அழகு என்பது யாது?
என்று தமிழர்கள் தமது கலை, கலாச்சாரம், உணவு, உடை அனைத்தயும் உள்ளடக்கிய தன்மானத் தமிழர்களாக வாழ்வதற்கான அவசியத்தை உணர்கின்றானோ அன்றே இதற்கான தீர்வு கிட்டும்.
நன்றிகள்.
அழகு என்பது நிறத்தில், மூக்குக்கண்ணாடியில், கழுத்துச் சுருக்கில், பட்டுடையில், பிற அணிகளில் அமைந்திருப்பதன்று. மூளை, இதயம், மண்ணீரல், நுரையீரல், உள்ளிட்டப்பேருறுப்புகள் செழிய நிலையினின்று ஒழுங்குபெற கடனாற்றலாலுற்று நரப்புக்கட்டினினின்றும் தடைபடாக் குருதியோட்டதினின்றும் முகிழ்க்கும் தசையிடை அரும்புவதே அழகு ஆகும்.
இது தமிழ்த்தென்றல் தென்றல் திரு வி க வின் உரை - அழகு குறித்த விளக்கம் விளங்குகிறதா? தென்றல் தவழும் தனித்தமிழ் இந்நாளில் உள்ளோர்க்கு துன்பமாயும், அந்நிய மொழி கலந்த சிதைத்த தமிழ்ப்புழதிக்காற்று இன்பமாயும் தோற்றுகிறது என் செய்வது. இவர்தம் தென்றல் தவழும் தமிழ்ப் பொழிவைக்கேட்கக் குவிந்தோர் ஏராளம்.
இன்று இதை எழுதிப்படிப்பதற்கும் தயங்குவோர் தான் ஏராளம். இப்போதெல்லாம் தமிழ் இணையபக்கங்களிலும், தமிழ் பத்திரிகைகளிலும், தமிழ் தொலைக்காட்சி நிகழ்ச்சிகளிலும் தமிழ் அல்லாத அனைத்து மொழிகளும் தாராளமாக பயன்படுத்துவது நாகரீகமென நினைத்து தமிழைத் தொலைத்துக் கொள்கிறார்கள்.
ஒரு படைப்பில் தூய தமிழ் அற்று பிறமொழிக் கலப்பு இருந்தால் அதற்குப் பொறுப்பு அந்தப்படைப்பின் காரணகர்த்தாவே ஒழிய அடுத்தவரைச் சாராது. ஆகவே பொறுப்பான பதவி வகுப்பவர்கள் தங்கள் பதவியை மட்டும் பாராது கடமையை ஒழுங்குமுறை
உடன் செய்வதால்தான் இதற்கான முயற்சியில் வெற்றி பெறுவோம் , என் செய்ய இது காலத்தின் கோலம்.
என்று தமிழர்கள் தமது கலை, கலாச்சாரம், உணவு, உடை அனைத்தயும் உள்ளடக்கிய தன்மானத் தமிழர்களாக வாழ்வதற்கான அவசியத்தை உணர்கின்றானோ அன்றே இதற்கான தீர்வு கிட்டும்.
இவைகள் அனைத்துமே அழகில்லை தமிழன்
தமிழனாகவே வாழ்வதே மிக அழகு!
"எங்கும் தமிழ்"
"எதிலும் தமிழ்"
தமிழனாகவே வாழ்வதே மிக அழகு!
"எங்கும் தமிழ்"
"எதிலும் தமிழ்"
நன்றிகள்.