Saturday, 7 January 2012

அன்பு .....

அன்பு என்ற சொல்லை ஆங்கிலத்தின் "love" என்ற சொல்லுக்கு இணையாகக் கருதினாலும், "love" என்னும் சொல் குறிக்கும் எல்லாப் பொருளையும் "அன்பு" என்னும் சொல் குறிப்பதில்லை.


"love" என்பதற்கு ஆங்கிலத்தில் பல பொருள்கள் உள்ளன. பொதுவாக ஒரு பொருள் அல்லது செயலின் மீது உள்ள "விருப்பம்" (நான் பாயாசம் "விரும்பி" உண்பேன்), இருவருடையே காணப்படும் பொதுவான அன்பு, மிக நெருக்கமான "காதல்" உணர்வு வரை பல பொருள்களில் அச் சொல் பயன்படுத்தப்படுகின்றது.

அன்பு என்ற சொல்லுக்குரிய உணர்வும் எண்ணக்கருவும் தமிழுக்குத் தனித்துவமானது எனலாம். இவ்வாறு மொழிகளிடையே "அன்பு" என்னும் பொருள் தரக்கூடிய சொற்கள் குறிக்கும் உணர்வுகள் பலவாறான வேறுபாடுகளைக் கொண்டவையாக இருப்பதால், அன்புக்கு உலகம் தழுவிய வரைவிலக்கணம் ஒன்றைக் கொடுப்பது கடினமானது.

தமிழிலும் அன்பு என்னும் உணர்வு பல்வேறு மட்டங்களில் வெளிப்படுவதைக் காணலாம். தாய் மீதான அன்புக்குச் சிறப்பான இடம் உண்டு. அன்பு அதன் பல்வேறு வடிவங்களில் மனிதர்களிடையேயான தொடர்புகளை வலுப்படுத்தும் ஒரு காரணியாக உள்ளது.

அத்துடன் அன்பின் உளவியல் முக்கியத்துவம் காரணமாக ஆக்கக் கலைகளில் அது ஒரு முக்கியமான கருப்பொருளாக ஆளப்படுகிறது.[தொகு]பொருள் மதராஸ் பல்கலைக் கழகத்தின் தமிழ் லெக்சிக்கன், அன்பு என்னும் சொல்லுக்கு "தொடர்புடையார் மாட்டு உண்டாகும் பற்று" எனப் பொருள் தருகிறது.


இதிலிருந்து அன்பு என்பது பெற்றோர், மனைவி, பிள்ளைகள், பிற உறவினர், நண்பர்கள் என்று பலவகைப்பட்டோர் மீதும் கொள்ளும் பற்று அன்பு என்னும் சொல்லால் குறிக்கப்படுவதை அறியலாம்.

அது மட்டுமன்றி உலக மக்கள் அனைவரிடமும், எல்லா உயிரினங்களிடத்தும்கூட அன்பு செலுத்தவேண்டும் என்று தமிழ் நீதி நூல்கள் கூறுவதிலிருந்து அன்பு என்பது தொடர்பு கொண்டவர்களிடத்து மட்டுமன்றி எவ்வுயிர்களிடத்தும் கொள்ளக்கூடிய பற்று என்றாகிறது.


திருக்குறள் அன்பைப் பற்றிப் பேசும்போது, அதனை "அகத்துறுப்பு" என்கிறது. இதன் மூலம் பண்டைத் தமிழர் அன்பை உடலின் ஒரு உறுப்பாகவே கருதினர் போல் தெரிகிறது.

அன்பு என்ற பண்பு எல்லோருக்கும் பிடித்த யாவரையும் கவரக்கூடிய ஒன்று ஆகும்! அன்பாக பேசி பழகும் ஒருவருடன் யாருமே வெகு விரைவில் ஐக்கியம் ஆகிவிட முடியும்.

அன்பு என்ற இந்த வார்த்தைக்கு பாசம், நேசம், காதல், கருணை என்று பல்வேறு பரிணாமங்கள் உள்ளது. மிருக அன்பு மிருகம் என்பது பகுத்தறிவு இல்லாத உயிரினமாக இருக்கின்ற போதிலும் அவைகளிடத்திலும் அன்பு உண்டு.

அதிலும் சில மிருகங்கள் மனிதனைவிட ஒருபடி அதிகமான அன்பும் நன்றியும் உள்ளதாக இருப்பது குறிப்பிடத்தக்கது. என்னதான் மிருகங்களிடம் அன்பு காணப்பட்டாலும் அந்த அன்பு பொதுவாக சுயநலம் சார்ந்த அன்பாகவே இருக்கும்.

தனக்கும் தன் குட்டிகளுக்கும் போகத்தான் எதுவுமே என்ற நிலையில் வாழும். தன்னை வாழ வைப்பது யார், யாரிடம் தஞ்சமாக உள்ளோம், தனக்கு உணவு கொடுப்பது யார் என்ற எந்த ஒரு உணர்வும் இல்லாமல் அது சுகமாய் தங்கி இருக்கும் இடத்தில் அந்நியர் யாரும் வந்துவிட்டால்.

உடனே ஒரு சத்தமிட்டு தன் எதிர்ப்பை வெளிப்படுத்துவதொடு கடும் கோபத்துடன் எதிராளி மீது மோதும் தன்மையுடையது இது போன்ற அன்பு இன்று அனேக மக்களிடமும் காணப்படுவதுதான் மிகவும் வேதனையான விஷயம்.

