Tuesday, 10 January 2012

இலையுதிர்காலம்.......!



உன் துரோகங்களை மண்ணிக்க முடியாதபடி
உன் அன்பையும் நிராகரிக்க முடியாதபடி
கடந்து போகின்றது காலம்
உன் துரோகங்கள் நினைவுக்கு வரும்போதெல்லாம்
உன் அன்பு உன்னை மன்னிக்கும்படியும்
உன் அன்பு நினைவுக்கு வரும்போதெல்லாம்
உன் துரோகங்கள் உன்னை நிராகரிக்கும்படியும்
















அந்தந்த தருணங்களில்
உன்னை நேசித்தும்
நிராகரித்தும்
கடந்து போகின்றது காலம்
நம் இருவரில்
நீதான் முதலில் அன்பையும்
நீதான் முதலில் துரோகத்தையும் வழங்கினாய்














முதலில் அன்பாய் இருந்த நான்
துரோகங்களின் பின்னர் உன்னை விலக்கி வைத்தாலும்
நம் நண்பர்களிடம்
என்னைபற்றி நீ பெருமையாக சொல்லும்போது
பெருமிதமாகவும்
தப்பாக குற்றம் சுமத்தியதை அறிந்து
அவநம்பிக்கைக்ளுடனும்
கடந்து போகிறது காலம்


















உன் வெற்றியின் எக்காளச் சிரிப்பில்
எரிந்து போனது ஒரு காதல்
இப்போதும்
என்னைக் கடந்து செல்லும்
உன் மனைவியின் வறண்ட புன்னகையில்


















கடந்து போகிறது
நம் அன்பும்
உன் துரோகங்களும்
எங்கள் காதலும்...













(நன்றிகள் பி.செந்தில்)

Monday, 9 January 2012

தூய அன்பை செலுத்துகிறோமா?


இன்றைய உலகில் அன்பு என்ற சொல் கொச்சைப்படுத்தப் படுகின்ற அளவு மற்ற சொற்கள் கொச்சைப்படுத்தப்படுவதில்லை என்று சொல்லலாம். அன்பு என்பதே நமக்கு வேண்டியது போல அடுத்தவர்கள் இருப்பது, நாம் விரும்புவதை அடுத்தவர்கள் செய்வது என்று பலரும் அர்த்தப்படுத்திக் கொள்கிறார்கள்.

நமக்கு அனுகூலமாக அடுத்தவர் நடப்பதையோ, இருப்பதையோ நிறுத்தும் போது அது அன்பின்மையின் அடையாளமாக காணப்படுகின்றது. அதே போல் நம் கருத்துக்கு எதிரான கருத்து இருக்குமானால் அதையும் பல அன்பாளர்களால் ஏற்க முடிவதில்லை.


அன்பை இப்படி வரையறுப்பதின் விளைவே நம் வாழ்வில் அன்பை அதிகமாகக் காணாதிருக்கக் காரணம் என்றால் அது மிகையாகாது. நீ என்னை நேசிப்பது உண்மையானால் அப்படிச் செய், இப்படி இரு என்று அடுத்தவரை தம் விருப்பப்படி மாற்ற முனைவது உண்மையான அன்பா?

பலனை எதிர்பார்த்து எதைச் செய்தாலும் அது ஒருவித வாணிபமே அல்லவா? நான் இதைச் செய்கிறேன் நீ அதைச் செய் என்பதும், நான் இதைத் தருகிறேன் நீ அதைக் கொடு என்பதும் கொடுக்கல் வாங்கல் என்றால், நான் உன்னிடம் அன்பு செலுத்துகிறேன், பதிலுக்கு இப்படி இரு, அப்படி மாறு என்று கூறுவதும் வியாபார ஒப்பந்த வரிகளாக அல்லவா உள்ளது?


என்னை போலவே இரு, என்னைப் போலவே நினை, எனக்காகவே வாழ் என்று சொல்வதெல்லாம் அன்பு அல்ல. வடிகட்டிய சுயநலம். சிலர் சொல்லலாம் "நாங்கள் எதிர்பார்ப்பதே அன்பின் மிகுதியால் தான், அவர்களுக்கு நல்லதற்காகத் தான்" என்று. காரணம் என்னவாக இருந்தாலும் பதிலுக்கு ஒன்றை எதிர்பார்க்கையில் அன்பு தொலைந்து போகிறது என்பதே உண்மை.

