Monday, 30 April 2012

சர்க்கரை நோயாளிகளுக்கு ஓர்.............!

சர்க்கரை நோயாளிகளுக்கு ஓர் இனிப்பான செய்தி























இனி வகை (type)1 சர்க்கரை நோயாளிகளுக்கு இன்சுலின் தேவையில்லை.

அடுத்த மூன்றிலிருந்து ஆறு மாதங்களுக்குள் டைப் 1 சர்க்கரை நோயாளிகளுக்கு இன்சுலின் போடுவதிலிருந்து நிரந்தரத் தீர்வு கிடைக்கப் போகிறது. உலகில் முதன்முறையாக இந்தச் சாதனையை செய்யப் போவது சென்னை வைத்தியர் (doctor) ஒருவர்.

டைப் 1 சர்க்கரை நோய் எந்த வயதினரையும் பாதிக்கும், குறிப்பாக குழந்தைகளை. இந்தியாவில் ஆண்டுதோறும் லட்சக் கணக்கான குழந்தைகள் பாதிக்கப்படுகிறார்கள் வகை 1 சர்க்கரை நோய் உள்ளது கண்டுபிடிக்கப்பட்டால் அன்றிலிருந்து வாழ்க்கை முழுவதும் இன்சுலின் ஊசி இல்லாமல் வாழ முடியாது. ஆனால், இனி வகை சர்க்கரை நோயாளிகளுக்கு இன்சுலின் எடுத்துக் கொள்ளவேண்டிய அவசியம் இருக்காது. இது எப்படிச் சாத்தியம்? 

விளக்கினார் வைத்தியர் விசய் விசுவநாதன்:

"கணையத்தில் உள்ள இன்சுலினைச் சுரக்கும் கலங்கள் அழிந்து போவதால் வகை 1 வகை சர்க்கரை நோய் வருகிறது. பல நேரங்களில் கணையத்தில் உள்ள 80 சதவிகித செல்கள் அழிந்த பிறகே தெரிய வரும். இதுபோன்ற நேரங்களில் உயிருக்கு ஆபத்தான நிலையில் 6 லிருந்து 20 வயது வரை உள்ளவர்கள் வருவார்கள்.

அதன்பிறகு இன்சுலின் அவர்களின் வாழ்க்கையில் பிரிக்க முடியாத ஒன்றாகிவிடும். ஆனால், இந்த கலங்கள் எதனால் இப்படி அழிந்து போகின்றன என்பது தெரியவில்லை. இதற்கு மரபியல் காரணி காரணமாக இருக்கலாம்.

கடந்த 40 ஆண்டுகளாக உலகம் முழுவதும் புதிது புதிதாக இன்சுலின் வந்திருக்கிறது. இன்சுலினைப் போட்டுக்கொள்ளும் முறையிலும் பல வகைகள் உள்ளன. ஆனால், இன்சுலின் இனி தேவையில்லை என்ற நிலை இப்போதுதான் வந்திருக்கிறது.

அமெரிக்காவில் சிகாகோவில் உள்ள இலினோயஸ் (illinnois) பல்கலைக்கழக மருத்துவத்துறை விஞ்ஞானிகள் தொப்புள் கொடியிலிருந்து எடுக்கப்படும் ரத்தத்தை (cord blood) நேரடியாக கணையத்தில் செலுத்துவதன் மூலம் இந்தப் பிரச்சினைக்கு நிரந்தரத் தீர்வு கிடைக்கும் என்று கண்டுபிடித்திருக்கிறார்கள்.

சுண்டெலிகளை வைத்து செய்த ஆய்வில் 100 சதவிகிதம் இது உறுதி செய்யப்பட்டுள்ளது. ஆனால், வகை 1 பாதித்த எந்த நோயாளிக்கும் அவர்கள் பரிசோதனை செய்யவில்லை.

அதை சென்னையில்தான் முதலில் செய்யப் போகிறோம். 120 மி.லி. தொப்புள் கொடி ரத்தத்தை ஊசி மூலம் ஒரு தடவை செலுத்தினால் போதுமானது. ஸ்டெம் செல்கள் நிரம்பிய இந்த ரத்தம் அழிந்து போன கணைய செல்கள் புதுப்பிக்கப்பட்டு, பழையபடி உடலுக்குத் தேவையான இன்சுலின் சுரக்க ஆரம்பித்துவிடும்.

இதில் இன்னொரு விசயம், யாருடைய ரத்தத்தையும் யாருக்கும் செலுத்தலாம். ராமச்சந்திரா மருத்துவப் பல்கலைக்கழக வளாகத்தில் உள்ள லைஃப்செல் (ஸ்டெம்) செல் வங்கி எங்களோடு இணைந்து செயல்படப் போகிறது.

8லிருந்து 12 வயது வரை உள்ள டைப் 1 பாதித்த குழந்தைகளுக்கு இதைச் செய்ய உள்ளோம். இதற்கான அனுமதியைக் கேட்டு மத்திய சுகாதாரத் துறையிடம் விண்ணப்பித்து இருக்கிறோம். கூடிய விரைவில் அதற்கான அனுமதி கிடைத்துவிடும். இன்னும் ஆறு மாதங்களுக்குள் வகை 1 பிரச்சினைக்கு நிரந்தரத் தீர்வு கிடைக்கும் என்ற நம்பிக்கை உள்ளது.

தன் முயற்சி பற்றி முதன்முறையாக ‘புதிய தலைமுறை’யிடம் இப்படி விளக்கினார் வைத்தியர் விஜய்.

வியப்போம் டாக்டர் விசய் விசுவநாதன் சர்க்கரை நோய் ஆராய்ச்சியில் உலக சுகாதார மையத்துடன் இணைந்து செயல்படும் ராயபுரம் எம்.வி. டயாபடிக் மையத்தின் தலைவர். தமிழ்நாடு டாக்டர் எம்.ஜி.ஆர். மருத்துவப் பல்கலைக்கழகத்தில் சர்க்கரை நோய் எப்படி சிறுநீரகங்களைப் பாதிக்கிறது என்பதைப் பற்றி ஆராய்ச்சி செய்து 1999ல் பிஎச்.டி. பட்டம் பெற்றவர்.

சர்வதேச அளவில் வெளியாகும் பல மருத்துவ இதழ்களில் இதுவரை 200 ஆராய்ச்சிக் கட்டுரைகளை எழுதியுள்ளார். இவர் தயாரித்த டயாசிலிப் என்ற காலணி இன்று பல சர்க்கரை நோயாளிகளின் பாதங்களைப் பத்திரமாகப் பாதுகாக்கிறது.

லண்டனில் உள்ள ராயல் மருத்துவக் கல்லூரியில் எம்.ஆர்.சி.பி. படித்தால்தான் மேல்நிலைப் படிப்பான எப்.ஆர்.சி.பி. படிக்க முடியும். ஆனால், வைத்தியர் விசய்க்கு அவர் சர்க்கரை நோய் மருத்துவத்தில் இத்தனை ஆண்டுகள் செய்த பல்வேறு ஆராய்ச்சியை கௌரவிக்கும் பொருட்டு எப்.ஆர்.சி.பி. கௌரவப் பட்டம் வழங்கப்பட்டுள்ளது.

