Saturday, 31 March 2012

முயற்சி............!



இருக்கும் மூலப்பொருட்களை வைத்துக் கொண்டு தமக்குத் தேவையானவற்றைப் பூர்த்தியாக்குவதன் மூலம் தன்னிறைவை எட்டலாம் என்பதற்கு மிக இலகுவான உதாரணம்.

நன்றிகள்.

Friday, 30 March 2012

எத்தனை ஆயாக்கள் தேவையோ..........!




ஒரே குழந்தையை வளர்ப்பதற்கே ஆயா தேவைப்படும்போது.
இவ்வளவு பெரிற்கும் எத்தனை ஆயாக்கள் வேண்டும்?

நன்றிகள்.

Thursday, 29 March 2012

தமிழின் அர்த்தம் தெரியுமா..........?



நம் அனைவருக்கும் தமிழ் தெரியும். ஆனால் எத்தனை பேருக்கு அதன் அர்த்தம் தெரியும்...? தெரிந்து கொள்ளுங்கள் நண்பர்களே...!

தமிழ் என்பது த்-அ-ம்-இ-ழ் என்னும் ஐந்து அலகு நிலையுடையது.

அ - அகண்டாகார சித்தை விளக்கும் ஓங்கார பஞ்சாக்கரத்துள் பதி நிலையக்கரமாகும்.

இ - பதியைவிட்டு விலகாத சித்தை விளக்கும் வியவகாரத்தால் அனந்தாகார வியச்(ஷ்)டி பேதங்காட்டும் சீ(ஜீ)வ சித்த கலையக்கரமாம்.

பதி சிதாத்ம கலைகளுக்காதாரமாகி உயிரினுக்கு உடலையொத்துக் குறிக்கப்படும் த்-ம்-ழ் எழுத்துக்களுக்கு உரை.

த் - ஏழாவது மெய். அறிவின் எல்லையைக் குறிக்கும்.


ம் - பத்தாவது மெய். ஞானத்தின் படியைக் குறிக்கும்.

ழ் - பதினைந்தாவது இயற்கையுண்மைச் சிற்ப்பியல் அக்கரம்.

நம் பிரபஞ்சத்தைக் குறிக்கும்.

சம்பு பச(க்ஷ)த்தால் அனாதியாய் - சித்த சித்தாந்த ஆரிச(ஷ) நீதிப்படி கடவுள் அருளாணையால் கற்பிக்கப்பட்டதும்,எப்பாசை(ஷை)களுக்கும் பிதுர் (தந்தை) பாசை(ஷை)யென்று ஆன்றோர்களால் கொண்டாடப்பட்டதும்,

இனிமையென்று நிறுத்தம் சிந்திக்கப் பெற்றுள்ளதுமான தமிழ் தான் இயற்கையான சிறப்பியல் மொழியாகும்.

இவ்வாறு இராமலிங்க அடியகளார் கூறுவதைப் போல் சுருக்கமாகச் சொல்வதானால் "தமிழ் மொழியே அதி சுலபமாக சுத்த சிவானு பூதியைக் கொடுக்க வல்லது".

தமிழ் என்பதன் உண்மை விளக்கம் : தம் + இல் - அதாவது நம்மில் உள்ள இறைவனை அறிய உதவுவது. இறைவனை எளிதில் அடைய உதவும் மொழி தமிழ்.

நன்றிகள்.

Wednesday, 28 March 2012

ஆணும் பெண்ணும் சமமா.............?

ஆணும் பெண்ணும் சமமா? சமம் என்றால் எப்படி


அந்த சமத்தால் பலமா? பாதிப்பா?

எந்த ஒன்றுமே ஒன்றோடு சரிக்கு சரியாக இருந்தால்தானே சரிசமம். இதில் ஆணும் பெண்ணும் எப்படி?

உடலாலும் மனதாலும், வெவ்வேறு வகைகளாய், வெவ்வேறு உருவ அமைப்புகளாய் படைக்கப்பட்டு, பெண் என்பவள் இன்ன தகுதிகளைக் கொண்டவள். ஆண் என்றவன் இன்ன தகுதிகளைக் கொண்டவன் எனவும். அதில் பலங்களும், பலவீனங்களும், புகுதப்பட்டு.ஆணுக்கு இல்லாத தகுதியான தாய்மையை பெண்ணுக்குத் தந்து பலப்படுத்தி.

மென்மையான இளகிய மனதை படைத்து பலவீனப்படுத்தி,பெண்ணுக்கு இல்லாத குண நலன்களை ஆணுக்குள் புகுத்தி. இப்படி பலதரப்பட்ட வகைகளில் வித்தியாசங்களால் படைக்கப்பட்டிருக்கும் ஆணும் பெண்ணும் எப்படி சரிசமம்.

பேச்சுக்கும் வார்த்தைக்கும் வேண்டுமென்றால் சொல்லலாம் சமமென,தன்னை தாக்கவரும் ஆணிடமிருந்து தற்காத்துக்கொள்ளவே பெண்களால் இயல்வதில்லை சிலபலமும், பல பலவீங்கனங்களைதாங்கி நிற்கும் பெண்ணால் ஆணோடு சமமாக முடியுமா.

சொல்லிக்கொள்ளலாம். ஏன் பலம்கொண்ட மங்கைகளில்லையாயென! விதிவிலகாய். ஆங்காங்கே, ஆணின் உணர்வுகளோடும் பலத்தோடும் பெண்ணும். பெண்ணின் உணர்வுகளோடு, பலவீனத்தோடும் ஆணும் இருக்கலாம் இது படைப்பியல் நுணுக்கம் படைதவன் மட்டுமே அறிவான்.

இன்றைய பெண்கள் ஆண்களோடு சரிசமமாய் நிலவுக்கே செல்கிறர்கள். ஏன் அதற்க்கு மேலாகவே பலயிடங்களில் கால்பதிக்கிறார்கள்.சாதிக்கிறார்கள்

ஆண்களைவிட பலதகுதிகள் கூடியவர்களாக வலம் வருகிறார்கள் இல்லையென்று சொல்லவில்லை.அவர்களுக்குத்தெரியும் அந்த நிலைக்கு வருவதற்கு ஆணைவிட தான் எவ்வளவு சிரமங்கள், சங்கடங்களை அனுப்பவித்திருப்பார்களென. இதை மனபூர்வமான சொல்பவர்கள் சிலபேர். அதெல்லாமில்லையென சொல்லாமல் மார்தட்டிகொள்பவர்கள் பலபேர் எப்படியிருந்தபோதும்,ஒரு பெண் ஆணோடு சமம் என்பது,,,,,, ?

பெண்களின் மனநலம். உடல்நலம் அறியாதவர்கள் உலகில் உண்டா! என்னதான் தன் கணவனிடமோ,தன் தந்தையிடமோ,மற்ற அந்நியர்களிடமோ.துணிச்சலோடு எதிர்த்துபேசக்கூடிய ஆற்றலிருந்தாலும் உள்ளுக்குள் ஓர் உதறலிருக்கும்.பிறவியிலேயே பெண்கள் மென்மையானவர்கள் [இப்போது பூவுக்குள்ளும் பூகம்பம்வெடிக்கிறது அதுவேறு] அவர்களின் மென்மை ஆணுக்கு இருக்காது.

ஆண்கள் பிறவியிலேயே சற்று கடினமானவர்கள் [அவர்களுக்குள்ளும் மென்மையுண்டு அதுவேறு] அவர்களின் கடினம் பெண்ணுக்கு இருக்காது

இது இயற்கை. அப்படியிருக்க எப்படி சமம்.நானும் நீயும் ஒன்று. அதனால் எதைச்செய்தாலும் நானும் செய்வேன் என பெண்கள் இறங்கினாலென்னவாகும் நிலமை. [என்னவாகும் அதான் ஆகிவிட்டதே ஆங்காங்கே!என்கிறீர்களா]

பத்துகுழந்தை பெற்றும் ஆண் அப்படியேயிருக்கிறான் ஆனால் ஒருபெண் அப்படியா?[ஆணா குழந்தை பெற்றடுக்கிறான் என்னம்மா சொல்லுறே]

ஒரு ஆணுக்கு ஜோடியாக நடிக்கும் நடிகை ஓரிரு படத்தோடு அன்னைவேடத்துக்கு போகிறாள். ஆனால் அதே ஆண் அவளின் பேத்திக்கும் ஜோடியாய் நடிக்கிறான்.[அதெல்லாம் மேக்கப்பு அப்படிங்கிறீங்களா]

ஆண் பெண் சமத்தால் ஆண்களுக்கு ஆதாரம் பெண்களுக்கு சேதாரம். எப்படியெனில். ஆணுக்கு நிகராய் ஆடைகளில் போட்டி போடுவதால். அதில்மட்டும் எதிர்மறையாய்.