எனக்கு நன்றாகத் தெரிந்த பெண்மணி ஒருவர் மகனிடம் சொன்னார். "நீ அம்மாவை நேசிப்பது உண்மையானால் புகை பிடிப்பதை நிறுத்து". மகனிடம் சத்தியமும் வாங்கிக் கொண்டார். சில மாதங்கள் மகன் புகை பிடிக்காமல் சமாளித்தான்.


ஒரு சந்தர்ப்பத்தில் அது முடியாமல் போய் இப்போது தாயாருக்குத் தெரியாமல் ரகசியமாகப் புகை பிடிக்கிறான். அவனுக்குத் தாய் மேல் பாசம் இல்லாமல் இல்லை. தாயாரும் அவன் நலத்திற்காகத் தான் அப்படி சத்தியம் வாங்கிக் கொண்டார்.

ஆனாலும் அன்பிற்கும் அந்தப் பழக்கத்திற்கும் முடிச்சுப் போட்டது மகனை மாற்றுவதற்குப் பதிலாக அவனை ஏமாற்றத் தான் தூண்டியது.இதே போல் சில வீடுகளில் "எங்களை நேசிப்பது உண்மையென்றால் கல்வியில், ஒழுக்கத்தில் சமூகத்தில் மென்மையாக இருக்க வேண்டும் என்று குழந்தைகளிடம் சொல்லி பெற்றோர் இலக்குகள் நிர்ணயிப்பதும் அபத்தமே. குழந்தைகளிடம் எதிர்பார்ப்பதும், ஊக்குவிப்பதும் தவறல்ல.


ஆனால் அன்புக்கே அடையாளம் இது தான் என்று சில இலக்குகளை தீர்மானிப்பது தான் அபத்தம். கொடுத்துக் கொண்டே இருப்பது, சொன்னதற்கெல்லாம் தலையாட்டிக் கொண்டே இருப்பது, எல்லாமே எனக்கு நீ தான் என்பது, சதா கூடவே இருப்பது என்று இன்னும் எத்தனையோ அளவுகள் அன்பின் பெயரால் புழக்கத்தில் இருக்கின்றன.

ஆனால் உண்மையான அன்பு இது எதுவும் அல்ல. சரி எது தான் உண்மையான அன்பு? உலகத்தில் அன்பைத் தொலைத்துவிட்டு. இவ்வுலகில் எவ்வித எதிர்பார்ப்பையும் எதிர்பாராத எந்த உறவுமுறையையும் இப்போது காணமுடியாது.உலகை சூன்யமாக்கி மனிதசடங்களாக தூயஅன்பிற்காக ஏங்கித் தவிக்கின்றனர்.  நாம் இப்போது தூய அன்பைச் செலுத்துகிறோமா 
மனச்சாட்சியைத் தொட்டுச் சொல்லுங்கள்.


(நன்றிகள் ஏன்.கணேசனிற்கு) 

Sunday, 8 January 2012

அன்பு எனும் மூன்றெழுத்து



நீ ஓரெழுத்து
நான் ஈரெழுத்து
அன்பு மூன்றெழுத்து


தருவது நாலெழுத்து
ஆனந்தம் ஐந்தெழுத்து
யாரிடத்தில் ஆறெழுத்து



தருவதில் ஏன் ஏலேழுத்து
உன் கடையடைப்பு எட்டெழுத்து
உலகம் பரந்தது ஒன்பதேழுத்து


பார் பார் பூச்சொரியும் பத்தேழுத்து
பத்தும் பத்தும் விரல்கள்
பத்தும் கைகளுக்கும்


வணங்கும் கண்நீர் துடைக்கும்
நாம் அன்பின் வழி செல்வோம்
அது ஆத்மாத்தமாக அமையட்டும்

இதிலும் கலப்படம் வேண்டாம்
உண்மையே அன்பு!அன்பே உண்மை!

(நன்றிகள் கவியுலகம்)

Saturday, 7 January 2012

அன்பு .....

அன்பு என்ற சொல்லை ஆங்கிலத்தின் "love" என்ற சொல்லுக்கு இணையாகக் கருதினாலும், "love" என்னும் சொல் குறிக்கும் எல்லாப் பொருளையும் "அன்பு" என்னும் சொல் குறிப்பதில்லை.