நன்றிகள்.

மரணம் வரை...........!


நன்றிகள்.

Sunday, 29 April 2012

இதை எத்தனை பெரிற்கு...............!

இவைகள்தான் கிராமங்களின் அடிப்படை விளையாட்டு உபகரணமாகும். தென்னை மட்டை, பனை மட்டை ஏதாவது ஒன்றினை கத்தியினால் வெட்டி தயாரிக்கப்படும் உள்ளூர் விளையாட்டுகிற்கான உபகரணமாகும்.


இவற்றை அறியாதவர்கள் புலம்பெயர் வாழ்வின் போது பிறந்த இளவயதினர் ஆகும்.

நன்றிகள்

Friday, 27 April 2012

தமிழர் அளவைகள் .................!


இன்றைக்கு நமக்கு விஞ்ஞான பூர்வமான அளவுகள் கிடைத்துள்ளன. இந்த அளவுகள் கண்டுபிடிப்பதற்கு முன் ஒவ்வொரு நாட்டிலும் ஒவ்வொரு விதமான அளவுகள் நடைமுறையில் இருந்தன. உதாரணமாக இன்றைய நமது நீட்டல் அளவு மீட்டர் என்பதாகும் பழந்தமிழகத்தில் தச்சுமுளம் எனற அளவு நடைமுறையில் இருந்தது. தச்சாசாரிகள் இந்த அளவையை அதிகமாகப் பயன்படுத்தியதால், தச்சுமுளம் என்று அந்த அளவுக்குப் பெயர் வந்தது.

இந்தத் தச்சு மளமும் கண்டுபிடிப்பதற்கு முன், பழந்தமிழர்கள் எந்த மாதிரியான அளவை வைத்திருந்தார்கள்...?’ என்று ஒரு பெரியவரிடம் கேட்டேன்.

அந்தப் பெரியவர் சொன்னார்; ‘‘அளக்க என்று அளவுகோல் தேடி, அந்தக் காலத்து மக்கள் எங்கும் போகவில்லை. அந்தக்காலத்தில் அளவு கோல்களை கையில் வைத்துக் கொண்டே அலைய முடியுமா என்ன? எனவே அவவனவன் உடம்பும், உடம்பின் உறுப்புகளுமே, அளவுகோல்களாகப் பயன்பட்டன’’ என்றார்.

‘‘அதெப்படி உடம்பை வைத்து அளக்க முடியும்?’’ என்று கேட்டேன்.

பெரியவர் சிரித்துக் கொண்டே, ‘தம்பி அந்தக் கிணற்றில் எவ்வளவு தண்ணீர்? இருக்கிறது என்று ஒருவர் கேட்டால், கிராமத்து மக்கள், அந்தக் கிணற்றில் கண்டக்கால் அளவு தண்ணீர் கிடக்கு, அல்லது முட்டளவு தண்ணீர் கிடக்கு அல்லது இடுப்பளவு தண்ணீர் கிடக்கு அல்லது மார்பளவு தண்ணீர் கிடக்கு அல்லது கழுத்தளவு தண்ணீர் கிடக்கு அல்லது ஓராளம் உயரத்திற்குத் தண்ணீர் கிடக்கிறது அல்லது இரண்டாளம் உயரத்திற்குத் தண்ணீர் கிடக்கிறது என்று கூறிவார்கள்.. இப்படி கிணற்றில் கிடக்கிற தண்ணீரின் அளவை, நீர்நிலைகளில் கிடக்கிற தண்ணீரின் அளவைத் தன் உடம்பை வைத்தே அளந்தார்கள். பண்டை மக்கள். உயரத்தை அல்லது ஆழத்தை அளக்க, அளவுகோல் தேடி எங்கும் அலைய வில்லை. தன் உடம்பை வைத்தே, தனக்கான நீட்டல் அளவைக் கணித்துக் கொண்டான்.

நீட்டல் அளவை உடம்பில் அளந்தார்கள் என்பது சரி, உடல் உறுப்பால் அளந்தார்கள் என்று கூறினீர்களே.. அது எப்படி?’ என்று அந்தப் பெரியவரிடம் கேட்டேன்.

பெரியவர் சிரித்துக் கொண்டே ‘‘தம்பி....’’ என்று இழுத்தபடி மிக நுட்பமான நீட்டல் அளவை, அந்தக் காலத்து மக்கள் ஒரு ‘மயிர் கனம்’ என்று கூறுவார்கள். அதைவிட சற்று பெரிய அளவை ஒரு நூல்கனம் என்று சொல்வார்கள். கிராமத்தான் கட்டியிருந்த வேட்டியில் நூல் இருந்தது என்பதை நாம் நினைவில் கொள்ள வேண்டும். நூலுக்கு அடுத்து ஒரு விரல் கடை என்று கூறுவார்கள். இந்த விரல் கடையிலும் சுண்டு விரல் தண்டிக்கு, பெருவிரல் தண்டிக்கு என்று இரண்டு விதமான அளவைச் சொல்வார்கள். ஒரு விரல் கடை, இரண்டு விரல்கடை, மூன்று விரல் கடை, பிறகு நான்கு விரல் கடை என்று நீட்டல் அளவைச் சொல்வார்கள். ஐந்துவிரல்கள் மனிதனுக்கு இருந்தாலும் ஐந்து விரல் கடைஅளவு என்று கூறுவதில்லை!

நான்கு விரல் கடைக்குப் பிறகு சாண்தான் பெரிய அளவு. ஒரு ஜாண் என்பது நான்கு விரல் கடையின் மூன்று பங்காகும். யார் கையாளாலும் இந்த அளவு அதாவது மூன்று, முறை வைக்கும் நான்கு விரல் கடை என்பது ஒரு சாண் என்ற அளவுக்குச் சரியாகத்தான் இருக்கும்.

சாணுக்கும் பிறகு முளம்தான் பெரிய அளவு. இரண்டு சாண் சேர்ந்தால் ஒரு முளம். இரண்டு கைகளையும் நெட்டுக்கு நீட்டினால் ஒரு ‘கைப்பாகம்’ என்ற அளவாகும். நான்கு முளங்கள் சேர்ந்தால் ஒரு கைப்பாகம் ஆகும். இந்த நுட்பம் இயற்கையாகவே மனித உடலுக்கு வாய்த்துள்ளது. இதைக் கண்டறிந்து பழங்காலத்து மனிதர்கள் தன் அளவிற்குப் பயன்படுத்தி இருக்கிறார்கள். உடம்பில் உள்ள விரல்கள், கைகள் போன்றே காலாலும் பழங்காலத்தவர்கள் தங்கள் அளவுகளை, அளந்திருக்கிறார்கள்.

ஒரு ‘பாதம்’ இரு பாதம் என்று நீளங்களைத் தன் பாதம் கொண்டே அளந்துள்ளார்கள், பாதங்களுக்குப் பிறகு, ‘எட்டு’ என்று ஒரு அளவு உள்ளது. நிற்கிற நிலையில் வலதுகாலைத் திரையில் ஊன்றிக் கொண்டு இயல்பாக ஒரு எட்டு எடுத்து இடது காலை வைக்கும் தூரத்தைத் தான் ‘ஒரு எட்டு’’ என்ற அளவாகக் கூறுகின்றார்கள்.