அவன் ஆடைகளை அடுக்கடுக்காய் கூட்டிக்கொண்டே போகிறான்.கோட் சூட்டென,ஆனால் பெண்ணோ இதற்கு நேர்மாறாய் இதில்வேறு அதிரடி தள்ளுபடியாய் ஆங்காங்கே! அச்சோ எங்கேபோய்சொல்ல கேட்டால் சமத்தையும் தாண்டி ஒருபடியாவது மேலே போய் முன்னுக்கு வந்து காட்டத்தான்.தானும் தாழ்ந்து மற்றவைறையும் அதனோடு உள்ளிழுக்கும் செயல்.

அடுத்து

இந்த சமத்தால் சீர்கெடுவது யாரென நினைக்கிறீர்கள் அவர்களின் சந்ததிகளே! அவர்களின் நிலைதான் இன்று நிலைகுலைந்து, சீர்கெட்டு, தங்கள் வாழ்கையையே பறிகொடுத்துவிடுகிறார்கள் சிலசமயம் உயிரையும் கொடுத்துவிடுகிறார்கள். ஆணுக்கு இணையாய் குடும்பத்தை காக்க வேலைக்குபோவது தவறல்ல, ஆனால்! அந்த குடும்பமே கலைந்து சிதைய காரணியாக இருப்பது சரியா! ஆணும் பெண்ணும் போட்டிபோட்டுக்கொண்டு பணத்தை சம்பாதிக்கிறார்களேயொழிய தன் வாழ்க்கையில் வசந்தமாய் வந்த வரங்களை வலுவிழக்கசெய்துவிடுவதோடு

தான் பெற்றகுழந்தைகளை மிகச்சின்னசிறிய வயதிலேயே அதாவது பிறந்த கொஞ்சநாளிலே குழந்தைகள் காப்பகத்திலும். வளர்ந்து அதற்க்கு என்ன ஏது எனவிபரமறியாபருவத்திலே மாணவ விடுதிகளிலும், விட்டுவிட்டு இருவருவரும் சரிக்கு சமமென போட்டிப்போட்டுவதால்.இக்குழந்தைகளின் நிலையை எண்ணிப்பார்க்க மறந்து பணமட்டுமே வாழ்க்கையாய், இருவரும் சமம் என்பது மட்டுமே குறிக்கோளாய். தான்பெற்ற குஞ்சுகளின் வாழ்க்கையை வீணடித்து விடுகிறார்கள்.

கண்டிக்க, ஏனென்றுகேட்க ஆளில்லாமல்.பள்ளியிலிருந்து வரும்பிள்ளை பசியோடு குளிர்சாதனப் பெட்டியைத் திறந்து அதனுள் ஒரு வாரத்திற்க்கு தேவையான உணர்வற்ற உணவுகளை எடுத்துண்டு. தனிமையெனும் கொடுமைக்கு ஆளாக்கி.

நான்கு சுவற்றுக்குள்ளே அடைப்பட்டு, சீரழிக்கும் சினிமா பார்த்து, கூடதா பலக்கவழங்கள் ஏற்பட்டு.மன உலைச்சளுக்கு ஆளாகி. அன்புக்கு ஏங்கித்தவித்து, மனதளர்ச்சி உடல்தளர்ச்சி நரம்புத் தளர்ச்சியென அவதிப்பட்டு அல்லல்படும் சிறார்களை கண்கூடே காணும்போது,என்ன வாழ்க்கை வாழ்கிறார்கள் இவர்கள் என மனம் அவர்களுக்காய் ஆதங்கப்படும்.

ஒருமுறை மடியில் தலைசாய்த்து அழுத சிறுமியின் அழுகை. தாய்தந்தையின் சமமென்ற சண்டையால் வீட்டுக்குள்ளே பெண்களின் உணர்வுகளோடு வளரும் சிறுவன் என அடிக்கடி பார்க்க நேரும் சந்தர்ப்பங்களால் அவர்களை பெற்றவர்களின்மீது கோபம்வரும்.

அவர்கள் சொல்வதுபோல் கிடைத்திருப்பது ஒரு வாழ்க்கை. இதை தன் சுயலாபத்திற்கா மட்டும் வாழ்வது சரியா? கேட்டால் பிள்ளைகளுக்குதானே!என அவர்கள் மேலேயே பழியை சுமத்திவிடுவது. அதிகம் இரண்டாகி, இரண்டு ஒன்றாகி, தற்போது ஒன்றாகிவிட்டபோதிலும்.

அந்த ஒன்றை வைத்து [அது வளரும் வரையிலாவது]பார்க்கமுடியாத பெற்றோர்களாகி.] அதைவிடக்கொடுமை. அழகுபோய்விடுமென்றும் ஆணுக்கு நிகராய் போட்டிபோட்டு முன்னேற தடையென்றும்.

திருமணம் ஆகியும் குழந்தைபெற்றுக்கொள்ளாமல் இருபோர்கள்.ஆகா சமம் சமம் என்று சருக்கலிலேயே வாழ்க்கை கழிகிறது பல இடங்களில். ஆணும் பெண்ணும் சமம். இதனால் பிள்ளைகளின் வாயில் ரொட்டிதான்.

அரையும் அரையும் ஒன்று ஆணும் பெண்ணும் ஒன்று என்பது நன்று இதில் தவறில்லை, ஆனால் சமமென சொல்லிக்கொண்டு நடுவீதியில் சடுகுடு ஆடுவது சரியல்ல ஏனெலில் இது வருவோர் போவோருக்கு ஓர் இலவச கண்காட்சியாகுமே தவிர.

இனியஇலக்கை நோக்கிப்போகாது. சமமென்று வேலைவாய்ப்புகளின் சதவீதங்களிலும் சாதனைகளிலும் சதமடிக்கட்டும், அதுவும் தன்னை தற்காத்துக்கொள்ளும் திறன்களோடு. சிலநேரம் அதற்கும் சார்தல் தேவைப்படும்.

எதுவென்றபோதும் ஆண் ஆணாகவும்.பெண் பெண்ணாக இருந்தால்தான் அந்ததந்த இனங்களுக்கே ஓர் மதிப்பு! ஆகமொத்தத்தில் இருவரும் சமம் என்பதில், மிக மிக சில பலன்கள்தான். ஆனால் அதில் பாதிப்புகள் அதிகமதிகம். இதையறிந்தும் அறியாதோர்போல் எக்குதப்பாய் யோசித்து எடக்குமடக்காய் கேள்விகேட்போர்களுக்கல்ல இக்கருத்து.அவரவர்களுக்கு ஆயிர கருதுக்கலிருக்கலாம். ஆனாலிது எனக்குள்ளிருந்து வெளிப்பட்டது.

உனக்குநான் எனக்கு நீ என்பதில் சமமாகலாம்.
உன்னைவிட நான் என்னைவிட நீ என்பதிலல்ல
அப்படியிருந்தால்,
ஆண்பெண் சமம்
சமாதானமாகதது.
ஆட்டங்கண்டு அறுந்துவிடும்.
அன்பான வாழ்க்கை.

நன்றிகள்.

Tuesday, 27 March 2012

தமிழர்களின் சாதனை.............!

எந்த மொழியிலும் இல்லாத தசம கணியம் (Decimal Calculation ). இவ்வளவு கணிதம் அந்த காலத்தில் பயன்பாட்டில் இருந்துள்ளது. இந்த எண்களை வைத்து எத்தனை துல்லியமான வேலைகள் நடந்திருக்கும் என்று எண்ணிப்பாருங்கள், கணினியையும், கால்குலேடரையும் தொழில் நுட்ப வளர்ச்சி என்று இன்றைய தலை முறை கூறிக்கொண்டு இருக்கும் போது ,அதை விட ஆயிரம் மடங்கு மேலாக அந்த காலத்திலேயே நாம் சாதித்து விட்டோம் !

