Tuesday, 4 September 2018

''பிரச்சனைகளை எப்படி சமாளிப்பது?

பிரச்சனை; என்றால் என்ன?

அதற்க்கு ஏதாவது உருவம் உண்டா?

நிச்சயமாக கிடையாது.

மனிதர்களாகிய நாம் கொடுக்கும் உருவமும், அர்த்தமும்தான் ஒரு நிகழ்வை பிரச்சனையாக எடுத்து கொள்வது.

ஒரு நிகழ்வை உணர்ச்சிபூர்வமாக அணுகும்போது அது சாதாரண நிகழ்வாக இருந்தாலும் அதற்கு கொடுக்கும் பெயர் பிரச்னை.

எந்த ஒரு நிகழ்வுக்கும் முடிவு என்பது ஒன்று உண்டு என்று கண்டிப்பாக நம்ப வேண்டும்.நம்பவில்லை என்றால் அந்த நிகழ்வுக்கு பிரச்னை என்றுதான் பெயர் சூட்ட வேண்டும்.

வாழ்க்கையில் பிரச்சனைகள் இல்லாதோர் யாரும் இல்லை. கல்யாணம் ஆனவருக்கும் கல்யாணம் ஆகாதவருக்கும், குழந்தை பெற்றவருக்கும் குழந்தையே பெறாதவர்க்கும், பணம் இருப்பவர்க்கும் பணமே இல்லாதவர்க்கும், வேலை இருப்பவர்க்கும் வேலையே இல்லாதவர்க்கும் பிரச்சனைகள் உண்டு.

அமைதியாக எந்த நிகழ்வையும் ஏற்று கொண்டால் அங்கு பிரச்னை என்ற பேச்சுக்கு இடமே இல்லை.

அமைதியாக ஏற்று கொள்ளும்போது உணர்சிகளுக்கு இடமில்லை.

உணர்ச்சிகள்தான் எந்த ஒரு நிகழ்வையும் பெரிய பிரச்சனையாக ஆக்கி விடுகிறது.

இதில் கோபத்திற்கு முக்கிய பங்குண்டு.

சாதாரண நிகழ்வையே இந்த கோபம் பெரிய பிரச்சனையாக்கி விடும்.

ஆனால் அன்பு என்பது எரிந்து கொண்டு இருக்கும் தீயை அணைக்கும் தண்ணீரை போன்று.. நிகழ்வுகளை நிகழ்வுகளாகவே மாற்ற செய்யும் சக்தி உண்டு.

ஆம்.,நண்பர்களே. வாழ்க்கையில் நாம் சந்திக்கும் பிரச்சனைகளைப் பற்றியும்,சவால்களைப் பற்றியும் சிந்திப்பது மிக மிக முக்கியம்தான், ஆனால், அதைவிட முக்கியம் அவைகள் நம்மை பாதிக்காதவாறு பார்த்துக்கொள்ள வேண்டும்.

எந்த ஒரு நிகழ்வையும் அறிவு பூர்வமாக அணுகும் போது அங்கு ''பிரச்னை'' என்பதற்கு இடம் இல்லை.

                                                                                                                                    நன்றிகள்.