இந்த எட்டையே முடிந்த வரை இரு காலையும் அகட்டி வைத்துக் கொண்டால் அதற்கு ‘ஒரு கவுடுதூக்கு’ என்று பெயர். மூன்று பாதம் ஒரு எட்டாகவும், மூன்று எட்டு ஒரு கவுடுதாக்காகவும் இருக்கும். இந்த அளவின் நுட்பத்தையும் உணர்ந்துதான் பழங்காலத்து மக்கள், காலின் மூலம், கால் பாதத்தின் மூலம் தங்கள் அளவுகளை அமைத்திருக்கிறார்கள். 

உடம்பையும் கையையும் சேர்த்து ‘‘ஒரு கை எடுப்பு உயரம்’’ என்றும் ஒரு அளவை சொல்கிறார்கள். பருமனைக் குறிக்கவும் அந்தக் காலத்தில் மனிதர்கள் தன் உடல் உறுப்புகளைப் பயன்படுத்தி இருக்கிறார்கள்.


மிக நுட்பமான பொருளைப் பற்றிப் பேசும்போது ‘‘கண்ணுக்குள்ள போட்டு எடுத்திரலாம்’’ என்று கண்ணை மையமாக வைத்துக் கூறினார்கள். அதைவிட சற்று பருமனான பொருளை ஒரு சிட்டிகை என்று கூறினார்கள். பெருவிரலும் ஆள்காட்டி விரலும் சேர்ந்து ஒட்டிப் பிடித்துக் கொண்டு எடுக்கும் ‘பொடி’ போன்றவைகளைச் சிட்டிகை என்று கூறினார்கள்.

உள்ளங்கையைக் குவித்து அதில் நெல்மணி போன்றவற்றை நிரப்பி, ஒரு கையளவு அல்லது ‘ஒரு சதங்கை’ என்றார்கள். இரண்டு கையையும் சேர்த்து நெல்மணிகளை அள்ளி ‘இருகை அளவு’ என்றார்கள். சோற்றை உள்ளங்கையில் வைத்து உருட்டி ஒரு ‘கவளம்’ என்றார்கள். ஒரு ‘வாய்ச் சோறு’ என்றும் ஒரு அளவைக் கூறினார்கள்.

இவைதவிர, சில பொருள்களின் அளவைப் பற்றிக் கூறும்போது, மணிக்கை தண்டி, கணுக்கால் தண்டி, தொடைத் தண்டி என்று பொருளின் பருமனுக்குத் தக்கபடி தன் உடல்உறுப்புகளைக் கொண்டு அளவுகளைக் குறித்தார்கள்.

மரத்தின் அளவுகளைக் கூறும்போது ஒரு ஆள் ஆப்புச் சேர்த்துக் கட்டும் அளவுக்கு, இரண்டு ஆள் ஆப்புச் சேர்த்துக் கட்டும் அளவுக்குப் பெரியது என்று கூறுகிறார்கள். இங்கும் கைகளே அளவு கோலாகப் பயன்படுகிறது, என்று அந்தப் பெரியவர் கூறினார்.

இப்படி ஆதிகாலத்தில் மனிதர்கள் தன் உடம்பையும், தன் உடம்பின் உறுப்புகளையும் மட்டுமே அளவுகோல்களாகக் கொண்டு தனக்குத் தேவையான அளவுகளை அளந்திருக்கிறார்கள் என்பதை எண்ணும்போது நமக்கு வியப்பு மேலிடுகிறது.


இவைதவிர, கற்பனை நயத்துடன் சில அளவுகளை உடல் உறுப்புகளை மையமாகக் கொண்டு கூறுகிறார்கள். உதாரணமாக ஒரு மெகா ‘அளவுக்கு வாய் ரொம்ப நீளம்’ என்று கூறினார். அவள் அதிகமாகப் பேசுபவள் என்று நாம் புரிந்துகொள்கிறோம். இங்கு ‘வாய்’ என்பது குறியீடாக நின்று பேச்சைக் குறிக்கிறது. அதேபோல், ஒருவன் அவனுக்கு ‘நாக்கு ரொம்ப நீளம்’ என்று கூறினால், ‘அவன் மிகவும் ருசியாகச் சாப்பிட ஆசைப்படுவான்’ என்று புரிந்து கொள்கிறோம். அந்தத் தொடரில் நாக்கு என்ற சொல் ருசியைக் குறித்து வந்தது. இப்படி மனிதனின் உடலும் உடல் உறுப்புகளும் பழங்காலத்தில் அளவுகோல்களாகவும் பயன்பட்டுள்ளன.

நன்றிகள்.

Thursday, 26 April 2012

"துவால்" என்றால் தெரிந்துகொள்ள..............!



எழுதுகோல்' என்று தூய தமிழில் எத்தனை பேர் சொல்கிறோம். நம் மனதில் தோன்றும் எண்ணங்கள், கருத்துகள் ஆகியவற்றைப் பதிவு செய்யும் பதிவுக் கருவி, பேனா. அது தோன்றிய விதம் தெரியுமா?

இன்று நாம், பயன்படுத்துவதற்கு எளிதான பேனாக்களைப் பயன்படுத்துகிறோம். ஆனால் ஆரம்ப காலத்தில் அப்படி இல்லை. பேனாவுக்குப் பல நூற்றாண்டு வரலாறு உண்டு என்பது ஆச்சரியமான விசயம். ‘லத்தீன்’ மொழியின் ‘பென்னா’ என்றால் ‘பறவையின் இறகு’ என்று பொருள். ‘பென்னா’ என்பதே ஆங்கிலத்தில் ‘பென்’ என்றும், தமிழில் ‘பேனா’ என்று மாறியது. 5ம் நூற்றாண்டில் ‘இறகுப் பேனா’ வழக்கத்துக்கு வந்தது.

அது 18ம் நூற்றாண்டு வரை பயன்பாட்டில் இருந்தது குறிப்பிடத்தக்கது.

1780ல் சாமுவேல் ஹாரிசன் என்பவர் உருக்கினால் ஆன பேனாவைத் தயாரித்தார்.

1809ல் ஜோசப் பிராமா என்பவர், பறவையின் இறகை, தற்போதுள்ள வடிவில் வெட்டி ‘நிப்’பை உருவாக்கும் கருவியைத் தயாரித்தார். ஜான் ஹாக்கின்சு என்பவர் மாட்டுக்கொம்பு, ஆமை ஓடு ஆகியவற்றைக் கொண்டு ‘நிப்’ செய்தார். ‘நிப்’ன் முனையில் ‘இரிடியம்’ வைக்கும் பழக்கம் 1882ல் வந்தது. அதே ஆண்டு ஜான் மிட்சல் என்பவர் எந்திரத்தினால் செய்யப்பட்ட உருக்கு ‘நிப்’பை கண்டுபிடித்தார்.