தமிழர்களின் சாதனை!!

1 - ஒன்று
3/4 - முக்கால்
1/2 - அரை
1/4 - கால்
1/5 - நாலுமா
3/16 - மூன்று வீசம்
3/20 - மூன்றுமா
1/8 - அரைக்கால்
1/10 - இருமா
1/16 - மாகாணி(வீசம்)
1/20 - ஒருமா
3/64 - முக்கால்வீசம்
3/80 - முக்காணி
1/32 - அரைவீசம்
1/40 - அரைமா
1/64 - கால் வீசம்
1/80 - காணி
3/320 - அரைக்காணி முந்திரி
1/160 - அரைக்காணி
1/320 - முந்திரி
1/102400 - கீழ்முந்திரி
1/2150400 - இம்மி
1/23654400 - மும்மி
1/165580800 - அணு --> ≈ 6,0393476E-9 --> ≈ nano = 0.000000001
1/1490227200 - குணம்
1/7451136000 - பந்தம்
1/44706816000 - பாகம்
1/312947712000 - விந்தம்
1/5320111104000 - நாகவிந்தம்
1/74481555456000 - சிந்தை
1/489631109120000 - கதிர்முனை
1/9585244364800000 - குரல்வளைப்படி
1/575114661888000000 - வெள்ளம்
1/57511466188800000000 - நுண்மணல்
1/2323824530227200000000 - தேர்த்துகள்.

நன்றிகள்.

Sunday, 25 March 2012

மனிதன் மனிதனாக .................!

மிகவும் மதிக்கப்பட வேண்டியவர்கள் -தாய்,தந்தை
மிக மிக நல்ல நாள் -இன்று
மிகப்பெரிய வெகுமதி -மன்னிப்பு
மிகவும் வேண்டியது -பணிவு
மிகவும் வேண்டாதது -வெறுப்பு
மிகப்பெரிய தேவை -நம்பிக்கை



மிகக் கொடிய நோய் -பேராசை
மிகவும் சுலபமானது -குற்றம் காணல்
கீழ்த்தரமான விடயம் -பொறாமை
நம்பக் கூடாதது -வதந்தி
ஆபத்தை விளைவிப்பது -அதிக பேச்சு
செய்யக் கூடாதது - நம்பிக்கைத் துரோகம்







செய்யக் கூடியது -உதவி
விலக்க வேண்டியது -சோம்பேறித்தனம்
உயர்வுக்கு வழி-உழைப்பு
நழுவ விடக் கூடாதது -வாய்ப்பு
பிரியக் கூடாதது -நட்பு
மறக்கக் கூடாதது -நன்றி

நன்றிகள்.

Saturday, 24 March 2012

எத்தனை போராட்டம் ...........!



எத்தனை போராட்டம் உலகைக் காண்பதற்கு!

உலகில் ஒரு இடம் பிடிப்பதற்கு!

இலகுவாக வாழவிட்டு விடுவார்களா !

தொடர்ந்து போராடுங்கள் மரணிக்கும் வரை!



நன்றிகள்.

Thursday, 22 March 2012

விமானங்களின் நீராவி .............!

விமானங்கள் பறக்கும்போது, அதன் பின்புறத்தில் வெள்ளை நிறக் கோடுகளைப் பார்த்து இருப்பீர்கள். அதைப் புகை என்று நினைத்தால், அது தவறு. இயந்திரங்களின் உள்ளே எரிபொருள் எரியும்போது, அதில் அடங்கி இருக்கும் ஐதரசனும் காற்றில் உள்ள ஓட்சிசனும் சேர்ந்து, நீராவியாக மாறுகிறது.



நீராவி வெளியேற்றப்படுவதுதான் நமக்கு வெள்ளைப் பட்டையாகக் கோடு வடிவத்தில் தெரிகிறது. சில சமயம், இந்த நீராவி வெளியாகும் பகுதியில் காற்று ஈரப்பதத்துடன் இருந்தால், நீண்ட நேரத்திற்கு இந்தக் கோடு மறையாமலே இருக்கும்.

நன்றிகள்.

Wednesday, 21 March 2012

தமிழ் எழுத்துக்கள்...........!

உயிராகி மெய்யாகி ஆயுதமான தமிழ் மொழியில்
ஒரு நிமிடத்திற்கு 15 மூச்சு,
ஒரு நாழிகைக்கு 24 மூச்சு,
நிமிடத்திற்கு 360 மூச்சு வகுக்கப்பட்டுள்ளது.
(இதை வைத்தே வட்டத்துக்கு 360 பாகைகள் வைக்கப்பட்டது ),
ஒரு மணி நேரத்துக்கு 900 மூச்சு,ஒரு நாளைக்கு 21,600 மூச்சு வீதம் ஓடுகிறது.



இதற்கும் தமிழுக்கும் என்ன சம்மந்தம் என்றுக் கேட்கின்றீர்களா ?
சம்பந்தம் இருக்கிறது. இந்த 21,600 மூச்சுக்களைக் குறிக்கவே
தமிழில் 216 (உயிர்மெய்) சார்பெழுத்துகள் உருவாக்கப்பட்டன.

மூச்சை இப்படி 21,600 வீதம் செலவு செய்தால் ஒரு மனிதன்
120 ஆண்டுகள் வரை உயிருடன் இருக்கலாம்.
மூச்சின் விகிதம் கூடினால் ஆயுள் குறையும்.
மூச்சாற்றலை அதிகம் விரயம் செய்யாமல்
பேசும் ஒரே மொழி உலகத்திலேயே
தமிழ் மொழி மட்டுமே!

நன்றி - தமிழ் வள்ளுவம் —

Monday, 19 March 2012

பாசமும் பண்பும் ...........!



நன்றிகள்.

உறக்க‍ம் தரும் உணவுகள்.......!


நம்மில் சிலர் தலையணையில் தலைவைத்த அடுத்த விநாடியே ‘கொர்’ரென்ற குறட்டையுடனோ அல்லது குறட்டை அல்லாமலோ ஜோராக தூங்கத் தொடங்கி விடு வார்கள். அவர்களை பற்றி பிரச்ச னை இல்லை.ஆனால் குறட்டை ஒரு பிரச்சனைதான்; அதுபற்றி அப்புறம் பார்க்கலாம்.

தற்போதைய பிரச்சனை தூக்கம் வராதவர்களை பற்றியது. புத்த கம் வாசிப்பது, இணைய தளத்தில் மேய்வது, மனதுக்கு பிடித்த இனிமையான பாடல்களை கேட்பது என பலவிதமாக முயற்சித் தும், சிலருக்கு தூக்கம் தொலைவிலேயே இருக்கும்; பக்கத்தில் நெருங்காது.

அப்படியானவர்களுக்காக மருத்துவ மற்றும் உணவு நிபுண ர்கள் தரும் தூக்கம் வரவழைக் கும் உணவு கள் பட்டியல் இதோ:

இறால்:மீன்களில் பலவகை உண்டென் றாலும் இறால் மீனுக்கு தனி ருசி மட்டுமல்லாது, தூக்கத்தை வர வழைக்கும் திறனும் உண்டு. இதி லுள்ள ஆரோக்கியமான கொழு ப்பு, தூக்கத்தை ஒழுங்கு படுத்தும் ஹார்மோன் சுரப்புகளை அதிக ரிக்கும் திறனுடையதாம்.

பீன்ஸ் மற்றும் இந்த வகையை சேர்ந்த அவரை, பட்டாணி போன் ற வற்றில் பி6,பி12 உள்ளிட்ட ‘பி’ வைட்டமின்களும், ஃபோலிக் அமிலமும் மிகுதியாக உள்ளன.

இவை மனிதனின் தூக்க சுழற்சி முறை யை ஒழுங்குபடுத்துவதோடு, மன தை ஆசுவாசமாக வைத் திருக்கக் கூடிய செரோட்டோ னினை சுரக்க வைக்கிறது.மேலும் தூக் கமின்மையால் அவதிப்படுபவ ர்களுக்கு ‘பி’ வைட்டமின்கள் மிகவும் உதவுவதாக ஆராய்ச் சிகள் தெரிவிக்கின்றன.


