கோரை, அறுகம்புல், வெங்காயம், வெள்ளைப்பூண்டு போன்றவற்றை பூண்டு என்னும் சொல் குறிக்கும்; என்றாலும் சிறப்பு வகையால் வெள்ளைப் பூண்டை மட்டுமே குறிக்கும்.
வெங்காயம் ஒரே மையத்தில் உரியும் அடுக்குத்தோல் கொண்ட கிழங்குவகை.பூண்டு பல பல்லடுக்குக் கொண்டது. இந்தப் பல பல்லடுக்குகள் ஓரிரு அடுக்குத் தோலால் மூடப்பட்டிருக்கும். வெங்காயத்தை ஈரவெங்காயம் என்றும், பூண்டை வெள்ளை-வெங்காயம் என்றும் சில வட்டாரங்களில் வழங்குவர்.
மலைப்பூண்டுப் பல் பெரிதாக இருக்கும். நாட்டுப்பூண்டுப் பல் சிறிதாக இருக்கும். உணவில் பூண்டைச் சேர்த்துகொள்வதால் உணவுக்கூழ் வயிற்றில் எளிதாகக் கரையும். இதனால் வயிற்றுப்பொருமல் நீங்கும்.
நோய் தடுப்பு மண்டலத்திற்கு உறு துணையாகிறது. புற்று நோயையும் மற்ற நோய் தொற்றுகளையும் எதிர்க்க உடவுகிறது. வெள்ளணுத்திறனின் செயல் பாடுகளை அதிகரிக்கச் செய்கிறது.
ஊளைச் சதையைக் கரைக்கும். தண்டுவட உறையழற்சிக்கும் சிறந்த மருந்தாகிறது. இரத்த அழுத்தத்தைக் குறைக்கிறது. நீரழிவைக் குணப்படுத்தவும் உதவுகிறது. மாதவிடாய்க் கோளாறுக்கும் மருந்தாகும்.
வெள்ளைப்பூண்டை உணவில் அதிகம் சேர்ப்பவர்களுக்கு மலேரியா நோய் வராது. பூண்டை அடிக்கடி உணவில் சேர்த்து வந்தால் உடலில் தேவையற்று சேரும் கொழுப்பு குறையும்.
உடல் கொழுப்பின் அளவை கட்டுப்பாட்டுக்குள் இருக்க, தினமும் காலையில் 4 வெள்ளைப்பூண்டுத் துண்டுகளை சாப்பிடுவது நல்லது. வலிப்பு வருகிற குழந்தைகளுக்கும், இருமல், சளி தொந்தரவு இருப்பவர்களுக்கும் பூண்டு சாறு கொடுத்துவர மெல்ல மெல்ல குணம் பெறலாம்.
இரைப்பு, இருமல், வயிற்றில் பூச்சி இருப்பவர்களுக்கு பூண்டு சாறுகளை சில துளிகள் உள்ளுக்குள் சாப்பிட கொடுக்க எளிதில் குணம் கிடைக்கும். உள் நாக்கு வளர்ந்திருப்பவர்கள், அந்த வளர்ந்த உள்நாக்கு சதை வளர்ச்சியின் மீது பூண்டுசாறினை தடவி வர நல்ல குணம் கிடைக்கும்.
பூண்டை பாலில் வேகவைத்து சாப்பிட உடல் கொழுப்பு குறையும். ரத்தக்கொதிப்பு, மனஅழுத்தம் போன்ற பாதிப்பு உள்ளவர்களுக்கு பூண்டு நல்ல மருந்து.
பூண்டில் பலவித சத்துக்கள் இருந்தாலும் அதிகமாக இருப்பது கால்சியம்தான். எனவே பூண்டை அதிகமாக சமையலில் பயன்படுத்துவதன் முலமாக நாம் நமது எலும்பிற்கு வருகின்ற பாதிப்புகளில் இருந்து தப்பித்துக் கொள்ளலாம்.
வெள்ளைப்பூண்டின் மாபெரும் சிறப்பு நோய்க்கிருமிகளை உடனுக்குடன் அழிப்பது. 400 விதமான இரசாயனப் பொருட்கள் வெள்ளைப்பூண்டில் கலந்திருப்பதாக ஜீன் கார்பெட் என்பவர் கூறுகிறார். இவர் எழுதிய ‘முதுமை அடைவதை இப்போதே நிறுத்துங்கள்’ என்ற நூலில் இந்த 400 இரசாயனப் பொருட்களில் பெரும்பாலானவை உடல் திசுக்களைக் கெட்டுப் போகாமல் பாதுகாப்பாக வைத்து உடலை இளமைத் துடிப்புடன் கட்டுக்கோப்பாக வைத்துக்கொள்ள உதவும் ஆன்டி ஆக்ஸிடென்டுகள் என்கிறார்.