1859ல் முதல்முறையாக ‘ஊற்றுப் பேனா’ (‘பவுண்டன் பென்’) காப்புரிமை பதிவு செய்யப்பட்டது. 1883ம் ஆண்டில் அமெரிக்க நாட்டைச் சேர்ந்த வாட்டர்மேன் என்பவர் அனைவரும் பயன்படுத்தத்தக்க ஊற்றுப் பேனாவைத் தயாரித்தார்.

அனைத்திலும் தமிழர்கள் நாம் முன்னோடி என்பதில் சந்தேகம் இல்லை. நம்முடைய இலக்கியங்கள், புராணங்களில் இருந்து பல தகவல்கள் மேலை நாட்டு அறிஞர்களால் எடுக்கப்பட்டு பிரபலப்படுத்தப்பட்டு உள்ளது.

உதாரணம், நமது ராமாயணத்தில் ராவணன் சீதையை கடத்திக் கொண்டு செல்ல புட்பக விமானத்தை பயன்படுத்தினான். இந்த தகவல் தான் தற்போதைய விமானத்திற்கு முன்னோடி என்பது எனது தாழ்மையான கருத்து.

அதைப்போன்றே பல ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்னே குத்தாணியை பயன்படுத்தி பேனாவிற்கு அடிகோல் வகுத்தது தமிழர்களாகிய நாம் தான் என்பதில் பெருமையே.பாரத தேச பிதா காந்தியே தன் கையால் தமிழில் எழுதியிருக்கிறார்.

தமிழர்களே தமிழைத்தமிழில் எழுதுங்கள்! தயவுசெய்து, தமிழைத் தமிழில் எழுதுங்கள் , ஆங்கிலத்தை ஆங்கிலத்தில் எழுதுங்கள்.

நன்றிகள்.

Wednesday, 25 April 2012

உலக மகா .................!















































நன்றிகள்.

தமிழரின் இசைக் கருவி............................!


தமிழர்களின் வழக்கொழிந்துப் போன பண்டைய இசைக் கருவிகளில் குட முழவமும் ஒன்றாகும். மிகப் பெரிய தமிழர் இசைக்கருவிகளில் ஒன்றான இது இன்று தமிழகத்தில் ஓரிரு இடங்களில் மட்டுமே எஞ்சியுள்ளது. திருவாரூர் தியாகராஜர் மற்றும் திருத்துறைப்பூண்டி மருந்தீஸ்வரர் கோவில்களில் மட்டுமே இப்போது குட முழவத்தைக் காண முடியும்.வார்ப்பு வெண்கலத்தில் உருவாக்கப்பட்ட உயரமானக் குடத்தில் ஐந்து வாய்கள் இருக்கும்.வாய்கள் அனைத்தும் மான் தோல்களால் மூடப்பட்டிருக்கும்.

ஒவ்வொரு வாயிலிருந்து வெவ்வேறு விதமான பண்(இசை) எழுப்பப்படும்.குட முழவம் போலவே கேராளவிலும் பழமையான இசைக் கருவி பயன்படுத்தப்படுகின்றது. ஆனால் அதில் ஒரே ஒரு வாய் மட்டுமே இருக்கும்.அதை மலையாளத்தில் ”மிழவு” என்றழைக்கின்றர்கள்.சங்க இலக்கியங்களில் குட முழவத்தைப் பற்றி பலப் பாடல்கள் பாடப்பட்டிருக்கின்றன.மேலும் மறவர்களின் தோல்வலிமைக்கும், பலாப்பழத்திற்கும், பனை மரத்தின் அடிக்கும், இக்கருவியை ஒப்பிட்டும் பல சங்கப் பாடல் பாடப்பட்டுள்ளன.

நன்றிகள்.

Monday, 23 April 2012

தமிழுக்கு அமிழ்தென்று பெயர்......!


அமிழ்துக்கு அமிழ்தென்றுதான் நிலைப் பெயர். தமிழுக்கும் அமிழ்தென்று பேர் என உவமையோடு தமிழை அமிழ்தாக்கி அதன் சுவையை உணர்வோடு ஊடுருவ விட்டார் பாவேந்தர் பாரதிதாசன். தமிழின் சிறப்பை நாம் அம்மொழியின் வழித்தோன்றலாக வந்ததனால் மட்டும் பெருமையோடு கூறவில்லை; அந்நியர்களாகிய ஐரோப்பியர்களும் ஆங்கிலேயர்களும் நம்மை அடிமை கொள்ள வந்த போது தமிழ் மொழியின் வளத்தையும், பொலிவையும் கண்ணுற்று வியந்து போற்றியுள்ளனர்.

தமிழ் மொழியைத் தாய்மொழியாகக் கொண்ட தமிழர்களே அதன் சிறப்பை உணரச் செய்து, வட மொழித் துணையுடன் வளர்ந்தமொழி தமிழ் என்னும் தாழ்வு மனப்பான்மையை நீக்கவும் வழிகோலிய பெருமை, மேலை நாட்டு நல்லறிஞர்களையே சாரும். உலகோர் கருத்தினிலும் தமிழ் மொழியின் மேன்மையை இடம் பெற வைத்தனர்.
அவர்கள் சமயத்தைப் பரப்பத் தமிழகத்திற்கு வந்தவர்களாயிருப்பினும், தமிழ் மொழியின் இனிமை, மாட்சி, சிறப்பு, தொன்மை, எளிமை ஆகியவற்றைக் கற்றுணர்ந்து தங்கள் வாழ்நாளைத் தமிழுக்குத் தொண்டாற்றுவதிலேயே கழித்தனர்.

தமிழ் இலக்கியங்களில் கண்ட இயற்கை நலம், அறிவு விளக்கம், அன்பு வளர்க்கும் பண்பு ஆகியவற்றை கற்றுத் தெளிந்தனர். தமிழ்மொழியை முதன்முதலாக அச்சில் ஏற்றிப் பல நூல்களையும், சிற்றிதழ்களையும் வெளியிட்டனர். உரைநடையில் சொற்களைப் பிளந்து எழுத வழிகாட்டினர்.

மேல்நாட்டு மொழிகளுக்கொப்பத் தமிழ் அகராதியையும் இயற்றினர். அவர்கள் வரவு தமிழ்மொழிக்கே ஒரு மறுமலர்ச்சிக் காலம் எனக் கூறலாம். அவர்களுக்குத் தமிழ் கூறும் நல்லுலகம் என்றும் கடமைப்பட்டதாகும்.

சீகன் பால்கு 16831705 இல் கிறித்துவ சமயத் தொண்டாற்ற வந்தவர். தமிழ் மொழியின் இனிமை, தொன்மை, மேன்மை, எளிமை ஆகிய இயல்புகளிலும், தமிழ் இலக்கியம் கண்ட இயற்கைத் தன்மை, அறிவார்ந்த கூர்மை, அன்பு வளர்க்கும் மாண்பு, அறநெறியின் உயிரோட்டம் ஆகியவற்றால் கவரப்பட்டுத் தமிழ் மொழிக்குத் தொண்டு செய்வதிலேயே தம் காலத்தின் பெரும் பகுதியைக் கழித்தார்.

