Thursday, 4 October 2012

அரசியல் சொற் பதங்கள்...................!

உலக நாடுகளின் அரசியல் கொள்கைகளும் முறைகளும்.
(உலக அரசியல் செய்திகளில் பாவிக்கப்படும் சொற் பதங்கள்.)

தாராண்மை வாதம் (liberalism )

தனிநபர்,அவர் சார்ந்த கலாச்சரம், நம்பிக்கை இவற்றின் மீது சாதகமான முடிவகளை எடுத்தல்.

சமதர்மம் (socialism)

அரசியல், பொருளாதார தத்துவார்த்த முறைமை. இதன் மையக் கருத்துப்படி உற்பத்தி, பங்கீடு, பரிமாற்றம் இவற்றின் சொந்தக் காரர்களக முழு சமூகமும் ஒத்து செயற்படும் அதே வேளை இவற்றை அரசாங்கம் ஒன்று நெறிப் படுத்தும் முறைமை சமதர்மம் எனப்படும்.

முதலாளித்துவம் (capitalism)

இது (முதலாளித்துவம் ) சோசியலிஸம் அமைப்பில் இருந்து சற்று வித்தியாசமானது. இங்கு சமூகத்திற்குப் பதிலாக தனி நபர் நலன் சார்ந்ததாக (தனியர் மயப்பட்ட) ஒவ்வொரு முடிவுகளும் இருக்கும்.

பொதுவுடைமை (communism)

சமூக வர்க்கத்தின் (வகுப்புக்களின்) கூட்டான கட்டமைப்பு. இங்கு தனியார் அல்லது அரசுத்தலைவர் என்ற பேச்சுக்கு இடமில்லை. இங்கு அனைத்து சொத்துக்களும் பொது சொத்து என்பதாக இருக்கும்.

மார்க்சியம் (marxism)

இதனை ஒரு இயக்கமாக கொள்ளலாம். அதாவது காஃர்ல் மாஃர்க்ஸ் (Karl Marx 1818-1893 ) இன் அடிப்படை தத்துவார்த்த கொள்கையை அப்படியே முன்னெடுப்பதாகும். காஃர்ல் மாஃர்க் அவர்கள் பொதுவுடைமை தந்தையாகவும் போற்றப்படுகின்றார்.

கொடுந்தேசிய வாதம் (fascism)

இது ராணுவ பலத்தில் நம்பிக்கை வைத்திருக்கும் ஒரு அரசினால் நாட்டின் நலன் கருதி நடாத்தப்படும் தீவிர ஆட்சி அமைப்பு. இங்கு அரசு மகளை ராணுவ பலத்தினால் அடக்கி ஒரு சர்வாதிகார ஆக்கிரமிப்பு செய்வதாக இருக்கும். 

கொடும்பேரினவாதம் (nazism)

ஒரு இனம் நலன் மட்டும் கொண்ட கடுமையான இனவாத அமைப்பு. இது பாசிஸம் அமைப்பை தழுவியதாகவும் உள்ளது.

யூத எதிர்ப்பு (anti-Semitism)

யூத இனத்திற்கு எதிரானது எனும் அர்த்தம் கொண்டது. இன்றும் பல நாடுகளின் ஆட்சியாளர்,மக்கள் "யூத எதிர்ப்பு" கொள்கையை கடைப்பிடிக்கின்றனர் (முன்பு ஜேர்மன்-இப்போது ஈரான்).

பழமைவாதி (conservative)

பழைமை அல்லது பாரம்பரியத்தினை கட்டி காப்பதாகும்.

பழமைநெறிவாதம் (fundamentalism)

என்பது (அடிபடைவாதம்) ஒரு மதத்தி மதவாத கொள்கைகளை கடுமையாக கடைப்பிடிப்பது.

இடது சாரி (left-wing)

புரட்சி கரமான மாறுதல்களை அல்லது மறுமலட்சிகளை உருவாக்குதல். இது மேல் சொல்லப்ப்ட்ட லிபரலிஸம் சார்ந்ததாக இருக்கும். இங்கு அதிகாரப்பரவு (அதிகார பகிர்வு) எப்போதும் பேசப்படும்.

வலது சாரி ( right-wing)

இங்கு கொன்சவேட்டிவ் உயிர் மூச்சாகும். அத்துடன் அனைத்து அதிகாரமும் மத்தியில் மையப் பட்டிருக்கும்.

மேலும், கடுமையான இடது சாரி கொள்கை பொதுவுதமை தோன்ற வழி சமைக்கும். கடுமையான வலது சாரி கொள்கை கொடுந்தேசிய வாதம்  தோன்ற வழி சமைக்கும். (பொதுவுடமை கொள்கையாக அறிவிக்கப்பட்ட நாடுகளான சீனா, கியூபா, வட கொரியா, வியட்நாம், லாவோசு ஆகியவை எல்லாம் சர்வாதிகார அல்லது ஒரு கட்சி ஆட்சி நடைபெறும் நாடுகள் ஆகும்).

நன்றிகள்.