தரிக்கும் வரை 3 மாதங்கள் சாப்பிட்டால் நல்ல பலனை எதிர்பார்க்கலாம்.

உதடு வெடிப்புக்கு...

சிலருக்கு அதிக குளிர் என்றாலும் சரி, அதிக வெப்பம் என்றாலும் சரி சுத்தமாக ஒத்துக்கொள்ளாது. உதடுகளில் பிளவுகள் ஏற்பட்டு காய்ந்து விடும். இன்னும் சிலருக்கு உதடுகள் கறுத்து, வெடிப்புகளும் ஏற்படும்.

இப்படிப்பட்டவர்கள் பாலாடையுடன் நெல்லிக்காய் சாறு கலந்து, அதை உதடுகளில் தடவி வந்தால், உதட்டின் கருமை நிறம் மறைந்து சிவந்த நிறம் உண்டாகும்.

வெண்ணெயுடன் ஆரஞ்சு பழச் சாறு கலந்து, உதடுகளில் தடவி வந்தாலும், உதடு வெடிப்புகள் சரியாகி உதடுகள் மென்மையாகும்.

கட்டி கரைய....

கடுக்காய், சிவப்பு சந்தனம் ரெண்டயும் தண்ணி விட்டு அரைச்சு குழம்பு போல ஆக்கி கட்டிமேல பூசிக்கிட்டு வா.. கட்டி தானாக் கரைஞ்சிடும்.

நன்றிகள்.

Sunday, 15 July 2012

உண்ணும் உணவு...................!

நம் உடல் கூறுவதை சற்று கேளுங்கள் நண்பர்களே!!

நீங்கள் உண்ணும் உணவு எப்படிப் பயணிக்கிறது, எத்தகைய கட்டங்களை எல்லாம் கடக்கிறது என்பதை நீங்கள் அவசியம் அறிந்துகொள்ள வேண்டும்.

அமைப்பு, வாயில் இருந்து ஆசனவாய் வரை 'ஒரு வழிப் பாதை’தான். எனக்குள் சென்ற உணவு, வாய் வழியாக ஒருபோதும் திரும்ப வராது.

அதற்குத் தக்க வகையில் சிறப்பான அமைப்பு முறையை இயற்கை எனக்கு வழங்கி இருக்கிறது. (சாப்பிட்ட உணவை நினைத்தபோது எல்லாம் வாய்க்குக் கொண்டுவந்து மாடு அசைபோடுகிறது அல்லவா?

அந்த மாதிரி மனிதர்கள் சாப்பிட்ட உணவை மறுபடியும் வாய்க்குக் கொண்டுவர முடியாது. மனிதனுக்கு ஒரே இரைப்பைதான். ஆனால், மாட்டுக்கு நான்கு இரைப்பைகள்).

என்னதான் நீங்கள் தலைகீழாக நின்றாலும் சிரசாசனமே செய்தாலும்கூட உங்களால் உள்ளே அனுப்பப்பட்ட உணவு கீழ் இருந்து மேலாக வருவதற்கு வாய்ப்பே இல்லை.

இது எப்படி சாத்தியம் என நீங்கள் நினைக்கலாம். உங்களுடைய வாழ்க்கை சுழற்சிமயமானது என்பது இயற்கைக்கு நன்றாகத் தெரிந்து இருக்கிறது.

தலைகீழாகத் தொங்கியபடி வித்தை காட்டும்ஏழைகளையும், உடலை வளைத்து வேலை பார்ப்பவர்களையும் ஒருகணம் நினைத்துப்பாருங்கள்.

என்னுடைய பாதை ஒரு குழாய் வடிவில் இருந்தாலும், தலைகீழாகத் தொங்கும்போதோ, உருண்டு புரளும்போதோ, உண்ட உணவு வெளியே வருவது இல்லை.

காரணம், எனது பாதையில் ஐந்து இடங்களில் வளையம்போல உள்ள சுருக்குத் தசைகள்தான்!

இந்த சுருக்குத் தசைகளின் அமைப்புகளையும், அதன் செயல்பாடுகளையும் கேட்டால், என்னை வடிவமைத்த இயற்கை பொறியிலாளரை நீங்கள் வியப்பீர்கள்.

உண்ட உணவு எனது பாதையின் வழியே வருகையில், ஐந்து இடங்களில் இருக்கும் சுருக்குத் தசைகளும் வேலை செய்யத் தொடங்கிவிடும்.

இந்தப் பணியை நம்முடைய கட்டுப்பாடு இல்லாமல், மூளையில் இருந்து கிடைக்கப்பெறும் சமிக்ஞைகள் (Signals) மூலமாகவே சுருக்குத் தசைகள் செய்யத் தொடங்கிவிடும்.

அதாவது, உணவு எந்த இடத்தில் பயணிக்கிறதோ, அந்த இடத்தில் உள்ள சுருக்குத் தசை விரிந்து, அந்த இடத்தில் உள்ள உணவுப் பாதையைத் திறந்து உணவை உள்ளே அனுப்பும்.

அடுத்த வினாடியே மூளையின் கட்டளைக்கு ஏற்ப சுருங்கி அந்த இடத்தை மூடிவிடும். சாப்பிட்ட மறு கணமே நீங்கள் தலை கீழாக நின்றாலும் உணவில் இருந்து துளி அளவுகூட வெளியே வராததற்கு இந்த ஆச்சரிய வடிவமைப்புதான் காரணம்.

சுருக்குத் தசைகள் இல்லாவிட்டால் என்னாகும் என்பதை நீங்கள் கற்பனைகூட செய்து பார்க்க முடியாது. என்ன சாப்பிட்டாலும், அடுத்த கணமே வாந்தி, குமட்டலாக வெளியே வந்துவிடும்.

பிறந்த குழந்தைகள் தாயிடம் பால் குடித்த சில நிமிடங்களிலேயே வாந்தி எடுப்பது இதனால்தான். சுருக்குத் தசைகள் வலிமையோடு இல்லாத நிலையில்தான் தாயிடம் பால் குடித்ததும் குழந்தை உடனே அதனைக் கக்கிவிடுகிறது.

இதைத் தடுக்க தாய்மார்கள் குழந்தைக்குப் பால் கொடுத்த பிறகு தங்களின் தோளில் போட்டு முதுகைத் தட்டிவிடுவார்கள்.

சுருக்குத் தசைகளால் உருவான இந்த ஐந்து அடைப்பான்களும் எந்த இடங்களில் இருக்கின்றன என்பதையும் நீங்கள் தெரிந்துகொண்டால்தான் பலருக்கும் ஏற்படும் ஜி.இ.ஆர்.டி. (GERD) என்கிற பிரச்னையைப் பற்றி சுலபமாக விளங்கிக்கொள்ள முடியும்.