தயிர்:கொழுப்பு குறைந்த தயிரில் கால்சியம் மற்றும் மெக்னீசி யம் நிறைந்துள்ளது. இந்த இர ண்டுக்குமே தூக்கத்தை வர வழைப்பதில் முக்கிய பங்கு உள்ளது. ஆழ்ந்த தூக்கம் வர உதவும் இந்த தாதுக்கள், வேகமாகவும் தூக்க த்தை வரவழைக்குமாம்.

இந்த தாதுக்கள் ஒருவருக்கு உரிய அளவு கிடைக்காமல் பற்றாக்குறையாக இருந்தால், அதனால் தூக்கமின் மை ஏற்படுவதோடு, மன அழுத்த ம் மற்றும் தசைவலி போன்ற வையும் ஏற்படலாம் என்று மருத் துவர்கள் எச்சரிக்கிறா ர்கள்.

பசளிக்கீரை: கரும்பச்சை நிறத்தில் உள்ள இந்த பசளிக்கீரையில் இரும்பு சத்து அதிக அளவில் உள்ளது. தூக்கமின்மையை ஏற்படுத்தக்கூடிய ஒரு ஆழ்ந்த உறக்க‍த்தில் வித படபடப்பு மற்றும் மன அமைதியின்மை போன்ற வை ஏற்படாமல் பாதுகாப் பதில் இந்த பசளிக்கீரை முக்கிய பங்கு வகிப்பதாக கூறு கிறார்கள் நிபுணர்கள்.

இவற்றுடன் தோசை, அப்பம் என்பவையும் உறக்கத்தைத் தரும் உணவுகளாகும்.

நன்றிகள்.

Sunday, 18 March 2012

வேலி.......!



ஒவ்வொருவரும் தங்களது வளவுகள், காணிகளை பாதுகாப்பதற்காகவும் அறுக்கையிடுவதற்காகவும் வேலிகளை அமைக்கின்றனர். ஏற்கனவே கல்லால் அமைக்கப்படும்.

அதைப்போலத் தான் மரக் கதியால்களை நட்டு வேலிகளை அமைக்கும் நடைமுறை இப்பவும் காணப்படுகின்றது. முள்முருக்கு, கிளுவை, சீமைக்கிளுவை, பூவரசு போன்றன பொதுவாக பாவிக்கப்படும் மரங்களாகும்.

இவை பாதுகாப்பு வேலியாக உள்ளதுடன் கால்நடைகளின் உணவாகவும், விறகுத் தேவைக்காகவும் பயன்படுகிறது. இவ்வேலியை மேலும் மறைப்பாக அமைப்பதற்கு கிடுகு, பனை ஓலை, கருக்கு மட்டை, அலம்பல் செடி போன்றவற்றைக் கொண்டு அடைக்கப்படுகின்றது.

ஒருசில இடங்களில் தகரங்களினாலும், முட்கம்பிகளாலும், மரச்சட்டங்களாலும் வேலி அடைக்கப்பட்டுள்ளது.

தற்போது சீமேந்துக் கற்களைக் கொண்டு மதில்கள் அமைக்கப்படுகின்றது. எனினும் இயற்கைச் சுவாத்தியமான வாழ்விற்கு வேலிகளை மரங்களைக் கொண்டு அமைப்பதே சிறந்தது.

நன்றிகள்.

Saturday, 17 March 2012

360 பாகையில் சுழலும் கட்டடம்......!



வித்தியாசமாக ஒரு கட்டடத்தைக் கட்டி, பிரேசில் நாட்டு நிறுவனம் ஒன்று உலகின் கவனத்தை ஈர்த்துள்ளது. Suite Vollard என்ற அந்த நிறுவனம் 360 பாகையில் சுழலும் குடியிருப்பு கட்டடத்தைக் கட்டியுள்ளது.

மொத்தம் 11 மாடிகள் கொண்ட அந்த கட்டடத்தின் ஓவ்வொரு மாடியும் 360 பாகையில் சுழலும் தன்மை கொண்டது. ஒரு சுற்று சுற்றுவதற்கு ஒரு மணி நேரம் ஆகிறது.

சுற்றும் வேகத்தை அந்தந்த மாடியில் வசிப்பவர்கள் கூட்டவோ, குறைக்கவோ முடியும். சூரிய உதயத்தையும், சூரிய மறைவையும் குடியிருப்புவாசிகள் ரசிக்கும் வகையில் கட்டடத்தின் வெளிச்சுவரில் கண்ணாடி பதிக்கப்பட்டுள்ளது.

மாடிப்பகுதி ஒன்றின் விலை என்ன தெரியுமா? அதிகமில்லை, 300,000 அமெரிக்க டாலர்கள்.

நன்றிகள்.

Friday, 16 March 2012

“சிந்திக்கும் திறன்”..............!


மேல பார்த்தீங்களே அந்த படங்கள்ல இருந்த நாம தெரிஞ்சுக்க‍ வேண்டிய என்ன‍ தெரியுமா?

அட சொல்றேங்க! இப்படி அவசரப்பட்டீங்கன்னா எப்ப‍டி?


மேலே இருக்குற விலங்குகள், பறவைகள் எல்லாம் “சிந்திக்கும் திறன்” அட அதாங்க ஆறாவது அறிவு பெற்று, மனிதனாக மாற முயற்சிக்குது.

ஆனா. . . . மனிதர்கள் . . . . .?


நன்றிகள்.

Thursday, 15 March 2012

மாதக்கணக்கில் உறங்கும் உயிர்கள்

குளிர்ப் பகுதிகளில் வசிக்கும் சிலவகை எலிகள், கரடி, நரி, 13 கோடு அணில், மீன்கள், தவளைகள் போன்றவை உறைய வைக்கும் குளிரிலிருந்து தப்பிக்க நீண்ட தூக்கத்தை எடுத்துக் கொள்கின்றன.

இதுபோல் சுட்டெரிக்கும் கோடையிலிருந்து தப்பிக்க நத்தைகள், சில மீன்கள், பாலூட்டிகள் நீண்ட கோடைத் தூக்கத்தையும் எடுத்துக் கொள்கின்றன.




குளிர்காலம் தொடங்கி வெப்பம் குறைந்ததும் குளிர்ப்பகுதியில் வாழ்கும் சில விலங்குகள் வேகமாய் மண்ணுக்கு கீழே குடில் அமைத்து தூங்கப்போய் விடும்.

குடிலுக்குள் குளிர் நுழையாமல் இருக்க வாசலில் மண்போட்டு மூடிவிடும். சரியாக பிப்ரவரி 2 ம் நாள் நீண்ட தூக்கத்தை கலைத்து வெளியே வருமாம்.

வெளியே வந்து வெளியில் தன் நிழல் தெரிகிறதா என்று பார்க்கும். நிழல் தெரிந்து விட்டால் குளிர்காலம் மாறத்தொடங்குகிறது என்று அர்த்தம்.

தூக்கத்தை கலைத்து விட்டு வெளியே வந்துவிடலாம். நிழல் தெரியவில்லை என்றால் மறுபடியும் தூங்கப்போய்விடுமாம்.

நன்றிகள்.

Wednesday, 14 March 2012

மனிதனைத் தவிர......!

ஆறறிவுடைய மனிதகுலத்தில் அருகிவருவது !












ஐந்தறிவுடைய மிருகங்களிடையே வளர்ச்சியடைந்துள்ளது.

நன்றிகள்.

Tuesday, 13 March 2012

முட்டைக்கோசின் பிறப்பிடம் எது தெரியுமா?



சத்தான காய்கறிகளில் முட்டைக்கோசும் ஒன்று. நம் நாட்டில் இரண்டு வகையான முட்டைக் கோசுக்கள் உள்ளன. 1. மஞ்சள் முட்டைக்கோசு 2. நீல முட்டைக்கோசு . உலகம் முழுவதும் 150 வகை முட்டைக்கோசுக்கள் உள்ளன.