தமிழ் மொழியில் சமயம், மருத்துவம், வரலாறு முதலானவற்றில் உள்ள நாற்பதாயிரம் சொற்களைத் தொகுத்து ஒரு மொழி அகராதியை உருவாக்கினார். அவர் தொகுத்த செய்யுள் (சொல் பொருள் நூல் ) அகராதியில் பதினேழாயிரம் இலக்கிய வழக்குச் சொற்களும், மரபுத் தொடர்களும் இடம் பெற்றன.

நீதிவெண்பா, கொன்றை வேந்தன், உலகநீதி ஆகிய செய்யுள்களை செருமானிய மொழியில்பெயர்த்துள்ளார். ஆசியாக் கண்டம் முழுதும் சுற்றிப் புகழோடு பிரிட்டன் நாட்டிற்குச் சென்றபோது, ஜார்ஜ் மன்னர் தலைமையில், நாட்டின் உயர் மதத் தலைவரான கான்டர்பரி ஆர்ச் பிஃஷப் இலத்தின் மொழியில் வரவேற்புரை நிகழ்த்தினார்.

அதற்கு சீகன்பால்கு என்னுடைய மறு மொழியை நான் ஒரு மொழியில் பேசப் பேகிறேன் அது இறைவனால் மனிதருக்கு அளிக்கப்பட்ட ஒப்பற்ற செல்வத்துள் முதன்மையானது. அதுவே தமிழ் மொழி எனக் கூறி தமிழின் பெருமையை அவர்கள் உணருமாறு செய்தார்.

கிரன்ட்லர் பாதிரியார் இவர்செருமனி நாட்டைச் சேர்ந்தவர். அக்காலத்தில் தமிழகத்தில் வழங்கிய மருத்தவ முறையின் தனிச்சிறப்பைப் பற்றி விளக்கும் ஒரு நூலை செருமானிய மொழியில் இயற்றினார். செருமானியப் பல்கலைக்கழகங்களில் கற்பிக்கத்தக்க சிறப்பு வாய்ந்த மொழி தமிழ் எனவும் கூறினார்.

இதனால் தமிழரின் அறிவுத் திறன் மேல் நாட்டவரால் ஏற்கப்பட்டது. மேலும் அந்நாட்டைச் சேர்ந்த சார்ல் கிரவுல் என்பவர் பத்தொன்பதாம் நூற்றாண்டின் இடையில் தமிழிலே உள்ள கைவல்ய நவநீதம், சிவஞான சித்தியார் போன்ற சில தத்துவ நூல்களைச் செருமானியிலும், ஆங்கிலத்திலும் மொழி பெயர்த்தார். திருக்குறளையும் இலத்தின், செருமன் ஆகிய மொழிகளிலும் மொழியாக்கம் செய்தார்.

ராபர்ட டி நோபிலி இத்தாலி நாட்டைச் சேர்ந்த ராபர்ட் டி நோபிலி என்னும் பாதிரியார் சமயத்தைப் பரப்பத் தமிழகம் வந்து தமிழையும், வடமொழியையும் கற்றுக் கிறித்தவ சமய விளக்கம் செய்யும் உரைநடை நூல்கள் பலவற்றை இயற்றியும் போர்த்துக்கீசிய அகராதி ஒன்றைத் தொகுத்தும் உள்ளார். தத்துவ போதகர் என்னும் பெயருடன் தம்மை இத்தாலிய நாட்டு அந்தணர் எனக் கூறிக் கொண்டார்.

அதை மக்களிடம் காட்டிக் கொள்ள தலையிலே குடுமி, கையிலே கமண்டலம், காலிலே பாதக்குறடு, காது குத்திக் கொண்டு, நெற்றியில் சந்தனப் பொட்டு இட்டு தமிழகத் துறவியைப் போன்று ஒப்பனை செய்து கொண்டு தம்மை ஐயர் என்னும் நிலையைக் கொண்டிருந்தார்.

சமசுகிருதச் சொற்கள் கலவாத தொன்மை இலக்கியங்கள் இருந்தனவென்றும், வடமொழியின் துணையின்றித் தமிழ் இயங்க முடியும் என்பதையும் ஆய்ந்தளித்தார். வீரமாமுனிவர் இத்தாலிய நாட்டைச் சேர்ந்த கான்ஸ்டான்டைன் ஜோசப் பெசுகி 1711ம் ஆண்டு தமிழகத்துக்குச் சமயத் தொண்டு புரிய வந்தார்.

அவர் தமிழுடன் அந்த இனமொழிகளான தெலுங்கும் கன்னடமும் பயின்றதோடு வடமொழியும் கற்றுத் தேர்ந்தார். பின் வீரமாமுனிவர் என்னும் பெயர் கொண்டு தமிழிலே தேம்பாவணி என்னும் காவியத்தைப் படைத்தார். வடசொல் விரவிய மணிப் பிரவாள நடையை அறவே விலக்கித் தனித்தமிழ் உரைநடையைக் கொண்டு வந்தார். எனவே தமிழ் உரைநடையின் தந்தை என இவர் அழைக்கப்பட்டார்.

தொன்னூல் இலக்கணம் இயற்றி அதில் எழுத்து, சொல், பொருள், யாப்பு அணி ஆகிய ஐந்து கூறுகளையும் விளக்கியுள்ளார். சதுரகராதியையும் இயற்றியுள்ளார். தமிழ்எழுத்துச் சீர்திருத்தம் செய்துள்ளார். திருக்குறள் அறத்துப்பாலையும் பொருள்பாலையும் இலத்தினில் மொழியாக்கம் செய்தார்.

டாக்டர் வின்சுலோ கி.பி.பத்தொன்பதாம் நூற்றாண்டின் இடையே தமிழகம் வந்த அமெரிக்க நாட்டு மொழியறிஞர். அவர் தமிழ் மொழியைக் கற்று அதன் சிறப்பை உணர்ந்து தமிழின் வேர்ச் சொற்களைக் கண்டு, அவற்றின் தனி இயல்பை ஆராய்ந்து காட்டி, தமிழ் ஒரு மூல மொழியாக ஒரு தனிப்பிரிவாகக் கொள்ளப்படவேண்டும் எனவும் வேற்று மொழியின் துணை இன்றித் தனித்து இயங்கும் ஆற்றலுடைய தமிழின் சிறப்பு வியப்பளிப்பதாகவும், சங்க இலக்கியம் தமிழுக்குப் பெருமையளிப்பவையாகும் எனவும், தமிழ் செய்யுள் வடிவிலும், நடையிலும் கிரேக்க மொழிச் செய்யுளைக் காட்டிலும் தெளிவுடையதாகவும், திட்ப, நுட்பமுடையது, கருத்தாழமுடையது எனவும், தமிழ் மொழி நூல் மரபிலும், பேச்சு வழக்கிலும் இலத்தின் மொழியைக் காட்டிலும் மிகுந்த சொல் வளம் கொண்டது எனவும் கூறிச் சிறப்பித்துள்ளார்.