சாப்பிட்ட உடன் அமிலம் மேலே எழும்பி வருவதைத்தான் ஜி.இ.ஆர்.டி. என வைத்தியர்கள் சொல்கிறார்கள்.

உணவுக் குழாயில், வாயில் இருந்து இரைப்பைக்கு உணவைக் கொண்டு செல்லும் பாதையின் மேல் பகுதியிலும் முடிவுப் பகுதியிலும் இரண்டு அடைப்பான்கள் இருக்கின்றன.

மேல் பகுதி அடைப்பானுக்கு கிரைக்கோ பெரிஞ்சியஸ் (Crico Pharyngeus) என்று பெயர். வாயில் இருந்து உணவு செல்லும் பொதுப் பாதை, மூச்சுக்குழாயும் உணவுக் குழாயுமாகப் பிரியும் இடத்தில் இந்த முதல் அடைப்பான் இருக்கிறது.

இது மூச்சுக்குழாய்க்குள் நாம் உண்ணும் உணவை செல்லாமல் தடுக்கும் வேலையைச் செய்கிறது. உணவுக் குழாயின் முடிவுப் பகுதியில்...

அதாவது இரைப்பையின் ஆரம்பத்தில் இரண்டாம் அடைப்பான் (Cardiac Sphincter) இருக்கிறது. இது இரைப்பையில் உள்ள அமிலம் மேலே சென்று உணவுக் குழாய்க்குப் பாதிப்பு ஏற்படாமல் தடுக்கிறது (நமது உடலில் அமிலம் உற்பத்தி ஆகும் ஒரே இடம் இரைப்பைதான்).

அதேபோல இரைப்பையின் அமிலம் மென்மையான சிறுகுடலைப் பாதிக்காமல் இருக்க, இரைப்பையின் முடிவில்... அதாவது சிறுகுடல் ஆரம்பத்தில் பைலோரிக் அடைப்பான் (Pyloric Sphincter) என்கிற மூன்றாம் அடைப்பான் இருக்கிறது.

சிறுகுடலின் முடிவில், பெருங்குடலின் ஆரம்பத்தில்... அதாவது சிறுகுடல் - பெருங்குடல் சந்திப்பில் (Ileocaecal Junction) நான்காம் அடைப்பான் உள்ளது. இது, சிறிது சிறிதாக சிறுகுடலில் கூழ் போன்ற திரவ நிலையில் உள்ள செரிமானம் ஆன உணவு மீதத்தை, பெருங்குடலுக்கு அனுப்புகிறது.

இதனால், பெருங்குடல் அந்த உணவுப் பொருளில் உள்ள நீரை முழுவதும் உறிந்துகொள்ளவும், மலத்தைத் திரவ நிலையில் இருந்து திட நிலைக்கு மாற்றவும் செய்கிறது.

இதை இலியோகோலிக் ஸ்பிங்க்டர் (Ileocolioc Sphincter) என்பார்கள். ஐந்தாம் அடைப்பான் (Anal Sphincter) மிக மிக முக்கியமானது.

உணவின் எச்சமாய் வெளியேறும் மலத்தை விரும்பிய நேரத்தில் வெளியேற்ற உதவியாய் ஆசன வாயில் அமைந்திருக்கும் அடைப்பான் இது. வயிறு என்கிற எனக்குள் இத்தனை அமைப்புகளா என நீங்கள் ஆச்சரியப்படுவது தெரிகிறது.

நீங்கள் உண்ணும் உணவு இத்தகைய கட்டங்களை எல்லாம் கடந்துதான் சக்தியாகவும் கழிவாகவும் மாறுகிறது. என்ன நண்பர்களே!!

இப்படி ஒரு அற்புதப்படைப்பான நம் உடலை நாம் தான் தேவையற்ற உணவுகளை திணித்து நோய்களை வரவழைத்துக் கொள்கின்றோம்...

இனியாவது உணவு விசயத்தில் சற்று கவனமாக இருப்போம்............

நன்றிகள்.

மறைமலை அடிகள்.................!


மறைமலை அடிகள் (சூலை 15, 1876 - செப்டம்பர் 15, 1950) புகழ் பெற்ற தமிழறிஞர், தமிழ் ஆய்வாளர். தமிழையும் வடமொழியையும் ஆங்கிலத்தையும் நன்கு கற்றவர். உயர் தனிச் செம்மொழியாம் தமிழை வடமொழிக் கலப்பின்றித் தூய நடையில் எழுதிப் பிறரையும் ஊக்குவித்தவர். சிறப்பாக தனித்தமிழ் இயக்கத்தைத் தொடக்கி தமிழைச் செழுமையாக வளர்த்தவர். பரிதிமாற் கலைஞரும் மறைமலை அடிகளும் தனித்தமிழ் இயக்கத்தின் இரு பெரும் முன்னோடித் தலைவர்கள். சாதிசமய வேறுபாடின்றிப் பொதுமக்களுக்குக் கடவுட்பற்றும், சமயப் பற்றும் உண்டாக்கும் முறையில் சொற்பொழிவுகள் ஆற்றுவதில் வல்லவர். சைவத் திருப்பணியும், சீர்திருத்தப் பணியும் செவ்வனே செய்து தமிழர்தம் உள்ளங்களில் நீங்காத இடம் பெற்றவர்.

பிறப்பு

மறைமலை அடிகளின் இயற்பெயர் வேதாசலம். இவர் 1876 சூலை 15 ஆம் நாள் மாலை 6.35க்குப் திருக்கழுக்குன்றத்திலே பிறந்தார். இவர் தந்தையார் சொக்கநாதர், தாயார் சின்னம்மையார். தந்தையார் நாகப்பட்டினத்தில் அறுவை மருத்துவராய் பணியாற்றி வந்தார். பல்லாண்டுகள் பிள்ளைப்பேறு இல்லாமல் இருந்து திருக்கழுக்குன்றம் சிவன் வேதாசலரையும் , அம்மை சொக்கம்மையையும் வேண்டி நோன்பிருந்து பிள்ளைப்பேறு பெற்றதால், தம் பிள்ளைக்கு வேதாசலம் என்று பெயரிட்டார். பின்னர் தனித்தமிழ்ப்பற்று காரணமாக 1916-ல் தம் பெயரை மறைமலை (வேதம் = மறை, அசலம் = மலை) என்று மாற்றிக்கொண்டார். அவருக்குப் பின் 4 ஆண் சகோதரர்களும் (திருஞான சம்பந்தம், மாணிக்க வாசகம், திருநாவுக்கரசு, சுந்தரமூர்த்தி ஆகியோர்) 2 பெண் சகோதரர்களும் (நீலாம்பிகை, திரிபுரசுந்தரி ஆகியோர்) பிறந்தனர்.

