நம் அனைவருக்கும் தமிழ் தெரியும். ஆனால் எத்தனை பேருக்கு அதன் அர்த்தம் தெரியும்...? தெரிந்து கொள்ளுங்கள் நண்பர்களே...!
தமிழ் என்பது த்-அ-ம்-இ-ழ் என்னும் ஐந்து அலகு நிலையுடையது.
அ - அகண்டாகார சித்தை விளக்கும் ஓங்கார பஞ்சாக்கரத்துள் பதி நிலையக்கரமாகும்.
இ - பதியைவிட்டு விலகாத சித்தை விளக்கும் வியவகாரத்தால் அனந்தாகார வியச்(ஷ்)டி பேதங்காட்டும் சீ(ஜீ)வ சித்த கலையக்கரமாம்.
பதி சிதாத்ம கலைகளுக்காதாரமாகி உயிரினுக்கு உடலையொத்துக் குறிக்கப்படும் த்-ம்-ழ் எழுத்துக்களுக்கு உரை.
த் - ஏழாவது மெய். அறிவின் எல்லையைக் குறிக்கும்.
ம் - பத்தாவது மெய். ஞானத்தின் படியைக் குறிக்கும்.
ழ் - பதினைந்தாவது இயற்கையுண்மைச் சிற்ப்பியல் அக்கரம்.
நம் பிரபஞ்சத்தைக் குறிக்கும்.
சம்பு பச(க்ஷ)த்தால் அனாதியாய் - சித்த சித்தாந்த ஆரிச(ஷ) நீதிப்படி கடவுள் அருளாணையால் கற்பிக்கப்பட்டதும்,எப்பாசை(ஷை)களுக்கும் பிதுர் (தந்தை) பாசை(ஷை)யென்று ஆன்றோர்களால் கொண்டாடப்பட்டதும்,
இனிமையென்று நிறுத்தம் சிந்திக்கப் பெற்றுள்ளதுமான தமிழ் தான் இயற்கையான சிறப்பியல் மொழியாகும்.
இவ்வாறு இராமலிங்க அடியகளார் கூறுவதைப் போல் சுருக்கமாகச் சொல்வதானால் "தமிழ் மொழியே அதி சுலபமாக சுத்த சிவானு பூதியைக் கொடுக்க வல்லது".
தமிழ் என்பதன் உண்மை விளக்கம் : தம் + இல் - அதாவது நம்மில் உள்ள இறைவனை அறிய உதவுவது. இறைவனை எளிதில் அடைய உதவும் மொழி தமிழ்.
நன்றிகள்.