ஆயுர்வேத மருத்துவத்தில் முடி நன்கு வளரவும், வெண்புள்ளிகள் மறையவும் தினமும் வெள்ளைப் பூண்டு சாப்பிடச் சொல்கின்றனர்.
பாக்டீரியாக்களை அழிக்கவல்ல பெனிசிலின் அல்லது ‘டெட்டிராசிலின்’ ஆகிய மருந்துகளில் சக்தி வாய்ந்த, பூண்டில் உள்ள ‘அலிசின்’ என்ற பொருள் உள்ளது.
காசநோய், டைபாயிட் முதலிய நோய்களின் கிருமிகளை அலிசின் அறவே ஒழித்துவிடுகிறது. மீண்டும் இளமையைப் புதுப்பித்துத் தருவதில் வெள்ளைப்பூண்டு சிறந்து விளங்குகிறது.
இரத்தத்தில் உள்ள நோய் நுண்ம நச்சூட்டுப் பொருள்களை வெளித்தள்ளி விடுகிறது. இரத்தத்திற்கு மீண்டும் வீரியம் ஊட்டி, இரத்த ஓட்டத்தை நன்கு செயல்பட வைக்கிறது. உடலின் வெப்பநிலையையும் தொடர்ந்து சீராக வைத்திருக்கிறது.
இதனால் வயதானவர்கள் உடல் மற்றும் உள்ள ரீதியாகத் தினமும் இளமைத் துடிப்புடன் செயல்பட வைக்கிறது. ஐந்து பூண்டுப் பற்களை எண்ணெயில் வதக்கி தினமும் சாப்பிட்டு வருவது நல்லது.
சமையலில் அதிகம் சேர்க்கவும். மூன்று பூண்டுப் பற்களைப் பாலில் காய்ச்சி அருந்திவிட்டு இரவில் படுப்பது நல்லது. பூண்டில் உள்ள சல்ஃபர் உப்பு ஆரோக்கியமான தோல், முடி, நகங்கள் பெற உதவுகிறது. உடலில் உள்ள குப்பைகளையும் விசமான பொருட்களையும் உடனே வெளியேற்ற உதவுகிறது. தோல் சுத்தமாக, பளபளப்பாக, ஒளிரும் விதத்தில் பாதுகாக்கிறது.
அதற்காக B காம்ப்ளக்ஸ் வைட்டமின்களுடன் இணைந்து தோலை மிகவும் ஆரோக்கியமாகப் பராமரிக்கிறது. கல்லீரலின் பணிகளும் ஒழுங்குப்படுத்தப்படுகிறது. சல்ஃபர் உப்பைப்போலவே அயோடின் உப்பும் பூண்டில் அதிகம் உள்ளது.
தைராய்டு சுரப்பியில்தான் அயோடின் உப்பு சேமிப்பாக உள்ளது. இதிலிருந்து தைராக்ஸின் சுரக்கிறது. அயோடின் உப்பு குறைந்தால் ‘தைராக்ஸின்’ சுரப்பது குறையும்.
வளர்சிதை மாற்றத்திலும் திசுக்கள் ஒட்சிசனை உபயோகித்துக் கொள்வதிலும் தைராக்ஸின்தான் கட்டுப்படுத்தி ஒழுங்குபடுத்துகிறது. இதனால் இதயம் சீராகத் துடிக்கிறது. சிறுநீர் மூலம் கால்சிய உப்புக்கள் வெளியேறவும் உதவி செய்கிறது.
எல்லாவற்றிற்கும் மேலாக மூளையை விழிப்புடன் வைத்துக் கொள்ள உதவுகிறது. எனவே, தினமும் 5 பூண்டுப் பற்களாவது சாப்பிடுங்கள். மீன், முட்டை போன்றவைகூட சாப்பிடாத சைவ உணவுக்காரர்களுக்கு இந்த அயோடின் உப்பு வெள்ளைப்பூண்டு மூலம்தான் நன்கு உடலுக்குக் கிடைக்கும்.
உயர் ரத்த அழுத்தம் உள்ளவர்கள் உணவில் வெள்ளைப்பூண்டு சேர்த்துக்கொண்டால் அதனை கட்டுபடுத்தலாம் என ஆய்வில் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. ஆஸ்திரேலியாவில் அடிலெய்டு பல்கலை. பேராசிரியர் டாக்டர் கரீன்ரீட் கூறுகையில், உயர் ரத்த அழுத்தம் உள்ள 50 பேரிடம் தொடர்ச்சியாக 12 வாரங்கள் ,நன்கு சமைத்த வெள்øப்பூண்டு, அல்லது. வெள்ளைப்பூண்டு பவுடரினையும் கொடுத்து ஆய்வு மேற்கொண்டதில் அவர்களின் ரத்த அழுத்தம் 10.2 மி.மி ஹெச்ஜி அளவுக்கு குறைந்துள்ளதாக கூறியுள்ளார்.
