மறைந்த ஆப்பிள் தலைவர் ஸ்டீவ் ஜாப்ஸ், தான் வாழும் காலத்தில் ஆப்பிள் சாதனங்களின் ஒருங்கிணைந்த வசதிகளுடன் கொண்ட ஐ-மகிழுந்து ஒன்றை வடிவமைக்க விரும்பினார்.
அவரது கனவை நினைவாக்கும் முயற்சியாக, “நான்- நகரத்து”(I - Move) என்ற பெயரில் புதிய எண்ணம் மகிழுந்தை இத்தாலிய வடிவமைப்பாளர் லிவியூ டூடோரன் உருவாக்கியுள்ளார்.
இது, சுற்றுச் சூழலுக்கு மாசு விளைவிக்காத இலத்திரனியல் ஆகும். ஆப்பிள் சாதனங்கள் மூலம் ஒருங்கிணைந்த வசதிகளை பெறும் வகையில் நான் - நகரத்து வடிவமைக்கப்பட்டுள்ளது.
மகிழுந்து முழுவதும் ஒளி ஊடுருவும் வகையில் பெரும்பாலான பகுதிகளை கண்ணாடி ஆக்கிரமித்துள்ளது.மேலும், மகிழுந்தின் மேற்கூரையில் பொருத்தப்பட்டிருக்கும் தகடுகள் மூலம் சூரிய சக்தி மின்சாரத்தை பெற முடியும்.
3 பேர் பயணம் செய்யும் வசதி கொண்ட இந்த மகிழுந்தில் பொருட்களை எடுத்துச் செல்வதற்கு போதுமான இடவசதியும் உண்டு.
வாடிக்கையாளர் விருப்பத்திற்கு தக்கவாறு இந்த மகிழுந்தில் ஏராளமான வசதிகளை பெறுவதோடு, தனிப்பயனாக்கலாம் (Customize) செய்து வாங்கிக்கொள்ளலாம் என்றும் லிவியூ டூடோரன் தெரிவித்துள்ளார்.
ஸ்டீவ் ஜாப்ஸ் கனவை நனவாக்கும் வடிவமைப்பு கொண்ட மகிழுந்துகள் வரும் 2020ம் ஆண்டு முதல் விற்பனைக்கு வரும் என்றும் அவர் கூறியுள்ளார்.
நன்றிகள்.