பூக்ககோவா (காலிபிளவரும்) முட்டைக்கோசு குடும்பத்தைச் சேர்ந்ததுதானாம். ஐரோப்பாவின் தென்மேற்குப் பகுதிதான் இதன் பூர்வீகம். ஆரம்பத்தில் இது பயனற்ற காய்கறி என்றே கருதப்பட்டு வந்தது.

பின்புதான் இதன் பயன்பாட்டை அறிந்தனர். முட்டைக்கோசு வகைகளை உண்பதால் வயிற்று உறுப்புகள் நன்கு செயல்படுகின்றன. இதில் முக்கியமான தாதுப் பொருட்களும், வைட்டமின்களும் உள்ளன.

ஆனால் அதிகமாக முட்டைக்கோசை சாப்பிட்டால் தைராய்டு பாதிக்கப்படும் என்று மருத்துவர்கள் எச்சரிக்கிறார்கள்.

நன்றிகள்.

Monday, 12 March 2012

இள நங்கையும்.........நகையும்......!



Myspace Fairies jewels Gothic Angels Mermaids
































இளநங்கையால் நகைகளிற்கு அழகா...............!
பிரகாசிக்கும் நகைகளால் இளநங்கை அழகா .........!

நன்றிகள்.

இடி எவ்வாறு உருவாகிறது?



மழை பெய்யும்போது பெரும் சப்தத்துடன் இடி இடித்தால் நம்மில் பாதிபேர் ஓடிப்போய் ஒளிந்து கொள்கிறோம். அடிக்கடி இடிதாக்கி இரண்டு பேர் பலி என்ற செய்தியையும் பார்க்கிறோம். இந்த இடி எப்படி உருவாகிறது, இது யாரையெல்லாம் தாக்கும்?

மழையும், வெயிலும் இல்லாமல் குளிர்ச்சியான காற்று திடீரென பூமியில் இருந்து மேலே எழும்பும். அந்தக் காற்று ஈரமாக இருப்பதால் அது மேலே செல்வதற்கு ஒரு சக்தி வேண்டும். அந்த சக்தியை குளிர்ந்த காற்று தனக்குள் இருந்தே எடுத்துக் கொள்ளும்.

இந்த ஈரக்காற்று குளிர்ச்சி அடைந்து நீர்த்துளிகள் அதாவது மேகங்கள் உருவாகின்றன.இந்த நீர்த்துளிகள் மேலே சென்று ஏற்கனவே அங்கிருக்கும் மேகங்களுடன் உராயும்போது 6 ஆயிரம் முதல் 7 ஆயிரம் பாகை செண்டிகிரேடு வரை வெப்பம் உருவாகும்.

இந்த வெப்பத்தினால் அந்தப் பகுதி விரிவடைந்து வெளிச்சமும், சத்தமும் உருவாகிறது. ஒளியை மின்னலென்றும், ஒலியை இடியென்றும் சொல்கிறோம். மேகங்கள் வேகமாக மோதிக்கொள்ளும் போது 10 மில்லியன் கிலோவாட்ஸ் அளவுக்கு மின்சக்தி உருவாகும்.

இது நேரடியாக மனிதர்களைத் தாக்குகிறது.உயரமான கட்டிடங்கள், உயரமான மரங்கள் போன்றவை இதனால் அதிக பாதிப்புக்கு உள்ளாகின்றன. உயரமான மரங்களுக்கு கீழே ஒதுங்கி நிற்பவர்களை இடிதாக்குகின்றது.


கூட்டமாக நடந்து செல்லும்போது உயரமாக இருப்பவர்களை இடிதாக்கும் வாய்ப்பு அதிகம். திறந்த வெளியில் இருப்பவர்களையும் இடிதாக்கும் வாய்ப்பு அதிகம்.

மின்னல் சமயத்தில் மின்சாரத்தை அதிகம் பயன்படுத்தாமல் இருப்பது நல்லது. செருப்பு அணிந்த நடக்கும்போது இடிதாக்கும் வாய்ப்பு குறைவு. மழை நேரங்களில் குடைபிடிக்கும்போது அதன் பிளாஸ்டிக் கைப்பிடியை பிடிப்பதன் மூலம் இடிதாக்குவதில் இருந்து தற்காத்துக் கொள்ள முடியம்.

நன்றிகள்.

தமிழ் யுனிகோடு முறையின் முன்னோடி .........!


நா.கோவிந்தசாமி என்ற முன்னோடி -ஆல்பர்ட், அமேரிக்கா

உலகில் ஆங்கிலத்துக்கு அடுத்தபடியாக தமிழ்மொழியில் தான் அதிக அளவில் இணையத் தளங்கள். மனம் குதூகலிக்கிறது. இணையத்தில் முதலில் தமிழை வலம் வரச் செய்த பெருமை யாருக்குரியது தெரியுமா? தமிழை இணையத்தில் உதிக்க வைத்த பெருமை, சிங்கப்பூருக்குரியது. தமிழர்கள் வாழும் பல நாடுகளுக்குக் கிடைக்காத பெருமை சிங்கப்பூருக்குக் கிடைக்கக் காரணமாயிருந்தவரை இணைய உலகில் வலம் வரும் எவரும் மறந்துவிட முடியாது. அவர்- அமரர். நா.கோவிந்தசாமி!

1995ம் ஆண்டு அக்டோபர் திங்களில் சிங்கப்பூர் அதிபர் மேன்மை மிகு. ஓங் டாங் சாங் துவக்கி வைத்த Journey: Words, Home and Nation - Anthology of Singapore Poetry (1984-1995) என்கிற நான்கு தேசிய மொழிக் கவிதைகளுக்கான வலையகத்தில்தான் முதன் முதலில் தமிழ் இணையத்தில் அடி எடுத்து வைத்தது.

இந்த வலையகத்திற்கான தமிழ்ப் பகுதியை உருவாக்குவதில் பெரும்பங்காற்றியவர் அமரர் நா.கோவிந்தசாமி.நன்யான் தொழில் நுட்பக் கல்லூரியில் தமிழ்ப் பேராசிரியராகப் பணியாற்றியவர்.

தொடர்ந்து 1995 ஆம் ஆண்டு சிங்கப்பூர் அரசு அந்த நாட்டைப் பற்றிய பல தகவல்களை இணையத்தில் இடம் பெறச் செய்ய நினைத்தபோது, தமிழிலும் அவற்றை வெளியிட முடிவு செய்தது. அந்தப் பணிகளை இவரிடம் ஒப்படைத்தது. இவரும் அதைத் திறம்படச் செய்து சிங்கப்பூர் அரசின் பாராட்டுக்குரியவரானார்.

அப்பணியில் பெற்ற அனுபவத்தை, அறிவைத் தொடர்ந்து பல பணிகளைச் செய்து வந்தார். அப்படி இடம்பெற்ற தமிழ்ப் பக்கங்கள்தான் இணையத்தில் இடம்பெற்ற முதல் தமிழ்ப் பக்கங்கள். அதுதான் இந்திய மொழிகளில் இணையத்தில் இடம் பெற்ற முதல் மொழி என்ற பெருமையைத் தமிழ் பெறக் காரணமாக அமைந்தது.

1997ம் ஆண்டு இன்று இணைய மாநாடுகளுக்கு முன்னோடியத் திகழ்ந்த தமிழ்நெட்97 மாநாட்டை பெரும் முயற்சி எடுத்து சிங்கப்பூரில் நடத்தினார்.அந்த மாநாட்டில் பல நாடுகளில் தமிழ் தொடர்பான பணிகளை ஆரவாரமின்றிச் செய்துவந்தவர்களை அடையாளம் கண்டு அவர்களையெல்லாம் அழைத்துப் பங்கேற்கச் செய்தார். ஆங்காங்கே பலபிரிவுகளாக பலரும் செய்து வந்த பணிகளைப் பற்றி ஒருவருக்கொருவர்.

ஓரிடத்தில் கலந்துரையாடக் காரணமாக இருந்தார். அதன் விளைவாக உலகில் பல பகுதிகளில் பல்வேறு பணிகளுக்குக் கணினி வழித் தமிழைப் பயன்படுத்தி வந்தவர்களிடையே ஒரு ஒருங்கிணைவும், சமூக உணர்வும் ஏற்பட்டன.

