Wednesday, 30 May 2012

பித்தப்பை என்றால் என்ன...................?


பித்தப்பை என்பது கல்லீரலுக்கு வலப்புறமாக, கீழே, ஒரு 'கோல்ப்' பந்தின் அளவுள்ள பேரிக்காய் வடிவிலுள்ள ஒர் உட்பையாகும். இதுனுடைய முக்கிய பயன்பாடு என்னவென்றால் நாம் உண்ணும் உணவிலுள்ள கொழுப்புப்பொருட்களைச் சீரணிக்க உதவும், இயற்கை இயக்கியான, பித்தநீரைச் சேகரித்து அனுப்புவதாகும். பித்தநீரானது கல்லீரலில் உற்பத்தி செய்யப்பட்டு, பித்தப்பையில் தற்காலிகமாக இருப்பு வைக்கப்படும் ஒரு பசும் பொன் வண்ண திரவமாகும்.

கொழுப்புச் சத்துள்ள உணவுப் பொருட்களை நாம் உட்கொண்டதும் பித்தப்பையில் விடுதலை செய்யப்படும். பித்த நீரானது, சாதாரணமாக பித்தப்பை குழாய், மற்றும் பித்தநீர்க்குழாய் என்றழைக்கப்படும். இழை நாளங்களின் வழியே சிறு குடலுக்கு அனுப்பப்பட்டு, அங்குள்ள கொழுப்புப பொருட்களைச் சீரணிக்க உதவும்.

பித்தப்பை சிக்கல்கள் யாருக்கு உண்டாகும் ?

பொதுவாக பித்தப்பை சம்பந்தமான சிக்கல்கள் தோன்றுவதற்கு வாய்ப்பிற்கு பல காரணங்கள் உள்ளன. நாம் உண்ணும் உணவுப் பொருட்களிலுள்ள கொழுப்புச்சத்தை நம் உடல் எவ்வாறு செரிமாணம் செய்கிறது என்பதையும், பித்தப் பையில் ஏதேனும் தொற்றுநோய் உள்ளதா என்பதையும் பொருத்துப் பித்தப்பை சிக்கல்கள் உண்டாகின்றன என்று நம்பப் படுகிறது.

பின் கண்ட பருவத்தினருக்குப் பித்தப்பை சிக்கல்கள் தோன்ற பெரிதும் வாய்ப்புகளுள்ளன என ஆய்வுகள் சுட்டுகின்றன.

வயது நாற்பதுகளிலுள்ள பெண்கள் அதிக எடையும் பருமனுமுள்ள ஆண்கள், பெண்கள். பால் சம்பந்தமான உணவுப் பொருட்களையும் விலங்கு கொழுப்புப் பொருட்களையும், பொரிக்கப்பட்ட உணவு வகைகளையும் அதிகமாக உட்கொள்ளும் மக்கள்.பித்தப்பை சிக்கல்களுள்ள மக்களின் பெற்றோர்கள், உடன் பிறப்புகள், குழந்தைகள்.

பித்தப்பை சிக்கல்கள் எப்படி உண்டாகின்றன ?

பொதுவாக பித்தப்பையில் பித்தக்கற்கள் ஏற்படுவதால் பித்தப்பை சிக்கல்கள் உண்டாகின்றன. பித்தப் பையின் உள்ளே பித்த நீரும் பிற நீர்ம இரசாயனங்களும் அளவுக்கு அதிகமாகும் போது, அதன் விளைவாக இரசாயன கலப்பு ஏற்பட்டுக் கனப் பொருட்களாகவும் வண்டல் படிவங்களாகவும் ஏற்படுகின்றன. காலப் போக்கில் இந்த வண்டல்கள் உருவில் பெரியதாக வளர த் தொடங்கி பித்தக் கற்களாகின்றன.

பித்தக்கல் பெரியதாக இருந்து பித்தநீர்க் குழாயில் பயணம் செய்யும்போது, பித்தப் பையில்ருந்து பித்த நீரின் வெளியேற்றத்தைத் தடை செய்யக்கூடும். வெளியேற்றும் வழி அடைக்கப் படுவதால் பித்தப்பை வீங்கத் தொடங்கும்.

பித்தநீரால் பித்தப்பை முழுதும் நிரப்பப்பட்டதும் பித்தநீரின் பின்னோட்டம் நிகழ வாய்ப்புள்ளது. இதன் விளைவாக பித்தப்பை தொற்று நோயால் பீடிக்கப் படுகிறது.

உணவுக்குப் பின்னர், சிறப்பாக பொரிக்கப் பட்ட உணவு, பொரியல் முதலிய எண்ணெய்ப்பாங்கான உணவுப் பொருட்களை உண்டபின்னர் வலது பக்க, மைய வயிற்றுப் பாகத்தில் பெரும் வலி ஏற்படுவது இந்நோய் அறிகுறிகளில் அடங்கும். மெல்ல இந்த வலி முதுகுக்கும் தோளின் நுனிபாகத்திற்கும் பரவக்கூடும்.

இதைத்தவிர குமட்டல், வாந்தி, காய்ச்சல், மஞ்சள் காமாலையும் உண்டாகும்.

திறந்த பித்தப்பை அறுவை மருத்துவம் :

வயிற்றினை பெரியதாக அறுத்து பித்தப் பையை அகற்றுவது காலங் காலமாக நடைபெற்று வரும் மருத்துவ முறையாகும். அதிக அளவில் இரத்தக்கசிவு, தொற்று நோயால் பீடிக்கப் படுவது இந்த முறையிலுள்ள சிக்கல்களும் அபாயமுமாகும். இதனை இப்போது பெரும்பாலான மருத்துவமனைகளில் செய்வது இல்லை..

லேப்ரோ ஸ்கோபிக் பித்தப்பை அறுவை மருத்துவம்:

தற்போது, இந்தப் புதிய நுட்பத்தின் மூலம் 1 செ.மீக்கும் குறைந்த வட்ட முள்ள 4 சிறு துளைகள் செய்யப்பட்டு அவற்றின் வழியே பித்தப்பை அகற்றுதல் சிறப்பாக நடத்தப் படுகிறது.

ஒரு லாப்ரோ ஸ்கோப் (ஒரு புகைப்படக் கருவியுடன் இணைக்கப்பட்ட ஒரு தொலைநோக்கி) ஒரு சிறு துளையின் மூலம் உள்ளுர செலுத்தப்பட்டு, பித்தப்பையின் பெரிய அளவு காட்டி பெறப்படுகிறது. இன்னொரு சிறு துளையின் வழியே அறுவை கருவிகள் உள்ளே நுழைக்கப்படும்.

பித்தப்பை நாளமும், பித்தப்பைக்குக் குருதியை எடுத்துச் செல்லுப் தமணியும் கண்டு பிடிச்சப்பட்ட பின்னர் பற்றுக்கோள்களால் (forceps) கெட்டியாகப் பற்றப்பட்டுக் கல்லீரலின் அடியிலுள்ள பித்தப்பை தனித்துக் துண்டாக்கப்படும்.

இந்த வைத்தியம் முடிந்ததும் சிறு துளைகள் ஓரிரு தையல் மூலம் அத்துளைகள் மூடப்படும். ஒரு சில மாதங்களில் அந்தத் துளைகளின் தடயமே இல்லாமல் மறைந்து போகும்.......

நன்றிகள்.