டால்பின் (Dolphin) தமிழில் ஓங்கில் அல்லது கடற்பன்றி ஆங்கிலத்தில் (Dolphin) டால்பின் என்பது நீரில் வாழும் ஒரு பாலூட்டி ஆகும்.
இவை திமிங்கலங்களுக்கு நெருக்கமான இனத்தைச் சேர்ந்தவை. பதினேழு வகையான பேரினங்களில் சுமார் நாற்பது வகையான ஓங்கில் இனங்கள்உள்ளன.
ஓங்கில்களின் உடல் திமிங்கலம் போல் இழைவரிவமுடையது. வால் துடுப்பு குறுக்கு நிலையில் தட்டையானது. அதன் நுனி கூர்மையாய் விளிம்பில் சுழியுடையதாய் இருக்கின்றது.
ஓங்கில்கள் 1.2 மீட்டரில் இருந்து 9.5 மீட்டர் நீளம் வரை உள்ளன. இவை 40 கிலோகிராம் எடையில் இருந்து 10 டன் எடை வரை உள்ளன.
ஓங்கில்கள் ஊனுண்ணிகள் ஆகும். இவைமீன்களை உணவாகக் கொள்கின்றன. பொதுவாக இவை 20 ஆண்டுகள் வரை உயிர் வாழ்கின்றன.
இவை உலகம் முழுவதும் காணப்படுகின்றன. சிறப்பாக கண்டத் திட்டுக்களின் ஆழம் குறைந்த கடல் பகுதியில் இவற்றைக் காணலாம்.
ஓங்கில்கள் அறிவுக் கூர்மை வாய்ந்த விலங்குகளில் ஒன்றாகும். இவை மனிதர்களுடன் நன்கு பழகுகின்றன 2007ஆம் ஆண்டு ஐக்கிய நாடுகள் அவையினால் பன்னாட்டு ஓங்கில் (டால்பின்) ஆண்டாக அறிவிக்கப் பட்டுள்ளது.
ஒவ்வொரு ஓங்கிலும் தனித்துவமான சீட்டி (சீழ்க்கை) ஒலியை எழுப்புகின்றன. இவை மனிதர்களின் கை இரேகையைப் போல் ஒவ்வொரு டால்பினுக்கும் தனித்தன்மையானவை ஆகும்.
நன்றிகள்.