Thursday, 1 March 2012

இனிய தமிழில்.........!




தமிழா! தமிழா! பேசுவது தமிழா!
பழக்கம் வழக்கம் மாற்றுவது தமிழா!
தமிழன் வாயாலே கக்குவது எல்லாமே
உலக மொழிகளின் கலவையா தமிழா!
தலையை நிமிர்த்தித் தமிழனென்று மிடுக்கோடு நடைபோட
பேசுந்தமிழில் இருந்து பிறமொழிகளை நீக்கிவிடு தமிழா!
ஒருவரைச் சந்திக்கும்போது வணக்கம் என்றும்
விடைபெறும்போது சென்றுவருகிறேன் என்று சொல் தமிழா!
இணையென்றும் வேடிக்கையென்றும் எடுத்துச் சொல் தமிழா!
திரையிசைப்பாடல்களில் வேற்றுமொழிக்கலப்பு எதற்கு!




தமிழ் நிகழ்ச்சிகளில் தூயதமிழ் கையாள்தல் வேண்டுமா!
தமிழிலே வேறுமொழிகலந்து சொல்ல வேண்டாமப்பா...
அவற்றை அடுப்படி, கழிப்பறை, கலகம், தீர்வுகாணென
செந்தமிழில் எடுத்தாளப் பழகிவிடு தமிழா!
பிறமொழிச் சொல்களை மறக்காமல் அடைப்புக்குள் எழுதிவிடு
தூயதமிழில் தெளிவுபெறும் வரையாவது எம்மக்கள் புரிந்திடவே!
தமிழைத் தமிழாகவே பேச்சிலெடு தமிழா...
கல் தோன்றி மண் தோன்றாக் காலத்து மூத்த தமிழ்
இனிய தமிழ் இனி என்றும் மங்காதெனப் பேணுவோம் வா!




நன்றிகள் தமிழ்நண்பர்களிற்கு.