Thursday, 1 December 2011

ஆவதும்,அழிவதும் பெண்ணாலே ......

காலம் காலமாக இந்த பழமொழி வழக்கத்தில் உள்ளது. இதன் பொருள் என்ன? நல்லவை ஆவதும் பெண்ணாலே கேட்டது அழிவதும் பெண்ணாலே என்று சொல்கிறார்கள்...

எனக்கு தெரிந்த ஒரு ஜோதிடர் என்ன சொல்றார்...
மிருகமா இருக்கிறமனிதன்,மனிதனாக“ஆவதும் பெண்ணாலே” மனிதனுக்குள் இருக்கிற மிருகம் “அழிவதும் பெண்ணாலே” அவர் ரொம்ப நல்ல விதமாக ஒரே பக்கமா சிந்தனை செய்திருக்கின்றார்.

நான் என்ன சொல்கிறேன்...
ஒருவன் உருவாவதும் பெண்ணாலே ....அழிவதும் பெண்ணாலே! ஒரு குடும்பம் உருவாவதும் பெண்ணாலே.. ...அழிவதும் பெண்ணாலே!! ஒரு சமுதாயம்,கலாச்சாரம், பண்பாடு உருவாவதும் பெண்ணாலே.. ..அழிவதும் பெண்ணாலே!!!

இது பெண்ணுக்கு மட்டுமே பொருந்துவது இல்லை. ஆணுக்கும் தான். ஆவதும் ஆணாலே...அழிவதும் ஆணாலே. என்றும் சொல்லலாம் . இருந்த போதிலும் ஒரு சமுதாயம்,கலாச்சாரம், பண்பாடு உருவாக பெண்ணின் பங்களிப்பு ஆணை விட சற்று கூடதலாகவே உள்ளதாக நான் உணர்கிறேன்..
 
எந்த ஒரு கலாசாரத்தையும் பண்பாட்டையும் கட்டிக் காக்க கூடிய சக்தி பெண்ணுக்கு சற்று அதிகமாகவே உள்ளது . (அவளுக்கு மட்டுமே உள்ளது என்று கூடசொல்லலாம்)

ஆங்கிலத்தில் பெண்களை "weaker" செக்ஸ் என்று சொல்வார்கள். அது உடல் ரீதியாக வேண்டும் என்றால் பொருந்தலாம். உள்ளத்து ரீதியாக பார்த்தல் ஆணே "weaker" செக்ஸ் . especially in sex.

ஒரு பெண் சற்று ஜாடை காட்டினால் போதும் ஒன்பது ஆண்கள் அவனது குடும்ப அழிவிற்கு காரணமாக ஆகிவிடுவார்.

இதுவே ஒரு ஆண் சற்று ஜாடை காட்டினால் ஒன்பது பெண்கள் அவர்களது குடும்ப அழிவிற்கு காரணமாக ஆகிவிடுவார் என்று சொல்ல முடியாது. (இன்று சில நகரங்களில் சில பெண்களும் அப்படி மாறிக்கொண்டு வருகிறார்கள் என்பது வருத்தமளிக்கும் செய்தி).

குடும்பம், கலாச்சாரம், பண்பாடு எல்லாமே பெண்ணை மையமாகவே வைத்து அமைந்துள்ளது.

அவளால் தான் மிருகம் மனிதனாவான்....மனிதன் மிருகமாவான்...(.சில நேரங்களில் தத்துவ ஞானியாக ஆவதும் உண்டு).

நல்லது ஆவதும் பெண்ணாலே!
கெட்டது அழிவதும் பெண்ணாலே ! !

என்பதற்கு இலக்கணமாக எந்த பெண் இருக்கின்றாளோ அப்படிப்பட்ட பெண்களே தெய்வம்...(உங்கள் குல சாமி அவள் தான்)....அவள் இருக்கும் வரை தான் இந்த பூமியில் அனைவரும் அமைதியாக வாழ முடியும்.

(நன்றிகள் கேள்வியும் நானே பதிலும் நானே)