இல்லாரை எல்லோரும் எள்ளுவர்,செல்வரை
எல்லாரும் செய்வர் சிறப்பு.
(திருக்குறள் அதிகாரம் 76, 752 ஆவது குறள்)
பொருள் இல்லாதவரை (வேறு நன்மை உடையவராக
இருந்தாலும்)எல்லாரும் இகழ்வர்,செல்வரை (வேறு நன்மை இல்லாவிட்டாலும்) எல்லாரும் சிறப்புச் செய்வர்.
உலகில் எந்த மனிதன் அனைத்து செல்வங்களுடன் வாழ்கின்றானோ அவனிற்கு இவ்வுலகில் அனைவரும் சொந்தம்.
உலகில் எந்த மனிதன் எவ்வித செல்வமமும் இன்றி வாழ்கின்றானோ அவனிற்கு இவ்வுலகில் எவருமே சொந்தம் இல்லை.
உலகமே எதிர்பார்ப்புக்களை கொள்கையாகக் கொண்டுள்ள போது
அதில் வாழும் மக்களால் எப்படி எதிர்பார்ப்பின்றி வாழமுடியும்.
ஆதலால் சொல்கிறேன் சொந்தம் என்பது உண்மைக்குப் புறம்பானது.
செய்க பொருமை,செறுநர் செருக்கறுக்கும்
எஃகுஅதனின் கூரியது இல்.
(அதிகாரம் 76,759 ஆவது குறள்)
ஒருவன் பொருளை ஈட்டவேண்டும்,அவனுடைய
பகைவரின் செருக்கைக் கேடுக்கவல்ல வாள்
அதைவிடக் கூர்மையானது வேறு இல்லை.