டாக்டர் கால்டுவெல் இவர் கி.பி. 1838 ல் சமயத் தொண்டு புரியத் தமிழகம் வந்து சேர்ந்தார். இவர் அயர்லாந்து நாட்டைச் சேர்ந்தவர். திராவிட மொழிகளாகிய தமிழ், தெலுங்கு, கன்னடம், மலையாளம் ஆகியவற்றைக் கற்றுத் தேர்ந்தார். திராவிட மொழிகளின் ஒப்பிலக்கணம் என்னும் ஓர் ஒப்பற்ற நூலை இயற்றியுள்ளார்.

வடமொழியின் துணையின்றித் தமிழ் மொழி இயங்காது என்னும் தவறான கொள்கையை உதறி எறியவும், எம்மொழியின் துணையுமின்றித் தனித் தியங்கும் ஆற்றல் தமிழுக்கு உண்டு என்னும் உண்மையை உலகுக்கு அறியச் செய்தவர் டாக்டர் கால்டுவெல் ஆவார். இவர் நிகழ்த்திய ஆய்வு நூலே வடமொழி ஆதிக்கத்தால் கேடடைந்த தமிழையும், தமிழறிஞர்களின் எண்ணங்களையும் மாற்றுவதற்குப் பெரிதும் அடிப்படையாகப் பயன்பட்ட நூலாகும்.

தமிழ்மொழி எம்மொழிக்கும் தாழ்ந்து வளையாது தலைநிமிர்ந்து நின்று, தனது தனித்தன்மை காத்து, தன்னை அழிக்க வந்த வடமொழியையும் வலுவிழக்கச் செய்து வாழ்ந்து வளர்கிறது என்னும் பேருண்மையை உலகுக்கு எடுத்துக் காட்டியவர் கால்டுவெல் ஆவார். தமிழ்நாட்டின் தென்பகுதியில் நெடுங்காலம் தங்கியிருந்து சமயத் தொண்டு புரிந்தார். இங்கு வாழும் மக்களைப் பற்றித் தமிழ் உரைநடையில் “ஞானக்கோயில்’, “நற்குணத்தியான மாலை’ போன்ற நூல்களை இயற்றினார்.

ஜியுபோப் இவர் வடஅமெரிக்காவில் உள்ள நோவாஸ் கோஷியா மாநிலத்தைச் சேர்ந்தவர். சமயப் பணிக்காக 1839 ம் ஆண்டு தமிழகம் வந்தார். இவர் சங்க இலக்கியங்கள், திருக்குறள், சிலப்பதிகாரம், மணிமேகலை மற்றும் சமய நூல்கள், நீதி நூல்கள் ஆகியவற்றைப் பயின்றார். சைவ சித்தாந்த நெறி, திராவிட அறிவின் தேர்ந்த தெளிந்த நிலையின் பயன் எனப் பாராட்டியுள்ளார்.

யாவும் ஆசிரியர்களின் அறிவின் பயன் என்று கருதிக் கிடந்த நாள்களில் அவை தமிழரின் அறிவிலே முகிழ்ந்தவை எனத் தெரிவிக்கப்பட்ட அக்கருத்து தமிழின் பெருமையை நிலை நிறுத்தத் துணையாயிற்று. சமசுகிருதத்திற்கு அப்பாற்பட்டுத் தனித்துத் தோன்றியது மட்டுமின்றி அதன் ஆதிக்கத்தை எதிர்த்துத் தனித்து நிற்பதுடன் பரந்து விரிந்த தன்மையும் உள்ளங்கவரும் திறமும் கொண்டது தமிழ் இலக்கியம் எனக் கூறியுள்ளார்.

இவர் தமது கல்லறையின் மீது இங்கு ஒரு தமிழ் மாணவன் உறங்குகிறான் என்று செதுக்கி வையுங்கள் எனக் கேட்டுக்கொண்டார். கமில்ஸ் சுலபில் இவர் செக்கோசுலோவாகிய நாட்டைச் சேர்ந்த தமிழாய்ந்த அறிஞர். உலகில் எந்த மொழியின் வரி வடிவத்திலும் காணப்படாத தனிச் சிறப்புகளைத் தமிழ் வரிவடிவத்தில் காணலாம். ஆங்கிலத்தில் அத்தகைய அழகு கிடையாது.

தமிழில் ஓர் எழுத்தினை உச்சரிக்கும்போது எழுதுகின்றஓசை நயத்திற்கேற்ப அதன் வரிவடிவமும் அமைந்திருக்கும் எனக் கூறியுள்ளார். இன்னும் மாச்சுமுல்லர், பெர்சிவல் பாதிரியார், டாய்லர் போன்ற மேனாட்டறிஞர்களும் கற்றுத் தேர்ந்து தமிழைப் போற்றியுள்ளனர். எனவே ஐரோப்பியர் ஆதிக்கத்தை தமிழகம் பெற்றாலும் அதற்கு முன்னர் நடந்த மொழியழிப்பு ஒழிந்து உள்ள நிலையிலிருந்து தமிழை ஓங்கி வளரச் செய்தனர்.

அவர்கள் வணிகத்தின் பொருட்டோ, தமது சமய வளர்ச்சி நோக்கத்தோடோ, மண்ணாசை எண்ணம் கொண்டோ வந்திருந்தாலும், அவர்களால் தமிழுக்கு விளைந்த நன்மை மிகுதி. வாழ்க அவர்கள் தொண்டு. ஐரோப்பியர்கள் வராதிருந்தால் தமிழகம் எப்படி இருக்கும்?

ஒரு கணம் நினைப்போம். நம் மொழியும் பண்பாடும் எங்கோ அழிந்து நாம் எப்படியெப்படியோ செப்பிடு வித்தைகளால் சீரழிந்திருப்போம். நம் பெருமையைக் காக்க மொழி வளத்தைப் புதுப்பிக்க வந்தனன் அயலான் வாழியவே தமிழ். (தமிழ்மொழி வளர்ச்சிக்காக பாடுபட்ட மேலைநாட்டு அறிஞர்களைப் பற்றி அறிந்து கொள்ள வேண்டியது நம் அனைவரின் கடமையாகும். இது பற்றி “தமிழ் இலெமுரியா’ மாத இதழில் (2010, மார்ச் 15 ஏப்ரல் 14) தமிழ் மொழி காத்த ஐரோப்பியர்கள் என்ற தலைப்பில் மணவை வே.வரதராசன் எழுதி வெளியாகியுள்ள கட்டுரையை இங்கே நன்றியுடன் அறியத் தருகிறோம்).

நன்றிகள்.

Thursday, 19 April 2012

பதினாறும் எவை?




1.கல்வி
2.அறிவு
3.ஆயுள்
4.ஆற்றல்
5.இளமை
6.துணிவு
7.பெருமை
8.பொன்
9.பொருள்
10.புகழ்
11.நிலம்
12.நன்மக்கள்
13.நல்லொழுக்கம்
14.நோயின்மை
15.முயற்சி
16.வெற்றி

1.கலையாத கல்வி
2.கபடற்ற நட்பு
3.குறையாத வயது
4.குன்றாத வளமை
5.போகாத இளமை
6.பரவசமான பக்தி
7.பிணியற்ற உடல்
8.சலியாத மனம்
9.அன்பான துணை
10.தவறாத சந்தானம்
11.தாழாத கீர்த்தி
12.மாறாத வார்த்தை
13.தடையற்ற கோடை
14.தொலையாத நிதி
15.கோணாத கோல்
16.துன்பமில்லா வாழ்வு

நன்றிகள்.

