Thursday, 8 December 2011

பாசமா? பணமா?

அன்றாட வாழ்விற்கு பணம் தேவையே அன்றி. அதுவே முழுமையான இன்பத்தை ஒருபோதும் அளிக்காது. ஏனெறால் ஒருவர் தனது வாழ்நாளில் ஒவ்வொரு நாளும் பணம் உழைப்பதற்காக தனது நேரத்தை உபயோகப்படுத்துவதால் குடும்ப அங்கத்தவர்களுடன் பாசத்தை பகிர்ந்து கொள் வதற்கு நேரமின்மையாலும்,வேலைப்பளுவினாலும் உடலும், உள்ளமும் சோர்ந்து விடுவதால் உண்மையான மகிழ்ச்சி, உற்சாகத்துடன் குடும்ப அன்றாட வாழ்வியலில் இரண்டறக்கலக்க முடியவில்லை.ஆதலால் சொல்கிறேன்


ஒவ்வொருவரும் தத்தமது குடும்ப உறுப்பினர் அனைவரிற்கும் உரியநேரத்தை அவரவர் தேவைகளிற்கு ஏற்ப பகிர்ந்து கொள்வதோடு,குடும்ப உறுப்பினர்கள் அனைவருடனும் நன்கு அளவளாவிக் கொள்வதன் ஊடாகவே ஒவ்வொருவரினதும் குடும்ப வாழ்வில் பாசத்தைக் காணலாம்.
ஆகவே மனித வாழ்விற்கு பணம்தான் பாசத்தை ஏற்படுத்திக் கொள்வதில்லை.
என்பதே எனது கருத்தாகும்