மறைமலைஅடிகள், நாகையில் வெஸ்லியன் மிசன் கல்லூரியைச் சேர்ந்த உயர்நிலைப்பள்ளியில் நான்காம் படிவம் வரை படித்தார். அவருடைய தந்தையாரின் மறைவு காரணமாக அவரால் பள்ளிப்படிப்பைத் தொடர முடியவில்லை. ஆனால் தமிழ்ப்புலமை மிகுந்த நாராயணசாமி பிள்ளை என்பவரிடம் தமிழ் கற்றார். சைவ சித்தாந்த சண்டமாருதம் என்று புகழ் பெற்றிருந்த சோமசுந்தர நாயக்கரிடம் சைவ சித்தாந்தம் கற்றார்.

சென்னைக்கு வந்த பின்னர் கிறித்தவக் கல்லூரியில் வீ.கோ.சூரியநாராயண சாத்திரியாருடன் தமிழாசிரியராகப் பணிபுரிந்தார். பல ஆண்டுகள் பேராசிரியராகப் பணியாற்றியபின், பல்லாவரத்தில் இராமலிங்கரின் கொள்கைப்படி 1905 இல் சைவ சித்தாந்த மகா சமாசம் என்ற அமைப்பைத் தோற்றுவித்தார். அதன் மாநாட்டுத் தலைமையையும் ஏற்றார். திருமுருகன் அச்சுக்கூடத்தை ஏற்படுத்தி பல நூல்களை வெளியிட்டார். மணிமொழி நூல்நிலையம் என்னும் நூல்நிலையத்தை உருவாக்கினார்.

இவர் காலத்தில் பல புகழ் பெற்ற தமிழறிஞர்கள் வாழ்ந்தனர். மனோண்மணீயம் இயற்றிய சுந்தரனார், பெரும்புலவர் கதிரைவேலர், திரு. வி. கலியாணசுந்தரனார், நாவலர் ச. சோமசுந்தர பாரதியார், தணிகைமணி வ.சு.செங்கல்வராயர், ரசிகமணி டி. கே. சிதம்பரநாதர், பேராசிரியர் ச. வையபுரியார், கோவை இராமலிங்கம், சுப்பிரமணிய பாரதியார், மீனாட்சி சுந்தரனார், பொத்தக வணிகரும் மனோண்மணீயம் ஆசிரியர் சுந்தரனாரின் ஆசிரியரும் ஆன நாராயணசாமி, சைவசித்தாந்த சண்டமாருதம் என்று புகழப்பட்ட சோமசுந்தர நாயகர், என்று பலர் வாழ்ந்த காலம்.

தனித்தமிழ் ஆர்வம்

* அருட்பா-மருட்பா போர்
* சமயத்தொண்டுகள்
* இந்தி எதிர்ப்பு

ஆக்கிய நூல்கள்

* பொருந்தும் உணவும் பொருந்தா உணவும் (1921)
* மக்கள் நூறாண்டு உயிர்வாழ்க்கை, இரு தொகுதிகள் (1933)
* மனித வசியம் அல்லது மனக்கவர்ச்சி (1927)
* யோக நித்திரை: அறிதுயில் (1922)
* தொலைவில் உணர்தல் (1935)
* மரனத்தின்பின் மனிதர் நிலை (1911)
* சாகுந்தல நாடகம் (சமசுகிருதத்தில் இருந்து மொழி பெயர்த்தது) (1907)
* சாகுந்தல நாடக ஆராய்ச்சி (1934)
* ஞானசாகரம் மாதிகை (1902)
* Oriental Mustic Myna Bimonthly (1908-1909)
* Ocean of wisdom, Bimonthly(1935)
* Ancient and Modern Tamil Poets (1937)
* முற்கால பிற்காலத் தமிழ் புலவோர் (1936)
* முல்லைப்பாட்டு- ஆராய்ச்சியுரை (1903)
* பட்டினப்பாலை (1906)
* முதற்குறள் வாத நிராகரணம் (1898)
* திருக்குறள் ஆராய்ச்சி (1951)
*முனிமொழிப்ப்ரகாசிகை (பாடகள்) (1899)
* மறைமலையடிகள் பாமணிக் கோவை (பாடல்கள்) (1977)
* அம்பிகாபதி அமராவதி (நாடகம்) (1954)
* கோகிலாம்பாள் கடிதங்கள் (புதினம்) (1921)
* குமுதவல்லி: நாகநாட்டரி (புதினம்) (1911)
* மறைமலை அடிகள் கடிதங்கள் (1957)
* அறிவுரைக் கொத்து (1921)
* அறிவுரைக் கோவை (1971)
* உரைமணிக் கோவை (1972)
* கருத்தோவியம் (1976)
* சிந்தனைக் கட்டுரைகள் (1908)
* சிறுவற்கான செந்தமிழ் (1934)
* இளைஞர்க்கான இன்றமிழ் (1957)
* திருவொற்றி முருகர் மும்மணிக்கோவை (1900)
* மாணிக்க வாசகர் மாட்சி (1935)
* மாணிக்க வாசகர் வரலாறும் காலமும் (இரு தொகுதி) (1930)
* மாணிக்க வாசகர் வரலாறு (1952)
* சோமசுந்தரக் காஞ்சியாக்கம் (1901)
* சோமசுந்தர நாயகர் வரலாறு (1957)
* கடவுள் நிலைக்கு மாறான கொள்கைகள் சைவம் ஆகா (1968)
* திருவாசக விரிவுரை (1940)
* சித்தாந்த ஞான போதம், சதமணிக்கோவை குறிப்புரை (1898)
* துகளறு போதம், உரை (1898)
* வேதாந்த மத விசாரம் (1899)
* வேத சிவாகமப் பிராமண்யம் (1900)
* Saiva Siddhanta as a Philosophy of Practical Knowledge (1940)
* சைவ சித்தாந்த ஞானபோதம் (1906)
* சிவஞான போத ஆராய்ச்சி (1958) * Can Hindi be a lingua Franca of India? (1969)
* இந்தி பொது மொழியா ? (1937)
* சாதி வேற்றுமையும் போலி சைவரும் (1913)
* Tamilian and Aryan form of Marriage (1936)
* தமிழ் நாட்டவரும் மேல்நாட்டாவரும் (1936)
* பழந்தமிழ்க் கொளகையே சைவ சமயம் (1958)
* வேளாளர் நாகரிகம் (1923) * தமிழர் மதம் (1941)
* பண்டைக்காலத் தமிழரும் ஆரியரும் (1906)

ஆகிய 54 நூல்களை எழுதியுள்ளார்.

நன்றிகள்.

Friday, 13 July 2012

பனை மரத்தின் மருத்துவ ...............!

பனை மரத்தின் மருத்துவ குணங்கள்.