Monday, 16 April 2012

அழகு என்பது யாது?

அழகு என்பது யாது?

அழகு என்பது நிறத்தில், மூக்குக்கண்ணாடியில், கழுத்துச் சுருக்கில், பட்டுடையில், பிற அணிகளில் அமைந்திருப்பதன்று. மூளை, இதயம், மண்ணீரல், நுரையீரல், உள்ளிட்டப்பேருறுப்புகள் செழிய நிலையினின்று ஒழுங்குபெற கடனாற்றலாலுற்று நரப்புக்கட்டினினின்றும் தடைபடாக் குருதியோட்டதினின்றும் முகிழ்க்கும் தசையிடை அரும்புவதே அழகு ஆகும்.

இது தமிழ்த்தென்றல் தென்றல் திரு வி க வின் உரை - அழகு குறித்த விளக்கம்  விளங்குகிறதா? தென்றல் தவழும் தனித்தமிழ் இந்நாளில் உள்ளோர்க்கு துன்பமாயும், அந்நிய மொழி கலந்த சிதைத்த தமிழ்ப்புழதிக்காற்று இன்பமாயும் தோற்றுகிறது என் செய்வது. இவர்தம் தென்றல் தவழும் தமிழ்ப் பொழிவைக்கேட்கக் குவிந்தோர் ஏராளம்.

இன்று இதை எழுதிப்படிப்பதற்கும் தயங்குவோர் தான் ஏராளம். இப்போதெல்லாம் தமிழ் இணையபக்கங்களிலும், தமிழ் பத்திரிகைகளிலும், தமிழ் தொலைக்காட்சி நிகழ்ச்சிகளிலும் தமிழ் அல்லாத அனைத்து மொழிகளும் தாராளமாக பயன்படுத்துவது நாகரீகமென நினைத்து தமிழைத் தொலைத்துக் கொள்கிறார்கள்.

ஒரு படைப்பில் தூய தமிழ் அற்று பிறமொழிக் கலப்பு இருந்தால் அதற்குப் பொறுப்பு அந்தப்படைப்பின் காரணகர்த்தாவே ஒழிய அடுத்தவரைச் சாராது. ஆகவே பொறுப்பான பதவி வகுப்பவர்கள் தங்கள் பதவியை மட்டும் பாராது கடமையை ஒழுங்குமுறை உடன் செய்வதால்தான் இதற்கான முயற்சியில் வெற்றி பெறுவோம் , என் செய்ய இது காலத்தின் கோலம்.

என்று தமிழர்கள் தமது கலை, கலாச்சாரம், உணவு, உடை அனைத்தயும் உள்ளடக்கிய தன்மானத் தமிழர்களாக வாழ்வதற்கான அவசியத்தை உணர்கின்றானோ அன்றே இதற்கான தீர்வு கிட்டும்.


இவைகள் அனைத்துமே அழகில்லை தமிழன்
தமிழனாகவே வாழ்வதே மிக அழகு!

"எங்கும் தமிழ்"
"எதிலும் தமிழ்"

நன்றிகள்.

நாகரீகம் என்ற போர்வையில்................!




















நன்றிகள்,

Thursday, 12 April 2012

அமில காரத்தன்மை உணவுகள்



நாம் உண்ணும் உணவை இரு பெரும் பிரிவுகளாக பிரிக்கலாம். ஒன்று அமிலத்தை உண்டாக்கும் உணவுகள். இரண்டாவது காரத்தன்மையை உண்டாக்கும் உணவுகள். நல்ல ஆரோக்கியத்திற்கு உடல் ரத்தத்தில் அமில, கார விகிதம் 20 : 80 இருக்க வேண்டும். ஆனால் இந்த விகிதத்திற்கு தலைகீழாக நாம் உண்ணும் உணவில் அமிலத்தன்மை அதிகம். அதிக அமிலத்தை சரி செய்ய காரத்தன்மை உள்ள உணவுகள் தேவை.

பொதுவாக தானியங்கள், பருப்புகள், கொழுப்புகள் (மாமிசம், மீன், நெய், எண்ணெய்) மற்றும் டீ, காப்பி போன்றவை அமிலத்தை அதிகமாக்குபவை. காய்கறிகளும் பழங்களும் குடலில் காரத்தன்மையை உண்டாக்கி, அமிலத்தை குறைக்கின்றன.



அதிக அமிலம் முதுமையை சீக்கிரம் வரவழிக்கிறது. களைப்பு, வலி, வாய்வு மற்றும் சர்ம நோய்கள் ஏற்படலாம். தூக்கமின்மை, தலைவலி, வாந்தி, நரம்புத்தளர்ச்சி இவைகளும் ரத்தத்தில் ‘அசிடிடி’ அதிகமானால் ஏற்படும். வளர்சிதை மாற்றத்தின் விளைவாக உண்டாகும் யூரிக் மற்றும் லாக்டின் அமிலங்களை, ரத்தத்தில் உள்ள காரத் தன்மையுள்ள நிணநீர், பித்த நீர் முதலியவை சமன் செய்து விடும். ஆனால் அதிக அளவு அமில உணவுகளை உட்கொண்டால் உடலால் சமன்படுத்தி சமாளிக்க முடியாது. எனவே நாம் நம் உணவில் அதிகமாக காரத்தன்மை உள்ள உணவுகளை சேர்த்துக் கொள்ள வேண்டும்.

அமிலத்தன்மை மிகுந்த உணவுகள்

மாப்பொருள்,(கார்போஹைடிரேட்ஸ்), புரத, கொழுப்பு உணவுகள் (தானியங்கள், பருப்புகள், மீன், நெய், எண்ணெய், தேநீர், காப்பி, மென்பானங்கள், சர்க்கரை, சுவை ஊட்டிகள், செயற்கை சர்க்கரை, புகையிலை, வறுத்த / பொரித்த, சாராயம், மசாலாக்கள், ஊறுகாய் போன்ற மருந்துகள், வீர்யமான மலமிளக்கிகள் முதலியன.

அநேகமாக எல்லா காய்கறிகளும் (குறிப்பாக கீரைகள், முட்டைக்கோவாcabbage ) பழங்களும் காரத்தன்மை உடையவை. கூடிய மட்டும் அதிக காய்கறிகளையும், பழங்களையும் உணவில் சேர்த்துக் கொள்வது நல்லது. வறுத்த / பொரித்த உணவுகளை விட, நீராவியில் வேக வைத்த உணவுகளை உண்பது நல்லது.

