உங்கள்ளில் பேய்கள நம்புவர்கள் எத்தனை பேர் இருக்கீங்கள் ? இக்காலத்தில் நிறையப் பேர் பேய்களை நம்புவதில்லை... ஒரு சிலபேர்தான் அதில் நம்பிக்கை இருக்கிறது.
விஞ்ஞான வளர்ச்சி அப்படி.என்றால் உண்மை என்ன தெரியுமா ?
பேய்கள் இருக்கு... இருக்கும்.. இருந்துகிட்டே இருக்கும். நீங்க நம்பி தான் ஆகணும். நம்ம கூடவே அதுவும் வாழ்ந்துகொண்டிருக்கு. மனிதர்கள் இருக்கிற வரை பேய்களும் இருக்கும்.இந்த பேய் ஆசை என்ற பெயரில் மனிதர்களுக்கு இடையில் வாழ்ந்துகொண்டிருக்கு...
ஒவ்வொரு மனிதனுக்குள்ளும் பல பேய்கள்குடியிருக்கு... இந்த பண்டோரா பாக்ஸ் கத தெரிஞ்சவுங்களுக்கு இதுபுரியும். ஆசை மட்டுமே பல வேடங்கள் போட்டு மனிதக்கொடுமை படுத்திகிட்டிருக்கு.
சாப்பாடு இல்லாதவன் சாப்பாட்டுக்குஆசை படலாம். உறங்க ஒரு இடமும் இல்லாதவன் இடத்துக்குஆசை படலாம். இது மாதிரியே உடுக்க உடை, கற்க கல்வி, அன்புக்குஒரு குடும்பம், படித்த படிப்பிற்கு ஒரு வேலை...இவ்வளவு தானேங்க ஒருத்தனுக்கு வேணும்.
ஆனா அப்படியா ஆசைப்படுகிறார்கள் என்ன கொடுமை இது..? மேல் சொன்ன எல்லாமே இருந்தும் இந்த உலகத்தில் நிறைய பேரை ஆசை பேய்கள் கூடி அடித்துக் கொண்டிருக்கிறது. யாராவது கவனித்தீர்களா?
ஆடம்பரமானவாழ்கை, பெரிய பதவி, அரண்மனை போன்ற வீடு, விலை உயர்ந்தஉடைகள்... கட்டின மனைவிய விட (மகள் வயதில்) அழகானபெண்... பெற்ற பிள்ளைகளை கூட விட்டு வைப்பதில்லை இவர்கள்.தன்னால் நிறைவேற்ற முடியாத ஆசைகளை குழந்தைகள் மேல்ஏற்றுகிறார்கள்.
குழந்தைகளை பாரம் சுமக்கும் கழுதை ஆக்கிவிடுகிறார்கள். இதுக்கு காரணம் பழைய காலத்திலிருந்தே உலவி வரும் மண்ணாசை, பொன்னாசை, பெண்ணாசை என்னும் பேய்கள். வயது வித்யாசம் பார்க்காது இந்த பேய்கள் மனிதர்களுக்குள் குடியேறிவிடுகிறது.
இந்த பேய்கள் கூட அவங்க சகோதர சகோதரிகளும் (போட்டி, பொறமை, கர்வம், அடுத்தார் மேல்பழி ) சேர்ந்தே குடிஎறிவிடுவார்கள் . இதனால பல குடும்பங்களில் நிம்மதி இல்லாமல் போய்விட்டது .
இன்பமான வாழ்கை என்றால் என்னஎன்றே யாருக்கும்தெரியவில்லை.தெரிந்து கொள்ளவும் நிறைய பேர் விருப்பப்படாது முழி பிதுங்கி.. ஓட்ட முடியாத வண்டியா வாழ்கைய நினைச்சு ஒட்டிக்கொண்டிருக்கிறார்கள்.
உங்கள்ளுக்குள் இருக்கிற இந்த பேய்களை ஒட்டவேணுமா? வேண்டாமா? நீங்களே சொல்லுங்கள். இந்த பேய்கள வரம்வாங்கிவிட்டு வந்தவையா .. ஓட்ட முடியாது.
ஆனால் கட்டுபடுத்தமுடியும் (ஆணி அடிச்சு மரத்தில் வைக்கிற மாதிரி ). ஒவ்வொருமனிதனும் ஒரு பண்டோரா பாக்ஸ் மாதிரி தான். பெட்டியைஅடைத்து வைத்திருக்கிற வரை அவனுக்கு நல்லது.
பெட்டியைதிறந்து விட்டால் அதிலுள்ள பேய்கள் வெளியே வந்து அவனது வாழ்கையை சிதைத்து விடும். தயவு செய்து உங்களிடம் இருக்கும் பேய்களை தைரியமாக நீங்களேஅடக்கி வையுங்கள் வெளியே உலவ விட்டு விடாதீர்கள்.
நன்றிகள்.
நன்றிகள்.