பனை மரத்தில் இருந்து கிடைக்கும் நுங்கு நீரை தொடர்ந்து சாப்பிட்டு வர கோடை காலத்தில் ஏற்படும் வேர்குரு நீங்கும். தோலுடன் நுங்கை சாப்பிட்டு வர சீதக்கழிச்சல் நீங்கும். பனங்கற்கண்டை ஏதாவது ஒரு வகையில் அடிக்கடி பயன் படுத்தி வர அம்மை நோயால் ஏற்பட்ட உடல் வெப்பம் தாகம் போன்றவை நீங்கும்.

பனங்கிழங்கிற்கு ஊடல் குளிர்ச்சியை தரும் தன்மை உண்டு.இந்த கிழங்கை சாப்பிட்டு வந்தாலுடல் அழகு பெறும்.உடல் பலமும் அதிகரிக்கும்.

பதநீர் மகிமை

சுண்ணாம்பு சேர்த்து எடுக்கப்படும் பனஞ்சாறுக்கு பதர்நீர் என்று பெயர்.மேக நோய் இருப்பவர்கள் இதை 40 நாட்களிடைவிடா அது அருந்தி வர அந்த நோய் பாதிப்பில் இருந்து விடுபடலாம். பதநீரில் இருந்து எடுக்கப்படும் கருப்பட்டி, பனங்கற்கண்டு, ஆகியவற்றுக்கும் நோய் தீர்கும் குணங்கள் உண்டு.

பனை நுங்கு கோடை கலத்தில் ஏற்படும் தாகத்திற்கு மிகவும் ஏற்றது. பனங்கிழங்கை உலர்த்தி இடித்து மாவாக்கி, அதனுடன் தேங்காய் உப்பு போட்டு சாப்பிட்டு வர உடலுக்கு பலம் உண்டாகும். மேலும் உடல் பருமன் ஆகும்.

பனம் பூவை சுட்டு சாம்பலாக்கி அதில் சிறிது தேங்காய் எண்ணெய் கலந்து புண்களின் மீது பூச ஆறும். உலகளாவிய ரீதியில் எடுத்து பார்க்கின்றபோது மிக செழிப்பான மற்றும் தொடர்பான இலக்கிய பாரம்பரியம் இலங்கைக்கு சொந்தமாக இருப்பதை காணலாம்.

இயேசுவின் (கிறிஸ்தவ) காலகட்டம் ஆரம்பத்திற்கு முன்னிருந்தே இது தொடர்பான பல்லாயிரக்கணக்கான ஆண்டுகளை எமக்கு காணலாம். இயேசுவின் ஆண்டுகளால் பார்க்கின்ற போது 20 நூற்றாண்டுகளுக்கும் அதிகமான காலமாக தாள இனத்தை சேர்ந்த (பனை மரம்) பனை ஓலைகள் மீது எழுத்தெழுதும் பாரம்பரியம் ஒரு கலையாக தமிழர் மத்தியில் நிலவியிருப்பதை காணலாம்.

பனை ஓலைகள் மீது எழுத்தெழுதும் கலையினுள் ஒருவிதமான பாரம்பரிய தொழில்நுட்ப விதிமுறை நிலவி இருந்துள்ளதோடு அவற்றில் கலாசார ரீதியிலான முக்கியத்துவமும் உள்ளடங்கி உள்ளது. புராதன சமுதாயத்தினுள் சமயம், கலாசாரம், பொருளாதாரம், தொழில்நுட்பம், கலை மற்றும் பழக்க வழக்கங்கள் போன்றவையுடன் ஒன்றுசேர்ந்த ஒரு சாம்பிரதாயம் பனை ஓலை ஏடுகள் எழுதுவதில் உள்ளடங்கி இருந்தது.

ஆகையால் இது சராசரி எழுத்து கலைக்கு அப்பாலான அகலமாக பரந்துப் போயுள்ள எழுத்து கலாசாரமாக எண்ணலாம். எமது பாட்டன் முப்பாட்டன்களால் ஆயிரக் கணக்கான ஆண்டு காலமாக மேற்கொள்ளப்பட்ட ஆராய்வுகள் மற்றும் அதனால் பெற்றுக்கொண்டுள்ள மனுவங்களை அடிப்படையாகக் கொண்ட விலை மதிக்க இயலாத மகத்தான ஒரு அறிவுத் தொகை இப்பனை ஓலை ஏடுகளில் உட்பட்டுள்ளது.

இதன் பிரகாரம் பௌத்த சமயம், வரலாறு, பாரம்பரிய மருத்துவ விஞ்ஞானம், விலங்குகள் மருத்துவ விஞ்ஞானம், பழைமை தொழில்நுட்பம், சோதிட விஞ்ஞானம், தாருகை விஞ்ஞனம், பூத விஞ்ஞானம், மொழிகள் மற்றும் இலக்கியம் போன்ற விடயங்கள் போன்றே சமூக மற்றும் பொருளாதார நிலைகள் பற்றிய தகவல் பெரும்பாலும் இப் பனை ஓலை ஏடுகளில் உள்ளடங்கி இருக்கின்றது.

நிகழ் காலத்தில் ஏற்பட்டிருக்கும் பலதரப்பட்ட சுற்றாடல் காரணங்களாலும் மனித செயற்படுகளின் காரணமாகவும் இப் பெருமதி வாய்ந்த ஆவணங்கள் சழிவுற்றும் அபாயத்திறகு முகங்கொண்டுள்ளது.

இத்துடன் தெடர்பான பாரம்பரிய தொழில்நுட்பம் கலாசார ரீதியிலான செயற்பாடுகள் மிக நெறுங்கிய எதிர்காலத்தில் இவை முழுமையாகவே அழிந்துப் போகலாம்.

பழங் காலத்தில் எழுதப்பட்டுள்ள பல மில்லியன் கணக்கான ஏடுகளில் இருந்து இன்று எஞ்சி இருப்பது சுமார் ஒரு மில்லியன் ஏடுகள் மத்திரமே. புராதனக் காலத்தில் இருந்து பாதுகாத்து வரப்பட்ட பனை ஓலை ஏடுகளின் அதிகமானவற்றை தற்போது அரும் பொருட்கள் என்ற பெருமதியில் வெளிநாடுகளுக்கு விற்பனை செய்யப்பட்டுளள்தோடு அவைகள் அவர்களது சொத்துக்களாக மாற்றமடைந்துள்ளது.

இதுப் போலவே ஈர கசிவு, கறையன் மற்றும் எலிகள் பேன்ற உயிரினங்களாலும் மனிதனின் கவனயீனத்தினால் இன்னுமொரு தொகை அழிந்துபோயுள்ளது. இந் நிலையின் கீழ் பனை ஓலை ஏடுகள் எழுதும் மற்றும் பாதுகாக்கும் பாரம்பரிய தொழில்நுட்பத்தை இக் காலத்து சமுதாயத்தினுள் பிரபலப்படுத்தல் கண்டிப்பான தேவையாக அமைந்துள்ளது.