உடலின் அமில, காரத்தன்மைகளை சரியான அளவில் வைக்க, அதிகமாக காய்கறிகளை (குறிப்பாக கேரட், பீட்ரூட், முள்ளங்கி, பட்டாணி, வெள்ளரிக்காய், பரங்கிக்காய்கள், வெண்டைக்காய்,முட்டைக்கோவாcabbage , வெங்காயம், அவரைக்காய் , பூக்கொவா cauliflowerமுதலியன) உணவில் சேர்த்துக் கொள்ளலாம். கோதுமை, அரிசி, ஓட்ஸ்oats, barleyவாற்கோதுமை ரொட்டி, மீன், பருப்புகள் – இவற்றை குறைவாக அளவோடு உண்ணவும்.

காரத்தன்மை அதிகரிக்க சுலபான வழி – பழ ரகங்கள் காய்கறி ரகங்களை பருகுவது.

காரத்தன்மை மிகுந்த உணவுகள்
பசும் பால்
மோர்
காய்கறிகள்
பசலைக்கீரை
வெள்ளரிக்காய்
பீட்ரூட்beets
முள்ளங்கி
முள்ளங்கி போன்ற கிழங்குcarrot
உருளைக்கிழங்கு
பட்டாணி
முட்டைக்கோவா
பூக்கொவா
வெங்காயம்
பரங்கிக்காய்

பழங்கள்
ஆப்பிள்
அத்திப்பழம்
திராட்சை
கரும்பு
தக்காளி
எலுமிச்சை
ஆரஞ்ச்
பேரீச்சம்பழம்
வாழைப்பழம்
மாதுளம்பழம்
தேங்காய்
தர்பூசணி

அமிலத்தன்மை மிகுந்த உணவுகள்
அரிசி (பாலிஸ் செய்யப்பட்ட)
கைக்குத்தல் அரிசி
கேக்
ரொட்டி
பார்லி
மைதா
சோளம்
கோதுமை
சாக்லேட்
வேர்க்கடலை
பாதாம்பருப்பு
முட்டை (மஞ்சள் கரு)
முட்டை (வெள்ளைக்கரு)
முட்டை
மாட்டு மாமிசம்
சிக்கன்
மட்டன்
மீன்
சீஸ்
வெண்ணெய்

நன்றிகள்.





சித்திரைத் திருநாள் வாழ்த்துக்கள் ........!


அனைத்து தமிழ் மக்களிற்கும்!
இனிய


நன்றிகள்.


அதிசய பூனை......!



நன்றிகள்.

Wednesday, 11 April 2012

"சிந்தியுங்கள்........தமிழர்களே......"!



தமிழில் பேசுவதற்கும் எழுதுவதற்கும் நாம் நிறைய சிந்தித்துக்கொண்டிருக்கிறோம். அந்த அளவுக்கு தமிழ் பேச்சும் எழுத்தும் நம்மை அவமானப்படுத்துவதாக நினைத்துக்கொண்டிருக்கிறோம்.

ஆனால் தமிழுக்குத் தொடர்பே இல்லாத ரசிய நாடு தமிழைக் கொண்டாடுகிறது. அங்கிருக்கும் அதிபர் மாளிகையான கிரெம்ளின் மாளிகையின் பெயரை அவர்கள் அழகு தமிழில் எழுதியுள்ளார்கள்.

முதலாவதாக அவர்கள் தாய்மொழியான ரசியத்திலும், இரண்டாவதாக அண்டைநாட்டு மொழியான சீனத்திலும், உலகத் தொடர்புமொழி என்ற நோக்கில் ஆங்கிலத்திலும், நான்காவதாக தமிழிலும் எழுதியிருக்கிறார்கள்.

தமிழைவிட எத்தனையோ உலகமொழிகள் பெரும்பாலான மக்களால் பேசபடுகின்றன. ஆனால் அவற்றையெல்லாம் விட்டுவிட்டு தமிழ்மொழியில் அதிபர் மாளிகையின் பெயரை எழுதியதற்கு அவர்கள் கூறும் காரணம் , தமிழர்களாகிய நம்மைச் சிந்திக்க வைப்பதாக உள்ளது.

"உலகில் ஆறு மொழிகள்தான் மிகவும் தொன்மையானவை. அவை கிரேக்கம், லத்தீன், எபிரேயம், சீனம், தமிழ்,சமற்கிருதம். இந்த ஆறு மொழிகளில் நான்குமொழிகள் இன்று வழக்கில் இல்லை.

இலக்கிய, வரலாற்று செழுமையான மொழி. எங்களுக்கு உலகில் உள்ள முக்கிய மொழிகளான 642 மொழிகளிலும் சரியான, தகுதியான மொழியாக "தமிழ் மொழி "தென்பட்டது. அந்த மொழியைச் சிறப்பிக்கவே "கிரெம்ளின் மாளிகை" என தமிழில் எழுதினோம்" என்று கூறுகிறார்கள்.

வெளிநாட்டினருக்குக் கூட தமிழின் அருமை பெருமை தெரிந்திருக்கிறது. நமக்குத்தான் தெரியவில்லை..

வெளிநாட்டில் உள்ளவர்களுக்கு கூட நம் தமிழின் பெருமை தெரிந்து உள்ளது. ஆனால் நாமோ 'தமிழில் எழுதுங்கள் என்பதற்கு ஒரு கருத்தரங்கம் நடத்திக்கொண்டு இருக்கிறோம்'.

மகாநாடு நடாத்தினால் மட்டும் போதுமா அதனால் என்ன வளர்ச்சியைக் கண்டுள்ளது?

"தமிழ்மொழி" கணணித்துறையில் உலகிலுள்ள பல மொழிகளின் அகராதி மிக நேர்த்தியாக வடிவமைக்கப்பட்டு மக்கள் பாவனைக்கு எந்தத் தடைகளுமின்றி இணைய உலாவிகளினூடே வலம் வருகின்றன.

ஆனால் மிகப்பழமையும், பெருமையும் கொண்ட எமது தாய்த்தமிழிற்கான அகராதியை உருவாக்க பிரயத்தனம் எடுக்கப்படவில்லை என்பதே என்போன்ற பல இலட்சம் தமிழ்மக்களின் ஆதங்கமாகும்.

"சிந்தியுங்கள்........தமிழர்களே"......



சிந்தித்தால் மட்டும் இதற்கான விடிவுகிட்டாது செயற்படுத்துங்கள் இல்லையேல் செயற்படுபவர்களிர்கான ஊக்குவிப்பை வெளிக்கொணர்ந்து அதனூடாக இதற்கானதோர் விடிவை எதிர்பாக்கிறோம்.

நன்றிகள்.

Tuesday, 10 April 2012

ஆண்களின் பருவம்







ஆண்களின் பருவம் பாலன், 1 வயதுமுதல் 7 வயதிற்குட்பட்ட ஆண்.










மீளி, 8 வயதுமுதல் 10 வயதிற்குட்பட்ட ஆண்












மறவோன், 11 வயது முதல் 14 வயதிற்குட்பட்ட ஆண்















திறவோன், 15 வயது
விடலை, 16 வயது ஆண்












காளை 17 வயது முதல் 30 வயதிற்குட்பட்ட ஆண்









முதுமகன், 30 வயதுக்கு மேல்
நன்றிகள்.