Sunday, 25 August 2013

கணவன் உண்டபின் மனைவியயை உண்ண........!

கணவன் உண்டபின் அதே இலையிலோ அல்லது தட்டிலோ மனைவியயை உண்ணச் சொல்லுவார்கள் ஏன் தெரியுமா? 


திருமணம் ஆன பெண்களை வீட்டில் உள்ள பெரியவர்கள் தன் கணவன் உண்டபின் அதே இலையிலோ அல்லது தட்டிலோ உணவு உண்ணச் சொல்லுவார்கள்அது ஏன் என்று தெரியுமா?

அதற்க்கு ஒரு காரணம் உண்டு, கணவனுக்கு பரிமாறப்பட்ட உணவை கணவன் உண்ணும்போது எல்லாவற்றையும் உண்ண மாட்டான், அவனுக்கு சில உணவுகள் பிடிக்கும் சில உணவுகள் பிடிக்காமல் இருக்கும் அப்படி பிடிக்காமல் இருக்கும் உணவை அவன் அப்படியே மிச்சம் வைத்து விடுவான்,

அவனுக்கு பின் அதே இலையில் அல்லது தட்டில் உணவு உண்ணும் மனைவி மார்கள் கணவன் மிச்சம் வைத்த அவனுக்கு பிடிக்காத உணவு வகைகளை எளிதாக அடையாளம் கண்டு மறுமுறை சமைக்கும் பொழுது அந்தந்த உணவுகளை சமைக்காமல் தவிர்த்து விடலாம், பிடித்ததை அடுத்த முறை நிறைய பரிமாறலாம், அதற்காக ஏற்படுத்தப் பட்டதே இந்த பழக்கம் ஆகும். 

முன்பெல்லாம் சமையலுக்குப் பாவிக்கப்படும் மூலப்போருட்கள் அனைத்தும் கலப்படம் அன்றியும் சுத்தமாகவும் கிடைப்பதில்லை.அத்தோடு முன்பு நீத்துப்பெட்டியிலும் புட்டு அவிப்பார்கள் அந்தப்புட்டில் அடிப்புட்டையும், சோற்றில் மேல் சோற்றையும் கணவனுக்கு கொடுப்பார்கள்.

ஏனென்றால் அடிப்புட்டு நன்றாக அவிந்திருக்கும், சோற்றின் மேற்பகுதியில் அரிசியில் கலப்படம் செய்யப்பட்ட அடர்த்தி கூடியவை சோற்றின் கீழ்ப்பகுதியில் அடைந்து போயிருக்கும் என்பதாலும்.

ஆனால் இப்போது அப்படியில்லை ஏனென்றால் கலப்படமற்ற உணவுப்பொருட்கள் வாங்கலாம், உணவைத் தயாரிப்பதற்கு ஏற்ப பலவகைப் பாத்திரங்களும் இருப்பதால் தரமான உணவை கணவன் மனைவி இருவருமே மகிழ்ச்சியாக உண்ணலாம்.

இப்போதெல்லாம் புலம்பெயர் நாடுகளில் வாழ்வோருக்கும் கணவன் மனைவி இருவரும் வேலைக்குச் செல்வோரிற்கும் இது சாத்தியமாகுமா..?

குடும்ப அங்கத்தவர்கள் அனைவரும் வீட்டில் இருக்கும்போதும், கணவனின் உணவு இரசனையைப் புரிந்த மனைவியாலும் மனைவியின் உணவு இரசனையைப் புரிந்த கணவனாலும் சாத்தியமாக்கலாம். 
நன்றிகள்.