அதனை மூலங்கள் அடிப்படையில் பூரணப்படுத்தல் தொடர்பாக மீண்டும் கருத்தில் கொண்டு பார்க்க தேவையாக உள்ளது. இவ் அமைப்பினுள் பனை ஓலை ஏடுகள் எழுதலுடன் இணைந்திருக்கும் தொழில்நுட்பத்தை நிகழ்கால சமுதாயத்திற்கு பெற்றுக் கொடுத்தல், புராதன பனை ஓலை ஏடுகளை பாதுகாத்தல் மற்றும் நிகழ் காலத்து தேசிய அபிவிருத்தி செயற்பாட்டினுள் அதனை பயன்படுத்தல் எனும் விடயங்கள் உட்பட்டதாக ஒரு கருத்திட்டத்தை ஏற்பாடு செய்வது இக் காலத்திற்கு மிக பொருத்தமானதாக அமையும்.

நன்றிகள்.

ஓலைச் சுவடி............!


முற்காலத்திலிருந்து சமீபகாலம் வரை காகிதம் கண்டுபிடிக்கப்படும் வரை கல்வி சம்பந்தமான அனைத்துப் பயன்பாட்டுக்கும் பனையோலைச் சுவடிகள்தான் பயன்பாட்டில் இருந்தன.

இன்று நாம் பெருமைப்பட்டுக் கொள்ளும் சங்க இலக்கியங்களும் சித்தர் பாடல்களும் கம்ப ராமாயணமம் திருக்குறளும் எல்லாம் இந்தப் பனையோலைச் சுவடிகளில்தான் இரண்டாயிரம் ஆண்டுகளுக்குமேல் தங்களை இருப்பாகக் கொண்டிருந்தன.

பனை பலவகையிலும் நமது வாழ்வாதாரமாகமட்டுமல்ல கல்வி, பண்பாடு. கலை இலக்கியத்துக்கும் ஆதாரத் தூணாக இருந்தது.

பனையும் நம் தாய்த் தமிழ் மொழியும் இணைபிரியாத இரட்டையர்கள்.

அந்தோ பரிதாபம்! காகிதம் கண்டுபிடிக்கப்பட்டவுடன் பனைமரத்தின் பாரம்பரியத்தை மறந்தோம்.

பெற்றோர் மறைந்தாலும் அவர்களின் உருவப்படங்களைப் புனிமாகக் கருதி மதிக்கிறோம். ஆனால் அதற்கு ஈடாக மதிக்கவேண்டிய பனையைமட்டும் நன்றி கொன்றதனமாக மறந்துவிட்டோம்.

என் அனுபவத்தில் கண்ட ஒரு உண்மையைச் சொன்னால் இதற்குப் பொருத்தமாக இருக்கும்.

ஒரு கொலை வழக்குக்காக சம்பவ இடத்துக்குச்சென்ற காவலர்களுக்கு அங்கிருந்த வேலையாள் மரமேறி இளநீர்குலையைத் தள்ளி அவர்களுக்குச் சீவிக்கொடுத்து அவர்கள் குடித்தபின் அதனுள் இருந்த வழுக்கையை எல்லாம் வழித்துக் கொடுத்து உண்டு இளைப்பாறியபின்பு என்ன செய்தார்கள் தெரியுமா?

அந்த அப்பாவி மனிதரை அங்கிருந்த ஒரு தடியை எடுத்து அடித்து உதைத்து அவரையும் ஒரு எதிரியாக வழக்கில் சேர்த்து ஆயுள்தண்டனையம் வாங்கிக் கொடுத்தார்கள்.

அதுபோன்று பலவகையிலும் பனை நமக்குப் பயன்பட்டதையும் மறந்து துரோகத்தனமாக வெட்டி சூளையில் போட்டு எரித்துக்கொண்டு உள்ளோம்.

கொடுமை! கொடுமை!

நன்றிகள்.

Thursday, 12 July 2012

தமிழ் மொழிக்கு தங்கள் வாக்குகளை.........!


மேலை நாடுகளில் உள்ள பல்கலைகழகத்தில் மொழியின் தொன்மை பற்றிய ஆராய்ச்சியின் முயற்சியின் முடிவில் மாணவர்கர்கள் தங்கள் வாக்குகளை தமிழ் மொழிக்கு சேர்த்து நம்மை பெருமை அடையச் செய்திருகின்றனர் வாழ்கதமிழ்

குறிப்பு கீழே:   இதையே இந்தியாவில் கேட்டிருந்தால் சமசு(ஸ்)க்ரிதம் என்று உளறுவான்.

அதையும் கேட்டு தமிழன் இன்று பலர் தன பெருமை அறியாது மாற்றானுக்கு கைதட்டுவான்.

 நன்றிகள்.

Tuesday, 10 July 2012

சீனப் பெருஞ்சுவர் ....................!

சீனப் பெருஞ்சுவரை பற்றிய தகவகள் !!!


உலகின் ஏழு அதிசயங்களுள் ஒன்றாக, சீனப் பெருஞ்சுவர் கருதப்படுகிறது. இந்த நீண்ட சுவர் கட்டப்பட்டு, 1,500 ஆண்டுகளை கடந்துவிட்டாலும், இயற்கை சீற்றங்களையெல்லாம் எதிர்த்து இன்றும் உறுதியுடன் உள்ளது. இது தொடர்பாக, பல்வேறு நாடுகளை சேர்ந்த விஞ்ஞானிகளும் ஆய்வு செய்து வருகின்றனர்.

இந்நிலையில், சீஜியாங் பல்கலைக்கழக விஞ்ஞானிகள் மேற்கொண்ட ஆய்வில், சீனப் பெருஞ்சுவரின் உறுதி தன்மைக்கு, அரிசி கஞ்சி, சுண்ணாம்பு மற்றும் சுண்ணாம்புக்கல் கலந்த சாந்து பொருள் தான் காரணமென தெரிய வந்துள்ளது.

இது தொடர்பாக விஞ்ஞானிகள் கூறியதாவது:பழங்கால சீன கட்டட கலைக்கு சான்றாக, சீனப் பெருஞ்சுவர் விளங்குகிறது. இந்த சுவர் கட்டப்பட்டு, 1,500 ஆண்டுகளை கடந்துவிட்டாலும், அதே உறுதியுடன் இருப்பதற்கு, அரிசி கஞ்சியுடன், சுண்ணாம்பு, சுண்ணாம்புக்கல் உள்ளிட்ட பொருட்களை கொண்டு, உருவாக்கப்பட்ட கலவையால், கற்களை இணைத்துள்ளது தான் காரணம்.

இந்த கலவையில், தாவர பொருட்களும் பயன்படுத்தப்பட்டுள்ளன. உயிரற்ற பொருளான சுண்ணாம்பில், கால்சியம் கார்பனேட் உள்ளது. தாவரத்திலிருந்து எடுக்கப்படும் அரிசி கஞ்சியில், “அமிலோபெக்டின்’ என்ற மாவுச்சத்து உள்ளது.