"love" என்பதற்கு ஆங்கிலத்தில் பல பொருள்கள் உள்ளன. பொதுவாக ஒரு பொருள் அல்லது செயலின் மீது உள்ள "விருப்பம்" (நான் பாயாசம் "விரும்பி" உண்பேன்), இருவருடையே காணப்படும் பொதுவான அன்பு, மிக நெருக்கமான "காதல்" உணர்வு வரை பல பொருள்களில் அச் சொல் பயன்படுத்தப்படுகின்றது.

அன்பு என்ற சொல்லுக்குரிய உணர்வும் எண்ணக்கருவும் தமிழுக்குத் தனித்துவமானது எனலாம். இவ்வாறு மொழிகளிடையே "அன்பு" என்னும் பொருள் தரக்கூடிய சொற்கள் குறிக்கும் உணர்வுகள் பலவாறான வேறுபாடுகளைக் கொண்டவையாக இருப்பதால், அன்புக்கு உலகம் தழுவிய வரைவிலக்கணம் ஒன்றைக் கொடுப்பது கடினமானது.

தமிழிலும் அன்பு என்னும் உணர்வு பல்வேறு மட்டங்களில் வெளிப்படுவதைக் காணலாம். தாய் மீதான அன்புக்குச் சிறப்பான இடம் உண்டு. அன்பு அதன் பல்வேறு வடிவங்களில் மனிதர்களிடையேயான தொடர்புகளை வலுப்படுத்தும் ஒரு காரணியாக உள்ளது.

அத்துடன் அன்பின் உளவியல் முக்கியத்துவம் காரணமாக ஆக்கக் கலைகளில் அது ஒரு முக்கியமான கருப்பொருளாக ஆளப்படுகிறது.[தொகு]பொருள் மதராஸ் பல்கலைக் கழகத்தின் தமிழ் லெக்சிக்கன், அன்பு என்னும் சொல்லுக்கு "தொடர்புடையார் மாட்டு உண்டாகும் பற்று" எனப் பொருள் தருகிறது.


இதிலிருந்து அன்பு என்பது பெற்றோர், மனைவி, பிள்ளைகள், பிற உறவினர், நண்பர்கள் என்று பலவகைப்பட்டோர் மீதும் கொள்ளும் பற்று அன்பு என்னும் சொல்லால் குறிக்கப்படுவதை அறியலாம்.

அது மட்டுமன்றி உலக மக்கள் அனைவரிடமும், எல்லா உயிரினங்களிடத்தும்கூட அன்பு செலுத்தவேண்டும் என்று தமிழ் நீதி நூல்கள் கூறுவதிலிருந்து அன்பு என்பது தொடர்பு கொண்டவர்களிடத்து மட்டுமன்றி எவ்வுயிர்களிடத்தும் கொள்ளக்கூடிய பற்று என்றாகிறது.


திருக்குறள் அன்பைப் பற்றிப் பேசும்போது, அதனை "அகத்துறுப்பு" என்கிறது. இதன் மூலம் பண்டைத் தமிழர் அன்பை உடலின் ஒரு உறுப்பாகவே கருதினர் போல் தெரிகிறது.

அன்பு என்ற பண்பு எல்லோருக்கும் பிடித்த யாவரையும் கவரக்கூடிய ஒன்று ஆகும்! அன்பாக பேசி பழகும் ஒருவருடன் யாருமே வெகு விரைவில் ஐக்கியம் ஆகிவிட முடியும்.

அன்பு என்ற இந்த வார்த்தைக்கு பாசம், நேசம், காதல், கருணை என்று பல்வேறு பரிணாமங்கள் உள்ளது. மிருக அன்பு மிருகம் என்பது பகுத்தறிவு இல்லாத உயிரினமாக இருக்கின்ற போதிலும் அவைகளிடத்திலும் அன்பு உண்டு.

அதிலும் சில மிருகங்கள் மனிதனைவிட ஒருபடி அதிகமான அன்பும் நன்றியும் உள்ளதாக இருப்பது குறிப்பிடத்தக்கது. என்னதான் மிருகங்களிடம் அன்பு காணப்பட்டாலும் அந்த அன்பு பொதுவாக சுயநலம் சார்ந்த அன்பாகவே இருக்கும்.

