Wednesday, 18 January 2012

என்ன தான்........



உன்னைக் காணும் போதெல்லாம் கர்வப் படச்செய்யும்
அந்த கண்களில் என்ன தான் ஒளித்துவைத்திருக்கிறாய்...
பட்டாம்பூச்சியாய் படபடக்கிறது
என் கண்கள் உன் விழிகண்டு..



















உன் பார்வை தீண்டும ஒவ்வொரு
நிமிடத்திலும் பலவாறாய் எனக்குள் நீ...
சிலநேரப் பார்வை அரவணைப்பாய்,
சிலநேரப் பார்வை கதகதப்பாய்..





















சிலநேரப் பார்வை குறுகுறுப்பாய்...
சிலநேரப் பார்வை கண்டிப்பாய்...
என பலவாறு என்னை மயக்கியும்,
கடத்தியும்,
















கட்டளையிட்டும்,
காதலிட்டும் பாடாய்படுத்தும்
அந்த பார்வைக்குள் என்ன (னைத்) தான்
ஒழித்து வைத்திருகிறாய் சொல்.






நன்றிகள்