அண்டவெளியில் நம் சூரிய குடும்பத்தின் ஆதரமாக விளங்கும் சூரியனை குறிக்கும் கிழமை, ஞாயிற்றுக்கிழமை. நமது பூமியில் உயிர்களுக்கு மூலாதாரமே சுரிய ஒளி ஆகும்.சூரியன் பெருமளவு ஐதரஜன் (சுமார் 74%) மற்றும் ஈலியம்(24%) ஆகியவற்றையும், சிறிதளவு, இரும்பு, சிலிக்கன் நிக்கில், கந்தகம், ஒட்சிசன் ஆகியவற்றையும் கொண்டுள்ளது.
இது காந்த ஆற்றல் மிகுந்த நட்சத்திரம் என் கண்டறியப்பட்டுள்ளது. சூரியமரு,(sunspot), சூரியஎரிமலை (solar flare), சுரியசுறாவளி (solar winds), ஆகிய விளைவுகளை சூரியனின் காந்தப்புலம் ஏற்படுத்துகிறது.
இந்த விளைவுகள் கதிரணு உயிர்ப்பு (solar activity) என்று கூறப்படுகிறது. சூரியன் தோராயமாக 25000 ஒளி ஆண்டுகளுக்கு அப்பால் உள்ள விண்மீன் மண்டல மையத்தை சுமார் 225 மில்லியன் வருடங்களுக்கு ஒருமுறை என்ற வேகத்தில் சுற்றி வருகிறது.
இந்த தகவல்கள் நவீன கணித முறைப்படி கண்டறியப்பட்டுள்ளது.
நன்றிகள்.