தனக்கும் தன் குட்டிகளுக்கும் போகத்தான் எதுவுமே என்ற நிலையில் வாழும். தன்னை வாழ வைப்பது யார், யாரிடம் தஞ்சமாக உள்ளோம், தனக்கு உணவு கொடுப்பது யார் என்ற எந்த ஒரு உணர்வும் இல்லாமல் அது சுகமாய் தங்கி இருக்கும் இடத்தில் அந்நியர் யாரும் வந்துவிட்டால்.

உடனே ஒரு சத்தமிட்டு தன் எதிர்ப்பை வெளிப்படுத்துவதொடு கடும் கோபத்துடன் எதிராளி மீது மோதும் தன்மையுடையது இது போன்ற அன்பு இன்று அனேக மக்களிடமும் காணப்படுவதுதான் மிகவும் வேதனையான விஷயம்.

தலைவிரித்தாடும் சுயநலம், எல்லாவற்றிலுமே ஏதாவது ஆதாயத்தை எதிர்பார்த்து செய்யும் நிலைமை, யார் நட்டம் அடைகிறார், அதனால் என்ன பாதிப்பு என்றெல்லாம் கொஞ்சமும் யோசனை செய்யாமல் தானும் தன் குடும்பமும் நன்றாக இருந்தால் போதும்.

யார் எப்படி போனால் நமக்கென்ன என்ற நோக்கோடு இன்று மனித கூட்டம் செயல்படுகிறது. உயிர்காக்கும் மருந்திலிருந்து உணவு பொருள்கள் வரை எல்லாவற்றிலும் கலப்படம், தெரு பொறுக்கும் துடப்பத்தில் இருத்து மனிதனின் சிறுநீரகம் வரை எங்கும் திருட்டு.

இவை எல்லாம் மிருக அன்பை விட கேவலமான அன்பு மனிதனிடம் புகுந்து விட்டதால் வந்த அலங்கோலங்கள் மனித அன்பு மனித அன்பு என்பது மாறும் அன்பாகும்.

இன்று "நீ இல்லாமல் வாழவே முடியாது" என்று சொல்லும் அதே வாய் நாளை "நீ இருந்தால் என்னால் வாழவே முடியாது" என்று மாறி பேசும். இன்று "உன்னை போல் நல்லவன் இல்லை" என்று சொல்லும் வாய் நாளை "உன்னை போல ஒரு கெட்டவனை நான் பார்த்ததே இல்லை" என்று சொல்லும் மனித அன்பு நம்பகத்தன்மை அற்றது ஆகும் மேலும் இந்த அன்பு பச்சோந்தி போல் அவ்வப்பொழுது நிறம் மாறும் தன்மை கொண்டது.

ஏழை, பணக்காரன், பெண், ஆண், தொழிலாளி, முதலாளி, என்பதின் அடிப்படையிலும் வயது மட்டும் இருக்கும் சூழ்நிலை பதவிக்கு தகுந்தார் போலவும் நிறம் மாறும் தன்மையுள்ளது.

ஆளை பார்த்தல் ஒரு அன்பு ஆளை பார்க்காவிட்டால் ஒரு அன்பு, தனியாக இருக்கும் போது ஒரு அன்பு கூட்டமாக இருக்கும் போது ஒரு அன்பு, பணம் இருந்தால் ஒருஅன்பு பணம் இல்லாவிட்டால் ஒரு அன்பு அப்பப்பா எத்தனை விதமான மனித அன்புகள்!.

உலக மனிதர்களின் பச்சோந்திதனமான அன்பு எப்பொழுது எப்படி மாறும் என்பதை தனத்தையும் விளக்கி சொல்ல முடியவே முடியாது! .  தெய்வீக அன்பு என்பது தன்னை பற்றி என்றுமே கவலைப்படாது, பிறர் மகிழ்ச்சியாக இருக்க வேண்டும் என்பதற்க்காக தன்னையே கொடுக்க கூட தயங்காது. 

ஒருவன் எத்தனை முறை திட்டினாலும், எத்தனை முறை கடன் வங்கி திருப்பிதாராமல் போனாலும், எவ்வளவுதான் துரோகம் செய்திருந்தாலும் அவன் மீதிலும் அன்பு வைக்கும் நிலையான அன்பே தெய்வீக அன்பு.