தமிழ்நெட் '97 மாநாட்டின் தொடர்ச்சியாகக் கணித்தமிழ் தொழில் நுட்பப் பிரச்சினைகள் குறித்து இணையத்தில் அஞ்சல் உரையாடல் தொடங்கப்பட்டு விவாதங்கள் முன்னெடுத்துச் செல்லப்பட்டன. முரசு மென்பொருள் தயாரிப்பாளர் முத்தெழிலன், சுவிட்சர்லாந்திலிருந்து 'மதுரைத் திட்டம்' என்கிற தமிழ்.

அறிவுக்களஞ்சியத்தைத் தொகுத்த கல்யாணசுந்தரம் உட்பட பலர் இந்த விவாதங்களில் கலந்து கொண்டார்கள்.கிட்டத்தட்ட நூற்றுக்கும் மேற்பட்டவர்கள் கலந்து கொண்ட இந்த மின்னஞ்சல் உரையாடலில் அலசப்பட்ட விஷயங்களைத் தொகுத்து வெளியிட்டால் அது கண் முன் நடந்த வரலாற்றின் பதிவாக இருக்கும்.

திறமையும் எளிமையும் இணைவதை எப்போதாவதுதான் பார்க்கமுடியும். அப்படியோர் இணைவைப் பெற்றவர் அமரர் நா.கோவிந்தசாமி!மண்வாசம் - தமிழ்வாசம் நிறைந்த அவரது பண்புகளைப் பழகிய யாவரும் உணர்ந்திருக்கலாம்.

தமிழ் விசைப் பலகை (Key Board) உருவாக்கத்திலும், இணையத்தில் தமிழுக்குப் பெருமை கிடைத்ததிலும் அவருக்கு மிக முக்கியப் பங்குண்டு என்பதை எவரும் மறுத்துரைக்க இயலாது. அதற்காக அவர் இரவுபகல் பாராது கடினமாக உழைத்ததை இணைய நண்பர்கள் மிக அறிவார்கள். அந்த உழைப்பிலும், உயர்விலும் பண்புகளை இழக்காமல் தொடர்ந்து, நட்பை அகலப்படுத்திக் கொண்டு அவர் பலரிடம் பகிர்ந்து கொண்டதை அவரோடு அணுக்கமாய் இருந்தவர்கள் இன்றும் நினைவுகூர்கிறார்கள்.

தனது கண்டு பிடிப்பை, உழைப்பைப், பெயர் புகழுக்கு முன்னிறுத்தாமல் தமிழுலகத்திற்குக் கொடுத்துவிட்டு அடுத்தடுத்த கட்டங்களுக்கு பயணிப்பதிலேயே குறியாக இருந்தவர் அமரர் கோவிந்தசாமி.

தமிழ்நெட் 97ன் வளர்ச்சிதான் சென்னையில் நடைபெற்ற 'தமிழ் இணையம் 99' என்ற இணைய மாநாடு.அந்த மாநாட்டில் சிங்கப்பூரின் பிரதிநிதியாகப் பங்கேற்றுப் பல அரிய கருத்துகளை வழங்கினார் நா.கோவிந்தசாமி.

கணியன் என்ற எழுத்துருவைத்தான் முதன் முதலில் அமரர் 'நாகோ' அறிமுகப்படுத்தினார். அதே பெயரில் "கணியன்" என்ற இணைய இதழையும் இணையத்தில் உலவ விட்டு அதன் மூலம் இணைய நண்பர்களை ஈர்த்தார்.

நன்யான் தொழில் நுட்பப் பல்கலைக் கழகத்தில் தமிழ்ப் பேராசிரியராகப் பணியாற்றிய இவர் தனது பெரும் நேரத்தைக் கணிப்பொறி, இணையம், .தமிழ் இலக்கியம் என்றுழைத்துப் பல பெருமைகளைத் தமிழுக்குத் தேடித் தந்தார்.

1965லிருந்து சிறுகதைகள் எழுதிய இவர், 1977ல் இலக்கியவட்டம் என்ற அமைப்பை ஏற்படுத்தி மிகச் சிறந்த கதைகள் எவை என்ற அலசல் ஆய்வின் மூலம் சேகரித்த கதைகளை 1981ல் அதைத் தொகுப்பாக வெளியிட்டார். அவரின் உள்ளொளி என்ற சிறுகதைத் தொகுப்பும் வேள்வி என்ற நாவலும் அவர் தமிழ் இலக்கியத்துக்கு விட்டுச் சென்ற அழியாச் சொத்துக்களாகும். கவிதைகளில் நாட்டம் கொண்ட இவர் கவிதைகளும் எழுதுவதில் வல்லவராக இருந்தார்.

இன்றைக்கு ஒருங்குறி எழுத்து குறித்துப் பேசிக்கொண்டிருக்கிறோம்; ஆனால் அன்றைக்கே அது குறித்து சிந்தித்தவர் கோவிந்தசாமி. சென்னையில் நடைபெற்ற இணைய மாநாட்டில் அன்றைய முதல்வர் கலைஞர் கருணாநிதி அவர்களிடம் ஒருங்குறி முறையை வலியுறுத்தினார். 16பிட் யுனிகோடு முறையை எப்படிப் பயன்படுத்தினால் நன்மைபயக்கும் என்ற ஆய்வில் ஈடுபட்டிருந்தார்.

ஒரு தகவலைத் தமிழில் பதிவு செய்ய விதவிதமான விசைப் பலகைகள் (Key Board). குறிப்பிட்ட மென்பொருளில் (Software) சிறிது காலம் பழகிய நண்பர் புதிய விசைப் பலகையில் தடவிக் கொண்டிருப்பது பரிதாபமான காட்சி. 'அ' என நினைத்து அடித்தால் 'ய' வரும்.( இந்தப் பரிதாபம் ஆங்கில மொழிக்கு இருக்கிறதா? எட்டு நுணுக்குகள் (8 Bits) கணனி முறையில் 256 முகவரிகள் (Points) உள்ளன. இவற்றில் ஒவ்வொரு point - லும் இன்னின்ன எழுத்து என்று முடிவு செய்து இருக்கிறார்கள். அதைத்தான் உலகம் முழுவதும் பயன்படுத்துகிறார்கள்.எனவே, ஆங்கில மொழிக்கு இல்லை இப்பிரச்சினை. நாம் பலவிதக் குறிய்யிடுகளையும் எழுத்துருக்களையும் வைத்துக் கொண்டு திணறிக் கொண்டிருக்கிறோம். தமிழிலேயே மின் அஞ்சல் அனுப்ப முடியும். ஆனால் எப்படிப் படிப்பது? உலகத் தமிழர்கள் உலகத் தமிழிணையப் பல்கலைக் கழக பக்கங்களைத் தமிழில் படிக்க வேண்டுமானால் அதற்கு ஒரு எழுத்துருவை இறக்கிப் படிக்க வேண்டும்!).

இதற்கு ஒருங்குறி முறைதான் தீர்வாக அமையும் என்று எண்ணி அது குறித்து ச்஢ந்தனையிலிருந்தார் நாகோ. அவர் கவனம் அதிலிருந்த நேரத்தில் காலம் அவரை நம்மிடமிருந்து பிரித்துச் சென்றுவிட்டது. 1999ம் ஆண்டு மே 26ம் தேதி தமது 52வது அகவையில் மறைந்தார். அது இணைய உலகிற்கு பெரும் இழப்பு.

ஏழாம் தமிழிணைய மாநாடு சிங்கப்பூரில் கூடும் இந்த நேரத்தில் முதல் மாநாடு சிங்கப்பூரில் நடைபெறவும், தமிழ் இணையத்தில் இடம் பெற சிங்கப்பூரைக் களனாகக் கொண்டு பணியாற்றவும் செய்த தமிழறிஞர் நா.கோவிந்தசாமியை நினைவு கூர்வது இணையத் தமிழர்கள் அனைவருடைய கடமை.

"தமிழன் இல்லாத நாடில்லை: தமிழனுக்கு என்று ஒரு நாடில்லை.." என்ற www.tamilnation.org - தமிழ் தேசியத்தின் தாரக மந்திரத்தை இந்த சந் தர்ப்பத்தில் நினைவுகூர்தல் பொருத்தம் என்று, கணியன் நம்புகிறது.