சுண்ணாம்பு மற்றும் அரிசி கஞ்சி உள்ளிட்ட பொருட்களை கலந்து கலவை உருவாக்கும்போது, அரிசி கஞ்சியில் உள்ள “அமிலோபெக்டின்’ கலவைக்கு ஒட்டும் தன்மையை கொடுக்கிறது.

இந்த கலவையை, கற்களுக்கு இடையில் வைத்து கட்டும்போது, அந்த சுவர் மிகவும் உறுதியாக மாறுகிறது. மேலும், சுவர்களில், விரிசல் ஏற்படாமலும், அதில் காளான், பூஞ்சை போன்றவை ஏற்படாமலும் சுவரை பாதுகாக்கிறது.

இந்த கலவையை கொண்டுதான், சீனப்பெருஞ்சுவரும், அதில் உள்ள கண்காணிப்பு கோபுரங்களும் கட்டப்பட்டுள்ளன. இது கட்டப்பட்ட பின், பல்வேறு போர்களை சந்தித்துள்ளது.

பீரங்கி உள்ளிட்ட ஆயுதங்களால், இதை உடைக்கும் முயற்சிகள் எல்லாம் தோற்றன.மேலும் நிலநடுக்கம் போன்ற பல்வேறு இயற்கை சீற்றங்களையும் தாங்கி, அதே உறுதியுடன் இந்த சுவர் நீடித்து நிற்கிறது.

பழங்கால கட்டடக்கலை வல்லுனர்கள், எத்தகைய பொருட்களை பயன்படுத்தினர் என்பது குறித்த முழுமையான விவரங்கள் கிடைக்குமா என்பது தெரியாது. இருப்பினும் தொடர்ந்து எங்கள் ஆய்வுகளை மேற்கொண்டுள்ளோம். இவ்வாறு விஞ்ஞானிகள் கூறினர்.

உலக மக்கள் தொகையில் முத்லிடத்தை பிடித்த சீனாவின் கிழக்கில்ஷான்ஹாயில் தொடங்கி லோப்நூர் வழியாக மேற்க்கில் சென்று தெற்க்கெ மங்கோலியாவின் உட்ப்பகுதிவரை செல்கிறது சீனப்பெருஞ்சுவர்.

வானுயர்ந்த மலைகள் மணல் பாலைவனங்கள் பள்ளத்தாக்குகளை கடந்து செல்லும் சுவரின் நீளம் 6400கிலோமீட்டர்கள்,எந்தவொரு தொழில்நுட்ப்பமும் இல்லாத இரண்டாம் நூற்றாண்டில் கட்டப்படுள்ளது மிகப்பெரும் அதிசயம். 

இரண்டாயிரம் வருடங்களுக்கு முன்பு அதாவது கி.பி இரண்டாம் நூற்றாண்டில் சீனவிற்க்கு அச்சுறுத்தல்கள் அதிகம் திடீர் திடீரென்று அண்டை நாடுகள் சீனாவின் மீது படையெடுத்து வந்தன இது சீன அரசர்களுக்கு தீராத பிரச்சினையாக இருந்து வந்தது.

இதை எப்படி தீர்ப்பது என்று ஆராய்ந்து பார்த்து இறுதியாக சீனாவின் எல்லைப்பகுதியில் மாபெரும் சுவர் ஒன்றை கட்டுவது என்று முடிவெடுத்து உடனடியாக வேலையில் இறங்கினார்கள், அதாவது கி.பி 206 இல் முதல் சின்வம்சத் அரசன் இதை கட்டத்தொடங்கினான் பதினைந்து வருடங்கள் இந்த பெருஞ்சுவரை கட்டினார்கள்.

குடி மக்களில் வீட்டுக்கு ஒருவர் இப்பணியில் ஈடுபடுத்தப்பட்டனர்,கிட்டத்தட்ட மொத்த மக்கள் தொகையில் 70 % பேர் இப்பணியில் ஈடுபட்டனர், கி.பி 221ல் 5000 கிலொமீட்டர் தூரம்வரை கட்டினர் இதற்க்கு வான்-லி-குவான்ங்-கெங் என்று பெயர் வைத்தனர்.

4.5 மீட்டர் முதல் 9 மீட்டர் வரை இதன் அகலம் இருந்தது, இவ்வளவு பெரிய சுவரை கட்டியும் ஏனோ அவர்களுக்கு திருப்தி ஏற்ப்படவில்லை, சுவரின் நீளத்தை அதிகரிக்க முடிவு செய்து.

கி.பி 1368 லிருந்து 1644 வரை ஆட்சி செய்த மிங் வம்ச மன்னர்கள் மீண்டும் சுவர் கட்டும் வேலையை தொடங்கினார்கள், மொத்தம் 6400 கிலொமீட்டர் வரை கட்டினார்கள், பின்பு இந்த சுவரில் மறு சீரமைப்பு பணியை தொடங்கினார்கள். 

இதுவெ 200 ஆண்டுகள் வரை நீடித்தது , சுவரில் குறிப்பிட்ட இடைவெளியில் வீரர்கள் தங்குவதற்க்கும் ஆயுதங்களை வைத்துக் கொள்ளுவதற்க்கும் அறைகள் கட்டப்பட்டுள்ளன, ஆபத்து காலங்களில் அந்த அறைகளில் இருந்து புகை போட்டு படை வீரர்கள் எச்சரிக்கை விடுப்பார்கள்.

கி.பி1987ல் சீனப்பெருஞ்சுவர், உலக அதிசயங்களின் பட்டியலில் சேர்க்கப்பட்டது,மனிதனால் கட்டப்பட்டு விண்வெளியில் இருந்தும் பார்க்கக்கூடிய ஒரே இடம்சீனப்பெருஞ்சுவர். இந்த சுவர் சீனாவின் அடையாளமாக உள்ளது.

தலைநகர் பெய்ஜிங்கில் இருந்து 50 கிலொமீட்டர் தொலைவில் இருக்கும் சைமைதாயு மற்றும் மடியான்யு என்ற இரண்டு இடங்களில் மட்டும் இப்போது சுற்றுலாப் பயணிகள் சுவரை பார்க்க அனுமதிக்கப்படுகிறார்கள்.

சீனப் பெருஞ்சுவர் - சில குறிப்புகள்

சீனப் பெருஞ்சுவரின் உயரம் 25 அடி. நீளம் 7500 கிலோ மீட்டர். சுவர்களுக்கு மத்தியில் உள்ள பாதையின் அகலம் 20 அடி. இது சில இடங்களில் 15 அடியாக உள்ளது. மேலும், இதுவரையிலான உலகின் மிகப்பெரிய கட்டுமானத் திட்டங்களில் இதுவே மிகப் பெரியதாகும். 2000 ஆண்டுகள் பழமை வாய்ந்தது. 

