இப்பொழுதெல்லாம் மிருகங்களைவிட மனிதனிடம் தான் எச்சரிக்கையாக
பழக வேண்டி உள்ளது. ஏனென்றால், மிருகங்கள் என்ன செய்யும் என்பது தெரியும். எனவே அதற்காக முன்கூட்டியே தயாராகிவிடலாம்.
ஆனால் மனிதன் அடுத்து என்ன செய்வான் என்பது யாருக்கும் தெரியாது. ஏன் அவனுக்கே தான் என்ன செய்கிறோம் என்பது தெரியாது.
என்ன தான் மதம் மனித நேயத்தை குலைக்கிறது என்றாலும், மதமோ, கட்சியோ, அரசியலோ எல்லாவற்றையும் விட மனிதநேயம் தான் முக்கியம் என்பதற்கு இன்றைக்கும் நடக்கும் பல நிகழ்ச்சிகள் உதாரணமாக உள்ளது.
மனித நேயம் குறைந்து வருவதற்கு மனிதர்கள், குறிப்பாக தமிழர்கள் அறிவு வசப்படுவதற்கு பதிலாக உணர்ச்சி வசப்படுவது தான் காரணம்.
பெரும்பாலும் மனிதநேயம் எங்கு குறைகின்றது என்றால், படித்தவர்கள், அரசியல்வாதிகள், பெரிய மனிதர்கள் அதிகம் உள்ள இடத்தில் தான் மனிதநேயம் தேய்கிறது.
அவசர வாழ்க்கை, கோபம், இறுக்கமான நேரத்தில் (டென்சன்), கர்வம் கொள்ளுதல் சகிப்புத்தன்மை குறைவு, பொறாமை போன்றவை தான் மனித நேயம் குறைய வழிவகுக்கிறது.
இதனால் மனிதனுக்கே மனிதனை அடையாளம் காட்ட வேண்டிய பரிதாப நிலை ஏற்படுகிறது.
நன்றிகள்.