பாதாள கரண்டி. இது ஏதோ சமையல்கட்டில் பயன்படுத்தும் கரண்டி வகை என்று நினைக்கிறீர்கள். அப்படி தானே. அது தான் இல்லை. இது வேறு சமாச்சாரம். பல்வேறு சைசில் ஏறக்குறைய பத்து பதினைந்து கொக்கிகள் இணைக்கப் பட்ட ஒரு வித்தியாசமான கருவி தான் பாதாளக கரண்டி.
கிணற்றில் எதாவது விழுந்து விட்டால் அதை தேடி எடுக்க பயன்படும் கருவி இது. இதில் உள்ள வளையத்தில் கயிறு கட்டிக் கிணற்றுகுள்ளே விட்டுத் துழாவணும்.
பாதாள கரண்டியில் வாளின்னா சீக்கிரம் மாட்டிக் கொள்ளும். குடம் கொஞ்சம் சங்கடம். கிணற்றில் விழுந்த பொருள் அதில் சிக்கிக் கொள்வதுடன்.
சில சமயங்களில் பாதாளக் கரண்டியை கிணற்றில் விட்டு தேவும் போது சில எதிர்பாராத பொருட்கள் கிடைக்கும். முன்னால் எப்போதெல்லாமோ தவறி கிணற்றுக்குள் விழுந்து எடுக்க மறந்த பொருட்கள் எல்லாம் இப்போது கிடைக்கும்.
இந்த பாதாளக் கரண்டியை இரவல் தருகிறவர்கள் கிணற்று தண்ணீரை இறைக்கப் பயன்படும் ராட்டையையோ வாளியையோ கொண்டு வைத்தால்தான் தருவார்கள்.
தாத்பர்யம் என்னவென்றால் பாதாள கரண்டி என்பது என்றைக்கோ பயன்படுத்தப்படுகிற பொருள். கொடுத்தவர்கள், வாங்கினவர்கள் இருவருமே மறந்து விடக் கூடிய சாத்தியம் உண்டு.
அதனால் ஞாபகமாக உடனே திருப்பிக் கொடுக்க வைக்க இந்த ஏற்பாடு. பாதாள கரண்டி ஏறக்குறைய படத்தில் இருப்பது போல தான் இருக்கும்.
நன்றிகள்.