மேலும் இதயம் சம்பந்தமான நோய்களும் 8 முதல் 20 சதவீதம் குறைந்துள்ளதாகவும் தனது ஆராய்ச்சியில் கூறியுள்ளார். வெள்ளைப்பூண்டு அபூர்வ மருத்துவ சக்தி படைத்தது ஆங்கிலத்தில் இதற்கு கார்லிக் என்று பெயர். இதற்கு வெங்காயத்தைப் பார்க்கிலும் காரமதிகம் நீலகிரி பூண்டு மிகவும் பெயர் பெற்றது.
மருத்துவ குணங்கள்
1)வெள்ளைப் பூண்டு ஒரு சிறந்த கிருமி நாசினி.
2)நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும்.
3)வெள்ளைப்பூண்டு + மிளகு சேர்த்தரைத்து சாப்பிட வயிற்றுப்பிசம் தீரும்.
4)வெள்ளைப்பூண்டை அரைத்து கட்டிக்கு போட கட்டி உடையும்.
5)பூண்டில் இரண்டு வித முக்கிய சத்துக்கள் அடங்கி உள்ளன. ஒன்று Sulphur மற்றொன்று Sulphur of Alley இந்த சத்துக்கள் இருப்பதால் வெள்ளைப்பூண்டானது வியர்வையை பெருக்கும்.
6) உடற்சக்தியை அதிகப்படுத்தும், சிறுநீர் தாராளமாக பிரிய வகை செய்யும், சிறுநீர்ப்பை, ஈரல், ஆகியவற்றின் வேலையைத் தூண்டி விடும்.
7)இருமல், இரைப்பு, வயிற்றுப்புழுவை நீக்கும்.
8)வெள்ளைப்பூண்டு சாற்றைக் காதில்விட காது பிரச்சனை தீரும்.
9)தாய்ப்பலை அதிகரிக்கும், சளியைக் கரைத்து சுவாசத் தடையை நீக்கும் சீரண சக்தியை அதிகரிக்கும்.
10)உடல் பருமன், மூக்கடைப்பு, பீனிச தொல்லைகள் நீக்கும்.
11)Cholosterol-ஐ கட்டுப்படுத்தும்.
12)மூட்டுவலி, முடக்குவாதம், ஆகியவற்றை குறைக்கும்.
13)பூண்டு + நெய் + சர்க்கரை சேர்த்து பிசைந்து உண்ண சீதக்கழிச்சல் தீரும்.
14)நல்லெண்ணெய்யில் பூண்டைக் காய்ச்சி காது நோய்க்கு விடலாம்.
15) .பூண்டுப்பால் உரித்த பூண்டு 15 பற்கள் பால் 1/4 லிட்டர் பாலில் பூண்டை வேகவைத்து, இரவு உணவிற்கு பிறகு உண்ணலாம். வாயு நீங்கும், கபம் கரையும் Eosinophilia, BP நீங்கும்.
16. பூண்டானது இருதய இரத்தக்குழாய்களில் கொழுப்பு படிவதைத் தடுக்கிறது.
17. இரைப்பை புற்று நோயை வளரவிடாமல் முளையிலேயே கிள்ளி எறியக்கூடியது. வெள்ளைப்பூண்டு.
18. புற்றை உண்டாக்கும் Nitrosamines என்ற பொருளை உடலில் உற்பத்தியாக விடாமல் பூண்டு தடுத்து உதவுகிறது. புற்று நோயை எதிர்க்கும் சக்தியும் உடலில் உருவாகிறது.
19. காளான் வகை தொற்று நோய்களான Candida Albicans ஐ வளர விடாமல் தடுக்கிறது.
20. பூண்டுப்பால் + மஞ்சள் பொடி சேர்த்து கலந்து அருந்தும்போது Tropical Eosinophilia போன்ற ஈளை, இரைப்பு நோய்கள் கட்டுப்பட்டு குணமடைகிறது.
21. 10 கிராம் உரித்த வெள்ளைப் பூண்டை பாலில் வேக வைத்துக் கடைந்து சாப்பிட வாயு, செரியாமை, சளி ஆகியவை தீரும். குடல் புழுக்கள் மடியும்.
22. பூண்டை இழைத்துப் பருக்கட்டிகளில் பூச அவை உடைத்துக் கொள்ளும். வெள்ளைப் பூண்டின் சாற்றில் நவச்சாரத்தைக் குழைத்து வெண்மேகத்தில் தடவி வர வெண்ணிறம் மாறி இயல்பு நிறமாகும்.
23. வண்டு, குளவி, பூச்சி ஆகியவை கடித்த இடத்தில் வெள்ளைப் பூண்டை அரைத்துக் கட்டி எரிச்சல் தாங்க முடியாத நிலையில் எடுத்து விட நஞ்சு அகலும்.
நன்றிகள்.