10,000 ஆண்டு கடிகாரம்
மனித குலத்தின் இறந்த கால, நிகழ்கால மற்றும் எதிர்காலத்தினை பறைசாற்றும் வண்ணம், நீண்ட இப்போது அறக்கட்டளை (the Long Now Foundation) ஆல் கலை, விஞ்ஞான மற்றும் தொழில்நுட்ப கலைஞர்களின் உழைப்பின் சங்கமிப்பில் ஒரு பல ஆயிரம் ஆண்டுகளுக்கு இயந்திர நினைவுச்சின்னம் (A multimillennial mechanical monument )எனப்படும் ஓர் 10,000 ஆண்டு கடிகாரம் வடிவமைக்க திட்டமிடப்பட்டுள்ளது.
Danny Hillis என்ற கணிப்பொறி விஞ்ஞானியின் மிக நீண்ட கால சிந்தனையோட்டத்தில் உருவாகிக் கொண்டிருப்பதே 10,000 ஆண்டு கடிகாரம். இத்திட்டமானது 1997ல் ஆரம்பிக்கப்பட்டு, மிகுந்த கால அளவை உள்வாங்கி உருவாக்கப்படுகின்றது. அதிக படியான காலப் பயன்பாடானது இத்தகைய ஒரு திட்டத்தில் சிறந்த சிந்தனைகள் உருவாக வழிவகுக்கும் என்பது இத்திட்டத்தில் வேலைசெய்யும் அனைத்து விட்பனர்களதும் கருத்தாகும்.
தன்னுடைய சொந்த சக்தியிலேயே இயங்கப்போகும் இக்கடிகாரம் கலை, விஞ்ஞான மற்றும் பொறியியற்றுறையிலே மிகச் சிறந்த எடுத்துக்காட்டாகும். ஆறு கடிகார முகங்களைக் கொண்ட இக் கடிகாரம், ஆண்டு, நூற்றாண்டு, சந்திர நிலை (lunar phase), தொடுவானம் (horizons) மற்றும் இரவு வானின் நட்ச்சத்திரங்கள் என்பவற்றை 10 000 ஆண்டுகளுக்கு காண்பிக்கும்.
இதன் சிக்கலான வடிவமைப்புக்கேற்ப, இதனை அழகாக கட்டடக் கலை அம்சத்துடன் செதுக்கி, பல தலைமுறைகள், பரிணாமங்கள் தாண்டி நிலைத்து நிற்கும் கலைநயம் படைத்த சின்னமாக அமைக்கப்பட்டுக்கொண்டிருக்கின்றது.
நன்கு அடர்த்தியான, மிகவும் கடினமான தங்குதன் (Tungsten) உலேகத்தினால் ஆன 22 பவுண் அளவுள்ள சிறிய கோளமே இதில் பெண்டுலங்களாக பயன்படுத்தப்பட இருக்கின்றது. இதன் மிகை அடர்த்தி காரணமாக மிகச் சிறிய இடத்தில் அதிக அளவு பாரத்தை அடக்கிவிட முடிவதால், சக்தி விரயத்தையும் காற்றினால் ஏற்படுத்ப்படும் திசைமாற்றத்தையும் கூடுமானவரை கட்டுப்படுத்த முடியும். மற்றைய உலோகங்களில் வெப்பமாற்றம், நீராவி மற்றும் காற்றழுத்தம் என்பவற்றால் ஏற்படும் நிமிட வேறுபாடு கூட இக் கடிகாரத்தில் தங்குதன் (Tungsten) பயன்படுத்துவதால் தவிர்க்கப்படுகின்றது.
26 நகரும் நெம்புகோல்களை (movable bit levers) கொண்ட கடிகாரம் ஈரியல் எண்குறியியலைப்(binary notation) பயன்படுத்தி பெண்டுலத்தின் ஒவ்வொரு இயக்கத்தையும் கடிகாரத்தில் அசைவாக மாற்றுகின்றது. இன்னும் இக்கடிகார திட்டத்தின் முடிவுத்திகதி அறிவிக்கப்படாத நிலையில், இலண்டனில் உள்ள விஞ்ஞான அருங்காட்சியகத்தில் இதன் மூல-முன்மாதிரி (prototype) காட்சிக்கு வைக்கப்பட்டுள்ளது.
இதில் பயன்படுத்தப்படும் பிட் தொடர் அரைக்கூட்டிமுறைமை (bit serial adder system) கணிப்பொறியைப் போன்று மிகவும் துல்லியமாகவும் குறைந்த உராய்வினையும் ஏற்படுத்துவதால் கடிகாரத்தின் நீண்ட ஆயுற்காலத்துக்கு பயன்படுகின்றது.
முன்நோக்கு நெறிமுறை (progressive algorithm) பயன்படுத்தப்படுவதால், கடிகாரத்தின் மையப்பகுதியில் காணப்படும் நட்ச்சத்திர வடிவ தட்டுகள் (ஜெனீவா சக்கரங்கள் - Geneva Wheels) முன்னோக்கி சுழன்று 10 000 ஆண்டுகளும், ஒவ்வொரு நாளும் வித்தியாசமான ஒலியினை எழுப்பிக்கொண்டிருக்கும்.
இதில் உள்ள கடத்தியில் சூரிய ஒளி படுவதன் மூலம், சூரிய ஒத்தியக்கி( solar synchronizer) கடிகாரத்தில் ஏற்படும் நிமிட வேறுபாடுகளையும் சீராக்கி, பெண்டுலத்தை சரிசெய்கின்றது.
இது இக் கடிகாரத்தின் ஓர் மாதிரி வடிவம். இதைபோன்ற ஆனால் 60 அடி உயரமான கடிகாரமே உண்மையான திட்டத்தின் நோக்கமாகும்.
அனைத்தும் திட்டமிட்டபடி நடந்து முடிந்தால் ஒலி எழுப்பியின் மூலம் எழுப்பபடும் ஒலியானது சுமார் 75 மைல் தூரத்துக்கு கேட்டும் என கூறப்படுகின்றது.
நன்றிகள்.