தமிழனுக்கு என்று நாடு கிடைப்பது, மற்றவர்களோடு போராடிப் பெறுவது, கல்வி நிலையில் தமிழுக்கு ஓர் உன்னதம் கிடைப்பது, ஆட்சியில் அமர்ந்துள்ள தமிழனைப் பொருத்தது. ஆட்சியில் அமர்ந்துள்ள தமிழன் மனது வைத்தால், தமிழ் உன்னதத்தை அடையும்."

நன்றிகள்.

Sunday, 11 March 2012

16 சிறப்புக்கள் .......!

நம் தாய்த்தமிழிடம் பிறமொழிகளிடம் இல்லாத தனிச்சிறப்புகளும் பெருமைகளும் எண்ணற்றவை இருப்பதாக மொழிப் பேராசிரியர்கள் மொழிவர்.

பிற நாட்டாரும் தமிழின் தனித்தியங்கும் தன்மைகண்டு வியப்பர். தமிழின் சொந்தங்களாகிய நாம்தான் சீரிளமைத் தமிழின் சிறப்பினை உணராமல் இருக்கிறோம்.

மொழிஞாயிறு தேவநேயப் பாவணர் இதோ செம்மொழியாம் நம் மொழியின் 16 சிறப்புகளைப் பட்டியலிடுகிறார் படியுங்கள்.

தொன்மை - பழமைச் சிறப்பு
முன்மை - முன்தோன்றிய சிறப்பு
எண்மை - எளிமைச் சிறப்பு
ஒண்மை - ஒளியார்ந்த சிறப்பு
இளமை - மூவாச் சிறப்பு
வளமை - சொல்வளச் சிறப்பு
தாய்மை - சில மொழிகளை ஈன்ற சிறப்பு
தூய்மை - கலப்புறாச் சிறப்பு
செம்மை - செழுமைச் சிறப்பு
மும்மை - முப்பிரிவாம் தன்மைச் சிறப்பு
இனிமை - இனிய சொற்களின் சிறப்பு
தனிமை - தனித்தியங்கும் சிறப்பு
பெருமை - பெருமிதச் சிறப்பு
திருமை - செழிப்பார்ந்த சிறப்பு
இயன்மை - இயற்கைச் சிரிப்பு
வியன்மை - வியப்புச் சிறப்பு

முதலிய 16 பேறுகளைப் பெற்ற நம் தமிழுக்குப் பெருவாழ்வு கிடைக்கப் பாடுபடுவோம்! -

நன்றிகள்.

Saturday, 10 March 2012

பெண்ணால் .............!


நன்றிகள்.

குழந்தைகளிடம் அன்பைச் செலுத்துங்கள் !


நல்ல விடயம் தான். ஆனால், சிரித்த முகம் காட்டி, செல்லமாய் கொஞ்சி, ஆதரவாய் அணைத்து துயில் எழுப்பும் அம்மா... கடவுளுக்கும் மேலானவர். குழந்தைகள் அம்மாவைத் தான் அதிகம் விரும்புகின்றனர். அவர்களின் விருப்பத்திற்குரிய அம்மாவாக, இருக்கிறோமா...

என்பதை, நாமே கேட்டுக் கொள்ள வேண்டியது தான்.பாலகனாய் இருக்கும் வரை பாசம் காட்டுகிறோம். பாடசாளைக்குத் தேவையானவற்றையும், படிப்புக்கு முக்கியத்துவம் கொடுத்து, பாசத்தை ஒதுக்கி விடுகிறோம்.

குழந்தைகளின் சின்னஞ்சிறு உலகத்திற்குள் எத்தனை போராட்டங்கள்... புத்தக சுமை, பாடச்சுமை, மதிப்பெண் சுமை, சகமாணவர்களுடன் ஒப்பீட்டு சுமை...
இதிலிருந்து மீள்வதற்கு, பள்ளிகளோ, பெற்றோர்களோ கற்றுத் தருவதில்லை. குழந்தைகளின் உலகத்தை புரிந்து கொள்ள.இன்றிலிருந்து முயற்சி செய்வோம்.

 படிப்பின் முக்கியத்துவத்தை மென்மையாக உணர்த்த வேண்டும்..

காலையில் குழந்தைகளை எழுப்புவது முதல், இரவில் தூங்கச் செய்வது வரை, அன்பான, ஆதரவான, அரவணைப்பைத் தரும் பெற்றோர்களாக இருக்க வேண்டும்.

சோகமோ, இன்பமோ, காதலோ... எதுவாக இருந்தாலும், குழந்தைகள் முதலில் பெற்றோர்களிடம் தான் பகிர்ந்து கொள்ள வேண்டும். அதற்கேற்ப, பெற்றோர்களும் பிள்ளைகளிடம் மனம் விட்டு பேச வேண்டும்.

இருவர் வேலைக்குச் செல்லும் இடங்களில், வீட்டுக்கு வந்தால் கூட அலுவலகத்தை பற்றியே பேசுவர். பிள்ளைகள் பேச வந்தால் தடுத்துவிடுவர்.

வீட்டுக்கு வந்தால், அலுவலக சிந்தனைகளை தூக்கி எறியுங்கள். எவ்வளவு பெரிய பதவியில் இருந்தாலும், உங்கள் பிள்ளைக்கு, சாதாரண அம்மா தான்.

ஒரு அம்மாவாக, அன்பு காட்டுங்கள். காலை எழுப்பும் போது, மென்மையான சொல்லை கையாள வேண்டும். மென்மையாக அணைத்து முத்தமிட்டால், குழந்தையின் உலகம் இனிமையாகி விடும்.

அந்த இனிமையை அனுபவிக்க விடுங்கள். படிப்பு மட்டுமே குழந்தைகளின் உலகமல்ல... ஓடியாடி உற்சாகப்படுவது தான் அவர்களது வாழ்க்கை.

பள்ளிகளில் நூறு சதவீத தேர்ச்சி என்பது, ஆசிரியர்களின் இலக்காக இருக்கலாம். அதற்காக மதிப்பெண் பெறவைக்கும் இயந்திரமாக, மாணவர்களை நினைக்கக்கூடாது.

வாழ்க்கைக் கல்வியை முதலில் கற்றுக் கொடுங்கள். ஆசிரியர்கள் பாடம் நடத்தும் விதத்தில் தான், மாணவர்களின் ஆர்வம் மாறுபடும். சிறுகதை, பாடல், எளிய செய்முறைகளுடன் பாடம் நடத்தினால், ஈடுபாட்டுடன் படிப்பர்.

கடனுக்காக, பாடத்தை நடத்தி முடிப்பதை விட, ஈடுபாடு, ஆர்வம், கடமை உணர்வுடன் பாடம் நடத்தினால், பள்ளிப்பருவம் கசக்காது.

அத்துடன் வகுப்பு ஆசிரியரும், பெற்றோரும், மாணவருமாக தனித்து தனித்து ஒவ்வொரு மாணவரிற்குமாக வருடத்திற்கு குறைந்தது நான்கு தடவையாவது மேற்கொண்டு மாணவர்களின் பாடங்களின், ஒழுக்கத்தினதும் நிலையை நன்கு கலந்துரையாடுவதால்.

அவரவர் பிள்ளைகளை எப்படியான ஊக்குவிப்பு கொடுக்கவேண்டுமேன்பதை இலகுவகாக புரிந்து அதற்கேற்ப நடவடிக்கைகள் எடுக்கலாம். பெற்றோரும், ஆசிரியரும் இணைந்து தான், இளைய சமுதாயத்தை இனிமையாக்க முடியும்.

நன்றிகள்.

Friday, 9 March 2012

உடலில் உள்ள ஏழு சக்கரங்களும் ................!


spiritual healing spiritual awakening


நன்றிகள் .

தமிழனின் சாதனை ...............!

அப்படி என்னதான் சாதனை செய்துவிட்டார் இந்தத் தமிழர்? கே.ஆர்.சிறீதர்




காரணம், சிறீதர் கண்டுபிடித்த தொழில்நுட்பம் சுற்றுச்சூழலுக்கு உகந்தது. பொதுவாக மின் உற்பத்தி செய்யும்போது சுற்றுச்சூழல் பிரச்னைகள் நிறையவே எழும். அது நீர் மின் உற்பத்தியாக இருந்தாலும் சரி, அனல் மின் உற்பத்தியாக இருந்தாலும் சரி. எனவே சுற்றுச்சூழலுக்கு எந்த வகையிலும் பங்கம் வராத மின் உற்பத்தித் தொழில்நுட்பத்துக்கு மிகப் பெரிய வரவேற்பு இருக்கும் என்று நினைத்தார் அவர்.