தலைவிரித்தாடும் சுயநலம், எல்லாவற்றிலுமே ஏதாவது ஆதாயத்தை எதிர்பார்த்து செய்யும் நிலைமை, யார் நட்டம் அடைகிறார், அதனால் என்ன பாதிப்பு என்றெல்லாம் கொஞ்சமும் யோசனை செய்யாமல் தானும் தன் குடும்பமும் நன்றாக இருந்தால் போதும்.

யார் எப்படி போனால் நமக்கென்ன என்ற நோக்கோடு இன்று மனித கூட்டம் செயல்படுகிறது. உயிர்காக்கும் மருந்திலிருந்து உணவு பொருள்கள் வரை எல்லாவற்றிலும் கலப்படம், தெரு பொறுக்கும் துடப்பத்தில் இருத்து மனிதனின் சிறுநீரகம் வரை எங்கும் திருட்டு.

இவை எல்லாம் மிருக அன்பை விட கேவலமான அன்பு மனிதனிடம் புகுந்து விட்டதால் வந்த அலங்கோலங்கள் மனித அன்பு மனித அன்பு என்பது மாறும் அன்பாகும்.

இன்று "நீ இல்லாமல் வாழவே முடியாது" என்று சொல்லும் அதே வாய் நாளை "நீ இருந்தால் என்னால் வாழவே முடியாது" என்று மாறி பேசும். இன்று "உன்னை போல் நல்லவன் இல்லை" என்று சொல்லும் வாய் நாளை "உன்னை போல ஒரு கெட்டவனை நான் பார்த்ததே இல்லை" என்று சொல்லும் மனித அன்பு நம்பகத்தன்மை அற்றது ஆகும் மேலும் இந்த அன்பு பச்சோந்தி போல் அவ்வப்பொழுது நிறம் மாறும் தன்மை கொண்டது.

ஏழை, பணக்காரன், பெண், ஆண், தொழிலாளி, முதலாளி, என்பதின் அடிப்படையிலும் வயது மட்டும் இருக்கும் சூழ்நிலை பதவிக்கு தகுந்தார் போலவும் நிறம் மாறும் தன்மையுள்ளது.

ஆளை பார்த்தல் ஒரு அன்பு ஆளை பார்க்காவிட்டால் ஒரு அன்பு, தனியாக இருக்கும் போது ஒரு அன்பு கூட்டமாக இருக்கும் போது ஒரு அன்பு, பணம் இருந்தால் ஒருஅன்பு பணம் இல்லாவிட்டால் ஒரு அன்பு அப்பப்பா எத்தனை விதமான மனித அன்புகள்!.

உலக மனிதர்களின் பச்சோந்திதனமான அன்பு எப்பொழுது எப்படி மாறும் என்பதை தனத்தையும் விளக்கி சொல்ல முடியவே முடியாது! .  தெய்வீக அன்பு என்பது தன்னை பற்றி என்றுமே கவலைப்படாது, பிறர் மகிழ்ச்சியாக இருக்க வேண்டும் என்பதற்க்காக தன்னையே கொடுக்க கூட தயங்காது. 

ஒருவன் எத்தனை முறை திட்டினாலும், எத்தனை முறை கடன் வங்கி திருப்பிதாராமல் போனாலும், எவ்வளவுதான் துரோகம் செய்திருந்தாலும் அவன் மீதிலும் அன்பு வைக்கும் நிலையான அன்பே தெய்வீக அன்பு.

இந்த அன்பு மனிதன் எப்படிப்பட்டவன் என்று பார்க்காது, தனக்கு ஏதாவது கைமாறு கிடைக்குமா என்று பார்க்காது, ஏழை பணக்காரன் வித்தியாசம் பார்க்காது, யாரையும் மனம் நோக பேசாது, இருக்கும் சூழ்நிலையை பார்க்காது. ஆனால் பிறருக்கு எவ்விதத்திலாவது உதவ வேண்டும் என்று நினைக்கும். 

 அன்பு நீடிய சாந்தமும் தயவுமுள்ளது; அன்புக்குப் பொறாமையில்லை; அன்பு தன்னைப் புகழாது, இறுமாப்பாயிராது, அயோக்கியமானதைச் செய்யாது, தற்பெருமை நாடாது, சினமடையாது, தீங்கு நினையாது, அநியாயத்தில் மகிழ்ச்சியடையாமல் சத்தியத்தில் மகிழ்ச்சி சகலத்தையும் தாங்கும், எந்த ஆதங்கத்தில் சொந்த நாட்டை, நல்ல வாழ்க்கையை துறந்து காடு மேடு என்று அலைந்து நல்வாழ்க்கையை அறிவிக்கும் அந்த அன்பை என்னே சொல்வது. 

நல்ல வாழ்க்கையை துறந்து இந்தியாவுக்கு வந்து இந்திய மக்களுக்காக உழைத்து மரித்த "கார்மைக்கேல் அம்மையார்" "மதர் தெரசா", ஆங்கிலத்தில் மொழி பெயர்த்த தர்க்காக நெருப்பால் கொளுத்தப்பட்ட வில்லியம், மார்டின் லூதர் போன்ற மாபெரும் மனிதர்களிடமே இந்த அன்பை காண முடியும். 

கண்ணதாசன் சொன்னதுபோல் "கருணையும் இரக்கமும் பொங்கும் உள்ளம் தான் கடவுள் வாழ்கின்ற இல்லமாகும்" " கருணை மறந்து வாழும் மக்கள் கடவுளை தேடி எங்கு அலைந்தாலும் அவரை கண்டுகொள்ள முடியாது"

எனது ஆய்விற்கு உதவிய இணையங்களிற்கும் நன்றிகள்