புவி ஈர்ப்பு சக்தி மூலம் மின்சாரம் தயாரித்து சாதனை படைத்த தமிழர்
நாகர்கோவில் அரசு ஊழியர் சாதனை. புவிஈர்ப்பு சக்தி மூலம் மின்சாரம் தயாரிப்பு
நாகர்கோவில் மறவன் குடியிருப்பை சேர்ந்தவர் சேவியர் ராஜா(48). டிப்ளமோ மெக்கானிக்கல் என்ஜினியர். அகஸ்தீஸ்வரம் அரசு மேல்நிலை பள்ளியில் இளநிலை உதவியாளராக பணிபுரிகிறார். இவர், புவிஈர்ப்பு சக்தியை பயன்படுத்தி மின்சாரம் தயாரிக்கும் இயந்திரத்தை வடிவமைத்துள்ளார்.
இதுகுறித்து, சேவியர் ராஜா, சென்னையில் நிருபர்களிடம் கூறியதாவது:
இரண்டு குவளையின் உதவியுடன் புவிஈர்ப்பு சக்தி மூலம் இந்த இயந்திரம்செயல்படுகிறது. குவளையின் வெளிப்பகுதியை தண்ணீரால் குளிரச்செய்யும்போது குவளைக்குள் காற்று சுருக்கப்பட்டு அங்கு வெற்றிடம் உருவாகிறது. அந்த வெற்றிடத்தை நிரப்புவதற்கு குவளையின் கீழ் பகுதியில் உள்ள தண்ணீர் மேல்நோக்கி செல்கிறது.
புவிஈர்ப்பு சக்தி உதவியுடன் அந்த குவளை மேலும் கீழும் 135 டிகிரி அளவுக்கு சாய்கிறது. குவளையோடு இணைத்துள்ள டைனமோவில் பற்சக்கரமும் சுழல்வதால் மின்சாரம் உருவாகிறது. புவிஈர்ப்பு சக்தியில் இது செயல்படுவதால் 24 மணி நேரமும் மின்சாரம் கிடைக்கும்.
இந்த மின்சாரத்தை பேட்டரிகளில் சேமித்து வைத்து தொடர்ந்து பயன்படுத்தலாம். இந்த அமைப்பை பெரிய அளவில் செய்தால் நேரடியாக பயன்படுத்தலாம். 500 மெகாவாட் மின்சாரம் உற்பத்தி செய்யும் தொழில்நுட்பம் என்னிடம் உள்ளது. இந்த தொழில்நுட்ப காப்புரிமையை பதிவு செய்துள்ளேன். இவ்வாறு அவர் கூறினார்.
நன்றிகள்.