Monday, 8 October 2012

இணைய உலக வரலாறு....................!

1957 இல் ரசியா "Sputnik" என்ற செயற்கை கோள் அனுப்பி வெற்றி கொண்டபின் அமேரிக்கா போட்டா போட்டியாக (பனிப் போர்) ஒரு இராணுவ ஆராச்சி மையத்தை ஆரம்பித்தனர் (ARPANET).

இந்த அமைப்பானது பல்வேறுபட்ட இராணுவ ஆய்வின் ஓர் அங்கமாக 1962-1969 இடைப்ட்ட கால பகுதியில் கண்டுபடிக் கப்பட்டது தான் இணைய தொழில் நுட்பமாகும்.

இந்த கண்டுபிடிப்பானது தகவல் தொழில் நுட்பத்தில் பெரும் புரட்சி மட்டுமல்லாமல் தனிமனித வாழ்வியலையே ஒரு மிக பெரிய மாற்றத்துக்குள் ஆக்கிரமித்துக் கொண்டு வருகின்றது.

இணையம் பல பரிமானங்களில் பரிணாமம் அடைந்த வரலாற்றை பல நூறு பக்கங்களில் சொல்லும் அளவில் அதன் சாதனை விரிந்துள்ளது.

இருந்த போதிலும் இந்த தகவல் தொழில் நுட்பத்தின் எதிர்கால வளர்ச்சி அல்லது வீழ்ச்சி என்பது எதிர்வு கூறமுடியாத போதிலும் இதுவரை காலமும் கடந்து வந்த பாதையை மிக சுருக்கமாக ஆண்டு ரீதியாக குறிப்பிடத்தக்க சில வரலாற்று நிகழ்வுகளுடன் கீழே பார்ப்போம்.

"இணைய உலக வரலாறு"

1969 இல் இரு கணனிகளுக்கிடையில் உள்நுழைவு ("log-in") என்ற சொல்லே முதலில் அனுப்பி பரீட்சிக்கப்பட்ட செய்தியாகும்.

1971 முதலில் 23 இணைய இணைப்பு மூலமாக மிக பிரபல்யமான பல்கலைக்களகங்களை இணைத்தனர்.

1972 பொதுமக்களுக்காக முதல் முறையாக இந்த தொடர்பு சாதனம் இயக்கி காட்டப்பட்டது. இதே ஆண்டு இங்கிலாந்தைச் சேர்ந்த விஞ்ஞானி முதலாவது மின்னஞ்சலை (e-mail) ஐ @ உடன் வடிவமைத்து வெற்றி கொண்டார்.

1973 ARPANET ஆனது DARPA என பெயர் மாற்றம் செய்ததோடு இணையம் பற்றிய பலரது கருதுகோள்கள் உயிரூட்டம் பெற்றது. இணைய தொடர்புகளுக்கான நியம கடைப்பிடிப்புக்கள் உருப்பெற்றன(TCP/IP).

1974 இணைப்புகள் 100 எண்ணிக்கையாக அதிகரித்தது.

1976 இல் முதலாவது மின்-அஞ்சல் (e-mail) பிரித்தானிய மகாராணியினால் அனுபப்பட்டது மட்டுமல்லாமல் இவரே முதலில் மின்னஞ்சல் (e-mail) அனுப்பிய அரச தலைவருமாவர்.

1982 முதல் முதலாக இணையம் ("internet") சொற்பிரயோகம் பிறந்ததுடன் டொற் (.) என்ற குறியீடு இணைக்கதொடங்கப்பட்ட வருடம்.

1984 இணையதள பெயர் பதிவு முறை (DNS) தொங்கியதுடன் 1000 இணைப்புக்களை எட்டிப்பிடித்தது.

1985 AOL, .com, .edu, .gov உதயம்.

1986 வலை (.net) அறிமுகம்.

1987 .org இணைய சுட்டி இணைப்பி அறிவிப்புடன் 28,000 இணைப்புகளுடன் பயணம் தொடர்ந்த ஆண்டு.

1988 இணைய சந்திப்பு (chat) உருப்பெற்றதோடு கணனிகளில் இணைய வழி வைரஸ் தாக்கமுடன் 60,000 இணைப்புக்களை தாண்டியது.

1989 இணைப்புக்களை 100,000 மேல் சென்ற நிலையில் world.std.com உதயம். Tim Berners-lee தனது இணைய ஆராச்சியின் விளைவாக கணனிகள் பேசும் இணைய மொழியை (HTML) வெளியிட்டதுமல்லாமல் WWW ஐயும் நிறுவினார். 

1990 இல் world.std.com தனது (dial-up) சேவை மூலமாக உலகின் முதல் வர்த்தக நோக்கிலான இனைய இணைப்பு தொடங்கியதோடு 300 ஆயிரம் இணைப்புகள் உலகளவில் இருப்பது கணக்கிடப்பட்டது.

1991 சர்வதேச வலைப்பின்னல் குறியீடு " w w w" நடைமுறைக்கு வந்த ஆண்டாகியது.

1992 இணைய சமூக அமைப்பு (ISOC) உருவாக்கத்துடன் ஒரு மில்லியன் பாவனையாளர்களை உலகளவில் இணைய சேவை பெற்றது பதிவானது.

1993 இணைய வானொலி, இணையத்ள பேசுமொழி பரிமாற்ரி அமுலாக்கி (http) அறிமுகத்தோடு mosaic உதயம்.

1994 இணையம் பிறந்து 25 வருடம் பூர்த்தி கொண்டாட்டம்,அத்துடன் இணைய உலகின் பிரபல்யமான yahoo, amazon, w3c, netscape அவதரிப்போடு 6 மில்லியன் பாவனையாளர்களை உலகளவில் இணைய சேவை பெற்றது பதிவானது.

