Wednesday, 9 May 2012

இரு பாலாரிற்குமான குணங்கள் ..................!

ஆண்களிற்கான நற்குணங்கள் நான்கு

தன்மை

நிறைவு

ஒப்பு

கடைப்பிடி

ஆகியன, ஆனால் யாராவது இவற்றைக் கடைப்பிடிக்கின்றார்களா?

பெண்களின் நற்குணங்கள் நான்கு

அச்சம்

மடம்

நாணம்

பயிர்ப்பு

ஆகியன, இவற்றை அனைத்துப் பெண்களும் கடைப்பிடிக்க வேண்டுமென அனைத்து ஆண் வர்க்கமும் எதிர்பார்க்கின்றது. மிகக்கேவலமான கருத்து.

என்னென்றால் ஆண்கள் தாங்கள் திருமணத்திற்கு முன், பின் எப்படி வாழ்ந்தாலும்.

தங்களிற்கு வரும் துணைவியார் திருமணத்திற்கு முன், பின் பெண் என்றால் என்ன வரைவிலக்கணத்தில் உள்ளதோ அவைகளனைத்தும் ஒருமித்து எக்களங்கமும் இல்லாது இருக்க வேண்டுமென நினைப்பது மிகுந்த கசப்பான ஆணாதிக்கத்தின் வெளிப்பாடேயாகும்.

இது உலகில் களையப்பட்டு இருபாலாரும் தத்தமது குணாதிசயங்களில் மிகஇறுக்கமான கொள்கைகளுடன் வாழ்ந்தாலே உலகில் பெண் அடிமை, சமுதாய வளர்ச்சி என்பவற்றில் மாற்றமேற்படும். இதுவே இன, சமுதாய, நாட்டின் வளர்ச்சிக்கு உகந்தது.

நன்றிகள்.