இந்த அன்பு மனிதன் எப்படிப்பட்டவன் என்று பார்க்காது, தனக்கு ஏதாவது கைமாறு கிடைக்குமா என்று பார்க்காது, ஏழை பணக்காரன் வித்தியாசம் பார்க்காது, யாரையும் மனம் நோக பேசாது, இருக்கும் சூழ்நிலையை பார்க்காது. ஆனால் பிறருக்கு எவ்விதத்திலாவது உதவ வேண்டும் என்று நினைக்கும். 

 அன்பு நீடிய சாந்தமும் தயவுமுள்ளது; அன்புக்குப் பொறாமையில்லை; அன்பு தன்னைப் புகழாது, இறுமாப்பாயிராது, அயோக்கியமானதைச் செய்யாது, தற்பெருமை நாடாது, சினமடையாது, தீங்கு நினையாது, அநியாயத்தில் மகிழ்ச்சியடையாமல் சத்தியத்தில் மகிழ்ச்சி சகலத்தையும் தாங்கும், எந்த ஆதங்கத்தில் சொந்த நாட்டை, நல்ல வாழ்க்கையை துறந்து காடு மேடு என்று அலைந்து நல்வாழ்க்கையை அறிவிக்கும் அந்த அன்பை என்னே சொல்வது. 

நல்ல வாழ்க்கையை துறந்து இந்தியாவுக்கு வந்து இந்திய மக்களுக்காக உழைத்து மரித்த "கார்மைக்கேல் அம்மையார்" "மதர் தெரசா", ஆங்கிலத்தில் மொழி பெயர்த்த தர்க்காக நெருப்பால் கொளுத்தப்பட்ட வில்லியம், மார்டின் லூதர் போன்ற மாபெரும் மனிதர்களிடமே இந்த அன்பை காண முடியும். 

கண்ணதாசன் சொன்னதுபோல் "கருணையும் இரக்கமும் பொங்கும் உள்ளம் தான் கடவுள் வாழ்கின்ற இல்லமாகும்" " கருணை மறந்து வாழும் மக்கள் கடவுளை தேடி எங்கு அலைந்தாலும் அவரை கண்டுகொள்ள முடியாது"

எனது ஆய்விற்கு உதவிய இணையங்களிற்கும் நன்றிகள் 

Friday, 6 January 2012

ஆணாக 56 ஆண்டுகள்..........



மராண்டா ஸ்டூஆர்ட்( Dr.ஜேம்ஸ் பாரி )ஆண் வேடமிட்டு1812 ஆம் ஆண்டு எடின்பர்க் மருத்துவ கலூரியில் பட்டம் பெற்றார்.பெண்களுக்கு அப்போது கல்லூரியில் இடம் இல்லை. 


ஆங்கிலேயரின்ஆட்சியின் கீழ் பல நாடுகளிலும் சேவை செய்தார். ஆணாகவேவாழ்ந்தாள். அவர் இறந்த பிறகு அவர் உடலை சுத்தம்செய்தபெண்மணியே அவர் ஆணல்ல பெண் என்று கண்டுபிடித்தார்.. 


எத்தனை வைராக்கியம் இருந்தால் அவர் 56 வருடங்கள் ஆணாக வாழ்ந்திருப்பார்..

Thursday, 5 January 2012

சுதந்திரம் ......


அடிமைத் தனத்தின்


அறுவடை!


Wednesday, 4 January 2012

கனவில்!......



கண்ணும் கண்ணும் கவி பாட வில்லை
காதல் கவிதைகள் பரி மாற வில்லை
கை கோர்த்து கால் நடந்திடவில்லை
கருத்து யுத்தங்கள் அரங்கேறவில்லை


காம பசிகள் தீர்திடவில்லை
கற்பனை குழந்தைகள் கனவினில் இல்லை
நம் காதலும் கடந்தது கனவினில் ...









Tuesday, 3 January 2012

காதல் செய்வீர்!



