பொதுவாக மனித தோலை தோலமைப்பு பல தொழில் விற்பன்னர் என அழைக்கலாம் உடலின் மேற்புறம் முழுவதும் போர்வையாக அமைந்துள்ளது. இவ்வமைப்பு உடலின் உள்ளுறுப்புகளைப் பாதுகாக்கிறது. உடலில் நீர் ஆவியாதலைத் தடுக்கிறது.
உடலின் வெப்பத்தைப் பாதுகாக்கிறது. உடலுக்கு வைட்டமின் D தயாரித்தளிக்கிறது. தொடு உணர்ச்சி, வலியறிதலில், வெப்பமறிதலில் போன்ற உணர்வுகளை உடலுக்கு உணர்த்துகிறது. இவ்விதம் பலதரப்பட்ட பணிகளைச் செய்வதால் தோலை 'பலதொழில் விற்பன்னர் எனலாம்.
மேல்தோலானது கை(ஹை)ப்போடெர்மிசு(ஸ்) (கீடெர்மிஸ்) எனும் செல்š பரப்பின் மீது அமைந்துள்ளது. கை(ஹை)ப்போடெர்மிசு(ஸ்), தோலை அடியில் உள்ள எலும்பு, தசைகளுடன் இணைக்கும். மேலும் தோலின் நரம்புகளையும் இரத்தக் குழல்களையும் பெற்றிருக்கும்.
தோலில் டெர்மிசு(ஸ்) , எபிடெர்மிசு(ஸ்) (மேடெர்மிஸ்) என இருமுக்கிய திசுக்கள் உண்டு. டெர்மிசு இணைப்புத் திசுவிலிருந்து தோன்றும். இத்திசுவே தோலுக்கான அடிப்படை வலுவைத்தரும். இப்பகுதியில் நரம்பு முடிவுகள் , ரோமங்களின் அடிப்பகுதிகள், மென்மைத் தசைகள் மற்றும் சுரப்பிகள் உள்ளன
டெர்மிசு பகுதி இரண்டு அடுக்கு கொண்டது. அவை மேற்புற பாப்பில்லரி அடுக்கு கீழ்ப்புற ரெட்டிகுலார் அடுக்கு ஆகும். ரெட்டிகுலார் அடுக்கு டெர்மிசின் முக்கிய பகுதியாகும். இப்பகுதி அடர்த்தியான தன்மையுடன் கீழ்டெர்மிசுடன் தொடர்பு கொண்டிருக்கும்
தோலானது தடித்தோ அல்லது மென்ம்மையனதகவோ இருக்கலாம். தடித்த தோலில் மேற்குறிப்பிட்ட ஐந்து அடுக்குகளும் உண்டு. உடல்பரப்பு மென்மையான தோல் கொண்டது. தொடர்ந்து உராய்வு உள்ள இடங்களில் தோலில்த் தடிப்பு ஏற்ப்படும் . இதில் கார்னியம் அடுக்கு, பல அடுக்கு செல்களை கொண்டிருக்கும்.
நிறமிகள் தோலின் நிறத்தை உண்டாக்குகின்றன. கார்னியம் அடுக்கின் அடர்த்தி, அடியில் உள்ள இரத்த ஓட்டம் போன்றவைகளும் நிறமளிக்கலாம். நிறமானது மெலனின் நிறமிகளால் தோன்றும் . இந்நிறமி தோல், ரோமம், கண்கள் போன்ற பகுதிகளுக்கு நிறமளிக்கும். சூரியன், உதா கதிர்களிலிருந்து உடலைப் பாதுகாக்கும்.
நன்றிகள்.