எப்பொழுதாவது தோன்றும் நல்ல விசயத்துக்கு உவமையாக திகழ்கிற குறிஞ்சி மலர்.(பன்னிரெண்டு ஆண்டுகளுக்கு ஒரு முறை பூக்கும் தன்மையுடையது) அறிவியல் பெயர் Strobilanthes kunthianus அதிகம் காணப்படக் கூடிய இடம்: எரவிக்குளம் தேசிய பூங்கா-கேரளம், மேற்குத் தொடர்ச்சி மலைத் தொடர்.
அடையாளம்: குறிஞ்சி பூப்பு சுழற்சியை வைத்து தோடர்கள் தங்கள் வயதைக் கணக்கிடுகிறார்கள்.

குறிஞ்சி மலர்கள் மலைச் சரிவுகளில் பூத்துக் குலுங்கி மலைப் பகுதிகளுக்கு புதிய வண்ணங்களைத் தீட்டிவிடுகின்றன. நீலக்குறிஞ்சி என்றொரு வகை உண்டு. இந்த குறிஞ்சி மலர் பூத்துக் குலுங்கும் கண்கொள்ளாக் காட்சியால்தான், மேற்குத் தொடர்ச்சி மலைத்தொடரின் முக்கிய பகுதிக்கு நீலகிரி (நீலமலை) என்ற பெயர் உருவானது.

பெரும்பாலானவை மேற்குத் தொடர்ச்சி மலைத் தொடரிலேயே வளருகின்றன மலர்கள் பூத்துக் குலுங்கத் தொடங்கியவுடனேயே சொல்லி வைத்தது போல, அந்த மலர்களை தேனீக்கள் மொய்க்கத் தொடங்குகின்றன.
அவை கொண்டு வரும் பெருமளவு தேனை தோடர் பழங்குடிகள் சேகரிக்கின்றனர்.
நன்றிகள்.