Wednesday, 14 December 2011

அம்மா !


கல்தோன்றி,மண்தோன்றாக் காலத்தே முன்தோன்றிய தமிழ் மொழியில் உள்ள உயிர்,மெய்,உயிர்மெய் எழுத்துக்கள் அனைத்தும் சேர்ந்த சொற்கள் எவை என்று யோசித்துப் பார்த்தபோது அவற்றில் ஒன்று “அம்மா” என்ற சொல் என்று தெரிந்தது அ (உயிர்),ம் (மெய்),மா உயிர்மெய்).



அம்மாவும் தமிழைப் போல் முன்தோன்றி இருக்கவேண்டும் என நினைக்கிறேன்.எவ்வுயிர்க்கும்முதற்சொல் “அம்மா”.நம் எதிர்நின்று பேசும் தெய்வம் “அம்மா”.


பிச்சை எடுப்பவரும் சொல்வாரே “அம்மா”, வயதுசிறியவரில் இருந்து வயதிலே கூடியவர்கள் அனைவரும் ஒருபெண்ணை அழைக்கும் போது கெளரவமாக“அம்மா”என்றே விழிப்பார்கள். “அம்மா” வைப்பற்றி அறியாதவர் ஒருவரும் இருக்கமுடியாது. 




கொல்லன் தெருவில் ஊசி விற்க முயலாமல் விடை பெறுகிறேன். 

(நன்றிகள் இரா.அருளானந்தம்)