உங்கள் குழந்தையிடம் கண்டிப்பை விட அதிகமாக அன்பு காட்டுங்கள்.அன்பை எந்த வற்புறுத்தலும் இல்லாமல் வெளிப்படுத்துங்கள். குழந்தையிடம் இருந்து வரும் அன்பை முழுதாக ஏற்றுக் கொள்ளுங்கள்.
அவர்கள் மீது நீங்கள் கொண்டிருக்கும் அன்பை அவ்வப்போது வார்த்தைகளால், செயலால் வெளிப்படுத்துங்கள்.அன்பு அனைத்தையும் பொறுத்துக் கொள்ளும், அன்பு அனைத்தையும் நம்பும், அன்பு எதற்கும் அடிபணியும்.
எனவே உங்கள் குழந்தையும் நீங்களும் அன்பு எனும் ஒரு வட்டத்திற்குள் சிக்கிக் கொள்வது நல்லது. எதையும் அன்பாகக் கூறுவதன் மூலம் நல்லப் பலனை அடையலாம்.
அதேப்போல அவர்கள் செய்யும் தவறுகளை கண்டிக்காமல், எடுத்துக் கூறுங்கள். மீண்டும் தவறு செய்யாமல் இருக்க வேண்டும் என்பதையும் அன்புடன் எச்சரியுங்கள்.
நன்றிகள்.
நன்றிகள்.