Saturday, 22 June 2013

நீரிழிவுக்கு மற்றுமோர் ஆறுதலான செய்தி.............!

நீரிழிவு நோயால் அவதிப்படுபவர்களுக்கு மற்றுமோர் ஆறுதலான செய்தி! 


உலகம் முழுவதும் நீரிழிவு நோய் அதிக அளவில் உள்ளது. இதனால் மனிதர்களின் அன்றாட நடைமுறை வாழ்க்கை மிகவும் பாதிக்கப்படுகிறது. எனவே இதைக் கட்டுப்படுத்த லணடன் கேம்பிரிட்ச்(ஜ்) பல்கலை விஞ்ஞானிகள் தீவிர முயற்சியில் ஈடுபட்டு செயற்கை கணையம் தயாரித்து வெற்றியும் கண்டுள்ளனர்.

இரத்தத்தில் சர்க்கரை சத்து அதிகரிப்பின் காரணமாக நீரிழிவு ஏற்படுகிறது. இன்சுலின் மற்றும் குளுகான் என்கிற 2 சுரப்பிகள் சரிவர இயங்காததால்தான் இந்த நோய் உருவாகிறது. இவற்றை கணையம் உற்பத்தி செய்கிறது. இன்சுலின் பீட்டா செல்கள் மூலமும், குளுகான் ஆல்பா செல்கள் மூலமும் தயாராகிறது. கணையம் பாதித்தவர்களுக்கு நீரிழிவு நோய் ஏற்படுகிறது.

எனவே, கேம்ப்ரிட்ச் பல்கலையின் ரோமன் கோ(ஹோ)வோர்கா தலைமையிலான நிபுணர் குழுவினர் கடந்த ஐந்தரை ஆண்டு காலமாக தீவிர முயற்சி செய்து செயற்கை கணையத்தை உருவாக்கியுள்ளனர். இதன் பரிசோதனை இங்கிலாந்தில் சமீபத்தில் நடந்தது. நீரிழிவு நோய் பாதித்தவர்களிடம் செயற்கை முறையில் தயாரிக்கப்பட்ட கணையம் கொடுக்கப்பட்டது.

அதை அவர்கள் தொடர்ந்து 4 வாரங்கள் இரவு நேரங்களில் பயன்படுத்தி வந்தனர். அவர்களில் 5 பேருக்கு ரத்தத்தில் குளுகோசு(ஸ்) அளவு மிகவும் குறைந்தது. அதன் மூலம் நீரிழிவு நோயின் தாக்கம் மிகவும் குறைந்து காணப்பட்டது.

எனவே, பரிசோதனை வெற்றி பெற்றதன் மூலம் அடுத்து 24 பேரிடமும் இந்த செயற்கை கணையம் வழங்கப்பட்டுள்ளது. ஆகவே, இனி நீரிழிவு நோயினால் பாதிக்கப்பட்டவர்கள் ஊசி மூலம் உடலில் இன்சுலின் செலுத்த வேண்டியதில்லை, என நிபுணர்கள் தெரிவித்துள்ளனர்.
நன்றிகள்.