Tuesday, 10 January 2012
இலையுதிர்காலம்.......!
உன் துரோகங்களை மண்ணிக்க முடியாதபடி
உன் அன்பையும் நிராகரிக்க முடியாதபடி
கடந்து போகின்றது காலம்
உன் துரோகங்கள் நினைவுக்கு வரும்போதெல்லாம்
உன் அன்பு உன்னை மன்னிக்கும்படியும்
உன் அன்பு நினைவுக்கு வரும்போதெல்லாம்
உன் துரோகங்கள் உன்னை நிராகரிக்கும்படியும்
அந்தந்த தருணங்களில்
உன்னை நேசித்தும்
நிராகரித்தும்
கடந்து போகின்றது காலம்
நம் இருவரில்
நீதான் முதலில் அன்பையும்
நீதான் முதலில் துரோகத்தையும் வழங்கினாய்
முதலில் அன்பாய் இருந்த நான்
துரோகங்களின் பின்னர் உன்னை விலக்கி வைத்தாலும்
நம் நண்பர்களிடம்
என்னைபற்றி நீ பெருமையாக சொல்லும்போது
பெருமிதமாகவும்
தப்பாக குற்றம் சுமத்தியதை அறிந்து
அவநம்பிக்கைக்ளுடனும்
கடந்து போகிறது காலம்
உன் வெற்றியின் எக்காளச் சிரிப்பில்
எரிந்து போனது ஒரு காதல்
இப்போதும்
என்னைக் கடந்து செல்லும்
உன் மனைவியின் வறண்ட புன்னகையில்
கடந்து போகிறது
நம் அன்பும்
உன் துரோகங்களும்
எங்கள் காதலும்...
(நன்றிகள் பி.செந்தில்)