தவிர, இவரின் தொழில்நுட்பத்தைக் கொண்டு குறைவான செலவில் மின்சாரம் தயார் செய்ய முடியும். இந்த பெட்டியில் (box) உருவாகும் மின்சாரம் குறைந்த தூரத்திலேயே பயன்படுவதால் மின் இழப்பு என்கிற பேச்சுக்கே இடமில்லை. இது மாதிரி பல நல்ல விசயங்கள் இவரின் கண்டுபிடிப்பில் இருப்பதை உணர்ந்ததால் அவர் அவ்வளவுபெரிய தொகையை முதலீடு செய்தார்.

நல்லவேளையாக, ஜான் டூயரின் எதிர்பார்ப்பு பொய்க்கவில்லை. கிட்டத்தட்ட எட்டு ஆண்டுகள் கடினமாக பலரும் உழைத்ததன் விளைவு இன்று 'நீலப் பெட்டி'(blue box) என்கிற மின்சாரம் தயாரிக்கும் நீலப்பெட்டி தயார் செய்துள்ளார்.

சுமார் 10 முதல் 12 அடி உயரமுள்ள இரும்புப் பெட்டிதான் சிறீதர் உருவாக்கியுள்ள இயந்திரம். இதற்கு உள்ளே ஒட்சிசனையும் இயற்கை எரிவாயுவையும் செலுத்தினால் அடுத்த நிமிடம் உங்களுக்குத் தேவையான மின்சாரம் தயார். இயற்கை எரிவாயுவுக்குப் பதிலாக மாட்டுச்சாண வாயுவையும் செலுத்தலாம். அல்லது சூரிய ஒளியைக் கூட பயன்படுத்தலாமாம். இந்த நீலப்பெட்டிகளை கட்டடத்துக்குள்ளும் வைத்துக் கொள்ளலாம். வெட்ட வெளியிலும் வைத்துக் கொள்ளலாம் என்பது சிறப்பான விடயம்.

உலகம் முழுக்க 2.5 இலட்சம் கோடி (பில்லியன்) மக்கள் மின் இணைப்புப் பெறாமல் இருக்கிறார்கள் ஆப்பிரிக்காவில் ஏதோ ஒரு காட்டில் இருக்கும் கிராம மக்களுக்கு மின்சாரம் கொடுத்தால், அதனால் அரசாங்கத்துக்கு எந்த லாபமும் இல்லை என்பதால் அவர்கள் மின் இணைப்புக் கொடுப்பதில்லை. கிராமத்தை விட்டு வந்தால் மட்டுமே பொருளாதார ரீதியில் முன்னேற முடியும் என்கிற நிலை அந்த கிராம மக்களுக்கு. ஆனால் இந்த 'நீலப்பெட்டி' மட்டும் இருந்தால் உலகத்தின் எந்த மூலையிலும் மின்சாரம் தயார் செய்யலாம்'' என்கிறார் சிறீதர்.

ஒரு 'நீலப்பெட்டி' உங்களிடம் இருந்தால் இரண்டு வீடுகளுக்குத் தேவையான மின்சாரம் கிடைத்துவிடும்.

இதே நீலப்பெட்டி இந்தியாவில் இருந்தால் நான்கு முதல் ஆறு வீடுகளுக்குத் தேவையான மின்சாரம் கிடைத்துவிடும். அமெரிக்க வீடுகளில் அதிக மின்சாரம் பயன்படுத்தப்படுவதே அங்கு வீடுகளின் எண்ணிக்கை குறையக் காரணம்.

இன்றைய தேதியில் அமெரிக்காவின் 20 பெரிய நிறுவனங்கள் சிறீதரின் தொழில்நுட்பத்தை பயன்படுத்தி மின்சாரம் தயார் செய்கின்றன. கூகுள் நிறுவனம்தான் முதன் முதலாக இந்தத் தொழில்நுட்பத்தை வாங்குவதற்கான ஒப்பந்தத்தில் (கான்ட்ராக்ட்டில்) கையெழுத்திட்டது. 'நீலப்பெட்டி' மூலம் கூகுள் உற்பத்தி செய்யும் 400 கிலோ வாட் மின்சாரமும் அதன் ஒரு பிரிவுக்கே சரியாகப் போகிறது. வால் மார்ட் நிறுவனமும் 400 கிலோ வாட் மின்சாரம் தயாரிக்கும் நீலப்பட்டியை வாங்கி இருக்கிறது. இப்போது Fedex, E bay, கோக்கா கோலா, அடோப் சிஸ்டம், சான் பிரான்சிஸ்கோ விமான நிலையம் போன்ற பல நிறுவனங்களும் இந்த புதிய தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தி மின்சாரம் தயார் செய்கின்றன.

100 கிலோ வாட் மின்சாரம் தயார் செய்யும் ஒரு நீலப்பெட்டியின் விலை 7 முதல் 8 லட்சம் டாலர்! அட, அவ்வளவு பணம் கொடுத்து வாங்க வேண்டுமா? என நீங்கள் நினைக்கலாம். ஆனால் இந்தத் தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தும் E bay நிறுவனம் கடந்த ஆண்டு சிறீதரிடமிருந்து ஐந்துநீலப்பெட்டிகளை வாங்கியது. தனக்குத் தேவையான 500 கிலோ வாட் மின்சாரத்தை இந்த நீலப்பெட்டியின் மூலமே தயார் செய்துவிடுகிறது. இந்த நீலப்பெட்டிகளை வாங்கிய ஒன்பதே மாதத்துக்குள் 1 லட்சம் டாலர் வரை மின் கட்டணத்தை சேமித்திருக்கிறதாம் E bay. இன்னும் ஐந்து முதல் பத்து ஆண்டுகளில் அமெரிக்காவின் பல வீடுகளில் இந்த 'நீலப்பெட்டி' இருக்கும்.

சாதாரண மனிதர்களும் இந்த நீலப்பெட்டியை வாங்கி பயன்படுத்துகிற அளவுக்கு அதன் விலை 3,000 டாலருக்குள் இருக்கும்'' என்கிறார் சிறீதர். அந்த அளவுக்கு விலை குறையுமா என்று கேட்டால், ஒரு காலத்தில் லட்சத்தில் விற்ற கணனிகள் (கம்ப்யூட்டர்) இன்று ஆயிரங்களுக்குள் கிடைக்கிறதே என்கிறார்கள் சிறீதரின் ஆதரவாளர்கள்.

சிறீதரின் இந்த தொழில்நுட்பம் எதிர்காலத்தில் நிரந்திர இடத்தை பிடிக்கும் (நிஜமாகும்) பட்சத்தில் உலகம் முழுக்க மக்கள் அந்தத் தமிழரின் பெயரை உச்சரிப்பார்கள் என்பதில் சந்தேகமில்லை.


நன்றிகள்.

அவளின் ....கண்கள்.....

நன்றிகள்.

Thursday, 8 March 2012

தலைமுடியின் ஆயுள்........!



தினசரி நம்முடைய தலையிலிருந்து கொட்டுகிற முடியின் எண்ணிக்கை 50 லிருந்து நூறு வரை. ஒரு தலைமுடியின் ஆயுள் சராசரியாக 36 மாதங்கள். ஒரு வருடத்திற்கு ஆறு அங்குலம் என்ற கணக்கில் தலைமுடி வளர்கிறது.




தலைமுடி உதிர்வதற்கு எத்தனையோ காரணங்கள் இருந்தாலும் ஊட்டச்சத்து குறைவு தான் முக்கியக்காரணம். இதற்கு வைட்டமின் மாத்திரைகளை விழுங்குவதற்கு பதிலாக உணவில் தினமும் கறிவேப்பிலை சேர்த்துக் கொண்டாலே சரியாகி விடும் என்கிறார்கள் சித்த மருத்துவர்கள்.


நன்றிகள்.