Saturday, 3 March 2012

அன்பின் தூய்மை ..........!


அன்பு என்பது தூய்மையானது
அன்பு என்பது வாய்மையானது
அன்பு உருவத்தில் தாய்மையானது
அன்பு எளிமையில் சேய்மையானது

அன்பு என்றுமே நேர்மையானது
அன்பு என்றுமே அளவில்லாதது
அன்பு என்றுமே அழிவில்லாதது
அன்பு என்றுமே பெருமை தருவது

அன்பு என்றுமே அடக்கமானது
அன்பு என்றுமே பணிந்து போவது
அன்பு என்றுமே உயர்ந்து நிற்பது
அன்பு என்றுமே நிலைத்து நிற்பது

அன்பு என்றுமே பேதம் பாராதது
அன்பு உன்னிலே கசிந்து நிற்பது
அன்பு உருகியே உயிரில் கலப்பது
அன்பைக் காட்டினால் பேருவகையாவது

அன்பு கொண்டாரிடம் உண்மையானது
அன்பு இல்லாரிடம் புன்மையானது
அன்பு தவறாமல் உறவைக் சேர்க்குமே
அன்பு எந்நாளும் வெறுமை போக்குமே

அன்பு என்றுமே மனதில் விளைந்திடும்
அன்பு என்றுமே கண்ணில் நிறைந்திடும்
அன்பு தேடியே உயிர்கள் அலைந்திடும்
அன்பு உள்ளதால் உள்ளம் இணைந்திடும்

அன்பு மனமுருகினால் அது பக்தியாகுமே
அன்பு மனமிரங்கினால் அது கருணையாகுமே
அன்பு மனமிணைந்தால் அது காதலாகுமே
அன்பு மனமகிழ்ந்தால் உயிரை வாழவைக்குமே

அன்பு வடிவிலே உன் அம்மா இருப்பாளே
அன்பைக் கொட்டியே உன்னை வளர்ப்பாளே
அன்பு இல்லாத இந்த வறண்ட உலகையும்
அன்பைப் பெருக்கியே செழிக்க வைப்பாளே

அன்பு இருப்பதாய்க் கல்லைக் கண்டாலும்
அன்பு பெருக்கெடுத்து கண்ணீர் வடிப்பாயே
அன்பின் உருவிலே இறைவன் வருவானே
அன்பின் விளக்கமாய் எங்கும் நிறைவானே

நன்றிகள் தமிழ்நண்பர்களிற்கு