Monday, 12 March 2012

இடி எவ்வாறு உருவாகிறது?



மழை பெய்யும்போது பெரும் சப்தத்துடன் இடி இடித்தால் நம்மில் பாதிபேர் ஓடிப்போய் ஒளிந்து கொள்கிறோம். அடிக்கடி இடிதாக்கி இரண்டு பேர் பலி என்ற செய்தியையும் பார்க்கிறோம். இந்த இடி எப்படி உருவாகிறது, இது யாரையெல்லாம் தாக்கும்?

மழையும், வெயிலும் இல்லாமல் குளிர்ச்சியான காற்று திடீரென பூமியில் இருந்து மேலே எழும்பும். அந்தக் காற்று ஈரமாக இருப்பதால் அது மேலே செல்வதற்கு ஒரு சக்தி வேண்டும். அந்த சக்தியை குளிர்ந்த காற்று தனக்குள் இருந்தே எடுத்துக் கொள்ளும்.

இந்த ஈரக்காற்று குளிர்ச்சி அடைந்து நீர்த்துளிகள் அதாவது மேகங்கள் உருவாகின்றன.இந்த நீர்த்துளிகள் மேலே சென்று ஏற்கனவே அங்கிருக்கும் மேகங்களுடன் உராயும்போது 6 ஆயிரம் முதல் 7 ஆயிரம் பாகை செண்டிகிரேடு வரை வெப்பம் உருவாகும்.

இந்த வெப்பத்தினால் அந்தப் பகுதி விரிவடைந்து வெளிச்சமும், சத்தமும் உருவாகிறது. ஒளியை மின்னலென்றும், ஒலியை இடியென்றும் சொல்கிறோம். மேகங்கள் வேகமாக மோதிக்கொள்ளும் போது 10 மில்லியன் கிலோவாட்ஸ் அளவுக்கு மின்சக்தி உருவாகும்.

இது நேரடியாக மனிதர்களைத் தாக்குகிறது.உயரமான கட்டிடங்கள், உயரமான மரங்கள் போன்றவை இதனால் அதிக பாதிப்புக்கு உள்ளாகின்றன. உயரமான மரங்களுக்கு கீழே ஒதுங்கி நிற்பவர்களை இடிதாக்குகின்றது.


கூட்டமாக நடந்து செல்லும்போது உயரமாக இருப்பவர்களை இடிதாக்கும் வாய்ப்பு அதிகம். திறந்த வெளியில் இருப்பவர்களையும் இடிதாக்கும் வாய்ப்பு அதிகம்.

மின்னல் சமயத்தில் மின்சாரத்தை அதிகம் பயன்படுத்தாமல் இருப்பது நல்லது. செருப்பு அணிந்த நடக்கும்போது இடிதாக்கும் வாய்ப்பு குறைவு. மழை நேரங்களில் குடைபிடிக்கும்போது அதன் பிளாஸ்டிக் கைப்பிடியை பிடிப்பதன் மூலம் இடிதாக்குவதில் இருந்து தற்காத்துக் கொள்ள முடியம்.

நன்றிகள்.