காதல் ....
இந்த மூன்றெழுத்து மந்திரசொல்
உலகில் எத்துணையோ சரித்திரங்களை


உருவாக்கியும் , அழித்தும் , உள்ளது , எப்படி
காதல் மனிதனுக்கு மட்டுமே வரும்
ஒரு உன்னதமான உணர்வு ஏன் என்றால


எந்த விலங்குகளும் தன் இணை மீது
அதுவும் கூடும் காலங்களில் மட்டுமே ...
காமத்தால் காதல் கொண்டிருக்கும்


ஆனால் மனிதன் மட்டுமே தன் இணை மீது
கல்யாணத்திற்கு முன்னும் ,கல்யாணத்திற்கு பின்பும்
பிறப்பிலும், இறப்பிலும், அவன் ,அவள் சுக ,துக்கங்களிலும்,காதல்


கொண்டிருக்கின்றான். ஆனால் காதல் ஆணுக்கு , பெண் மீதும், பெண்ணுக்கு ஆண் மீது வருவது இன்றி, மனிதன் தம் தாய்நாடு,மொழி, இனம், வாழ்க்கை, லட்சியங்கள் ,ஆகியவற்றின் மேலும் காதல் கொண்டிருந்தான்.


அதனாலேதான் வெற்றியும் ,பெறுகின்றான் காந்தி தீண்டாமை ஒழிப்பு மீதும் நேதாஜி தாய் நாட்டின் மீதும், பாரதி தமிழ் மீதும் அம்பானி தொழில் மீதும் , கொண்ட காதலினால்தான் வெற்றியும் பெற்றார்கள் கிட்லர் , மாவீரன் என்று


போற்றப்படும் அலெக்சாந்தர் ,முசொலின் , மேலும் பலர் ஆகையால் மனிதனின் காதல் மண் , பெண் , பொன் , பொருள் , இவைகளை தாண்டி வாழ்வின் ,லட்சியங்களைும் ,சிந்தனைகள் மீதும் உருவாகும் போது அவன்


வெற்றி பெற்று வரலாற்றில் பிரகாசிக்கின்றான்.
காதல் செய்வீர்,காதல் செய்வீர்,
இவ்வையகம் இன்புற ......


(நன்றிகள் அன்பு இணையத்திற்கு)

Sunday, 1 January 2012

கண்ணகி


இவள் கற்புக்கரசியாய் இருந்ததல்ல என்னை வியக்க வைத்தது.. இவள் குற்றங்களை தட்டி கேட்டதும் துணிந்து மதுரையை எரித்ததும் தான் என் வியப்பு. 


சங்ககாலத்து பெண்களே இப்படி சித்தரிக்கப்பட்டிருக்கும் போது இக்காலத்து பெண் எப்படி இருக்கவேண்டும்??


புத்தாண்டு வாழ்த்துக்கள்

அனைத்து நண்பர்கள்,
உற்றார்,உறவினர்களிற்கு!


இனிய ஆங்கில புத்தாண்டு வாழ்த்துக்கள்
உரித்தாகுக.

வருக!,வருக!!ஆங்கிலப் புத்தாண்டே!

உலகெங்கும் பரந்து வாழும் எம்இனிய தமிழ் உறவுகளிற்கு!


இதயங்கனிந்த ஆங்கிலப் புத்தாண்டு வாழ்த்துக்கள்!




கல்வியின் சிறப்பு...................!


இன்றைய உலகின் இன்றியமையாத ஒன்றாகத் திகழ்வது யாதெனில் கல்வியே ஆகும்.எந்த ஒரு சமூகத்தினரும் இக்கல்வியைக் கற்பதில் இருந்து விலகிச்செல்வது இன்றைய நவீன உலகில் மிகவும் அரிதாகக் காணப்படுகிறது.

ஏனெனில் கல்வியின் சிறப்பை அனைத்து சமூகங்களும் புரிந்துள்ளன. இதனால்தான் இன்று கல்வியானது மனிதனின் அத்தியாவசிய தேவையாக இருக்கிறது.

கல்வியின் சிறப்பைப் பற்றிக் கூறும்போது கல்வி கற்றவன் எந்த இடத்திற்குச் சென்றாலும் அவன் பிறசமூகத்தால் மதிக்கப்படுகின்றான். இதற்குக் காரணம் அவன் கற்ற கல்வியே.

கற்றவனுக்கு தனது ஊரும், நாடும் அல்லாமல் எந்தஊரும், நாடும் தனது; ஊராகவும், நாடாகவும் கொள்ளமுடிகிறது. இப்படி கல்விகற்றவனின் சிறப்பு இருக்க.