சீனப் பெருஞ்சுவரின் நீளம் எவ்வளவு?

சீனப் பெருஞ்சுவரின் துல்லியமான நீளத்தைக் கண்டுபிடிக்க, ஏப்ரல் திங்களில் பிரம்மாண்ட அளவீட்டுப் பணி தொடங்கியுள்ளது.

உலக அதிசயங்களில் ஒன்று, சீனப் பெருஞ்சுவர். பகைவர்களின் படை எடுப்பிலிருந்து சீனாவின் வட பகுதியைக் காப்பாற்ற, இந்த மாபெரும் பாதுகாப்பு அரண் கட்டப்பட்டது.

கி.மு. 220இல் தொடங்கிய இதன் கட்டுமானப் பணி இறுதியில், 1368-1644 வரையிலான மிங் வம்ச ஆட்சிக் காலத்தில் தான் நிறைவடைந்தது.

இதன் நீளம்,10 ஆயிரம் லீ அதாவது 5000கிலோ மீட்டர் என்றும், அகலம் சராசரியாக 6 மீட்டர் என்றும் கூறப்படுகிறது. எனினும் இவை தோராயமான அளவுகள் தான்.

இதனால், பெருஞ்சுவர் பற்றிய துல்லியமான புள்ளி விபரங்களைக் கண்டறிய வேண்டும் என்று சீன வரலாற்று அறிஞர்கள் வற்புறுத்தியுள்ளனர்.இதைத் தொடர்ந்து,பெருஞ்சுவர் பற்றிய புள்ளிவிபரங்களைச் சேகரிக்கும் முயற்சிகள், 1980ஆம் ஆண்டு துவங்கின. ஆனால், தொழில் நுட்ப வசதிகள் குறைவாக இருந்ததால் இம்முயற்சிகள் வெற்றி பெறவில்லை.

தற்போது, தொழில் நுட்பத் துறையில் சீனா பெரும் முன்னேற்றம் கண்டுள்ளது. எனவே, பெருஞ்சுவர் பற்றிய புள்ளிவிபரங்களைச் சேகரிக்கும் பணியை மீண்டும் தொடங்கச் சீன அரசின் தொடர்புடைய வாரியங்கள் முடிவு செய்துள்ளன.

இந்த மாபெரும் அளவீட்டுப் பணி,4 ஆண்டு காலம் தொடரும். இதன் மூலம் சீனப் பெருஞ்சுவரின் துல்லியமான நீளம், வரைபடம், தற்போதைய நிலை ஆகிய புள்ளிவிபரங்கள் சேகரிக்கப்படும்.

நன்றிகள்.

Monday, 9 July 2012

மனித மூளையின் முழுத்.............!!

மனித மூளையின் முழுத்திறன் இவ்வளவுதான்: அதிர்ச்சி தரும் ஆராய்ச்சி முடிவு மனிதனின் சமீபத்திய அறிவியல் கண்டுபிடிப்புகள் பலவும் வியப்பின் விளிம்பிற்கு நம்மை அழைத்துச் செல்கின்றன .இதற்கு காரணம் மனித மூளையின் சக்திதான்.

இதற்கு முன் மனித மூளை பற்றி ஆராய்ச்சி செய்த விஞ்ஞானிகள் பலர் திறமையற்ற மனிதர்கள் தனது மூளையின் சக்தியில் குறைந்த அளவு மட்டுமே பயன்படுத்துவதாகவும் திறமையானவர்கள் (விஞ்ஞானிகள் போன்றோர்) தங்கள் மூளையின் ஆற்றலை அதிக அளவு பயன்படுத்துகிறார்கள் என்றும் கூறியிருந்தார்கள்.


ஆனால் சமீபத்திய ஆராய்சிகள் மனித மூளை பற்றி ஓர் அதிச்சி கலந்த உண்மையை கூறுகிறது.

கேம்பிரிட்ஜ் பல்கலைக் கழக பேராசிரியர்கள் மேற்கொண்ட ஆராய்ச்சியில் ஒவ்வொரு மனிதனும் தனது மூளையை 100 % பயன்படுத்துகிறான் எனவும் மனித மூளையின் சக்தி இவ்வளவுதான் எனவும் கூறியுள்ளார்கள்.

நரம்பு உயிரியல் பேராசிரியர்" சைமன் லாலின்" மூளை சிறப்பான வடிவத்தை பெறுவதற்கும் திறமையாக செயல் படுத்துவதற்கும் தகுந்த ஆற்றல் தேவை என்றும் மனிதனால் தனது மூளையை ஒரு குறிப்பிட்ட அளவிற்கு மேல் செயல் படுத்த முடியாது என்றும் கூறுகிறார்.

மூளையின் வெவ்வேறு பகுதிகள் இழைகளால் இணைக்கப் பட்டுள்ளதாகவும் மிகுந்த அறிவாளிகள் மூளையில் இந்த இணைப்புகள் சிறப்பாக உள்ளதாகவும் குறைவான அறிவுடையவர்களுக்கு இந்த இணைப்பு சிறப்பாக இல்லாமல் இருப்பதாகவும் விஞ்ஞானிகள் கூறுகிறார்கள்.


கேம்பிரிட்ஜ் பல்கலைக் கழகத்தின் உளவியல் துறை பேராசிரியர் "எட் புல்மோர்" கூறுகையில் மிகுந்த அறிவாளிகளுக்கு மூளையில் இழைகள் சிறப்பான இணைப்பை கொண்டிருப்பதால் கட்டளைகள் உடனடியாக மூளையின் பிற பகுதிகளுக்கு அனுப்பப் படுவதாகவும் இந்த இணைப்பு சிறப்பாக அமையப் பெறாதவர்கள் மூளையில் கட்டளைகள் மிக மெதுவாக பரிமாற்றம் செய்யப் படுவதாகவும் கூறுகிறார்.


சிறந்த மூளைத் தொகுப்பிற்கும் சிறந்த நுண்ணறிவு திறனுக்கும் (IQ) நெருங்கிய தொடர்பு உண்டு என்கிறார் இவர் . இவர்கள் ஆராய்ச்சியில் ஆறுதல் தரும் விசயம் உடலின் சக்தியை அதிகரிப்பதன் மூலம் மூளையின் ஆற்றலும் அதிகரிக்கும் என்பதுதான்.

இதைத்தான் நம்மவர்கள் "சுவரில்லாமல் சித்திரம் இல்லை" என்று சொல்லியிருப்பார்களோ.

நன்றிகள்.

Saturday, 7 July 2012

தூதுவளை................!