1995 புகழ்பெற்ற கணனி இணைய இயக்கிகள் Internet Explorar, Mozilla வருகை. இணையவர்த்தகத்தில் அழியா புகழ் பெற்ற e-bay(இன்று வரை 223 மில்லியன் மேலான பதிவு செய்யப்பட்ட பாவனையாளர்கள்.) வெளியானதோடு java, java script அறிமுகமானது. இவற்றோடு Alta Vista, mp3 என பல புரட்சி வருகை கண்ட வருடம்.

1996 இணைய தொலைபேசி, இணைய தொலைக்காட்சி,இணைய உலகில் தகவல் பெற என்றும் தட்டப்படும் wiki, Alexa என்பவற்றின் வருகை. tv.com விற்க்கப்பட்டது ($15,000). இணைய உலகில் 1.7 மில்லியன் பாவனையாளர்களை உலகளவில் இணைய சேவை பெற்றது பதிவானது.

1997 தொடுப்பில்லா தொடர்பு (WAP) அறிமுகம். Business.com விலைபோனது ($150,000). இந்த ஆண்டு 19.5 மில்லியன் இணைப்புக்களை எட்டிப்பிடித்தது. Netscape மிகவும் குறைந்த விலையில் dmoz.org ஐ கொள்முதல் ($ஒரு மில்லியன்) செய்தனர்.

1998 மேலும் பல சாதனை கண்ட வருடமாக Google வருகையுடன் Netscape ஐ AOL மிகமிகப்பெரிய விலைக்கும் ($4.2 பில்லியன்கள் மில்லியன் அல்ல) Compaq நிறுவனம் AltaVista ஐயும் ($3.3 மில்லியன்) கொள்முதல் செய்தன.

1999 இந்த ஆண்டில் my space, paypal இவற்றின் வருகையுடன் "blog" என்ற சொற்பிரயோகம் நடைமுறைக்கு வந்தது. Alexa ஐ தனக்கு சொந்தமாக்க Amazone $250 மில்லியன்களை கொடுத்தது.

2000 சட்டவிரோத இணைய உடைப்பு கும்பல்களின் ஆதிக்கத்திற்குள் உலக இணையத்தளம் சிக்கிய வருடமாகியது (hack of the year). AOL $16 பில்லியன்களை கொடுத்து Time warner ஐ சொந்தமாக்கியது.

2001 மின் அஞ்சல்கள் வைரஸ் தாக்கத்திற்குட்பட்ட பிரபல்யமான ஆண்டானதுடன்(virus of the year) .biz, .info அறிமுகமானது. இது மட்டுமல்லாமல் கட்டற்ற கலைக்களஞ்சியமான wikipedia பிறந்ததும் இந்த ஆண்டில் தான்.

2002 உலகளாவிய இணைய பாவனையாளர் எண்ணிக்கை 544.2 மில்லியன்களை தாண்டியது. RSS, podcast, blog வருகையுடன் .name, .coop அறிமுகமானது.

2003 மேலும் இணையதள பெயர்களின் இணைப்பு சுட்டியான .pro உடன் iTune அறிமுகமானது.இந்த ஆண்டிலேயே பிரபல்யமான உரிமை மீறல் aol-microsoft தீர்ப்பானது. AOL இற்கு $750 மில்லியன் நஸ்டஈடா கொடுத்ததுடன் netscape இன் வீழ்ச்சிக்கான சூழ்ச்சி செய்த வருடம் இதுதான்.

2004 கணனி இணைய இயக்கி FireFox இன் வருகையும் பிரபல்யமான Facebook இணையத்தின் அறிமுகமும் நிகழ்ந்த வருடம். இணைய தளமூடான வர்த்தக வருவாய் $117 பில்லியங்களையும் தாண்டியது.

2005 இணைய உலகின் பெயர்பெற்ற video தளம் YouTube உருவானது.

2006 Google தனது இணைய ஆக்கிரமிப்பு போட்டியில் $1.65 பில்லியன்களை கொடுத்து YouTube ஐ சொந்தமாக்கியது. இணைய உலகத்தில் 92 மில்லியனுக்கு மேலான இணையதளங்கள் வலம் வந்தன.

2007 Facebook இற்கும் Microsoft இற்கும் இடையில் கூட்டு ஒப்பந்தம் கைச்சானது. இணையத்தில் web 2.0 தொழில்நுட்பம் அறிமுகம் , iPhone விற்பனைக்கு வந்தது. 

2008 Yahoo இற்கு Microsoft கொடுக்க சம்மதித்த 44.6 பில்லியன் டொலர் தோல்வியானது. உலக இணையத்தில் Facebook இல் பதிவுசெய்யப்பட்ட அங்கத்தவர் தொகை 100 மில்லியனை தாண்டியது. Chrome பிறப்பும் Netscape இறப்பும் நிகழ்ந்த ஆண்டாகியது.

2009 அண்மையில் எடுக்கப்பட்ட கணக்கெடுப்புகளின் படி உலக இணையதள பாவனையாளர்களின் எண்ணிக்கை 1,596,270,108 ஐயும் தாண்டி சாதனை தொடர்கிறது.

1.97 பில்லியன் - இணைய பயனர்களையும் தாண்டி உலகளவில் 2010 ஆண்டில்.

360,985,492 இணைய பயனார்களையும் தாண்டி உலகளவில் 2011 ஆண்டில்.


(கூடுதலானவரை தமிழாக்கம் செய்யப்பப்பட்டுள்ளது.)
நன்றிகள்.