ஒருவன் மரணிக்கும்வரை கல்விகற்காமல் இருந்து காலத்தைக் கழிப்பதுமிகவும் சிரமமானதாகும். இதனையே திருவள்ளுவர் மிகவும் அழகாக வர்ணித்திருக்கிறார்.

"யாதானும் நாடு ஆமால் ஊர் ஆமால் ஏன் ஒருவன் சாந்துணையும் கல்லாதவாறு" எனக்குறிப்பிடுகிறார்.

ஒருவன் தான் எவ்வளவு கல்வி கற்றாலும் அதனைச் செயல்வடிவில் தக்கவைத்துக் கொள்ள வேண்டும். அப்போதுதான் அவன் கற்ற கல்வியின் பயன் அவனுக்குக் கிடைக்கும்.

இல்லையேல் அவன் கற்ற கல்வியின் பயன் ஒன்றும் இல்லாமல் போய்விடும்.இதனையும் திருவள்ளுவர் தனது திருக்குறளின் கல்வி என்ற அதிகாரத்தின் முதலாவது குறளில் தெளிவாகக் கூறுகிறார்.

"கற்க கசடறக் கற்பவை கற்றபின் நிற்க அதற்கு தக" என்று கூறுவதிலிருந்து நாம் விளங்கிக் கொள்ளலாம். என்று சொல்லப்படுவதும், எழுத்து என்று சொல்லப்படுவதும்.

இவை இரண்டினையும் அறிந்தோர் சிறப்பு மிக்கமக்களின் உயிர்களிற்கு கண் என்று சொல்லப்படுவர். இந்த அளவிற்கு கல்வியின் சிறப்பு எடுத்துரைக்கப் படுகின்றது.

"கண்ணுடையார் என்பவர் கற்றோர் முகத்து இரண்டு புண்ணுடையார் கல்லாதர்" கற்றவரின் சிறப்புப் பற்றிக் கூறும்போது ஒருவரின் முகத்திலுள்ள கண்ணானது கற்றவருக்குரிய அடையாளம் என்று சொல்லப்படுகிறது.

அதேகல்வி இல்லாதவரிற்கு முகத்தில் இரண்டு புண் இருப்பதாக குறிப்பிடப்படுகிறது. இதன்மூலம் கல்வியின் சிறப்பும். அதனைக் கற்றவனின் சிறப்பும் கூறப்படுகிறது.

கல்வி உடையவர்கள் அனைத்து மக்களிடமும் நன்றாகப் பழகிக் கொள்வதோடு மடுமல்லாமல் அவர்களுடன் சேர்ந்து சந்தோசமாக வாழ்வதையே விரும்புவார்கள். இவர்கள் பிரிகின்றபோது எப்போது இனி நாம் மீண்டும் சேர்வோம்!.

என்ற நினைவிலேயே பிரிகின்ற தன்மை கற்றவரிடம் இருக்க வேண்டும்.

மனிதன் ஆயுள் முவதும் கற்றுக்கொண்டே இருக்க வேண்டும். கற்கமறுப்பவன் வாழமறுப்பவன் ஆகின்றான்.

கல்வி என்பது ஆய்வு கல்வி மூலம் சூழலை, அறிவை சமூகத்தை, பண்பாட்டை, மரபை ஆராய்ந்து கொள்ளலாம்."கல்விக்காக உயிர் கொடுத்தோர் என்றும் மரணிப்பதில்லை" மேற்கூறிய வாசகத்தை ஆராய்ந்தபோது கற்றவனின் சிறப்பைக் காணலாம்.

அதாவது இக்கல்விக்காக உயிர்கொடுதோர் மரணிப்பதில்லை என்பது கல்வி கற்றவர் மரணித்து விடுவார், ஆனால் அவர் கற்ற, கற்பித்த கல்வி இந்த உலகம் அழியும்வரை அழியாது இருந்தே ஆகும்.

இதனையே கல்விக்காக உயிர் கொடுத்தோர் மரணிப்பதில்லை எனக்கூறப்படுகிறது. இதற்குச் சிறந்த உதாரணம் எந்த சமயமும் சாராமல் மனிதவாழ்வின் மேம்பாட்டிற்காக எழுதிய திருவள்ளுவர் இறந்துவிட்டார்.

