நாமெல்லாம் யார் ? அகதிகள். ஆம் , நாமெல்லாம் பஞ்சம் பிழைக்க வந்தவர்கள்.
ஆப்பிரிக்காவிலிருந்து கிளம்பி வாழ வழி தேடி நாடோடிகளாக திரிந்து, கால மாற்றத்தால் பல்வேறு இன, மொழி, மத, ஜாதி பேதங்களுடன் நம் வரலாற்றை மறந்து நமக்குள்ளே பகைமையுடன் வாழ்பவர்கள் தானே நாம்.
இன்று நம்மால் இந்து, முசு(ஸ்)லீம், கிறித்துவன், பவுத்தன்.... என்று பிரித்து உணரப்படும் எல்லோருக்கும் ஒரே மூதாதையன், ஆப்பிரிக்கன்.
ஒரு வேளை நம் எல்லோருக்கும் போதுமான உணவும், உறைவிடமும், பாதுகாப்பும் இருந்திருந்தால் நாம் ஆப்பிரிக்காவைத் தாண்டி இருக்க மாட்டோம் .
மனித இனமும் பூமியெங்கும் பரவி இருக்காது. இனப்பெருக்கத்தின் காரணமாக மனித இனம் ஒரே இடத்தில் வாழ முடியாத சூழல் உண்டானது .
உணவுக்காகவும், இடத்துக்காகவும், பாதுகாப்புக்காகவும் வேறு இடம் தேடி ஓட ஆரம்பித்த காரணத்தால் இன்று பல்வேறு பேதங்களுடன் வாழ்ந்து கொண்டிருக்கிறோம்.
இன்று, நமக்குள்ளே (மனிதர்களுக்குள்ளே) எத்தனை போராட்டங்கள் , உரிமைக்கான போராட்டம் ,நாடுகளின்எல்லைகளுக்கான போராட்டம், தண்ணீருக்கான போராட்டம் என்று ஏகப்பட்ட போராட்டங்கள்.
என்று ஓயுமோ இத்தகைய போராட்டங்கள்...!? இன்றும், பிழைப்புக்காக சொந்த ஊரை விட்டு இடம் பெயர்ந்து நாடோடிகளாக பெரிய நகரங்களில், வெளிநாடுகளில் திரிந்து கொண்டிருக்கிறோம்.
நாமெல்லாம் நாடோடிகள் தான். பேதங்களை மறப்போம் ,
மனிதனாக வாழ்வோம்!.
மற்றவர்களை வாழவிடுவோம்!!.
வாழ்க்கை வாழ்வதற்கே !!!
நன்றிகள்.
நன்றிகள்.