பிணிபல நீக்கும் கற்பக மூலிகை தூதுவளை. சித்தர்கள் உடலை கற்பமாக்க கற்ப மூலிகைகளை கண்டறிந்து கூறியுள்ளனர். மூலிகையில் உள்ள தாதுப் பொருட்களை தனியாகவோ அல்லது பல மூலிகைகள் கலந்தோ அல்லது உலோக உபரச உப்பு பொருட்களை சேர்த்தோ நன்கு பக்குவப்படுத்திபத்தியம் மேற்கொண்டு ஒரு மண்டலம்(நாட்கள்) சாப்பிட்டு வந்தால் பிணியில்லாப் பெருவாழ்வு வாழலாம் உடலை கற்பமாக்கும் இம் மூலிகைகள்தான் கற்ப மூலிகைகள்.

தமிழ் மருத்துவமான சித்த மருத்துவத்தில் காயகற்ப மருந்துகள் சிறப்பானதாகும். காயகற்பம் = காயம்+கற்பம். காயம் என்றால் உடல். கற்பம் என்றால் உடலை நோயணுகாதபடி வலுவடையச் செய்யும் மருந்து. நரை, திரை, மூப்பு, பிணிநீக்கி, வயதுக்கு தகுந்தவாறு ஏற்படும் நோய்களிலிருந்து விடுபடவைத்து நீண்டநாள் வாழச் செய்வது கற்பமாகும் தூதுவளை ஈரமான இடங்களில் செழித்துப் புதர் போல வளரும்.

இதன் இலை கரும்பச்சை நிறமானது. பூ ஊதா நிறமானது. சிறிய காய்கள் தோன்றிப் பழுக்கும். இதன் கொடியிலும் இலையிலும் கூரிய முட்கள் காணப்படும்.

தூதுவளை இலை மூலிகை மருத்துவத்தில் பயன்படுகிறது. ச‌ளி ‌பிடி‌ப்பதா‌ல் ஏ‌ற்படு‌ம் ப‌ல்வேறு உட‌ல் உபாதைக‌ளி‌ல் இருமலு‌ம் ஒ‌ன்று. ச‌ளி போனாலு‌ம் இரும‌ல் போகாம‌ல் பாடு படு‌த்து‌ம்.

இருமலை‌ப் போ‌க்க எ‌ளிதான வ‌ழி உ‌ள்ளது. தூதுவளை‌‌ இலையை 4 அ‌ல்லது 5 எடு‌த்து அத‌ன் மு‌ட்களை ‌நீ‌க்‌கி‌வி‌ட்டு கழு‌வி‌க் கொ‌ள்ளவு‌ம். இலை‌க்கு‌ள் 4 அ‌ல்லது 5 ‌மிளகு வை‌த்து வெ‌ற்‌றிலை‌ப் போ‌ல் மடி‌த்து வா‌யி‌ல் போ‌ட்டு மெ‌ன்று சா‌ப்‌பிட இர‌ண்டே நா‌ளி‌ல் மா‌ர்‌பு‌ச் ச‌ளி போ‌ய், தொட‌ர்‌ந்து வ‌ந்த கு‌‌த்த‌ல் இருமலு‌ம் காணாம‌ல் போகு‌ம்.

தூதுவளையை உளு‌த்த‌ம் பரு‌ப்பு, பு‌ளி வை‌த்து துவைய‌ல் செ‌ய்து‌ம் சா‌ப்‌பிடுவா‌ர்க‌ள். ச‌ளி ‌பிடி‌த்தவ‌ர்களு‌க்கு இ‌ந்த துவையலை‌ செ‌ய்து கொடு‌த்தா‌ல் எ‌ந்த மரு‌ந்து‌க்கு‌ம் அசராத ச‌ளியு‌ம் கரை‌ந்து காணாம‌ல் போ‌ய் ‌விடு‌ம். 

தூதுவளை இலை உடலு‌க்கு உஷ‌்ண‌த்தை‌க் கொடு‌க்கு‌ம் எ‌ன்பதா‌ல், சூ‌ட்டு உட‌ம்பு‌க் கார‌ர்க‌ள் அ‌திகமாக சா‌ப்‌பிட‌க் கூடாது.

நன்றிகள்.

Friday, 6 July 2012

தமிழ் எழுத்துக்கள்........!


தமிழில் 12 உயிரெழுத்துகளும், 18 மெய்யெழுத்துகளும் உள்ளன. ஒவ்வொரு உயிரெழுத்தும் 18 மெய்யெழுத்துகளோடும் சேர்வதால் 216 உயிர்மெய்யெழுத்துகள் பிறக்கின்றன. இவற்றோடு ஆயுத எழுத்தும் சேர்த்து தமிழ் எழுத்துகள் மொத்தம் 247 ஆகும்.

உயிர் எழுத்துக்கள்:

உயிரெழுத்துக்களில் குறுகிய ஓசையுடைய எழுத்துக்களான அ, இ, உ, எ, ஒ ஆகிய எழுத்துகள் குற்றெழுத்துக்கள்(குறில்) எனவும், நீண்ட ஓசையுடைய எழுத்துக்களான ஆ, ஈ, ஊ, ஏ, ஐ, ஓ, ஔ ஆகிய எழுத்துக்கள் நெட்டெழுத்துக்கள்(நெடில்) எனவும் வழங்கப்படும்.

மெய் எழுத்துக்கள்:

மெய்யெழுத்துக்களில் வன்மையான ஓசையுடைய எழுத்துக்கள் வல்லினம் என்றும், மென்மையான ஓசையுடைய எழுத்துக்கள் மெல்லினம் என்றும், இவை இரண்டிற்கும் இடைப்பட்ட ஓசையுடைய எழுத்துக்கள் இடையினம் என்றும் வழங்கப்படும்.

வல்லினம் : க் ச் ட் த் ப் ற்

மெல்லினம்: ங் ஞ் ண் ந் ம் ன்

இடையினம்: ய் ர் ல் வ் ழ் ள்

மெய்யெழுத்துக்கள் ஒவ்வொன்றும் அரை மாத்திரை நேரத்தில் ஒலிக்கப்படும்.

சிறப்பு எழுத்து - ஆயுத எழுத்துஃ :

ஆயுத எழுத்து(ஃ) தமிழில் உள்ள ஒரு சிறப்பு எழுத்து ஆகும். ஆயுத எழுத்தைத் தனியே பயன்படுத்துவது அரிது. பழந்தமிழில் பரவலாக ஆயுத எழுத்து பயன்படுத்தப்பட்டாலும், தற்காலத்தில் ஆயுத எழுத்தின் பயன்பாடு அரிதே.

சில நேரங்களில் பகரத்துடன் சேர்த்து (ஃப) ஆங்கில எழுத்தான f-ஐக் குறிக்கப் பயன்படுத்தப்படுகின்றது. ஆயுத எழுத்தை அஃகேனம் என்றும் அழைப்பர்.

நன்றிகள்.