ஆனால் அவரினால் எழுதப்பட்ட "திருக்குறள்" உலகின் அனைத்துப் பாகங்களிலும் பலமொழிகளில் மொழிமாற்றம் செய்யப்பட்டு அழியாமல் இருப்பதே ஒரு எடுத்துக் காட்டாகும்.

"தான் இன்புறுவது உலகின் பிறர் கண்டு
காருமுருவர் கற்றந்தார்"

ஒருவன் தான் கற்ற கல்வியின் இன்பத்தை உணர்ந்தானாயின் அவன் மீண்டும் கற்பதையே விருபுவான்.

இது கல்வியின் பண்பாக கருதப்படுகிறது மாந்தர் தம் கரியனைத்தூரும் அறிவு என்பது வள்ளுவர் கண்ட வாழ்க்கை நெறியாகும். கல்வி மனித அடிப்படை உரிமைகளில் ஒன்று.

அறிவியற் கல்வி, சமூக அறிவியற்கல்வி, அழகியல் கல்வி ஆகிய மூன்றும் வாழ்க்கைக்கு அவசியமானவை. ஒவ்வொருவனுக்கும் பெருமையையும், புகழையும் தரக்கூடியது செல்வம் "கல்விச்செல்வமே"அன்றி வேறில்லை.

கல்வியோ தொழிலுக்கு வழிகாட்டுகிறது.  கல்வி என்பது வாழ்க்கை வாழ்வதற்காக உதவும் கருவியாகும்.வாழ்க்கையின் நோக்கம் என்ன என்பதை இனங்கண்டு அதற்கேற்ப கற்க வேண்டும்.

வாழ்க்கையை நெறிப்படுத்தவும், மேம்படுத்தவும் கல்வியை பயன்படுத்த வேண்டும். கல்வி கற்றவர்களிடம் ஒழுக்கம், பண்பு, நேர்மை, நீதி இவைகள் அனைத்தும் ஒருங்கே அமைந்து காணப்பட வேண்டும்.

எனவே கல்வியானது ஒருமனிதனின் முக்கிய தேவையாக இருக்கிறது. எந்தவொரு சமூகமும் கல்வி இல்லாமல் இருப்பது இக்காலத்தைப் பொறுத்தவரை மிகவும் தாழ்வாகவும், இழிவாகவும் கருதப்படுகிறது.

எனவே இவ்வாறு பார்க்கும்போது கல்வியின் முக்கியத்துவத்தை நன்கு அறியமுடிகிறது. ஒருவன் கல்வியில் சிறந்து விளங்கினால் சமூகத்தில் எவ்வாறு மதிக்கப் படுகின்றான் என்பதை விளங்க முடியும்.

ஆனால் நாங்கள் கற்றவர்கள் என்று கூறிக்கொண்டு தமது கல்வியினை மற்றவர்களிற்கு கற்பிக்காமலும், அக்கல்வியினால் ஏற்படும் நன்மைகளை தனது சூழலிற்குப் பயன்படுத்தக் கூடிய எந்த முயற்சிலும் ஈடுபடாது .

தாங்கள் வசிக்கும் சூழலில் மிகப்பெரும் குழப்பங்களை ஏற்படுத்துவதோடு தலைக்கனத்துடன் எந்த ஒருநபரைக் கூட மதிப்பளியாது நடந்து கொள்வது கல்வியினால் தான் பெற்ற உயர்வை இழிவு படுத்தும் செயலாகும்.

இவாறு தனது கல்வியை துர்ப்பிரயோசனம் செய்யாது.கற்ற கல்விக்கு எற்ப ஒழுகி சிறந்த சமுதாயத்தை உருவாக்குவோம்.  

இவ்வாறு கல்வியை கற்று சமூகத்தில் சிறந்த மனிதனாக வாழ கல்வி உதவுகிறது. இப்படியான கல்வியின் சிறப்பை 2042 ஆண்டுகளிற்குமுன் திருக்குறள் மூலம் தெளிவாகக் கூறியிருக்கிறார் திருவள்ளுவர்.

(ஆய்விற்கு உதவிய அனைத்து இணையங்களிற்கும் நன்றிகள்)