அம்மா
அகிலமெங்கும் தேடுகிறேனடி
அருகினில் நீயின்றி.........!
ஆருயிரே என்றழைக்க வேண்டியவளே
ஓருயிராய் தள்ளிவிட்டு
எங்கே சென்றாய்........!
ஆயிரம் சாதிகளுக்கு நடுவில்
ஏனடி விதைத்து விட்டாய்-எந்தனை
அநாதை என்ற புதுசாதியாய்.....!?!
தெருவோர வாகன சப்தங்கள்
தாயின் தாலாட்டாக மாறியது
என் அகராதியில் தானோ.....?!?
என்னை வளர்த்திட
மாடி வீடுதான் இல்லை
உன் மடியிலுமா இடமில்லை.......!
குப்பை தொட்டியில் போட்ட நீ
என் குரல்வளையை அறுத்து
போட்டிருக்காலமடி........!
காகித குப்பைக்குள் விட்ட நீ
என்னுள் கள்ளிப்பாலை சற்றே
விட்டிருக்கலாமடி.......!
அம்மா
என்றதும் சில்லறை ததும்ப சிரிக்கும்
தாய்மாரை காண்கிறேன்......!
நானும் கூவியனழக்கின்றேன்
அம்மா என் அம்மாவென்று சில்லறை ததும்ப சிரிப்பது
நீயல்ல என் கை "பிச்சைப்பாத்திரம்".......!
நன்றிகள்.