சாக்கடலில் ஒருவர் தற்கொலை செய்து கொள்ள முடியாது. அக்கடலில் விழுபவர் மிதப்பார். அக்கடலில் விழுபவர்கள் மிதந்த படி பத்திரிகை கூட படிக்கலாம்.
உண்மையில் அது சாகமுடியாத கடல். சாக்கடல் நீரில் தாங்க முடியாத உப்புக்கள் உள்ளன. இதனால் நீரின் அடர்த்தி அதிகம். ஆகவே தான் அந்த கடலில் மிதக்க முடிகிறது.
உப்புகளின் அளவு அதிகம் என்பதால் சாக்கடலில் மீன், நண்டு, ஆமை போன்று எவ்வித உயிரினமும் கிடையாது. எனவேதான் அக்கடலுக்கு அப்பெயர்.
சாக்கடலில் அடியில் நுண்ணூயிர் இருப்பதாக அண்மையில்
கண்டுபிடிக்கபட்டது.யேர்மனி மற்றும் இசுரேல் சேர்ந்த இரண்டு நிபுணர்கள் சாக்கடலுக்கல் ஆராய்ந்த போதுதான் நுண்ணூயிர்கள் இருப்பது கண்டுபிடிக்கபட்டது.
அது மட்டுமன்றி சாக்கடலுக்குள் அடியில் நீரூற்றுகள் இருப்பதையும் கண்டுபிடித்துள்ளனர். அது உப்பற்ற நல்ல நீராக உள்ளதாம்.
சாக்கடலின் நீரின் சேற்றுகளில் விசேச மருத்துவ குணங்கள் இருப்பதாக நம்பப்படுகிறது. இச்சேறு சொரியசிசு(ஸ்) உட்பட சில தோல் கோளாறுகளை குணப்படுத்துவதாகக்
கருதப்படுகிறது.
சாக்கடல் யோ(ஜோ)ர்டான், இசுரேல் , பாலசு(ஸ்)தீனம் ஆகியவற்றுக்கு நடுவே நான்கு புறம் நிலத்தால் சுழப்பட்டுள்ளது.
சுமார் 60 ஆண்டுகளுக்கு முன்னர் பாசனதுக்காகவும் குடிநீர் தேவைக்காகவும் நதி மீது யோர்டானும் , இசுரேலும் பல அணை திட்டங்க்களை
மேற்கொண்டன.
சாக்கடலின் நீலம் 67 கிலோ மீட்டர் , அகலம் 18 கிலோ மீட்டர். அதிகபட்ச ஆழம் 370 மீட்டர்.
நன்றிகள்.